இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 29, 2017

செப். 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக துணைத் தேர்வுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை அரசு ேசவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 பணமாக சேவை மையங்களில் செலுத்த வேண்டும்.

பார்வையற்றோர், காதுகேளாதோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள் தேர்வுகளை, விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தற்போது அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவ மாணவியர் சிறப்பு அனுமதி திட்டத்தில்(தட்கல்) செப்டம்பர் 11, 12ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தட்கலில் விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமை இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். தட்கலில் விண்ணப்பிப்போர் தேர்வுக் கட்டணங்களுடன் அனுமதி கட்டணமாக ரூ.500 சேர்த்து செலுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் 'மாணவர் கலைத் திருவிழா': 150 பிரிவுகளில் போட்டி நடத்த அரசாணை வெளியீடு


தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களின் கலை, இலக்கிய, தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் கலைத்திருவிழா என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 பிரிவுகளில் பள்ளி, ஒன்றிய, கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் கொண்ட மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.4 கோடி செலவிடப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:

4 பிரிவுகளில் போட்டிகள்: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி அடுத்தடுத்த நிலைகளான கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில அளவில் நடைபெறும். ஒவ்வொரு நிலையிலும் தேர்வு பெற்றவர்கள் அடுத்தடுத்த நிலைகளில் கலந்துகொள்ளலாம். இருப்பினும் பிரிவு 1-ன் கீழ் நடைபெறும் போட்டிகள் ஒன்றிய நிலையிலும், 2-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் கல்வி மற்றும் வருவாய் மாவட்ட அளவிலும், பிரிவு 3-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் மாநில அளவிலும் நிறைவு பெறும்.

வெற்றி பெற்றால் மதிப்பெண்: போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு தரமதிப்பு (கிரேடு) வழங்கப்படும். 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ஏ கிரேடு மற்றும் 5 புள்ளிகள், 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் பி கிரேடு மற்றும் 3 புள்ளிகள், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் சி கிரேடு மற்றும் 1 புள்ளி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான போட்டிகளில் அதிக மதிப்பெண் பெறும் 3 போட்டியாளர்களுக்கு ஒரு போட்டிக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 வீதம் வழங்கப்படும். இது தவிர அந்தந்தப் பிரிவுகளுக்கு உரிய பரிசுகளும் வழங்கப்படும். இததற்குத் தேவைப்படும் ரூ.4 கோடி நிதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து பெறுவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பள்ளிக் கல்வி நிறுவன இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி வாரம் அல்லது பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகளின் முடிவுகள் குறித்து மேல்முறையீட்டு மன்றம், மலர் தயாரிப்பு, பரிசுப் பொருள்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்! - நிதிஆயோக் பரிந்துரை

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தனியார்-பொதுத்துறை கூட்டு (PPP) என்ற திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறைந்த மற்றும் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று கூறியிருக்கிறது நிதிஆயோக். இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாண்டு செயல்திட்டத்தின் கீழ் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ’கடந்த 2010-2014-ம் ஆண்டு இடைவெளியில் 13,500 அரசுப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. ஆனால், இதே காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.3 கோடி அளவுக்கு குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.85 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 3.7 லட்சம் அரசுப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இது மொத்த அரசுப் பள்ளிகளில் 36 சதவிகிதம் ஆகும்.

ஆசியர்கள் வருகைப் பதிவு குறைவு, பயிற்றுவித்தலில் குறைவான நேரமே செலவிடுவது, தரமில்லாத கற்றல் முறைகள் ஆகியவைகளே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரணங்கள். இதனால் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையை மாற்ற ஈடுபாடு கொண்ட மாநிலங்கள் உதவியுடன் பணிக்குழு ஒன்றை உருவாக்கி அனைத்து சாதகமான சூழல்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ செய்தியறிக்கை


Monday, August 28, 2017

அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்-லைனில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு?


வரும் கல்வியாண்டு (2018-19) முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ (பிடிஎஸ்) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 45 ஆயிரம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 24 -ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

அதிக மனித வளம்: கலந்தாய்வு நடத்துவதற்கான பணியில் மருத்துவக் கல்வி இயக்ககம், ஓமந்தூரார் மருத்துவமனை ஊழியர்கள் என சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர கலந்தாய்வில் இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கலந்தாய்வு நடைபெறும் அரங்கில் உள்ள கணினிகளை இயக்குதல் உள்ளிட்டப் பணிகள் அவுட் - சோர்சிங் முறையில் தனியார் ஊழியர்களைக் கொண்டு நடைபெறுகிறது. குறுகிய நாள்களில் கலந்தாய்வுப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளதால் காலை 8 மணி முதல் இரவு 10 மணிக்கும் மேல் என அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 14 மணி நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பணம் விரயம்: கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், திரைகள், காத்திருப்பு கூடாரம், மின்சாரம், அதிகாரிகளுக்கான உணவு உள்ளிட்டவற்றுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது.

உணவு மட்டுமே ஒரு வேளைக்கு 250 பேருக்கு ஆர்டர் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாணவர்களும் பெற்றோரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்றுச் செல்வதால் பணவிரயமும், நேர விரயமும் ஏற்படுகிறது. மேலும் இடங்களைப் பெற்ற உடன் அடுத்த நாளே குறிப்பிட்ட கல்லூரியில் சேருவதற்காவும் உடனே அவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இணையதள கலந்தாய்வு: இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நடத்தப்படுவது போன்று இணையதளம் மூலம் கலந்தாய்வை நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

நன்மை என்ன? இணையதளத்தின் மூலம் கலந்தாய்வு நடத்தும்போது மேலும் வெளிப்படையாகவும், மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே இடங்களைத் தேர்வு செய்யவும் முடியும். இதனால் அரசுக்கும், மாணவர்களுக்கும் அதிக வேலைப்பளு, பணவிரயம், நேர விரயம் உள்ளிட்டவை ஏற்படாது. 2 ஆண்டுகளாக முயற்சி: இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இணையதளத்தில் கலந்தாய்வை நடத்துவதற்கான முயற்சியில் மருத்துவக் கல்வி இயக்ககம் ஈடுபட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இது குறித்து சாதகமான பதிலைத் தெரிவிக்கவில்லை. எனினும் அடுத்த ஆண்டு முதல் இணையதளத்தின் மூலம் கலந்தாய்வு நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறுகையில், இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த கல்வியாண்டில் இணையதள கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. எனினும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நடைமுறையைப் பின்பற்றுவதா அல்லது அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முறையைப் பின்பற்றுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றார் அவர்.

Nas model questions

https://doozystudy.blogspot.in/2017/08/nas-study-material-model-question-paper.html?m=1

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு!


பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது.

வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை.

அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.

Sunday, August 27, 2017

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி செப் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்


தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

அடுத்த ஆண்டுக்கான(2018) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2018-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. நடத்தவுள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி பெற விரும்புகிறவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சியை சென்னை பி.எஸ்.குமாரசாமிராஜா சாலையில் அமைந்துள்ள இந்த மையம் நடத்தவுள்ளது.

இந்த மையத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. பயிற்சிக்காக விண்ணப்பிப்பதற்கான தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பதாரர், பிளஸ்-2 முறைப்படி படித்து, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 2.8.86 தேதிக்குபிறகு 1.8.97 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். (21 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்).

எஸ்.சி., எஸ்.டி. இனத்தவருக்கு கூடுதலாக 5 ஆண்டு சலுகை உள்ளது. பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் வரையும் சலுகை உண்டு.

ஆன்லைன் மூலம் 21-ந் தேதியில் இருந்து வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபாரங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

5.11.17 அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை எழுத்துத் தேர்வு (அப்ஜெக்ட்டிவ் வகை) நடைபெறும். தற்காலிக விடைத்தாள் (கீ ஆன்சர்) 6.11.17 அன்று இணையதளத்தில் கிடைக்கும். 15.11.17 அன்று தேர்வு முடிவு வெளியிடப்படும்.

ஆன் லைனில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.civ-i-ls-e-rv-i-c-e-c-o-a-c-h-i-ng.com. என்ற இணையதளத்தை அணுகலாம்.

விண்ணப்பபாரங்களை சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலகத்தில் இலவசமாகப் பெறலாம். அப்போது வயது மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

சென்னையில் வசிப்போர், “முதல்வர், அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம், காஞ்சி பில்டிங், 163/1, பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை (கிரீன்வேஸ் சாலை), ஆர்.ஏ.புரம், சென்னை-28 (போன்:044-24621475)” என்ற முகவரியில் வாங்கி, பூர்த்தி செய்து அந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு முறையில் விண்ணப்பித்தால் போதுமானது. இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சென்னை, கடலூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடக்கும்.

ஹால்டிக்கெட்டை 20.10.17 அன்று முதல் www.civilservicecoaching.com. என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபாலில் ஹால்டிக்கெட் அனுப்பப்படமாட்டாது. தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்திய வரலாறு, பொருளாதாரம், நிர்வாகம், தற்போதைய நிகழ்வுகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு முடிவுகளையும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் மைய அலுவலக தகவல் பலகையிலும், இணையதளத்திலும் காணலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதிக்கான அழைப்பும் ஆன்லைன் மூலமே விடப்படும்.

முழுநேர பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட இதர வகுப்பு பிரிவினரிடம் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். காலை 10 முதல் மாலை 5 மணிவரை வகுப்புகள் நடக்கும். இவர்களுக்கு இலவசமாக தங்கி படிக்கும் வசதி உண்டு.

பகுதிநேர பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வாரநாட்களில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை வகுப்புகள் நடத்தப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை வகுப்புகள் நடத்தப்படும்.

ஓவியப்போட்டி தொடர்பான செயல்முறைகள்





29-8-17- JACTTO-GEO meeting

Saturday, August 26, 2017

பள்ளி மாணவர்களை கண்காணிக்க ஸ்மார்ட் கார்டு இன்னும் 15 நாட்களுக்குள் கல்வித்துறையில் அதிரடி மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


தமிழக கல்வித்துறையை பொறுத்தவரையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகிறது. இன்னும் 15 நாட்களுக்கு பிறகு தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும். இன்னும் ஒரு வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த ஸ்மார்ட் கார்டில், சிப் பொருத்தப்படும். ஸ்மார்ட் கார்டு வைத்துள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா, இல்லையா என்பதை பெற்றோர்கள் தங்கள் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்


நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது.

அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் எண் மற்றும் எமிஸ் எண் வழங்கப்பட்டதால், போலியாகவும் மாணவர் எண்ணிக்கையை கூட்ட முடிவதில்லை.இதனால், அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடும் போது, உபரி ஆசிரியர்கள் பணியிடம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பணி நிரவல் என்ற பெயரில், வேறுபள்ளிக்கு, உபரி ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர்.ஆனால், நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களால் மாற்றம் செய்ய முடிவதில்லை.

உபரி ஆசிரியருக்கு சம்பளம் வழங்கப்படும் போது, தணிக்கையில் கேள்வி எழுகிறது. இதை சமாளிக்க, நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், தற்காலிகமாக மாற்றுப் பணியில் நியமித்துக்கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'


தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர். 15 லட்சம் பேர் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 13 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றின் உறுப்புக் கல்லுாரிகளில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும், பல்கலைகளில் நேரடியாகவும், தொலைநிலை கல்வியிலும்,பல்வேறு படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

மாநிலம் முழுவதும், தொலைநிலை கல்வியில் மட்டும், ஆண்டுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்; 15 லட்சம் பேர் வரை, பல்வேறு படிப்புகளில் சேருகின்றனர். தொலைநிலை கல்வி நடத்துவதற்கு, மத்திய அரசின், பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை, பல்கலைகள் பின்பற்றினால் மட்டுமே, தொலைநிலை கல்வி நடத்த, யு.ஜி.சி., அனுமதி வழங்கும்.அனுமதி பெறும் பல்கலைகளும், அரசு பல்கலை என்றால், அந்தந்த மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் கல்வி மையம் அமைக்கக் கூடாது என, நிபந்தனை உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு, தொலைநிலை கல்வி நடத்த அனுமதிக்கப்பட்ட பல்கலைகளின் பட்டியலை, www.ugc.ac.in என்ற இணையதளத்தில், யு.ஜி.சி., வெளியிட்டுஉள்ளது. தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை, மதுரை காமராஜர், பாரதிதாசன், பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், திருவள்ளுவர் என, அரசின், 10 பல்கலைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினரும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். அச்சமின்றி படிக்கலாம் இது குறித்து, உயர் கல்வித் துறையில் விசாரித்த போது, 'இந்த பிரச்னை குறித்து, பல்கலைகளின் சார்பில், நீதிமன்றத்தில் பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் அச்சமின்றி தொலைநிலை கல்வியில் படிக்கலாம்' என்றனர்.

திருப்பூர் மாவட்டம் ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சி தலைவர் செயல்முறைகள்

Friday, August 25, 2017

ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு


வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர்கள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட், 22ல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அன்று, விடுப்பு வழங்கப்படாது எனவும், பணிக்கு வராதவர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இருப்பினும், வேலைநிறுத்த போராட்டத்தில், தொடக்கக் கல்வித்துறையில் மட்டும், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும், 20ம் தேதிக்குள், சம்பள பட்டியல் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இம்மாதத்தில் முன்கூட்டியே சம்பள பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்து, கருவூல செலுத்து சீட்டு மூலம் செலுத்த, மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்