இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 15, 2017

பாடத்திட்டம் உருவாக்க செப்., 5ல் கருத்தாய்வு


பாடத்திட்டத்தை உருவாக்கும் கலைத்திட்டக் குழுவின், கருத்தாய்வுக் கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் ஆறு ஆண்டுகள் பழமையான, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள், விரைவில் மாற்றப்பட உள்ளன.

இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், கலைத்திட்ட வடிவமைப்பு குழு மற்றும் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்,அனந்தகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழுவினர், பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம், கல்வியாளர்களின் பாடத்திட்ட பங்களிப்பு கூட்டம், கருத்தரங்கம், பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு போன்ற நிகழ்வுகளை, நடத்தி வருகின்றனர்.இது குறித்து, பல மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது.அடுத்தகட்டமாக, கருத்தாய்வு கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது. இதில், கலைத்திட்ட உறுப்பினர்கள் பங்கேற்று, கருத்துக்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய உள்ளனர்.

Monday, August 14, 2017

இன்ஜி., துணை கவுன்சிலிங் நாளை விண்ணப்ப பதிவு


அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இடங்களுக்கு, துணை கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 518 இன்ஜி., கல்லுாரிகளில், ஆக., 11ல், பொது கவுன்சிலிங் முடிந்தது. இதில், 86 ஆயிரம் இடங்களுக்கு, மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றனர். இந்த கவுன்சிலிங்கில், 89 ஆயிரம் இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன. இந்நிலையில், காலி இடங்களில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கான, துணை கவுன்சிலிங், வரும், 17ல் நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், நாளை பெறப்படுகின்றன. தொழிற்கல்வி மற்றும் பொது பாடப்பிரிவுகள் முடித்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டசான்றிதழ்களை, உரிய நகல்களுடன் நேரில் எடுத்து வரவேண்டும் என, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது. கவுன்சிலிங் தொடர்பான கூடுதல் விபரங்களை, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை கமிட்டியின், www.tnea.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

*_TNPTF NEWS :_* INSPIRE AWARD - MANAK SCHEME | Reg Edn Secretary & Director Proceeding!


Sunday, August 13, 2017

தமிழில் டி.சி., தேர்வுத்துறை அறிவுரை


எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழில், ஆங்கிலத்திலேயே பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வந்தன.

நடப்பாண்டு முதல், மாணவர்களின் பெயர், பள்ளி போன்ற விபரங்கள், மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் இடம் பெறுகின்றன. இந்நிலையில், மாற்று சான்றிதழ்களில் ஆங்கிலமே இடம் பெற்றதால், மதிப்பெண் சான்றிதழையும், மாற்று சான்றிதழ் விபரங்களையும் ஒப்பிட முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, 8ம் வகுப்பு - பிளஸ் 2 வரையில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் பெயர், 'இனிஷியல்' போன்ற விபரங்களை, தமிழிலும் பதிந்து, மாற்று சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன. கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு நடத்தி நிரந்தரம் செய்யப்பட்டனர்;பல பள்ளிகளில் இதற்கு ஆசிரியர்கள் இல்லை. தற்போது இப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயிற்றுனர் (கம்ப்யூட்டர் அறிவியல்) மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி., பி.எட்., - பி.சி.ஏ., பி.எட்.,- பி.இ., பி.எட்., என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 748 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர். இதுவரை கம்ப்யூட்டர் பாடப்பிரிவு வகுப்புகள் இல்லாத பள்ளிகளில், துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Saturday, August 12, 2017

2016-17 நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்


மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


ஐ.ஐ.டி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

நடப்பு ஆண்டு முதல் பிளஸ்–1 பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது. பிளஸ்–2 பொதுத்தேர்வில் மாணவர்கள் இடையே எழும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2½ மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. பிளஸ்–2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து படித்து ஜூன் மாதம் நடைபெறும் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மேற்கல்வியை தொடர முடியும். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் தொன்மையும், பழமையும் மாறாமல் இருக்கும். தமிழகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய மின் கட்டணம் வெளியீடு: குறைந்தது அரசு மானியம்


மின் வாரியம் கேட்டு கொண்டதை போலவே, மின் கட்டணத்தை உயர்த்தாமல், அரசின் மானிய செலவை குறைத்து, புதிய மின் கட்டண ஆணையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஜனவரியில், ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில், சென்னை, மதுரை, கோவையில், 2017 - 18க்கான மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. இந்நிலையில், ஆணையம், நேற்று முன்தினம் இரவு, 398 பக்கம் புதிய மின் கட்டண ஆணையை வெளியிட்டது. அதில், வீடு, தொழிற்சாலை உட்பட எந்த பிரிவுக்கும், மின் கட்டணம் உயர்த்தவோ அல்லது குறைக்கப்படவோ இல்லை. வீடுகளுக்கான மின் கட்டணத்தில், தமிழக அரசு, மின் வாரியத்திற்கு வழங்கும் மானிய செலவு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: மின் வாரியம், வீடுகளுக்கு, 0 - 100 யூனிட்; 0 - 200 யூனிட்; 0 - 500 யூனிட்; 500 யூனிட் மேல் ஆகிய பிரிவுகளின் கீழ், மின் கட்டணம் வசூலிக்கிறது. அனைத்து பிரிவு நுகர்வோருக்கும், முதல், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

* தற்போது, 0 - 100 யூனிட் வரை, அதாவது, 100 யூனிட்டுக்குள் மின் உபயோகம் இருந் தால், ஒரு யூனிட் கட்டணம், மூன்று ரூபாய். ஆனால், இந்த பிரிவுக்கு, மின் கட்டணம் வசூலிப்பதில்லை. அதற்கான செலவை, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஒழுங்குமுறை ஆணையம், நேற்று முன்தினம் வெளியிட்ட ஆணையில், மேற்கண்ட பிரிவு கட்டணத்தை, மூன்று ரூபாய்க்கு பதில், 2.50 ரூபாயாக குறைத்துள்ளது. இதனால், அரசுக்கு, 50 காசு மானிய செலவு குறைந்துள்ளது.

* 0 - 200 யூனிட் பிரிவில், இரு உட்பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில், 0 - 100 வரை, ஒரு யூனிட் கட்டணம், 3.25 ரூபாய். அதை, நுகர்வோரிடம் வசூலிக்காமல் அரசே செலுத்துகிறது. இரண்டாவது பிரிவில், 101 - 200 யூனிட் வரை, அதே, 3.25 ரூபாய் தான் கட்டணம். அதில், நுகர்வோர், 1.50 ரூபாய் செலுத்துகிறார். அரசு மானியமாக, 1.75 ரூபாய் தருகிறது.

முதல் பிரிவில், 3.25 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது, 2.50 ரூபாயாக குறைந்துள்ளதால், அரசுக்கு, 75 காசு செலவு குறைந்துள்ளது. இரண்டாவது பிரிவிலும், 3.25 ரூபாயாக இருந்த கட்டணம், 2.50 ரூபாயாக குறைந்துள்ளது. இதில், நுகர்வோர் வழக்கம் போல், 1.50 ரூபாய் செலுத்துவார். அரசு செலவு, 1.75 ரூபாயில் இருந்து, ஒரு ரூபாயாக குறைந்துள்ளது.

* 0 - 500 யூனிட் வரை பிரிவில், மூன்று உட் பிரிவுகள் உள்ளன. அதில், முதல் பிரிவான, முதல், 100 யூனிட் வரை, ஒரு யூனிட் கட்டணம், 3.50 ரூபாய். அந்த, 100 யூனிட் கட்டணத்தை, அரசு செலுத்துகிறது. இரண்டாவது பிரிவில், 101 முதல், 200 யூனிட் வரை, 3.50 ரூபாய் கட்டணம் உள்ளது. அதில், நுகர்வோர், இரண்டு ரூபாய் செலுத்துகிறார். அரசு, 1.50 ரூபாய் மானியம் தருகிறது. 201 - 500 யூனிட் உட்பிரிவில், ஒரு யூனிட் கட்டணம், 4.60 ரூபாய். அதில், நுகர்வோர், மூன்று ரூபாய் செலுத்துகிறார். அரசு, 1.60 ரூபாய் மானியம் தருகிறது. ஆணையத்தின் புதிய கட்டண ஆணையில், முதல் பிரிவில், 3.50 ரூபாய் இருந்த கட்டணம், 2.50 ரூபாயாக குறைந்துள்ளது. அதில், அரசுக்கு, ஒரு ரூபாய் செலவு குறைந்துள்ளது. இரண்டாவது பிரிவில், 3.50 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது, 2.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதில், நுகர்வோர் வழக்கம் போல், இரண்டு ரூபாய் செலுத்துவார். அரசு மானியம், 1.50 ரூபாயில் இருந்து, 50 காசாக குறைந்துள்ளது. மூன்றாவது பிரிவில், 4.60 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது, மூன்று ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதில், நுகர்வோர் வழக்கம் போல், மூன்று ரூபாய் செலுத்துவார். அரசுக்கு, 1.60 ரூபாய் செலுத்த தேவையில்லை என்பதால், அந்த மானிய செலவு குறைந்துள்ளது.

* ஐநுாறு யூனிட்டுக்கு மேலான பிரிவில், முதல், 100 யூனிட் கட்டணம், ஒரு யூனிட், 3.50 ரூபாயாக உள்ளது. தற்போது, அந்த கட்டணம், 2.50 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், அரசுக்கு, ஒரு ரூபாய் மானிய செலவு குறைந்துள்ளது. இவ்வாறு, ஒழுங்குறை ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண ஆணையில், மின் கட்டணத்தை உயர்த்தவோ, குறைக்கவோ செய்யாமல், மின் வாரியத்திற்கு, அரசு வழங்கும் மானிய செலவு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறிதயவாது: மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில் தமிழகம் இணைந்ததால், மின் வாரிய கடனில் குறிப்பிட்ட அளவை, அரசு ஏற்றது; இதனால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 2,882 கோடி ரூபாய் வட்டி சேமிப்பு கிடைத்துள்ளது. மின் வாரியமும், கடன் பத்திரங்களை வெளியிட்டு, அதிக வட்டி கடனை திரும்ப செலுத்த உள்ளது. இதனால், கூடுதலாக, 200 கோடி ரூபாய் வட்டி செலவு மிச்சமாகும். எனவே, அரசின் நிதி நெருக்கடியை குறைக்கும் வகையில், அது, மின் வாரியத்திற்கு வழங்கும் மானிய செலவில், 2,100 கோடி ரூபாய் வரை குறைத்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கட்டண ஆணையில், பல அடுக்குமாடி குடியிருப்புகளில், 'லிப்ட், மோட்டார் பம்ப்' உள்ளிட்டவற்கு, தனி மீட்டர் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். -

Senior Junior Pay Anomaly | Reg Director Proceeding!! மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு களைந்திடுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறை-நாள் : 11.8.2016


Friday, August 11, 2017

ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு மருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது


தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. இது தவிர ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1,800 இடங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றால் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேல் முறையீடு மனுவையும் ஐகோர்ட்டு நிராகரித்தது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல் முறையீடு மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜூன் 27-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன. இதற்காக 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவ தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியிட இருந்தது. ஆனால் மாநில அரசின் 85 சதவீத ஒதுக்கீடு அரசாணையால் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தாமதமானது. இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த வருடம் மட்டுமாவது ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பரிசீலிப்பதாக பிரதமரும் தெரிவித்தார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ஜனாதிபதி ஒப்புதலுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழக அரசு காத்திருக்க முடிவு செய்து உள்ளது. ஒப்புதல் கிடைத்தால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், கிடைக்காவிட்டால் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நாளை அல்லது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தரவரிசை பட்டியல் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும் மருத்துவ தேர்வுக்குழு தயாராக உள்ளது. 6 நாட்கள் கலந்தாய்வுக்கு பிறகு செப்டம்பர் முதல் வாரத்தில் மருத்துவ கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம்: மு.ஆனந்தகிருஷ்ணன் தகவல்


புதிய பாடத் திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிய பாடத் திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் கல்வித் துறையில் புதிய பாடத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கருத்தறியும் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த புதிய பாடத் திட்டக் குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான மு.ஆனந்தகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்றைய பள்ளி பாடத் திட்டம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் பாடத் திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாடத் திட்டம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், மேல் படிப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கேள்வி, பதிலை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையால் மாணவர்களுக்கு அடிப்படை அறிவே இல்லாமல் போகிறது. இதனால், உயர் கல்விப் பயிலச் செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதை மாற்ற முதலில் மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படைத் திறமையை வளர்க்க வேண்டும். எனவே, மாணவர்களின் தன்னம்பிக்கை, அடிப்படைத் திறமைகளை அதிகரிக்கும் வகையிலும், வருங்காலத் தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பவும் பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும். மேலும், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டம் அமைக்கப்படும். அதில், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். இதில், பங்கேற்ற கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், புதிய பாடத்தில் என்னென்ன இணைக்க வேண்டும் என பாடத் திட்டக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை, மனப்பாட முறையைப் பின்பற்றக்கூடாது, தொடக்கக் கல்வி முதலே ஆங்கிலத் திறனை அதிகரிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்காலத்துக்கு ஏற்பத் தேவையான பாடத் திட்டம், அரசியல், அரசு நிர்வாகம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் இணைக்க வேண்டும்.

அதேவேளையில், விளையாட்டு, என்சிசி, என்எஸ்எஸ் கூடுதல் முக்கியத்துவம், புத்தகச் சுமை குறைப்பு, வாழ்க்கைக் கல்வி, தொழிற்கல்விப் பாடங்களை நவீனப்படுத்துவது, தொழில் சார்ந்த தனிப் பயிற்சி, உளவியல் கல்வி போன்றவற்றை புதிய பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்வது குறித்தும் வலியுறுத்தப்பட்டது என்றனர்.

பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: பாடத்திட்ட குழு தலைவர் வரவேற்பு


பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது என்பது, வரவேற்கத்தக்கது. இதை சரியான வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியம். இதுகுறித்து, கலந்தாலோசிக்கப்படும்,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரும், பாடத்திட்டக் குழு தலைவருமான அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். புதிய பாடத்திட்ட குழு தலைவர் அனந்தகிருஷ்ணன், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநில பாடத்திட்டம், 12 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. பிற மாநிலங்களிலும், மத்தியிலும் பாடத்திட்டம் மாற்றியபோதும் கூட, தமிழக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வுகளில் கூட, பங்கேற்க முடியாத அளவுக்கு, மாணவர்கள் திணறி வருகின்றனர். புளூபிரிண்ட் படி, கேள்விகள் கேட்கப்படுவதால், அடிப்படை அறிவு இன்றி சிரமப்படுகின்றனர். தற்போது மாற்றம் செய்யப்படவுள்ள, புதிய பாடத்திட்டம், அடிப்படை அறிவை மேம்படுத்துவதுடன், புதிய தொழில் நுட்பத்தை எதிர்கொள்ளும் வகையில், தன்னம்பிக்கை தருவதாக அமையும். இதற்காக, மூன்று முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி, முன்வரைவு தயாரித்துள்ளோம். பழைய பாடத்திட்டத்தில் உள்ள, குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., --- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட, மத்திய அரசு பாடத்திட்டம் மற்றும் பின்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் முறையையும் ஆய்வு செய்துள்ளோம். இதில், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் இணைத்து, புதிய பாடத்திட்டம் செயலாக்கம் பெறும். ஒன்றாம் வகுப்பில் இருந்து, பாடத்திட்டம் மாறவுள்ளதால், பல புதிய யுக்திகள் புகுத்தப்படும். புதிய முறைப்படி, குழந்தைகளின் வயது, கற்கும் திறனுக்கேற்ப, பாடங்கள் அமைக்கவுள்ளதால், கற்றல் திறன் பரிசோதிப்பதில் சிக்கல் இருக்காது. மேல்நிலை வகுப்புகளில், பாடப்பிரிவுக்கேற்ப புதிய பாடங்கள் இணைக்கப்படும். தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்வோர், அது சார்ந்த அறிவியல் பாடங்களும் படிப்பர். அறிவியல் பாடத்திட்டத்தில், ரோபோட்டிக், ஸ்மார்ட் சிட்டி, கணினி தொழில்நுட்பம் குறித்த, பாடங்கள் இடம்பெறும்.

சமூக அறிவியல் பாடத்தில், உள்ளூர் வரலாறு, தொன்மையான இடங்கள், நிலப்பரப்பு சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உயர்கல்வியில் எந்த துறையை தேர்வுசெய்தாலும், அது சார்ந்த அடிப்படை அறிவு, பள்ளிகளிலே பெறும் அளவுக்கு, பாடங்கள் இடம்பெறும். பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது என்பது, வரவேற்கத்தக்கது. இதை சரியான வழியில் எடுத்து செல்ல வேண்டியது அவசியம். இதுகுறித்து கலந்தாலோசிக்கப்படும். இவ்வாறு, பாடத்திட்ட குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் பேசினார். 'சூழல் கல்வி வகுப்பறையில் வேண்டாம்' எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் : புதிய பாடத்திட்டத்தில், சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்த ஆலோசனைகள் பெறுவது வரவேற்கத்தக்கது. சுற்றுச்சூழல் என்பது பாடமல்ல; விழிப்புணர்வு கல்வி. இதை, மற்ற வகுப்பு போல, பாடம் நடத்துவதால் பலனில்லை. மாணவர்களை வெளியுலகுக்கு அழைத்து செல்ல வேண்டும். மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகள், பூச்சியினங்களை அடையாளப்படுத்தி, அதன் செயல்பாடுகள், நன்மைகளை விளக்க வேண்டும். சூழலில் உள்ள, அடிப்படை பிரச்னைகளை விளக்க வேண்டும். சமீபத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சல், முற்றிலும் சூழல் மாசுப்பாட்டால் ஏற்படுவது. இதை விளக்குவதோடு, புராண கதைகள், இதிகாசங்களில், ஐம்பூதங்கள் குறித்து இடம்பெற்றுள்ள தகவல்களை, மாணவர்களுக்கு எடுத்துரைக்க, ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.

'பொதுவினாத்தாள் பாணியில் தேர்வு' ஒய்வு பெற்ற தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர் தேவராஜன்: தேர்வு நடைமுறையால் மட்டுமே, மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், பரிசோதிக்க முடியும். ஆனால், இதில் சில மாற்றங்களை நடைமுறைப்படுத்தலாம். குறிப்பாக, பாடம் சார்ந்த அறிவை, சோதிக்கும் வகையில், கேள்விகள் இடம்பெற வேண்டும். எழுத்துத்திறனை வளர்தெடுக்கும் வினாக்கள், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, முன் பயிற்சியை அளிக்கின்றன. பொதுத்தேர்வு குறிப்புகள் முதல், விடைத்தாள் திருத்துவது வரை, அனைத்து பணிகளையும் ஆசிரியர்கள் தான் செய்கின்றனர். இதிலுள்ள குறைபாடுகளுக்கு, ஆசிரியர்கள் மனது வைத்தால், எளிதில் தீர்வு காண முடியும். மேலும், பொதுவினாத்தாள் முறையில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தினால், மாணவர்களின் திறனை வளர்த்தெடுக்கலாம். கலைப்பாடத்துக்கு அதிகரிக்கும் மவுசு எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்த்துறை தலைவர் பாலசுப்ரமணியன் : நகரத்தில் படிக்கும் மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்களிடம், அதிக தன்னம்பிக்கை உள்ளது. இவர்களிடம், ஆங்கில மொழிப்புலமை, தொடர்புத்திறன் குறைவாக இருப்பது உண்மை தான். ஆனால், அதை வளர்த்தெடுக்கும் பொறுப்பு, ஆசிரியர்களிடமே உள்ளது. பணப்பலன்கள் உள்ளிட்ட பிற பிரச்னைகளுக்கு, குரல் கொடுப்பது போல, கல்வித்திட்டம் மாற்றம் செய்யவும், போராடியிருக்கலாம். கலைப்பாட பிரிவுகளுக்கு, தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. இப்பாடத்தில், ஜி.எஸ்.டி., குறித்த தகவல்கள் இணைக்க வேண்டும்.