இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 23, 2017

ஆசிரியர் நியமனம்

புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

புதிதாக துவங்கப்படவுள்ள 250 அரசுப் பள்ளிகளுக்கு,ரூ7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பி.ஆர்க்.: ஆக.12 இல் தமிழ்நாடு நுண்ணறித் தேர்வு: இன்று முதல் ஆன்}லைன் பதிவு


பி.ஆர்க். (இளநிலை கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கு முதன் முறையாக தமிழக அளவில் தமிழ்நாடு நுண்ணறித் தேர்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்தப்படுகிறது என அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்}லைன் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 24) முதல் தொடங்குகிறது. பி.ஆர்க். படிப்பில் மாணவர் சேர்க்கை என்பது தேசிய கட்டடக் கலை திறனறித் தேர்வு (நாடா) மூலம் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், நிகழாண்டில் தமிழகத்துக்கு ஒப்பளிக்கப்பட்ட பி.ஆர்க். இடங்களைக் காட்டிலும், தேசியத் திறனறித் தேர்வில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கட்டடக்கலை கவுன்சிலின் அனுமதியுடன் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புதிதாக தமிழ்நாடு திறனறித் தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. அதன்படி, பி.ஆர்க். சேர்க்கையானது முதலில் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் "நாடா' மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும். இதில் நிரப்பப்படாத இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். அதன் பிறகும் காலியாக இருக்கும் இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு திறனறித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தேர்வு எப்போது? : இந்தத் தேர்வுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு திறனறித் தேர்வானது (டி.ஏ.நாடா) ஆகஸ்ட் 12} ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்}லைன் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 24) முதல் தொடங்குகிறது. ஆன்}லைன் பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை ஆகஸ்ட் 7}ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 18 }ஆம் தேதி மதிப்பெண் வெளியிடப்படும். மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 19 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவுக் கட்டணம்: தேர்வுக்கான பதிவுக் கட்டணம் ரூ. 2000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 1000 ஆகும்.

Saturday, July 22, 2017

240 அரசு பள்ளிகளில் கணினி அறிவியல்


தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 540 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. இவற்றுக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதே போல, இன்னும், 240 அரசு பள்ளிகளில் புதிதாக, கணினி அறிவியல் பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 1ல் உள்ள பாடப்பிரிவுகளின் பட்டியலை அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

பணி நிறைவு சான்று கட்டாயம் கடன் பெற வங்கிகள் நிபந்தனை


புதிதாக வீடு வாங்கும் போது, அது தொடர்பான ஆவணங்களை, வங்கிகள் அடமானமாக பெறுகின்றன. இதேபோல, சொத்து பத்திரங்களை பெற்றுக் கொண்டும், அடமான கடன் வழங்கப் படுகிறது. கட்டுமான நிலையில் உள்ள வீட்டை வாங்குவோருக்கு கடன் வழங்க ஒரு நடைமுறையும், பயன்பாட்டில் இருக்கும் வீட்டுக்கு அடமான கடன் வழங்க, வேறு நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

அதாவது, கடன் கேட்போரிடம், அடையாள ஆவணங்கள், வருமான வரி ஆவணங்கள், முகவரி சான்று, வருவாய் சான்று, சொத்து தொடர்பான பத்திரங்கள், வில்லங்க சான்று, தாய் பத்திர நகல், திட்ட அனுமதி வரைபடம் போன்றவை பெறப்படும். இதன் அடிப்படையில், சொத்து மதிப்பீடு செய்யப்பட்டு, கடன் தொகை முடிவு செய்யப்படும். தற்போது, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, அடமான கடன் கோருபவர்கள், பணி நிறைவு சான்றிதழை இணைக்க வேண்டும் என, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கோருவது, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தமிழக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.மணிசங்கர் கூறியதாவது:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., எல்லைக்குள், மூன்று தளங்களுக்கு மேற்பட்ட சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணி நிறைவு சான்று வழங்கப்படுகிறது. பயன்பாட்டில் உள்ள வீடுகளுக்கு அடமான கடன் கோரி விண்ணப்பித்தால், முன்னணியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள், கட்டட பணி நிறைவு சான்று கேட்டு நிர்பந்திக்கின்றனர்.

பணி நிறைவு சான்று வழங்கும் நடைமுறையே இல்லாத பகுதிகளில், வங்கிகள் இது போன்ற நிர்பந்தம் செய்வது சரியான நடைமுறை அல்ல; நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

2017-18 தரம் உயர்த்தப்படும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் விபரம்

https://app.box.com/s/yf5jlruvslp0hrk5ldrud6kyqa2y8vhb

https://app.box.com/s/dc0ac03mqfyeoj8m6fej7a9fa8z5bl4m

100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு



Friday, July 21, 2017

அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை


தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம், மருத்துவ படிப்பில் ‘நீட்’ தலையீடு வந்ததுபோல அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கும் ‘நீட்’ தலையீடு இருக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:- ‘நீட்’ தேர்வு தொடர்பான முழு விளக்கத்தையும் அமைச்சர்கள் ஏற்கனவே விரிவாக தெரிவித்துவிட்டனர். காலப்போக்குக்கு தகுந்தபடி அனைத்தும் மாறிவருகிறது.

2018-19-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு உண்டு என்று கூறியிருக்கிறார்கள். அது வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம். தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது. முதுநிலை என்ஜினீயரிங் படிப்புக்கு ‘கேட்’ தேர்வு நடக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நாம் ‘டான்செட்’ தேர்வு மூலமே அதனை கையாண்டு வருகிறோம். அதுவே போதுமானது என்று கூறியிருக்கிறோம். எல்லா மாநிலங்களும் ‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகம் ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதனை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

எனவே அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்த ஓசையுடைய சொற்கள்


TNPSC - RESULT- POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES-I EXAMINATION (GROUP-I SERVICES) (PRELIMINARY EXAM)

Click below

http://www.tnpsc.gov.in/Results.html

உத்தரவு

ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

* ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

* உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணைகளை வரும் புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவு

* மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க சட்டத்திருத்தம்: மத்திய அரசு தகவல்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை வழக்கு விசாரணை ஒன்றில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

Thursday, July 20, 2017

2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்: மு.ஆனந்தகிருஷ்ணன்


வரும் 2030-ஆம் ஆண்டு வரையிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அவர் பேசியது:

தமிழகத்தில் 58,000 பள்ளிகளில் 5.7 லட்சம் ஆசிரியர்களும் 1.30 கோடி மாணவர்களும் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் வரும் 2030-இல் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்வார்கள். அந்த நேரத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அந்தச் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும். இனி வரும் காலங்களில் தேவைப்படும் போதெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். படங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஒவ்வொரு பாடமும் மாணவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கேற்ப ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவது அவசியம்.

பாடப்புத்தகங்கள், நூல்நிலைய புத்தகங்களை மட்டும் படிக்காமல் இதர தொழில்நுட்பக் கருவிகள், சேவைகளையும் பயன்படுத்த மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அடுத்து வரப்போகும் தேர்வு முறை மாணவர்களை அச்சுறுத்துவதாக இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் இருக்க வேண்டும். இந்தப் பாடத்திட்டம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்படவுள்ளது.

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு: தற்போதுள்ள தலைமுறை இரண்டு விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்று கவனச் சிதறல். மற்றொன்று எந்த விஷயமும் எளிதாகக் கிடைக்கப் பெறுதல். இதனால் மாணவர்களின் சிந்தனைத் திறனும், போராட்டக் குணமும் குறைந்து விடுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். மனப்பாடத்தை மாபெரும் அறிவு என நாம் கொண்டாடும் வரை கல்விக்கு உய்வு இல்லை. அவர்களை ஒரே முறையில் சிந்திக்க நாம் பழக்கி விட்டோம். இதுதான் இப்போது சிறந்த வளர்ப்பு முறையாகக் கருதப்படுகிறது. மாணவர்களைப் பல வகைகளில் சிந்திப்பதற்கான சாளத்தை கல்வி உருவாக்கிக் கொடுக்குமேயானால் அந்தக் குழந்தை தனது உண்மையான ஆற்றலை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் நேசிக்கும்படி செய்து விட்டால் 50 சதவீதம் தானாக கல்வி நிறைவு பெறும்.

ஒவ்வொரு பாடத்தையும் வடிவமைக்கும்போது அதை வாழ்க்கையோடு எப்படி தொடர்புபடுத்தி அந்தக் குழந்தை புரிந்துகொள்கிறது என்பது முக்கியம். எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளவும் நாம் மனரீதியாக தயாராக இருந்தால்தான் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்கக்கூடிய பாடத்திட்டம் அமையும்பட்சத்தில் கல்வி கற்கண்டாக மாறும். கற்பது அனுபவமாக மாறும். இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கல்வியில் இடை நின்றவர் எனக் குறிப்பிட்டால் அவர் பி.ஹெச்டி முடிக்கவில்லை என்று அர்த்தம். அந்த அளவுக்கு அங்கு படித்தவர்கள் உள்ளனர். நமது கல்வி முறையில் மிகச் சரியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிவின் சிகரமாக தேசத்தை மாற்ற முடியும் என்றார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்: வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்.

ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்குமா?: அச்சத்தில் பி.இ.-பி.எட். மாணவர்கள்


பி.எட். படிப்புகளில் சேரும் பொறியியல் (பி.இ.) மாணவர்களுக்கு இன்னமும் ஆசிரியர் தகுதியே வழங்கப்படாததால் அவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) தங்களால் எழுத முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இந்த மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்களும் 2015 -16 கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

இயற்பியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளின்கீழ், பி.எட். படிப்புகளில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்தப் புதிய திட்டம் தொடங்கிய 2015 -16 கல்வியாண்டில் 60 பி.இ. மாணவர்கள் பி.எட். படிப்புகளில் சேர்ந்தனர். இவர்கள், இரண்டு ஆண்டு பி.எட். படிப்பை முடித்து இந்த ஆண்டு வெளிவருகின்றனர். இந்த நிலையில், பி.எட். முடிக்கும் பி.இ. மாணவர்கள், பள்ளிக் கல்வியில் எந்தப் பாடத்துக்கு இணையானவர்கள் என்பது இதுவரை வரையறுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கான பட்டியலிலேயே இவர்கள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர் பணி இவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது என்பதுடன், தனியார் பள்ளிகளும் இவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.

இந்த நிலையில், நிகழாண்டைப் பொருத்தவரை , சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2017 -18 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 81 பி.இ. மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 45 பேர் மட்டுமே பி.எட். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோதே, பி.எட். முடிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எந்தவிதமான பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவ்வாறு வரையறுக்கப்படவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அண்மையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எனக்கு புகார் வந்தது. பி.எட். முடிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதியை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைதான் முடிவெடுக்க வேண்டும். எனவே, இந்தப் புகாரை உடனடியாக அந்தத் துறைக்கு மாற்றி அனுப்பிவிட்டேன்' என்றார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் கூறும்போது, ' இந்தப் புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள விரைவில் புதிய பாடத் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்


அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த 3 நாள் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த பாடத்திட்டம் நிச்சயம் தரம் வாய்ந்ததாக இருக்கும். அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஒரு புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதையொட்டி 54,000 கேள்வி-பதில்கள், வரை படங்கள் அடங்கிய தொகுப்பு 15 நாள்களில் வெளியாகும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கணினி, வைஃபை வசதி ஆகியவற்றை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. பொதுத் தேர்வு நேரங்களில் சில ஊர்களில் மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வெழுத வேண்டியுள்ளது என்ற கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நிகழ் கல்வியாண்டில் அருகில் உள்ள மையங்களில் தேர்வெழுத வசதியாக கூடுதலாக 200 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம்.

இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை: புதிதாக வடிவமைக்கப்படும் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கமும் மாணவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்வித் தகுதியை மதிப்பிடும் தேர்வு முறையானது, அறிவியல் விளையாட்டு போன்ற எந்தக் குறிப்பிட்ட துறையில் அந்த மாணவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் மதிப்பிடும் வகையில் மாற்றப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இடம் பெறாத தகவல்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ருஷிகேஷ் சேனாபதி: புதிய பாடத் திட்டத்தில் மனப்பாட முறையைக் காட்டிலும், மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாதிரியான பாடங்கள், வடிவமைப்பை விரும்புகிறார்கள் என்பது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். புரிதலுக்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்படுவதன் மூலம் தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சாதிக்க முடியும்.

தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்


மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் புதிய பாடத்திட்ட கருத்தரங்கில், கல்வியாளர்கள் பலர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன்:

இந்த ஆண்டு, முதல் வகுப்பு படிக்கும் மாணவர், 2030ல், பிளஸ் 2 முடிப்பார்; அப்போது, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார அளவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இதை சமாளிக்கும் வகையில், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.பாடத்தில் உள்ளதை மட்டுமே தேர்வில் மதிப்பிடும், தேர்வு முறையை மாற்ற வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

ஜெர்மன் துணை துாதர், அஷிம் பேபிக்: கல்வியாளர்களின் கருத்தை கேட்டு, பாடத்திட்டத்தை மாற்றுவது தான், நல்ல அடித்தளம். அடுத்த, 12 ஆண்டுகளில் ஏற்பட போகும் மாற்றங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். ஒரு நாடு, மாநிலம் என, குறுகிய வட்டத்தில் இல்லாமல், சர்வதேச அளவில், அனைத்து நாடுகள், மக்களுடன் பழகும் வகையில் மாணவர்கள் தயாராக வேண்டும். அதற்கேற்ற, சுயமாக நிர்ணயிக்கும், தன்னாட்சி முறை பாடத்திட்டம் தேவை.இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மன் என, பல நாடுகளில், தன்னாட்சி பாடத்திட்ட முறை உள்ளது. சமூக அறிவியல், மனோதத்துவவியல், சூழ்நிலையியல் போன்றவற்றில், அதிக முக்கியத்துவம் தேவை. மாணவர்கள் தாமாக சிந்தித்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, பாடத்திட்டம் உதவ வேண்டும்.

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை: தமிழகத்தில், அரசு பள்ளியில், தமிழில் தான் படித்து, இந்த நிலைக்கு, நான் வந்துள்ளேன். இஸ்ரோவில், இன்னும் பல விஞ்ஞானிகள், தமிழகத்தை சேர்ந்தவர்களாக பணியாற்றுகின்றனர். தாய்மொழி கல்வியை, தவறாக நினைக்கக்கூடாது. ஆனால், பாடப்புத்தகத்தை கடந்து, படிக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன தெரியவில்லை என, அளவிடும் தேர்வு முறை மாறி, அவர்களுக்கு என்ன தெரியும் என்ற தேர்வு முறைக்கு வர வேண்டும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ருஷிகேஷ் சேனாபதி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், 2005ல், தேசிய பாடத்திட்ட விதிகள் வகுக்கப்பட்டன. இதில், தற்போதைய மாணவர்களுக்கு தேவையான, அனைத்து பாடத்திட்ட முறைகளும் உள்ளன. ஆனால், எத்தனை பாடத்திட்டம் கொண்டு வந்தாலும், ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் முறை, மாற வேண்டும்.

புத்தகங்களில் உள்ளதை அப்படியே கற்பிப்பது மட்டுமின்றி, அதை, வெளிப்புற அனுபவங்களின் படி, கற்றுத்தர வேண்டும். வகுப்பை விட்டு, பாடப்புத்தகத்தை கடந்து, கற்று தர வேண்டும். வெறும் மதிப்பெண்ணை மட்டும் பார்க்காமல், தனித்திறன் வளர்க்க வேண்டும். தேர்வில், சுயமாக சிந்தித்து பதில் அளிக்கும் சிக்கலான வினாக்களுக்கு, மாணவர்கள் தயாராக வேண்டும்.

பாடத்திட்ட குழு உறுப்பினர், சுல்தான் அகமது இஸ்மாயில்: இந்தியாவில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கல்லுாரி, பல்கலைகளில் மதிப்பெண்ணுக்கே முக்கியத்துவம் கிடைக்கிறது. பாடத்திட்டத்தை தயாரிக்கும், தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமோ, பள்ளிக்கல்வித்துறையோ, மதிப்பெண் அடிப்படையில் தான் வேலை தருகிறது. அதனால், மாணவர்கள் மதிப்பெண்ணுக்காக படிக்கும் சூழல் உள்ளது. இதை கொள்கை அளவில் மாற்றுங்கள். திறமைக்கு மட்டுமே மதிப்பு என்றால், அதற்கேற்ப, மாணவர்களும், ஆசிரியர்களும் உடனே மாற தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் பேசினர்

பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு


ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது. பி.எட்., கல்லுாரிகளை புதிய தரவரிசைக்குள் கொண்டு வர, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்.சி.டி.இ.,யின் ncte-india.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு, கல்வியின் தரம், மாணவர்களின் தேர்ச்சி, ஆசிரியர்களின் திறன் அடிப்படையில், கல்லுாரிகள் தரவரிசை செய்யப்படும்; 'ஏ, பி, சி, டி' என, நான்கு வகைகளில், கல்லுாரிகள் பிரிக்கப்படும். அதில், 'டி' பிரிவில் இடம் பெறும் கல்லுாரிகள் மூடப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தர வரிசைக்காக கல்லுாரிகள் ஆய்வு செய்யப்படும்