இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 22, 2017

வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறள் நன்னெறி கல்வி பாடத்திட்டம் : ஐகோர்ட் உத்தரவால் அரசாணை வெளியீடு


வரும் கல்வி ஆண்டில் திருக்குறள் நன்னெறி பாடத்திட்டம் அமலாகும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென ராஜரத்தினம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த 26.4.2016ல் உத்தரவிட்டார்.

அதில், கல்வியின் குறிக்கோள் நன்னெறி கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம் என்பதால், திருக்குறளிலுள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் வயது மற்றும் வகுப்பை கணக்கீடு செய்து, நன்னெறி கல்விக்கான திருக்குறள் பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தப்பட்டார்.

அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலுள்ள 105 அதிகாரங்களை கொண்ட நன்னெறி கல்வி பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் வகுப்பு வாரியாக அமல்படுத்தப்படும்’ என உத்தரவிட்டுள்ளார்.

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது. விண்ணப்பங்களை பெற கடைசி நாளான நேற்று வரை, 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும், 5 லட்சத்து 60 ஆயிரம் பி.எட்., முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017*



5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது: நீதிபதி கிருபாகரன்


5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எத்தனை பி.எட், எம்.எட் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பயிற்சி பெற்ற மாணவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி எஸ்விஐ கல்லூரி தொடுத்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 27 ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஆசிரியர் பயற்சி வகுப்பில் அதிக மாணவர்களைச் சேர்க்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெட்டர் பாட் கல்வி நிறுவனங்கள் பெருக்கத்தால் தரமான ஆசிரியர்கள் உருவாவதில்லை என்றும் கல்வித் தரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tuesday, March 21, 2017

DEPARTMENTAL EXAM APPLY LAST DATE 31.3.17

மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும். மாணவர்களின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

இதனால், மாணவர்கள் உயர் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் செல்லும் நிலையில், பெயர் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல் மாணவரின் பெயர் மற்றும் இனிஷியல், துாய தமிழில் இடம் பெற உள்ளது. அதேபோல், பள்ளியின் பெயரும், தமிழில் இடம் பெற உள்ளது.இதுதொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில், 'மார்ச், 31க்குள், அனைத்து மாணவர்களின் பெயர்களும், தமிழ் இனிஷியலுடன், தேர்வுத் துறைக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்' என்றார்.

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசு


மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கொடுக்க வேண்டியது அவசியமாகி வருகிறது. பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள், உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -என்று மத்திய அரசு அறித்துள்ளது. மேலும் பான் எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. அடுத்த நிதி ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, March 20, 2017

கல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல்


பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு வலியுறுத்தியுள்ளது.பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், லோக்சபா, பா.ஜ., - எம்.பி., பகவத் சிங் கோஷ்யாரி தலைமையிலான, பார்லிமென்ட் மனுக்கள் நிலைக் குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறியுள்ளதாவது: கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்; அதே நேரத்தில், தேசிய கல்வி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்குள் இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.ஐந்தாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி குறித்து, அவ்வப்போது தேர்வு நடத்தி மதிப்பிட வேண்டும். அதேபோல், ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் மதிப்பிட வேண்டும். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், அங்குள்ள வசதிகள் குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறியும் வகையில், புதிய முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.இவ்வாறு பார்லி., குழு பரிந்துரை அளித்துள்ளது.

அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்


தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000 யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Sunday, March 19, 2017

31ல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதியும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 5ம் தேதியும் தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி, வருகிற 31ம் தேதி வரையும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரையும் நடைபெறுகிறது. பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில மொழிப்பாட தேர்வுகள் முடிந்துள்ளன. விடைத்தாள்கள் கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முகப்புத் தாள்கள் நீக்கப்பட்ட பின்னர், பிற மாவட்டங்களில் உள்ள திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்வி மாவட்ட அளவில் 10ம் வகுப்பு தமிழ், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதி தொடங்கும். மற்ற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 4ல் தொடங்கும். பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 5ல் தொடங்கும். மற்ற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 10ல் தொடங்கும். முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தப்படும்.

டெட்' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்


பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை. சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல் துவங்கி, வரும், 22ல் முடிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.-

Friday, March 17, 2017

தடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் சிக்கல்


மீசல்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்று ரத்து செய்யப்படவுள்ளது.தமிழகத்தில், பிப்., 6 முதல் 28 வரை, மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 'இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்' என, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், பெற்றோர் பலரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில், சுகாதாரத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை. பெற்றோர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் ஒருவரை ஒருவர் காரணம் காட்டி, தடுப்பூசி போட ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில், 1.77 கோடி பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, 44 சதவீதம் பேர் மட்டுமே, தடுப்பூசி போட்டனர். எனவே, தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்றினை ரத்து செய்ய, சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு சுகாதாரச்சான்று ரத்து செய்யப்பட்டால், நடப்பாண்டு, பள்ளி களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்க இயலாது.

சுகாதாரத் துறையினர் கூறுகையில், 'குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட காலகட்டங்களில், பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். 'இது, 1939ன், பொது சுகாதார திட்டத்தின், பிரிவு, 76, சட்டப்படி, கட்டாயமாகும். எனவே, தட்டம்மை தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச்சான்று ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

ரூ.10 பிளாஸ்டிக் நோட்டுமத்திய அரசு ஒப்புதல்


அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், 10 ரூபாய்நோட்டுகளை பிளாஸ்டிக்கில் தயாரிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில் நேற்று, நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:காகிதத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், நாளடைவில், பாதிப்படைந்து, பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.

எனவே, அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு தயாரிக்க, முடிவு செய்து உள்ளோம். முதல் கட்டமாக, அதிக அளவில் பயன்படுத்தும், 10 ரூபாய் நோட்டுகளை, பிளாஸ்டிக்கில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், புதிய நோட்டுகள் உருவாக்கப்படுகிறது; நாட்டின் ஐந்து இடங்களில், இதுதொடர்பாக, கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

2017-18 புதிதாக பள்ளிகளில் தரம் உயர்த்த கருத்துரு சமர்ப்பித்தல் சார்பு


தரம் உயர்த்தப்பட்ட 19-உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப மற்றும் ஈர்த்து கொள்ளுவது சார்பான அறிவுரைகள் -

Thursday, March 16, 2017

பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புவியியல் தகவல் முறைமையின்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபடச் செயலி உதவியுடன் கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 226 புதிய ஆரம்ப பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு சாத்தியமற்ற பகுதிகளில் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் (2017-2018) மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2017-2018-ஆம் கல்வியாண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சாய்வுதளங்கள், மாணவ-மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2016-2017-ஆம் ஆண்டில் ரூ.440.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சுகாதாரத்தை பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு ரூ.57.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரு.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 3.28 லட்சம் குழந்தைகள் சேர்ப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3 லட்சத்து 28,910 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வழங்க ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுக்கு பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் திருத்தம் செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் பி.கருணாகரன். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன். ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டு விட்டனர்.

நான் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும்போது எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டு விட்டேன். அதன்பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கில், 1992-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பெற்றேன். குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ஆம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச் சான்றிதழை பெற்றேன். இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித் தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் மனு செய்தேன். ஆனால் பிறந்த தேதியை திருத்தம் செய்து தர தேர்வுத்துறை செயலாளர் மறுக்கிறார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியைக் குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

விதிகளில் இடமில்லை: இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. விதிகள், பிரிவு 5-ன் படி, வயது மற்றும் பெயர்களில் ஏதாவது திருத்தம் இருந்தால், அந்த திருத்தத்தை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பே செய்து விட வேண்டும். தேர்வுக்கு பின்னர், திருத்தங்களை செய்ய முடியாது என்று விதி, தெளிவாக கூறுகிறது. எனவே, மனுதாரரின் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது.

மேலும், பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வு துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும், குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன்னுடைய பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, இந்த வழக்கை ஏற்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வக உதவியாளர் தேர்வுஇம்மாத இறுதியில் முடிவு


தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும், பணி நியமனம் இறுதி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து, இறுதிப் பட்டியல் வெளியிட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகள், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, தேர்வு முடிவுகள் பற்றிய வதந்திகள் குறித்து, தேர்வுத் துறையிடம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தேர்வு முடிவுகளை, மார்ச் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக பட்ஜெட் -2017 தமிழில்

Click below

https://app.box.com/s/enfpgi5ot8hcsh5g8zwf227yqgal73f4

Wednesday, March 15, 2017

TN budjet

💥TNPTF MANI💥

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....

* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி

* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.

* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி

* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்

* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.

* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி

* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி

* காவல்துறைக்கு ரூ 1,483 கோடி

* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.

* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி

* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி

* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு

* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு

* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு

* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி

*  கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி

*  தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி

*  உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

*  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

*  ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஐடி துறைக்கு ரூ.116 கோடி

*  போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி

*  வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.

*  நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு

* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.

* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.

* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும்

* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.

* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.

* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு

* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.

* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி

* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.

* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.

* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.

* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.



* 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.