இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 21, 2016

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?


'ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், ஜூலையில் அமலுக்கு வந்தன; ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு, பணப்பலன்கள் வழங்கப்பட்டன. இதே போல், தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும், சம்பள குழு நியமிக்கப்பட வேண்டும்; ஆனால் இல்லை. ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலையில், 5 - 7 சதவீதத்திற்குள், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த ஆண்டு, ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது; ஜூலைக்கான உயர்வு இன்னும் வரவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன், அறிவிப்பு வருமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'


அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.

இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது. பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர். 'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது.

பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர். இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர் களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம். 'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர்.

'பிற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தாதீங்க!'


'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களின், 'டெபிட்' கார்டுகளில் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின், 6.5 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மற்ற பொதுத் துறை வங்கிகளும், தங்கள், வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கி உள்ளன. அந்த வகையில், மொத்தம், 32 லட்சம் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, 'பின்' நம்பரை உடனடியாக மாற்றுமாறு, சில தனியார் வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனினும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள மொத்த கார்டுகளில், 0.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டு உள்ளதாகவும், 99.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், வங்கிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளன. இந்நிலையில், 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பிற வங்கி, ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்; பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே, இந்த அறிவுரை வழங்கப்படுகிறது; வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்' என, அந்த வங்கியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய ரே‌ஷன் கார்டுகளுக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


   

நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய ரே‌ஷன் கார்டுகளுக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக புதிய ரே‌ஷன் கார்டுகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் நவீன எலக்ட்ரானிக் கருவி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், புதிய ரே‌ஷன் கார்டுகளுக்கு ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வீடுகளில் கள ஆய்வு செய்த பின்னர், புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, October 20, 2016

வாங்க பழகலாம்' திட்டத்தில் குளறுபடி: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம்(சர்வ சிக்‌ஷா அபியான்) திட்டத்தை மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின்கீழ் ‘வாங்க பழகலாம்’ என்ற புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்த திட்டம் வரும் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் நகராட்சிகள், கிராமப்புறங்களில் இயங்கும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு இரு பள்ளிகளுக்கும் இடையே மாணவர்கள் பரிமாற்றம் செய்யப்பட உள்ளனர். குறிப்பிட்ட பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்கள் அடுத்த 4 மாதங்களுக்கு ஒருநாளோ அல்லது இரண்டு நாேளா மாற்று பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். கிராமங்களில் உள்ள மாணவர்கள் நகரத்து பள்ளிக்கும், நகரத்து பள்ளியில் படிக்கும் மாணவர் கிராமத்துக்கும் அனுப்பப்பட உள்ளனர். புதிய இடத்தில் கல்வி கற்றல், விளையாட்டில் பங்கேற்பதன்மூலம் அந்த மாணவர்களின் கற்றல் திறன், சமூகத்தை அணுகும் முறை மேம்படும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் குளறுபடிகள் உள்ளன. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

நகர்புறத்து பள்ளிக்கும் கிராமப்புறத்து பள்ளிக்கும் இடையே துாரம் அதிகமாக உள்ளது. 20 மாணவர்களை குறிப்பிட்ட பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இருபது மாணவர்களை அழைத்து சென்றுவர இந்த நிதி போதாது. மாணவர்களின் நலன்கருதி பள்ளி ஆசிரியர்களிடம் பணம் சேகரித்து மாணவர்களை அழைத்து செல்லலாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம், இதற்காக அனுமதி கடிதம் பெற அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக குறிப்பிட்ட பெற்றோரை அழைத்து பேசியபோது முதலில் வேண்டாம் என்று மறுத்தாலும், ஆசிரியர்களான எங்களை நம்பி மாணவர்களை அனுப்ப சம்மதித்தனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு இடையேயான தொலைவு 40 முதல் 70 கிலோமீட்டர் வரை இருக்கிறது.

அந்த மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதற்கு ஆசிரியர்களாகிய நாங்களே பொறுப்பு. இவ்வளவு தூரம் பயணம் செய்யும் மாணவர்கள் களைப்பில் ஓய்வெடுக்க முடியுமே தவிர கல்வி கற்க முடியாது. ஒரு நகராட்சி பள்ளி இருக்ககூடிய ஒன்றியத்தில் உள்ள எல்லா பள்ளிகளையும் நகராட்சி பள்ளிகளாக கணக்கில் எடுத்துள்ளார்கள். இந்த தவறான நடைமுைறயால் பள்ளிகளுக்கு இடையேயான தூரம் அதிகமாக உள்ளது. அதனால் ஒரு தாலுகாவுக்குள் இரு பள்ளிகளை தேர்வு செய்து இந்த திட்டத்தின்கீழ் மாணவர்களை பரிமாறி கொண்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இணைய வழி கல்வி அறிமுகம் : பள்ளி கல்வி இயக்குனர் தகவல்


தமிழகம் முழுவதும் 65.20 கோடி ரூபாயில் 1,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 2017 -18ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகமாகும்,'' என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், பள்ளிகளை தரம்படுத்துதல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வட கிழக்கு பருவமழை துவங்குவதால், பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்', இணைய வழி கல்வி திட்டம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2017 - 18ம் கல்வி ஆண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, 150 பாடங்கள் தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும். தற்போது, இணைய வழி கல்வி திட்டத்திற்காக கணினி, 'புரொஜக்டர்' உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், 65.20 கோடி ரூபாயில் 1,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மாணவர்களுக்கு 'வைட்டல்' திட்டத்தின் மூலம் நீதி போதனை கருத்துக்கள் பயிற்றுவிக்கப்படும்.

தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, பொதுத்தேர்வில் மாணவர்கள் எளிதில் வெற்றி பெற வழிவகுக்கும். புதிய கல்விக் கொள்கையால், ஏற்கனவே தமிழகத்தில் அமலில் இருக்கும் சிறந்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றார்.

8ம் வகுப்புக்கு தனித்தேர்வு கட்டாயம்..கல்விக்குழு பரிந்துரை

8ம் வகுப்புக்கு தனித் தேர்வு கட்டாயம்.. ஆல் பாஸ் கூடாது.. கல்விக் குழு பரிந்துரை

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு கட்டாயம் என்றும் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வதற்கு கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. இந்தக் குழுவிற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா தலைமை ஏற்றுள்ளார்.

இந்தக் குழு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழு, சில பரிந்துரைகளை அதில் அளித்துள்ளது.
8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தனித் தேர்வை அறிமுகம் செய்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்ற நாடுகளில் உள்ளது போன்று, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆரம்ப பள்ளி மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.
மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதும் மிக அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, October 19, 2016

புதிய கல்வி கொள்கை: அக். 25ல் டில்லியில் கூட்டம்


புதிய கல்விக் கொள்கையை முடிவு செய்வது குறித்து, அக்., 25ல், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், கமிட்டி அமைத்து, புதிய வரைவு கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்த கொள்கைக்கு, ஜூலை முதல் செப்., வரை, நாடு முழுவதும் கருத்துக்கள் பெறப்பட்டன. புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்வது குறித்து, வரும், 25ல், டில்லியில் மத்திய மனிதவள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாநிலங்களில் இருந்து, அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கட்டாய கல்வி சட்டத்திருத்தம், எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அதன் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'புதிய கல்விக் கொள்கைக்கு, பல மாநிலங்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கையை, இறுதி செய்யக் கூடாது' என, தெரிவித்து உள்ளார்.

உடற்கல்வி ஆசிரியர்களின் 21 ஆண்டுகள் சிக்கலுக்கு விடிவு


அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின், ஊக்க ஊதியத்திற்கான, 21 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்கும் போது, அதற்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

ஆனால், இந்த ஊக்க ஊதியம் வழங்குவதில், 21 ஆண்டுகளாக பிரச்னை நீடித்தது; பலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரியர் சங்கங்களும், அரசுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. இதில், சான்றிதழ் படிப்பு முடித்தோர், 1992க்கு முன், பி.எட்., படிப்பை முடித்திருந்தால், ஊக்க ஊதியம் தரப்படும். மற்றவர்களுக்கு, பி.பி.எட்., - பி.பி.இ.எஸ்., அல்லது பி.எம்.எஸ்., எம்.பி.எட்., - எம்.பி.இ.எஸ்., மற்றும் யோகாவில் முதுநிலை டிப்ளமோ முடித்தால், இரண்டு ஊக்க ஊதியம் தரப்படும்.

இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்க, மாநில பொதுச் செயலர், டி.தேவி செல்வம் கூறுகையில், ''21 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திய, அரசுக்கு நன்றி. ஆசிரியர்கள், உயர் கல்வி தகுதி பெற்ற நாள் முதல் கணக்கிட்டு, இந்த சலுகையை வழங்க வேண் டும்,'' என்றார்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு: அக்டோபர் 25 முதல் வினா வங்கி புத்தகங்கள்


தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

""10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்களை தயாரித்து, தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் மூலம் அச்சிட்டு குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது.

செப்டம்பர், மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வு வினாத் தாள்கள் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிடப்படுகிறது. மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம்...:இந்த ஆண்டுக்கு உரிய பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவு, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வினா வங்கி புத்தகங்கள் அச்சிடும் பணி முடிவடைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி நிறைவடையும் நிலை உள்ளது. சென்னையைப் பொருத்தவரை மூன்று மையங்கள், பிற மாவட்டங்களுக்கு ஒரு மையம் வீதம் வினா வங்கி புத்தகங்கள் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு உரிய வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் அனைத்து மையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். விலை எவ்வளவு? பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினா புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.30 முதல் ரூ.100 வரையும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் அனைத்துப் பாடங்களுக்கும் பொதுத் தேர்வு வினாத் தாள்களின் தொகுப்பு ஆங்கில வழியில் ரூ.220 வீதமும் தமிழ் வழியில் ரூ.225 வீதமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிகவியல், கணக்குப் பதிவியல் மாணவர்களுக்கு...: பிளஸ் 2, 10-ஆம் வகுப்பில் படிக்கும் அறிவியல் பிரிவு அல்லாத வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது; இந்த வினா வங்கி புத்தகங்கள் நவம்பர் மாத இறுதியில் அனைத்து மாவட்ட மையங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

*அரசு ஊழியர்களுக்காண விடுமுறை கையேடு

Click below

https://app.box.com/s/mg5qj74bl02t3trzffo8zcn58cwvph2k

EMIS entry detail

Click below

https://app.box.com/s/ezoyky24i7jnvbqjx3e329ldwseilge8

Tuesday, October 18, 2016

ஓய்வுபெறுவோர் எண்ணிக்ைக உயருவதால் நெருக்கடி18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்


தமிழகத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில்ைல. எனவே, சத்துணவு பணியாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் சேர்த்து கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால், பணிச்சுமையால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நிதி உதவி பள்ளிகளில் 42,423 சத்துணவு அமைப்பாளர்கள், 42,852 சமையலர் மற்றும் 42,855 சமையல் உதவியாளர் உள்பட மொத்தம் 1,28,130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக, சத்துணவு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அரசு ஊழியர் சங்கங்களுடன் ஒருங்கிணைந்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அவசர அவசரமாக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சுமார் 18 ஆயிரம் சத்துணவு பணியாளர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, வரும் 24ம் தேதி உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

வரும் டிசம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளதால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துவிடும். எனவே, அதற்கு முன்பாக, தற்போதுள்ள காலிப்பணியிடங்களை ஓரளவு நிரப்பிட துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கல்வியியல் (பி.எட்.) படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த விண்ணப்ப விற்பனையைத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தொடக்கி வைத்தார். இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் தெரிவித்திருப்பது:

இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் இளங்கல்வியியல் (பி.எட். 2 ஆண்டுகள்) படிப்பில் 500 இடங்களுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான (நாள்காட்டி ஆண்டு) சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் முடித்து ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கல்வியியல் பயில விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ரூ. 600 செலுத்தி நேரிலோ அல்லது www.tamiluniversity.ac.in என்ற இணையதள முகவரியிலோ பெறலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவ. 30-ம் தேதி.

Monday, October 17, 2016

ஆதார் சலுகைகள்: ஏழாண்டு சேமிக்க முடிவு


ஆதார்' அட்டையை பயன்படுத்தி, பொதுமக்கள் பெறும் சலுகைகள் மற்றும் மானிய உதவிகளை, ஏழாண்டு வரை சேமித்து வைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்ப்பு ; வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு மானியம் போன்ற பல சேவைகளுக்கு, ஆதார் எண்களை, அரசு கேட்க துவங்கியுள்ளது. ரேஷன் கடைகளிலும், ஆதார் விபரங்கள் இணைக்கப்படுகின்றன. 'அரசு உதவி திட்டங்கள் பெற, ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்படக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் திட்டத்தில், தனிநபரின் ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளதால், ஒரு தரப்பினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த சூழலில், மேலும் ஒரு புதிய விதியை, மத்திய அரசு புகுத்தி உள்ளது. அதன்படி, ஆதார் அட்டை மூலம் ஒரு தனிநபர் பெறும் வங்கி மானியம் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் பல்வேறு பரிமாற்றங்களை, ஏழு ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கண்டுபிடிப்பது சிரமம் : இதுகுறித்து, ஆதார் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: இந்த விபரங்கள், இரண்டு ஆண்டு காலம் மட்டுமே உரிய அதிகாரிகள் மட்டும் பார்க்கும் வகையில், 'ஆன்லைன்' முறையில் சேமித்து வைக்கப்படும். அதன்பின், தேவைப்பட்டால் மட்டும் தேடி எடுக்கும், 'ஆப்லைன்' முறையில், ஐந்து ஆண்டுகளுக்கு தகவல் பாதுகாக்கப்படும்.

ஆதார் தொடர்பான சலுகைகள் மற்றும் பணப் பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்தால், அதை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும்; அதற்காகவே இந்த ஏற்பாடு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி, சமூக சேவகர்கள் கூறுகையில், 'ஆதார் அட்டை, பின்னாளில் கட்டாயமக்கப்பட்டால், தனிநபர் பற்றிய ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது; அரசும் ரகசிய வேவு பார்க்க

முடியும். அதுவும், ஏழாண்டு என்பது ரொம்ப அதிகம்' என்றனர்.

பொது மக்கள் அறிய வசதி! : ஆதார் எண் அடிப்படையில், தாங்கள் பெற்ற ஆதாயங்களின் விபரங்களை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்; இரண்டாண்டு வரையிலான தகவல்களை மட்டுமே காண முடியும். தனிநபர்கள், தாங்களாகவே விபரங்களை பார்த்து, தெரிந்து கொள்ளும் வசதியை தந்தால், அது அபாயத்தில் முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.