இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 19, 2016

'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'


பத்தாம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்

துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலங்களில் ஐ.டி.ஐ., தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் என்.சி.வி.டி., கட்டுப்பாட்டின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும், 18 லட்சம் மாணவர்கள், இப்படி படித்து வருகின்றனர். இவர்கள், 8ம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ.,யில் இரண்டு ஆண்டுகள் படித்தால், தங்களது உயர் படிப்பை தொடர விரும்பும்போது, 10ம் வகுப்பு முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்பட்டு, நேரடியாக, பிளஸ் 1ல் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

அதேபோல், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள், ஐ.டி.ஐ.,யில் படித்து விட்டு, உயர் படிப்பு படிக்க நினைக்கும்போது, அவர்கள், பிளஸ் 2 முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப் படுவர்.அவர்கள் நேரடியாக, இன்ஜினியரிங், பட்டப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை வரும் ஜூலை, 15ல், பிரதமர் மோடி அறிவிக்கிறார். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Friday, June 17, 2016

பிளஸ் 2: அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புப் பதிவுக்கு ஏற்பாடு


பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவுப் பணி மேற்கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. அதனால் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்ததற்கான அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வரவேண்டும்.

மேலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்தோர் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையென்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். வருகிற 20-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரையில் வேலைவாய்ப்புப் பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற இருக்கிறது. இதில், குறிப்பாக பதிவு தொடங்கிய 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக அளிக்கப்பட உள்ளது.

அதேபோல், https:tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். எனவே இந்த வாய்ப்பை பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

8th std assessment test model question paper

Click below

https://app.box.com/s/9alaakcoanpd7gp1ejiq9hriwuc7fjot

https://app.box.com/s/lo8lzucose8z5opo7uizetpvylaq2gar

https://app.box.com/s/ieb82qbvendrojbc70gtzcrsokkkzyue

7th std tamil..English, maths question paper

Click below

https://app.box.com/s/hh4ti5zbgpirk6xp7ujnqqpzuqmma1te

https://app.box.com/s/lchp87zl38q7n0t2b7akzcj799q057xm

https://app.box.com/s/ieb82qbvendrojbc70gtzcrsokkkzyue

6th English question paper

6th tamil&maths question paper

https://app.box.com/s/bwb07rfn8xabty0h9rlw1yop16jqz5ec

https://app.box.com/s/dxri8zyv9eiiqqvar3hi8ml8sy9ybtgk

Assessment form

Thursday, June 16, 2016

பிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்


பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 19-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வருகிற 20-ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை, தாங்களே தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு


தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி முதல், வகுப்புகளை துவக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.அதேநாளில், பிளஸ் 1 பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவும், பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது

தமிழக நோபல் விஞ்ஞானிகள் பிறந்த ஊர்களில் இலவச 'வை-- - பை'


தமிழகத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, சர் சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் சொந்த கிராமங்களில், இலவச இணையதள வசதி பெற உதவும், 'வை - பை' இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

உலகெங்கும், 'வை - பை' வசதியை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களுக்கான தலைமை அமைப்பு, 'வயர்லெஸ் பிராட்பேண்ட் அலையன்ஸ்.' அது, தங்கள் உறுப்பினரான, சென்னையைச் சேர்ந்த, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைவர் கைலாசநாதனிடம், 'இந்த ஆண்டு முதல், ஜூன், 20ம் தேதியை உலக, 'வை - பை' தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதை நினைவூட்டும் வகையில் ஏதேனும் செய்யுங்கள்' என, கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இத்திட்டம் உதயமானது. இதுகுறித்து, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஜித் சிங் கூறியதாவது: நோபல் பரிசு பெற்றதின் மூலம், சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நாட்டுக்கு புகழ் சேர்த்து இருந்தாலும், அவர்கள் பிறந்த ஊர்களான, தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள மாங்குடி மற்றும் புரசக்குடி கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளன.

அதனால், அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, அந்த கிராமங்களில், இலவச, 'வை - பை' வசதி ஏற்படுத்தி உள்ளோம். அங்கு, அதற்கான அடிப்படை வசதி இல்லை. இருந்தாலும், யூ.பி.எஸ்., போன்றவற்றின் உதவியுடன் அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கிராம மக்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்துள்ளனர். அதனால், 'வை - பை' வசதியை பயன்படுத்தி, இணைய வசதியை அவர்கள் பெறலாம். மாங்குடியில் உள்ள பள்ளிக்கு, கணினி தர உள்ளோம். இதனால், மாணவர்கள் பயன் அடைவர். இதன் மூலம், இந்த, இரு கிராமங்களுக்கும், காலாகாலத்திற்கு 'வை - பை' வசதி அளிப்பது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, June 15, 2016

மொபைல் போன் பயன்படுத்த தடை


தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை:

* மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப் பட்டுள்ளது.

இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்
* மீறி யாரும் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்
* வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, ஆசிரியர்கள் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும்; மீறினால், ஆசிரியர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை:
*l வகுப்பறையில், ஆசிரியர்கள் எக்காரணம்
கொண்டும் மொபைல் போன்களைபயன்படுத்தக் கூடாது. வகுப்பறையில், மொபைல் போனில் பேசினால், அந்த ஆசிரியர் மீது, தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, மொபைல் போனை கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது. மீறி கொண்டு வந்தால், அவர்களின் மொபைல் போனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்து, மாணவனின் பெற்றோரை வரவழைத்து, எச்சரிக்க வேண்டும்.

மிக சரியான முடிவு!: பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடைவிதித்தது, மிகச் சரியான முடிவு. தற்போது, 'ஸ்மார்ட் போன்' வந்துள்ளதால், அதில் பல வசதிகள் உள்ளன. 'கேம்ஸ்' ஆடுதல், 'வாட்ஸ் ஆப்'பில் வீடியோ, படம் அனுப்புதல், 'பேஸ்புக்' பார்த்தல் என ,வகுப்பறையில், மாணவர்கள் தேவையில்லாத வேலையில் ஈடுபடுகின்றனர்.
* மேலும், மொபைல் போன் காணாமல் போவதும், அதை விசாரிப்பதும், பள்ளி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்கள், வகுப்பறை தவிர, மற்ற நேரத்தில் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'


பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் தேதி துவங்கியது. பள்ளிக்கல்வித் துறை தற்போது மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது. பள்ளித் திறப்பையொட்டி ஏற்கனவே கழிவறைகளை சுத்தம் - சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டது.

தற்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், 'கழிவறைகளை சுகாதாரமாக வைப்பதுடன், பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை மூடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஒருவார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்' என, அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சுற்றறிக்கையில், 'மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் திட்டமிட வேண்டும்.

பள்ளிகளில் தினமும் 45 நிமிடங்கள் வாசிப்பை கட்டாயமாக்க வேண்டும். கழிவறைகளை மாணவர்கள் சுகாதாரமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இவற்றை வலியுறுத்த வேண்டும். இதுபற்றிய விபரத்தை மின்னஞ்சலில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், “பள்ளிகள் அருகே ஆபத்தான நிலையில் கிணறுகள் இருந்தால் அவற்றை ஒருவார காலத்தில் அகற்றி அதுபற்றிய விபரத்தை அறிக்கையாக தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

அரசு பஸ்சில் அரை டிக்கெட் வயது சான்றிதழ் கட்டாயம்


'அரசு பஸ்களில், அரை கட்டண டிக்கெட் எடுக்க விரும்புவோர், பயணத்தின் போது, குழந்தைகளின் வயது சான்று எடுத்துச் செல்வது அவசியம்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பஸ்களில், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பயணக் கட்டணம் கிடையாது; 3 முதல், 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு, அரை கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், ஒவ்வொரு முறையும், அரசு பஸ்சில் குழந்தைகளுடன் பயணிப்போர், அரை டிக்கெட் கேட்பதும், 'முழு கட்டண டிக்கெட் வாங்க வேண்டும்' என்று நடத்துனர் கூறுவதும் வழக்கமாக உள்ளது. குழந்தைகளின் வயதில், நடத்துனருக்கு சந்தேகம் ஏற்படும் போது, உயரத்தை கணக்கிடுவர். இதற்கு பஸ்சில் வசதி உள்ளது. அப்போது, 130 செ.மீ.,க்கு மேல் உயரம் இருப்பின், முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. பல நேரங்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் உயரமாக இருப்பதால், முழு கட்டணம் செலுத்த நேரிடுகிறது.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அரை டிக்கெட் எடுப்பவருக்கான வயது சான்றை, பயணத்தின் போது எடுத்துச் சென்றால், எந்த சிக்கலும் வராது. ஆகையால், இனி அரை டிக்கெட் எடுக்க வேண்டிய பெற்றோர், தவறாமல், குழந்தை யின் வயது சான்று எடுத்துச் செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, June 14, 2016

சத்துணவு மைய சமையல் கூடங்களிலேயே உணவு தயார் செய்ய வேண்டும்:தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தல்


பள்ளிகளில் சத்துணவு மைய சமையல் கூடங்களில் மட்டுமே மதிய உணவைத் தயார் செய்ய வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை தூய்மையாகப் பராமரித்தல் தொடர்பாக ஏற்கெனவே ஆய்வுக் கூடங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சத்துணவு மைய சமையல் கூடங்களில் மட்டுமே மதிய உணவை தயார் செய்ய வேண்டும். புகை போன்றவற்றைக் காரணம் காட்டி திறந்தவெளியில் சத்துணவு தயாரிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சத்துணவு மையத்தில் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை இருப்பின் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எரிபொருள்கள் சமையல் கூடத்தில் இருப்பு வைத்தல் கூடாது. சமையல் செய்பவர்கள், உதவியாளர்கள் தன்னையும், சமையல் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்குத் தக்க அறிவுரைகளை உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Monday, June 13, 2016

'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்கும் புதிய 'ஆப்' அறிமுகம்


மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட் சங்கர் கூறியதாவது:

வழக்கமாக, மாதத்தில், 30 - 60 நிமிடங்கள் தான், பணம் எடுக்க, பொருட்கள் வாங்க, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். மீதி நேரங்களில் கார்டுகளை, 'சுவிட்ச் - ஆப்' செய்ய, புதிய 'ஆப்' உதவும். கார்டு தொலைந்தாலும், பண மோசடி செய்ய முடியாது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு, ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ்வேர்டு' மூலமாகவே, 'சுவிட்ச் - ஆன்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித்திறன் குறைந்த மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இதனால் பலர் கல்வித்திறனில் பின்தங்கியுள்ளனர்.

அவர்கள் 9, 10 வகுப்புகளில் தோல்வி அடைகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் அரசு மற்றும் உதவிப்பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பில் சிறப்பு தேர்வு நடத்தி, கல்வித்திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட உள்ளனர்.

அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் காலை, மாலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன. அதே போல் டி.என்.பி.எஸ்.சி.,போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

Friday, June 10, 2016

டிடிஎட் விண்ணப்ப தேதி நீட்டிப்பு


தொடக்க கல்வி பட்டயப் படிப்பு ஆசிரியர் பயிற்சியில் (டிடிஎட்) சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நாள் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவ, மாணவியர் ஒற்றை சாளர முறையின் கீழ் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வருகின்றன. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250, மற்றவர்களுக்கு 500க்கு வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வினியோகிக்கும் நாள் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும்.

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு


பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள் பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில், பல கல்லுாரிகளில், இரண்டு வித பட்டப் படிப்புகள் ஒரே முறையில் கற்றுத் தரப்படுகின்றன. உதாரணமாக, சட்டக் கல்லுாரியில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., படிப்புடன் எல்.எல்.பி.,யும் சேர்த்து, ஐந்து ஆண்டு படிப்பாக நடத்தப்படுகிறது.

இதே படிப்பை தனித்தனியாக படித்தால், ஆறு ஆண்டுகளாகும். ஆனால், இரண்டையும் இணைத்து படிக்கும் போது, ஒரு ஆண்டு குறையும். இதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நேரடியாக பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., என, ஒருங்கிணைந்த, நான்கு ஆண்டுகள் படிப்பாக நடத்த, பல ஆசிரியர் கல்வியியல் பல்கலைகள் முயற்சித்தன. ஆனால், 'பி.ஏ., - பி.எஸ்சி., போன்றவை கலை, அறிவியல் படிப்பாக இருப்பதால், அதை கல்வியியல் கல்லுாரி அங்கீகார விதியின் படி கற்பிக்க முடியாது' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி மறுத்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லுாரி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஒருங்கிணைந்த பி.ஏ., -- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - - பி.எட்., என்ற புதிய நான்கு ஆண்டு கால படிப்பை துவங்க அங்கீகாரமும், அனுமதியும் வழங்கக் கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும், புதுச்சேரி பல்கலைக்கும் விண்ணப்பித்தோம். எனவே, நான்கு ஆண்டு படிப்புக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் மனுவை பரிசீலிக்க ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவுப்படி, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'எந்த கல்லுாரியிலும், நான்கு ஆண்டு பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புக்கு, தமிழக கல்வியியல் பல்கலை அனுமதி வழங்கவில்லை. எனவே, ஏதாவது கல்லுாரி, நான்கு ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்பு நடத்துவதாக விளம்பரம் மற்றும் அறிவிப்பு செய்தால், அந்த கல்லுாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Thursday, June 09, 2016

1 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம் : தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல்


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2016-17 கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.

மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016-17 கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடநூல்களை www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள 269 “இ”- சேவை மையங்களிலும் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி பாடநூல்கள் 48மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் வந்து சேரும். இ-சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Wednesday, June 08, 2016

Student enrollment form

Click below

https://app.box.com/s/vzec28gmenubrk0e9qeg29ixdhouwnpt

பி.இ ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியீடு


பி.இ. படிப்பில் (2016-17) மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-இல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 24-ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்காக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை மே 31 வரையில் 2.53 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இவர்களில் 1,34,722 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், கலந்தாய்வு தேதிகள் குறித்து பதிவாளர் கணேசன் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

ஜூன் 27 முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு: ஜூன் 20-ஆம் தேதி ரேண்டம் எண்ணும், 22-இல் தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படுகின்றன. 24-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அழைப்புக் கடிதம்: கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

பெயர், பிறந்த தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,

இரண்டு முறை கட்டணம் செலுத்தியிருந்தால்...: விண்ணப்பதாரர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவ்வாறு கூடுதல் முறை கட்டணம் செலுத்தியவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அவர்கள் செலுத்திய கூடுதல் கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்றார்.

வெளியூர் மாணவிகள் தங்க சிறப்பு ஏற்பாடு

கலந்தாய்வுக்கு வெளியூர்களிலிருந்து வரும் மாணவிகள் தங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தாய் அல்லது சகோதரிகளுடன் வரும் மாணவிகள் இந்த வசதியைப் பயன்படுத்திகொள்ளலாம். இதற்கான கோரிக்கையை பல்கலைக்கழக வாயில் பாதுகாவலரிடமோ அல்லது கலந்தாய்வு அலுவலகத்திலோ தெரிவிக்கலாம். உடனடியாக மாணவியர் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.