இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 17, 2016

மக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்


மக்கள் தொகை விவரங்களை உறுதிபடுத்தும் பணியை ஆசிரியர்கள் இன்று துவக்குகின்றனர். இந்தியாவில் கடந்த 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

2011ல் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை இன்று (ஜனவரி. 18) துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும். 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விவரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு ‘பிரின்ட் அவுட்’ செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்துடன் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர்கள், குழந்தைகள் மற்றும் இதர விபரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் எண்களை கண்டிப்பாக கேட்டு பெற்று விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரத்தை சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், தாலுகாவிற்கு குறைந்தது 100 ஆசிரியர்கள் வீதம், மக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பத்து தாலுகாக்களில் கிட்டத்தட்ட 1000 ஆசிரியர்கள் வரை ஈடுபடுவர். இப்பணியை பிப்ரவரி 5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட ‘பிரின்ட் அவுட்’ விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வீடுகளுக்கு வரும் ஆசிரியர்களிடம் உண்மையான தகவலை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம்'அம்போ' கணக்குகளுக்கு விடிவு


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு, பொது கணக்கு அலுவலகத்திலும்; தொடக்க பள்ளி மற்றும் உள்ளாட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு தகவல் தொகுப்பு மையத்திலும் சி.பி.எஸ்., கணக்கு பராமரிக்கப்பட்டது.

அதேநேரம், பதவி உயர்வால், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பழைய சி.பி.எஸ்., கணக்கு கைவிடப்பட்டு, பொது கணக்கு அலுவலகத்தில் புதிய கணக்கு துவங்கப்பட்டது. அதனால், பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட, பல கோடி ரூபாயின் நிலை என்னவாகும் என, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், சி.பி.எஸ்., மற்றும் நிரந்தர பென்ஷன் திட்டமான பி.எப்., ஆகிய, இரண்டு கணக்கு நிர்வாகத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எனவே, சி.பி.எஸ்., கணக்குகள், அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கும், பி.எப்., கணக்குகள், பொது கணக்கு அலுவலக நிர்வாகத்துக்கும் சமீபத்தில் பிரிக்கப்பட்டன. அதனால், ஒரு குழப்பம் தீர்ந்தது.

ஆனாலும், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சி.பி.எஸ்., கணக்குகளால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் தீரவில்லை. இது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. எனவே, இந்த பிரச்னைக்கு தற்காலிக முடிவு கட்டப்பட்டுள்ளது. 'இரு கணக்கு வேண்டாம்' தகவல் தொகுப்பு மைய கமிஷனரகம் பிறப்பித்துள்ள உத்தரவில்,

'ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பிந்தைய புதிய சி.பி.எஸ்., கணக்குடன், பழைய கணக்கு நிதியை இணைத்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இனி நீடிக்க கூடாது. இதற்கு, கல்வி அதிகாரிகள், மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்., கணக்குகள் ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பல கோடி ரூபாய் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், சி.பி.எஸ்., திட்டத்தில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டு, உயிரிழந்த, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான நிதி பங்களிப்பையும், தாமதமின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, January 15, 2016

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு


பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்தல், பொதுத் தேர்வு பணிகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.இந்நிலையில், செய்முறைத் தேர்வை எப்போது நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நர்சிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, தொடர்பு ஆங்கிலம் உள்பட, 14 பாடங்களுக்கு, பிப்., 5 முதல், 25க்குள் செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு, பிப்.,23 முதல், 25க்குள், செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

30 ஆயிரம் ஆசிரியர் தவிப்பு


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை, பயிற்சியாக கணக்கிட வேண்டும். அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.இந்நிலையில், 2012ல் நியமிக்கப்பட்ட, 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள்; 2011ல் நியமனம் செய்யப்பட்ட, 5,000 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 30 ஆயிரம் பேர், பயிற்சிக் காலம் முடிந்தும், சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

டி.இ.இ.ஒ சஸ்பெண்ட்


பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடை மாற்றம், பதவி உயர்வு, மற்றும் அலுவலக பணியிடங்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்று வருவதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு புகார் சென்றது.

இப்புகார் குறித்து நடந்த விசாரணையில், மணி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் மணியை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். போலியாக ஜாதி, கல் விச்சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தொடர்பாக பாலக்கோடு பாரதியார் நகரை சேர்ந்த முனியப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது.

Thursday, January 14, 2016

TNPSC GROUP 2A hall ticket

Click below

http://182.18.164.63/tnpscadmitcard17/frmLogin172015.aspx

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக வட்டார அளவில் வருகிற 23-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பெய்த மழை பாதிப்பால் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத் தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாலும் தேசிய வருவாய் வழி உதவித் தொகைத் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 13, 2016

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக வட்டார அளவில் வருகிற 23-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பெய்த மழை பாதிப்பால் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத் தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாலும் தேசிய வருவாய் வழி உதவித் தொகைத் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் 18ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி


மத்திய ரயில்வே துறையில் ௧௮ ஆயிரத்து ௨௫௨ காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் விபரம் :ரயில்வேயில் கமர்ஷியல் அப்ரண்டிஸ்- 703, டிராபிக் அப்ரண்டிஸ்- 1645, என்கொயரி மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்- 127, கூட்ஸ் கார்டு- 7561, ஜுனியர் அக்கவுன்ட்ஸ் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 1205, சீனியர் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 869, உதவி ஸ்டேஷன் மாஸ்டர்- 5942, டிராபிக் அசிஸ்டன்ட்- 166, சீனியர் டைம்கீப்பர்4. இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை ரயில்வேயில்-986, திருவனந்தபுரத்தில்- 488 பணியிடங்கள் அடங்கும். தேர்வில் 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் வகையில் கேட்கப்படும். பொது அறிவு, ரீசனிங், நுண்ணறிவு, கணிதத்துறை வினாக்கள் இடம்பெறும். தேர்வு90நிமிடங்கள் நடக்கும்.தவறான விடைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் கழிக்கப்படும்.

ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். தமிழகத்தில் 17 மையங்களில் தேர்வு நடக்கும். ஒருவர் 5 மையங்களை தேர்வு செய்யலாம். தேர்விற்கு 'ஆன் லைன்' மூலமே விண்ணப்பிக்க முடியும். கட்டணம் ரூ.100. சில பிரிவினருக்கு கட்டணச் சலுகை உண்டு. ஜன., 25 க்குள் www.rrbchennai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி


பல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதற்காக சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன. இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஆணையத்தில் செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியா வின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம், புதிய ஓய்வூதிய திட்டத்தில் வசூலித்த நிதியில் ரூ.15 ஆயிரம் கோடியை, பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. ஏற்கனவே பல நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன் பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

பங்குச்சந்தை வீழ்ச்சியால் இத்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்தோனியா நாட்டில் ஓய்வூதிய நிதி 1.7 சதவீதம் மைனசில் சென்று உள்ளது. செக் குடியரசு, ஜப்பானில் தலா 0.3 சதவீதம், அமெரிக்காவில் 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோல் 20 நாடுகளில் 1 முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்து உள்ளது. புதிய ஓய்வூதிய திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் முதற்கட்டமாக 15 சதவீத ஓய்வூதிய நிதி, பங்குசந்தையில் முதலீடு செய்யப் படுகிறது. தொடர்ந்து அந்த சதவீதம் அதிகரிக்கப்படும்.

பல நாடுகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி சரிவையே கண்டு உள்ளது. நம் நாட்டில் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் முதலுக்கே மோசம் ஏற்படும், என்றார்.

தகுதிகாண் பருவம் முடித்தும் ஆணை வழங்காமை - நடவடிக்கை விபரம் கோருதல் சார்ந்த இயக்குனர் செயல்முறை.

Tuesday, January 12, 2016

தொடக்கக்கல்வி--கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல்-தொடர்பு அலுவலர் (Nodal Officer)நியமனம் செய்து ஆணை வழங்குதல் - செயல்முறைகள்-நாள்;11 .01.2016

சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல்


நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பணிகளுக்கு, யு.பி.எஸ்.சி.,சார்பில், தேர்வுகள் நடத்தப்படும். மேலும், இன்ஜினியரிங், மருத்துவம், வனத்துறை பணிகளுக்கும், தனி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டிலும், யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் பட்டியல், ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படும். நடப்பாண்டுக்கான உத்தேச பட்டியல், தற்போது வெளியாகி உள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடக்கும். அதற்காக விண்ணப்பிக்கும் தேதி, ஏப்., 23ல் துவங்கி, மே, 20ல் முடிகிறது. தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, முதன்மை தேர்வு, டிச., 3 முதல், ஐந்து நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை கவனிக்கபெண்களுக்கு 5 நாள் 'லீவு'


குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணி நேரத்தில் காலத்தில், குழந்தைகளை கவனித்து கொள்ள, இரண்டு ஆண்டுகள், அதாவது, 730 நாட்கள் விடுமுறை எடுக்கலாம். குழந்தைகளுக்கு தாயின் கவனிப்பு தேவை என்பதால், பெண் ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

எனினும், குழந்தைகளுக்கு, 18 வயதாகிவிட்டால், இந்த சலுகை வழங்கப்படமாட்டாது.இந்நிலையில், குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக, ஒரே கட்டமாக, ஐந்து நாட்கள் வரை விடுமுறை எடுக்க, பெண் ஊழியர்களுக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள, பெண்கள், ஐந்து நாட்கள் விடுமுறை கேட்டால், உடன் வழங்க வேண்டும் எனவும், உயர் அதிகாரி களுக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பான கருத்துகளை, 27ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை கேட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணியால் கற்பித்தல் பாதிக்கப்படும்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி


தேர்வு நேரத்தில் கணக்கெடுப்புப் பணி ஒதுக்கப்பட்டுள்ளதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்குப் பணி சுமையையும் ஏற்படுத்துகிறது என அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

இகுறித்து அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வடக்குக் கிளை நிர்வாகிகள் கூறியது:

திருப்பூரில் அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தற்போது இரண்டாம் பருவத் தேர்வு திங்கள்கிழமை (ஜனவரி 11) தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வரும் ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், அனைத்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும்  பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) முதல் நடைபெற உள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் இப்பணி வழங்கப்பட்டுள்ளதால் கற்பித்தல் பணி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுககானப் பாடங்களை விரைவாக நடத்த வேண்டிய சூழலும் உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவலின்படி, கணக்கெடுப்புப் பணிக்கு 14 வகையான துறையினரைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள நிலையில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை மட்டும் பெருமளவில் இப்பணிக்கு பயன்படுத்துவதாக  நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Monday, January 11, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை


மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு முறையே ஜனவரி மற்றும் ஜூலை 1 தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 119 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னரே இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 125 சதவீத அகவிலைப்படி உயர்வு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி மாதத்தில் கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக்குறியீடும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக ஜனவரியில் கொடுக்க வேண்டிய அகவிலைப்படியும் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதனால் ஒட்டு மொத்த அகவிலைப்படி 125 சதவீதத்தை தாண்டிவிடும் அபாயம் உள்ளது.

இது 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு முரணாக இருக்கும் என்பதால் ஜனவரி அகவிலைப்படி உயர்வை தள்ளிப்போட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது.'கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

அதனால், அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே, 'சென்டம்' பெறலாம் என்ற நிலை உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, அரையாண்டு தேர்விற்கு தேர்வுத்துறை உருவாக்கியுள்ள வினாத்தாளை பார்த்துக் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று துவங்கிய அரையாண்டு தேர்வில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமானது. பாடங்களின் பின்பக்க கேள்விகள், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு கேள்விகள் தவிர, பாட அம்சங்களில் இருந்தும் புதிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

இந்த கேள்விகளுக்கு, வகுப்பில் முதல் தர மாணவர்கள் மட்டுமே பதில் எழுத முடிந்தது; பிற மாணவர்கள் திணறினர். இனி வரும் பொதுத்தேர்வில், இதுபோன்ற வினாத்தாள் முறையே அறிமுகமாக உள்ளது. எத்தனை கேள்விகள்பிளஸ் 2 தமிழ் முதல் தாள் வினாத்தாளில், நான்கு மதிப்பெண்ணில், ஒரு கேள்வி; ஒரு மதிப்பெண்ணில், ஒன்பது கேள்விகள் என, 13 மதிப்பெண்களுக்கு, மொத்தம், 10 கேள்விகள், புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தன.

இதேபோல், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாளில், நான்கு மதிப்பெண்ணில், இரண்டு கேள்விகள்; இரண்டு மதிப்பெண்ணில் ஆறு; ஒரு மதிப்பெண்ணில் நான்கு; எட்டு மதிப்பெண்ணில் ஒன்று என, மொத்தம், 32 மதிப்பெண்களுக்கு, 13 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

Sunday, January 10, 2016

திருச்சி ஜேக்டோ கூட்ட முடிவுகள் 10-1-16


திருச்சி ஜாக்டோ கூட்ட முடிவுகள்.  10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில்   எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் .

1.திட்டமிட்டபடி மாநிலம் முழுவதும் ஜனவரி-30.31, மற்றும் பிப்ரவரி-1 ஆகிய தேதிகளில் ஜாக்டோவின் 15 அம்சக்கொரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது

2 மாவட்டத்தலைநகரில் ஜனவரி-23 அல்லது 24 ஆகிய நாட்களில் ஆயத்தக்கூட்டங்களை மாவட்ட ஜாக்டோ அமைப்பு நடத்துவது என்றும் அதில் மாவட்ட ,வட்டார,வட்ட அளவிலான ஜாக்டோ இணைப்புசங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மறியல் போராட்டம் வெற்றிபெறவும் ஆயத்தப்பணிகள் ,ஆசிரியர் சந்திப்பு இயக்கம் ஆகியன குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ  உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பர்.மற்ரும் மாநில அமைப்பின் வழிகாட்டுதல்படி அமையப்பெற்ற துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கப்படும்

3.பள்ளிகள் தோறும் சென்று  மறியல் போராட்டத்தில் திரளான ஆசிரியர்களை பங்கேற்கும் வகையில் ஆசிரியர் சந்திப்பு இயக்கம்  ஜனவரி-26,27,28 ஆகிய தேதிகளில் நடத்தப்படவேண்டும்.

4.அப்போது மறியல் போராட்டத்தில் பங்கேற்க ஏதுவாக ஜாக்டோ அமைப்பின் பெயரில் ஒப்புதல் படிவம் பெறப்படல் வேண்டும்   
                                                 5 ஜனவரி  30 அன்று நடத்தப்படும் முதல் மறியல் நாளில் மிகப்பெரும்பான்மையான ஆசிரியர்களை பங்கேற்க செய்ய வேண்டும . 
                                                6. ஜனவரி -30 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான தலைவர்கள்  ஏற்பார்கள. 

                      7. அடுத்த நாளான ஜனவரி -31 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான பொருளாளர்கள்  ஏற்பார்கள                       

8. இறுதி நாளான பிப்ரவரி-1 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான செயலாளர்கள்  ஏற்பார்கள். மறியல் விளக்க உரை மூன்று நாட்களும் மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ,மற்றும் மாவட்ட ஜாக்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்பர்.           ஆசிரியர்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் திட்டமிட்டு பணியாற்றவேண்டும் என ஜாக்டோ மாவட்ட,வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.