இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 05, 2016

ரயில் முன்பதிவில் மாற்றம்


ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு விண்ணப்பிக்கும் போது, இஷ்டம் போல் பெயரை குறிப்பிடுவதை தடுக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.ரயில்களில் பயணிக்க, தினமும் சராசரியாக, 25 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில், முன்பதிவு செய்பவர்களில் பெரும்பாலானோர், தங்களது பெயரை சுருக்கமாகவும், இஷ்டம் போல் எழுதுவதையும், வாடிக்கையாக கொண்டு உள்ளனர். உதாரணத்திற்கு, வி.கே.எம்., என விண்ணப்பத்தில் பெயரை குறிப்பிட்டு முன்பதிவு செய்வர்.

அடையாள அட்டையை பரிசோதிக்கும் போது, வினோத் குமார் மல்கோத்ரா என இருக்கும். முன்பதிவின் போது குறைந்தபட்சம் மூன்று எழுத்து இருந்தால் போதும் என்பதால், இந்த பெயரை கணினியும் ஏற்றுக் கொள்ளும்.இதன்மூலம், முதல் மூன்று எழுத்துடன் ஒத்துப்போக கூடிய பெயர் உள்ள எவரும் பயணிக்க முடியும் என்ற நிலை இருந்தது. மேலும், முன்பதிவு துவங்கியவுடன் டிக்கெட்டை விரைவாக உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், சிலர் இந்த முறையை சாதகமாக பயன்படுத்தினர். இனி இந்த முறையை கையாள முடியாது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில் முன்பதிவில் இஷ்டம் போல் பெயர் எழுதுவதை தடுக்க, தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய, 'சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்' பிரிவு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இனி, பெயரை சுருக்கமாகவோ அல்லது, பெயரின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டாலோ, முன்பதிவின் போதே டிக்கெட் உறுதி செய்யாமல் நிறுத்தப்படும்.

மேலும், பயணத்தில் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும், விரைவில், புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்


போதிய அடிப்படை வசதிகள் மற்றும் இடவசதி இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, 4 வாரகால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றம் இந்தியா என்ற: அமைப்பின் இயக்குநர் நாராயணன் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து எதிர் பதில் மனுத் தாக்கலுக்கு 2 வாரகால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு


பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் மாதம் நான்காம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

G.O 1-dt.4.1.16-Finance department-Bonus -Adhoc bonus -Special bonus for the year 2014-15-sanction Order release.G.O

Click below

https://app.box.com/s/flo99iev9koxbexwudl7vm1giz5vrcok

Monday, January 04, 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக கொண்டு எழுதவேண்டும்; தமிழக அரசு உத்தரவு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சிறுபான்மையின மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கற்றல் சட்டம்

தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006-ல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1-ல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006-ம் ஆண்டு முதல் 1-வது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும்.

அதன்படி படித்த அந்தமாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர். சிறுபான்மை மொழியில் படிக்கலாம் இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பலதடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பகுதி 2-ல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனுகொடுத்துள்ளார்.

அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. தமிழ் பாடப்புத்தகம் வினியோகம் அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கஇயலாது எனவே 2015-1016 கல்விஆண்டில் 10-வது வகுப்பு தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது. இவ்வாறு த.சபீதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக வைத்து எழுதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது.இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, January 03, 2016

3ம் பருவ பாடப்புத்தகம் வழங்கினாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தடை


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. ஆனால், அதை வைத்து உடனடியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. கனமழை காரணமாக இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது. இரண்டாம் பருவத்தேர்வுகளே இன்னும் நடக்காத நிலையில், மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்தினால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் என்பதால், புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பின்தான் மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்படும். தற்போது ஒரு மாதம் வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரியில் புத்தகம் கொடுத்தால் அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகிவிடும் என புத்தகங்களை இப்போதே வழங்கியுள்ளனர். இரண்டாம் பருவத்தேர்வு நடத்தப்படும் முன் மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்த தொடங்கினால் மாணவர்கள் குழப்பம் அடைவர் என்பதால், தேர்வு முடியும் வரை புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், புத்தகங்களை மாணவர்களிடம் வழங்கிவிட்டு பத்திரமாய் வீட்டில் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை பெயரளவில் கொடுத்துவிட்டு, மீண்டும் பெற்று பள்ளி அலமாரியில் வைத்துள்ளனர். ஏனெனில், ஆர்வ மிகுதியில் புதிய பாடத்தில் மாணவர்கள் கவனம் சென்றுவிட்டால் இரண்டாம் பருவத்தேர்வில் பின்னடைவு ஏற்படும்’ என்றனர்.

பிப்.5-இல் கோவில்பட்டியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு.திரிபுரா மாநில முதல்வர் பங்கேற்கிறார்


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6-ஆவது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5-இல் தொடங்குகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மோசஸ், பொது செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆசிரியர், மாணவர்களின் நலன், கல்வி நலன், சமுதாய நலன், தேசிய நலன்களுக்காக பாடுபட்டு வரும் இந்த அமைப்பின் மாநில மாநாடு பிப்ரவரி 5, 6, 7 ஆகிய 3 நாள்கள் கோவில்பட்டி நடைபெறுகிறது. முதல் 2 நாள்கள் பிரதிநிதிகள் மாநாடும், மூன்றாம் நாள் முற்பகல் பெண் ஆசிரியர்கள் மாநாடும், பிற்பகலில் ஆசிரியர்களின் பேரணியும் நடைபெறும். தமிழகத்தின் புகழ் பெற்ற கல்வியாளர்கள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள், தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் பேசுகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்துகொண்டு பேசுகிறார் என்றனர்.

ESI recruitement.notification

Click below

https://app.box.com/s/g9gpdmmxziooom27kizq7w15nvedxaig

Saturday, January 02, 2016

PONGAL bonus anounced

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் அறிவிப்பு
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.
A&B -1000/-
C&D-3000/-

CBSE exam dates

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.

10-ம் வகுப்பினருக்கு மார்ச் 28-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பினருக்கு ஏப்ரல் 22-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வு அட்டவணை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு


முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.

அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயில ஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர். முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர்.

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது. இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்


உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ், 7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன.

பற்றாக்குறைஉள்ளாட்சி அமைப்புக்களில் உள்ள துப்புரவு பணியாளர்களே இப்பள்ளிகளின், கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர்.'உள்ளாட்சி அமைப்பில் உள்ள, 24 ஆயிரத்து, 928 முழுநேர துப்புரவு பணியாளர்கள், பிற துப்புரவு பணிகளுக்கு மத்தியில், பள்ளிக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடியாமல்உள்ளனர். எனவே, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தனியாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என, திடக்கழிவு மேலாண்மை மற்றும் துாய்மை இந்தியா திட்ட விதிகள் வலியுறுத்துகின்றன. இதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புக்களின் பராமரிப்பில் உள்ள பள்ளிகளுக்கு, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது குறித்து, தமிழக அரசின், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவு:

பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை, தனியார் முகமைகளிடம் ஒப்படைக்கலாம். அல்லது, முழுநேரம் மற்றும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உள்ளாட்சி அமைப்புகள் நியமிக்கலாம். பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை, உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்யலாம். துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.சுகாதார உத்தரவாதம்இதற்கான செலவை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக் கழிவு மேலாண்மை திட்ட நிதியில் இருந்தும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி வரி மூலமும் ஈடுகட்டலாம்.

2015 - 16ல், கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க, 17 கோடி ரூபாயும், துப்புரவுப் பணியாளர் ஊதியத்துக்காக, 40 கோடி ரூபாயும் என ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, உள்ளாட்சி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி கழிப்பறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல நேரங்களில், பள்ளி கழிப்பறைகளிலிருந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்பில் போதிய, துப்புரவுப் பணியாளர் இல்லாத நிலையில், துாய்மைப் பணியை தனியாரிடம் அளிக்க அரசு முன் வந்துள்ளது. இத்திட்டம் மூலம், குழந்தைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

SLAS study material ,model question paper and answer

Click below

http://doozystudy.blogspot.in/p/slas.html?m=1

இளம் மழலையர் பள்ளி விதிகள்

இளம் மழலையர் பள்ளி விதிகள்

தமிழகத்தில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அரசு அறிவிப்பில், “இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாதத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்படும்.

3 ஆண்டுகளுக்கு மட்டுமே:
******************************************
அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதுப்பித்தலுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி தான் பொறுப்பு அதிகாரி. இந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

தரைத்தளத்தில் வகுப்புகள்:
*****************************************
இந்த பள்ளி கட்டிடங்கள் சொந்த கட்டிடமாகவோ, 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும். அவை கான்கிரீட் கட்டிடங்களாகவும், சுற்றுச்சுவருடன் இருக்க வேண்டும். வகுப்பறை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.

2 நுழைவுவாயில்கள்:
*********************************
வகுப்பறை கதவுகள், ஜன்னல்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்களாலும், வெளிப்பக்கம் திறப்பதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு 2 நுழைவுவாயில்கள் இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா அவசியம்:
***********************************************
கழிவறை, குடிநீர், விளையாட்டு மைதானம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குப்பைத்தொட்டி, அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது. பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி:
***************************************************
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் அதிலும் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும். ஆசிரியை பிளஸ் 2 படித்து, டி.டி.எட், டி.எட், ஹோன் சயின்ஸ் ஆகியவற்றுக்கான பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது ஹோம் சயின்சில் பட்டம், பி.எட், குழந்தைகள் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

வகுப்பு 15 குழந்தைகள் மட்டுமே:
************************************************
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியுடன் 1 வயது 6 மாதத்தினை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் வயது 1 வயது 6 மாதம் முதல் 5 வயது 6 மாதம் வரை இருக்கலாம். ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகள் அனுமதிக்கான நுழைவுத்தேர்வு எழுத்து வடிவிலோ, வாய்வழியாகவோ இருக்கக்கூடாது

சரியான நேர பராமரிப்பு:
************************************
பள்ளி நடக்கும் ஒவ்வொரு பகுதி நேரமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு பகுதி நேரத்தில் படிக்கும் குழந்தைகள் அடுத்த பகுதி நேரத்தில் சேர்க்கக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக்கூடாது. மாலை 4.30 மணியுடன் நிறைவு செய்துவிட வேண்டும்.

பாதுகாப்பு கருவிகள் அவசியம்:
***********************************************
பெற்றோரின் ஒப்புதலின்படி, பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும். முதலுதவி பெட்டி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் தண்டிக்கப்பட்டால், அந்த பள்ளி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களின் பராமரிப்புகளை அடிக்கடி பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். டிரைவருடன் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 01, 2016

கூடுதல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் வசூலிக்க கல்வித்துறை உத்தரவு

கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2011 ஜன.,1 க்குப்பின், தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியமான 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும்.

ஆனால் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களான சிலருக்கு அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாய் சேர்த்தது போக, மீண்டும் தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனருக்கு புகார் சென்றது.இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் 750 ரூபாயை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். மேலும் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும். அதன்பின் தனி ஊதியமாக 750 ரூபாய் வழங்க கூடாது. ஏற்கனவே வழங்கியவர்களுக்கு அவற்றை ஊதியத்தில் பிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு


மிலாதுன் நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே, மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆண்டுதோறும், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து, மிலாதுன் நபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை விடப்படும்.

ஆனால், இந்த ஆண்டு மழை, வெள்ள பாதிப்பால் அரையாண்டு தேர்வு, ஜனவரி மாதத்துக்கு தள்ளி போடப்பட்டது. ஆனால், வழக்கம் போல் பண்டிகை கால விடுமுறை டிச., 24 முதல் அறிவிக்கப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிந்து, இன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இன்று பள்ளிகள் திறந்ததும், 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், மூன்றாம் பருவ பாடங்களையும் நடத்த, ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.