இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 04, 2015

தொலைதூர கல்வி பி.எட் படிப்பில் விரைவில் மாற்றம்

என்சிடிஇ புதிய விதிமுறை எதிரொலி: தொலைதூரக்கல்வி பி.எட். சேர்க்கையில் விரைவில் மாற்றம்
  

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.

என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது. பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார். கோவை பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் தொலைதூரக்கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவத் துடன் பணியில் இருக்கின்ற பட்டதாரிகள் இதில் சேரலாம். பல்கலைக்கழகத்துக்கு ஏற்ப நுழைவுத்தேர்வு அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

என்சிடிஇ-யின் புதிய விதிமுறை யின்படி, தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சி (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) அவ சியம். அத்துடன் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். என்சிடிஇ- யின் இந்த புதிய விதிமுறை யின்படிதான் அடுத்த ஆண்டு தொலைதூரக்கல்வி பி.எட். படிப் பில் மாணவர்களைச் சேர்க்க முடிவுசெய்திருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுறல்

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித் துறையின் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பம் நீடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 16 வரை நடக்கின்றன. இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு 1.6.2012 தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதன்படி 1.6.2014 தகுதி நாளாக அறிவுறுத்தப் பட்டது.ஆனால் கடந்தாண்டில் பங்கேற்றோர் இந்தாண்டு பங்கேற்க முடியாத நிலையுள்ளது. 2013-14ம் கல்வியாண்டு தாமதமாக ஜூன் 17ல் கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.மதுரை மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

2012-13 கல்வியாண்டு தாமதமாக கலந்தாய்வு நடந்தது. அதற்காக 2014ல் நடந்த கலந்தாய்வில் ஜூன் முதல் தேதி குறிப்பிடாமல் 'சிறப்பு தகுதி நாள்' அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கு அதுமாதிரி அறிவிப்பு இல்லை. இதனால் கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது. பதவி உயர்வு பெறுவதில் பிரச்னை இல்லை.

மூன்று கல்வியாண்டு என்ற நிபந்தனை ஓராண்டாக குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இரண்டு ஆண்டுகள் பங்கேற்க முடியாது. இது கல்வித்துறையின் நூதனமான முடிவு என்றார்.

திரிசங்கு நிலையில் அரசு ஊழியர்

தமிழகத்தில் 2003 ஏப்., 1க்கு பின் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 2006 ஜூன் 1 முதல் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.இத்தொகையுடன், அரசின் பங்கையும் சேர்த்து மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.5,000 கோடியும், அரசின் பங்கு தொகையும் இதுவரை ஆணையத்திடம் செலுத்தப்படவில்லை. இதனால் 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற, இறந்த ஊழியர், ஆசிரியர்கள் 1000 பேருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் முறையாக பணம் செலுத்தியதால் 7,000 பேருக்கு பணப்பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ளார்.

அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து இதுவரை ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மேலுாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே உயர்நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்றுள்ளார். மற்றவர்கள் வழக்கு தொடர முடியாமல் உள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சி

அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் மூலம், ஆங்கில பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 'அரசு பள்ளியில் ஆங்கில கல்வி சரியாகக் கிடைப்பதில்லை' என, பெரும்பாலான பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து, அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, ஆங்கிலம் கற்றுத் தர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து, ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும், 17ம் தேதி முதல், பல கட்டங்களாக, வட்டார அளவில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.'சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள், மாநிலம் முழுவதும் சென்று, ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த உள்ளனர்' என, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

பள்ளிகளில் பொருட்காட்சி: தடை விதித்தது கல்வித்துறை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், பொருட்காட்சி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், அந்தந்த பகுதி சார்ந்த வழிபாட்டுத் தல நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில், உள்ளூர் அமைப்புகள் சார்பில், பொருட்காட்சி நடத்தப்படுகிறது.

பொருட்காட்சியில், குழந்தைகளை கவரும் வகையில், ராட்டினம் உட்பட, பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. கடந்த மாதம், அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தில், சொக்கநாதர் கோவில் விழாவை யொட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டது; அதில், ராட்டினங்களும் இடம் பெற்றன. திடீரென ராட்டினம் உடைந்து, 12 வயது மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்து பலியானான்; இரண்டு பேர் காயம் அடைந்தனர்.இதுகுறித்து, விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி வளாகங்களில் பொருட்காட்சி நடத்த தடை விதித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு:பள்ளி வளாகங்களில், ராட்சத ராட்டினம் போன்ற சாதனங்களால், திடீரென விபத்து ஏற்பட்டு, மாணவ, மாணவியர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.

எனவே, வருங்காலங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான, பொருட்காட்சி அல்லது இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Monday, August 03, 2015

Spouse certificate form

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0dFRBbk82aXJRRDg/view?usp=sharing

புதிதாக 100 மாநகராட்சி பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் துவக்கம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது 65 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடந்து வருகிறது. கடந்தாண்டில் மட்டும் சுமார் 2,500 மாணவர்கள் மழலையர் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டில் கூடுதலாக 100 மழலையர் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மழலையர் வகுப்புகளுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் புதிதாக துவங்கப்படும் பள்ளிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்குவதில், அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. விதிகளுக்கு முரணாக, அரசியல் கட்சி சார்பான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும், செப்., 5ம் தேதி, தமிழகத்தில் சிறப்பாக கல்வி சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி: பள்ளிக்கல்வி இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள, 67 கல்வி மாவட்டங்கள்; தொடக்கக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, 140க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி மாவட்டங்கள்; மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர், 350 பேருக்கு விருது வழங்கப்படும். இத்துடன், மெட்ரிக் இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், 20 பேருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. குறைந்தபட்சம், 15 ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்தவர், இந்த விருதுக்கு தகுதியானவர். தலைமை ஆசிரியர் பெயரும்,விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறது. நிபந்தனைகள்:

* மாணவர் நலனுக்காக பாரபட்சமின்றி பணியாற்றி இருக்க வேண்டும்.

* கல்விச் சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

* எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இருக்கக் கூடாது.

* ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான குழு, தற்காலிக பட்டியல் தயாரித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

அவர், ஆக., 3ம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி, ஆறு பேர் கொண்ட தேர்வு பட்டியலை, இடைநிலைக் கல்வி இணை இயக்குனர் தலைமையிலான மாநிலக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்தக் குழு, இறுதி பட்டியலை தயாரித்து, அரசுக்கு அனுப்பும். அலையும் நிலை: தற்போது, இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் சில சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சி மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசுக்காக அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது.அரசியல் தலையீட்டால் மட்டுமே, நல்லாசிரியர் விருது பட்டியல் தயாராவதாக, ஆசிரியர் சங்கங்கள், பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:நல்லாசிரியர் விருது, பெரும்பாலானவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை; வாங்கப்படுகிறது. அரசியல் தலையீட்டால் ஆசிரியர் பெயர் தேர்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களும், ஒழுங்கீன நடவடிக்கைக்கு உள்ளாவோரும் தேர்வாகின்றனர். அதனால், உண்மையில் சேவை நோக்கம் கொண்டவர்களுக்கு, விருது கிடைப்பதில்லை. இந்த ஆண்டாவது, அரசியல் தலையீடு இல்லாமல் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

வருமான சான்று பெற அலைய வேண்டாம் பெற்றோரே கையெழுத்திட்டு தரலாம்

சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.தமிழக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2, உயர் கல்வியில் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், தொழில் படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு படிக்க, சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பினருக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெற, மாணவரின் பெற்றோருக்கு குறிப்பிட்ட வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை, வருவாய் துறை அதிகாரிகளிடம் பெற்று, பள்ளிகளில் வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலர், தாங்களே சுய கையொப்பமிட்டு வருமானச் சான்றிதழை அளித்தாலே போதும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, வருமான வரிச் சான்றிதழை, வருவாய் துறையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர் தங்களின் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை, சுய கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலே போதும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகளுக்கு மானிய விலையில் நான்கு 'எல்.இ.டி., பல்பு'

வீடுகளுக்கு, 10 ரூபாய் விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய மின் துறை அமைச்சகம், விளக்கு மூலம் மின்சாரம் சேமிக்கும் திட்டத்தை, 2009ல் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்புக்கு, குறைந்த திறன் குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, 'காம்பக்ட் புளோரசன்ட்' என்ற 'சி.எப்.எல்., பல்பு', 15 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டது. தமிழகத்தில், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், 2010ல், 1,500 வீடுகளுக்கு, 'சி.எப்.எல்., பல்பு'கள் வழங்கப்பட்டன. பின், மின் வாரியம் சார்பில், இலவச மின் இணைப்பு உள்ள, குடிசை வீடுகளுக்கு, ஒரு சி.எப்.எல்., பல்பு இலவசமாக வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, மானிய விலையில், 'லைட் எமிடிடிங் டயாட்ஸ் - எல்.இ.டி.,' பல்பு வழங்கும் திட்டத்தை கடந்த ஜன., மாதம், டில்லியில் துவக்கி வைத்தார். அதன்படி, வெளிச்சந்தையில், 500 ரூபாய் - 750 ரூபாய்க்கு விற்கும், 'எல்.இ.டி., பல்பு', 130 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மின் நுகர்வோர், 10 ரூபாய் முன் பணம் செலுத்தி, 'எல்.இ.டி., பல்பை' பெற்றுக் கொள்ளலாம். பின், மின் கட்டணம் செலுத்தும் போது, 12 தவணைகளில், 120 ரூபாயை செலுத்தலாம்.மத்திய அரசு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில், மானிய விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில், சென்னை, கோவை உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட நகரங்களில், 10 ரூபாய் விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாதாரண குண்டு பல்பு, 60 வாட்ஸ்; சி.எப்.எல்., 15 வாட்ஸ்; எல்.இ.டி., ஏழு வாட்ஸ் ஆகியவற்றின் மூலம் ஒரே வெளிச்சம் தான் கிடைக்கும்.மின் நுகர்வோரிடம், 10 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு, 'எல்.இ.டி., பல்பு' வழங்கலாமா அல்லது மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள, 130 ரூபாய்க்கு, 12 தவணைகளில் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மானிய விலையில், ஒருவருக்கு, நான்கு எல்.இ.டி., பல்பு வழங்கும் திட்டத்தை, சட்டசபை மானிய கோரிக்கையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். இவ்வாறு, அவர் கூறினார்

Sunday, August 02, 2015

அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 37000 மாணவர்கள் சேர்ப்பு

அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் (2015-16) 6, 9, 11-ஆம் வகுப்புகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.இந்த வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் (2014- 15) மொத்தமாக 11,03,297 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 11,40,636-ஆக அதிகரித்துள்ளது.ஆறாம் வகுப்பில் 6,462 மாணவர்கள் கூடுதலாகவும், 9-ஆம் வகுப்பில் 7,482 மாணவர்களும், 11-ஆம் வகுப்பில் 23,395 மாணவர்களும் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். அதேநேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் மட்டுமே கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தலா முறையே 3,194, 6,099 குறைந்துள்ளது.

பிளஸ் 1 வகுப்பில் 9,496 மாணவர்கள் இந்த ஆண்டு கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். காரணம் என்ன? தனியார் பள்ளி மோகம் காரணமாக பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:அரசுப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மிக முக்கியமான காரணமாகும். இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 84.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 1,164 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றன.பொதுத்தேர்வுகளில் அதிகரித்துவரும் தேர்ச்சி விகிதம் காரணமாக அரசுப் பள்ளிகளின் மதிப்பு பொது மக்களிடையே உயர்ந்துள்ளது. இந்தத் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேல்நிலை வகுப்புகளில் லேப்-டாப், சைக்கிள் போன்றவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அதிகமான மாணவர்கள் சேருகின்றனர். 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இருப்பதும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கும் பெற்றோருக்கு மேற்கொண்டு படிக்கவைக்க வசதியில்லாத காரணத்தாலும், அரசுப் பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் சேருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Transfer form

Click below

https://sites.google.com/site/generalfiles1/Transfer%20form%202015-16.pdf?attredirects=0&d=1

Transfer Go proceedings 2015

Click below

https://sites.google.com/site/generalfiles1/Transfer%20schedule%20and%20GOs.pdf?attredirects=0&d=1

Saturday, August 01, 2015

பி.எட்., மாணவர் சேர்க்கை: ஆக., 7க்குள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள, 690 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 75 ஆயிரம் இடங்களுக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு, 7ம் தேதிக்குள் வெளியாகும் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பான பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு, நாடு முழுவதும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.இந்த விதிமுறைகளுக்கு எதிராக, தனியார் கல்வியியல் கல்லூரிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

ஆனாலும், இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், தமிழகத்தில் உள்ள, 690 கல்லூரிகளுக்கும் என்.சி.டி.இ., அங்கீகாரம் அளித்துள்ளது.'இந்த ஆண்டு முதல், புதிய விதிமுறைகள் தான் பின்பற்றப்படும், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இதில் முடிவுகள் மாறும்' என, தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது.எனவே, இந்த ஆண்டு இந்தப் படிப்புகள், ஓர் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக மாறுகிறது. இதற்கான புதிய பாடத்திட்டமும் அமலாகிறது. பி.எட்., மாணவர் சேர்க்கை துவங்குவதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, உயர்கல்வி மன்றம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் இடையே முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து, கடந்த வாரம், நமது நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, லேடி வெலிங்டன் கல்லூரியை, மாணவர் சேர்க்கை முகமையாக, தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, மாணவர் சேர்க்கையை நடத்தியது. அதற்குமுன், லேடி வெலிங்டன் கல்லூரியே நடத்தியது. இந்த ஆண்டு முதல், லேடி வெலிங்டன் கல்லூரியே மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒற்றைச் சாளர முறையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அறிவிப்பு, வரும் 7ம் தேதிக்குள் வெளியாகும். நீதிமன்ற உத்தரவுக்காக, இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. வேறு எதுவும் பிரச்னை இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்

போதை மாணவர்களுக்கு பயிற்சி : அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

'மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தும், மாணவர்களை கண்காணித்து, அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள பயிற்சி அளிக்க வேண்டும்' என, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்விஇயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன், கோவையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி, மது குடித்து விட்டு, பொது இடத்தில் ரகளை செய்தார். இந்தச் சம்பவம், ஆசிரியர் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதையில் ரகளை செய்த, நான்கு மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். கலெக்டர் உத்தரவின்படி, அந்த மாணவர்கள் திருந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போதைப் பொருட்களை, மாணவர்கள் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அதிகாரி களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளார். 'ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோருடன் பள்ளி தலைமை ஆசிரியரும் இணைந்து, மாணவ, மாணவியரை கண்காணிக்க வேண்டும்.

அவர்களுக்கு போதைப் பழக்கம் தொற்றிக் கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. போதைப் பொருட்கள் பக்கம் அவர்கள் கவனம் செல்லாமல், படிப்பின் பக்கம் அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளான மாணவர்கள் அதில் இருந்து மீள, ஆசிரியர்கள் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.'இவ்வாறு, அந்த அறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

8ம் வகுப்பு வரை ஃபெயில் கிடையாது

8ம் வகுப்பு வரை ஃபெயில் கிடையாது என்ற உத்தரவை ரத்து செய்கிறது மத்திய அரசு

எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் கிடையாது என்ற கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என மத்திய மனித வளத்துறை இணையமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பேசிய அவர், முந்தைய அரசுகளால் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தால், தொடக்கக் கல்வியின் தரம் மிகவும் குறைந்துவிட்டதாக கூறினார்.

8ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்காமல், தேர்ச்சி பெற அனுமதிப்பதால், கிராமப் புறங்களில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலாண்மைக் கல்வி நிறுவன மசோதாவால் ஐ.ஐ.எம்.களின் சுயாட்சிக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதியளித்த அமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியா, அதேநேரத்தில் எல்லா நேரத்திலும் ஐ.ஐ.எம்.களை தன்னிச்சையாக செயல்பட அனுமதித்துவிட முடியாது என்றார். பல்கலைக் கழக மானியக் குழுவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.