இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 16, 2014

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது எஸ்.சி.இ.ஆர்.டி.,

தமிழகத்தில், அரசு பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.

இது தொடர்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மனிதவள மேம்பாட்டு மையங்களின் ஆலோசனைகள் கோரப்பட்டன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, 411 ஆய்வுகள் வந்தன; இதில், 211 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. இதுகுறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர், அமுதவல்லி கூறுகையில், '

'தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளை அனுப்பிய, கல்வியாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் வகையில், தேசிய கருத்தரங்கு, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பின், அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.

இனி பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டு!

பி.எட். மற்றும் எம்.எட். எனப்படும் ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக்கி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பி.எட். மற்றும் எம்.எட். எனப்படும் ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு இது வரை ஓராண்டு படிப்பாகவே இருந்து வந்தது. தரமான ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்றால் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கான படிப்பு காலத்தை உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இதையடுத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா அனைத்து மாநில ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது இதுவரை ஓராண்டு கால படிப்பாக இருந்த பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகள் இனி 2 ஆண்டுகால படிப்பாக மாற்றம் செய்யப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். பி.எட். மற்றும் எம்.எட். பட்டப்படிப்புகளை வழங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 200 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும்.

இது தவிர பிளஸ் 2 முடித்து விட்டு மாணவர்கள் சேரும் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கான பெயரை நாடு முழுவதும் ஒரே மாதிரி அழைக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது இரணடாண்டு ஆசிரியர் டிப்ளமோ படிப்புகள் தமிழகத்தில் டீச்சர் ட்ரெயினிங் டிப்ளமோ படிப்பு என்றும் பிற மாநிலங்களில் பி.டி.சி., ஜே.பி.டி. என்று வேறு வேறு பெயர்களில் அந்த படிப்புகளை அழைத்து வந்தனர்.

இனிமேல் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை டி.எல்.எட். (தொடக்க ஆசிரியர் கல்வியியல் டிப்ளமோ படிப்பு) என்று ஒரே பெயராக மாற்றி அமைத்துள்ளார்.

மேலும் 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளிகளுக்கான ஆசிரியர் டிப்ளமோ படிப்பை ( டி.பி.எஸ்.இ) தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

-எம்.கார்த்தி

Monday, December 15, 2014

தலை சுற்றும் 'கழிப்பறை கணக்கு': மீண்டும் முதலில் இருந்து...

வங்கி கணக்கு அவசியம் டிசம்பர் 15,2014 இன்றுகடந்த வாரம்கடந்த மாதம் கருத்தைப் பதிவு செய்ய Colors: எழுத்தின் அளவு: Advertisement பதிவு செய்த நாள் 16டிச 2014 00:30 மதுரை: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் வசதி குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்பட்டதால் மீண்டும் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. 'அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்; குறிப்பிட்ட காலத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் அவற்றை உறுதி செய்ய வேண்டும்' என கோர்ட் உத்தரவிட்டது.

கழிப்பறைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் என மூன்று வகையில் கணக்கெடுக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எண்ணிக்கையில் இருந்தன. மேலும், தனியார் அமைப்புகள் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்தபோது, கணக்கெடுப்பில் இல்லை என்று குறிப்பிட்டிருந்த பள்ளிகளில் கழிப்பறை இருந்ததாகவும், சில பள்ளிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடம் இல்லாததும் தெரிந்தது.

இதனால் குழப்பமடைந்த அதிகாரிகள், உண்மை நிலவரம் குறித்து அறிய மீண்டும் தலைமை ஆசிரியர்களை அழைத்து விபரங்கள் சேகரிக்க உத்தரவிட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் நேற்று, தலைமை ஆசிரியர்களை அழைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் விபரங்கள் சேகரிக்க துவங்கியுள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனாலும் கோர்ட் உத்தரவுக்கு பின் கல்வித் துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது 'ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்' போன்றவை கழிப்பறை வசதி செய்துகொடுக்க முன் வந்துள்ளன. இதற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முரண்பாடு இருந்ததால் தலைமை ஆசிரியர்களிடம் சரியான விபரங்கள் கேட்கப்பட்டது, என்றார்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ''என்.எல்.சி., சார்பில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 600 கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது. இதில் மதுரைக்கு 50 ஒதுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

Tamil modules

Click below

https://app.box.com/s/0i6tnfnsa6cvsm7w3c06

A English handbook for beginners

Click below

https://app.box.com/s/wdu9z5zzzjyfr7gdens5

Tamil slow learners module

Click below

https://app.box.com/s/bnfznm4voqxul07cgz3g

VAO EXAM RESULT PUBLISHED

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-VAO2014.html

TRB PG hall ticket

Click below

http://admit.examsonline.co.in/pe_gr1/

VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவர்கள் அவதி: 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை


 
எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திறனாய்வுத்தேர்வு

கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் கல்வி உதவி திட்டத்தின்கீழ் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும்.

அதில் தேர்ச்சி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 6,695 மாணவ-மாணவிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கும். 2013-ம் ஆண்டுக்கான 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு தாமதமாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 57 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். அவர்களின் கல்வி உதவித் தொகைக்காக 6,695 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

உதவித்தொகை வழங்குவதில் தாமதம்

கடந்த ஆண்டுக்கான தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அடுத்த தேர்வு (2014-ம் ஆண்டுக்கான தேர்வு) வருகிற 27-ம் தேதி நடத்தப்பட உள்ளது என்பதுதான். இந்த திறனாய்வுத் தேர்வை மத்திய அரசு சார்பில் தமிழக தேர்வுத்துறைதான் நடத்தி வருகிறது.

மத்திய அரசுதான் காரணம்

திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காதது குறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த உதவித் தொகையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்தான் அளிக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். மத்திய அரசிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை. உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஆகிவிட்டதால் ஓராண்டுக்குரிய மொத்த உதவித் தொகையையும் ஒரேநேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தனர்.

Sunday, December 14, 2014

TANGEDGO online tariff calculator

Click below

http://tneb.tnebnet.org/tariff_new.html

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.

இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.) ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Saturday, December 13, 2014

INCOME TAX department guidelines

Click below

http://www.incometaxindia.gov.in/Pages/communications/circulars.aspx

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்

பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ், கடந்த, 10 ஆண்டுகளில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும் இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும் கிடைக்கவில்லை. பணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில், பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்று சேராததால், அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மேற்கு வங்கம், திரிபுராவை தவிர்த்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களில், அரசு பணியாளர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம், 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, அரசு ஊழியர்கள் பங்களிப்பு அடிப்படையில், அவர்கள் சம்பளத் தொகையில் இருந்து, குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, பணி ஓய்விற்குப் பின், பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தை, தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு, 2003 ஏப்ரல் முதல், முன் தேதியிட்டு அமல்படுத்தியது. இத்திட்டத்தை அமல்படுத்தியது முதலே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குழப்பம்:

இருப்பினும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முன்வரவில்லை. அதே நேரம், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமும் இதுவரை தீரவில்லை. அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை, மத்திய அரசிடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கான முகப்பு எண் தரப்பட்டு, பிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாய் எங்கு எங்கு முதலீடு ஆகிறது என்பது தெரியவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 2,000 பேர் ஓய்வு பெற்று விட்டனர்; 1,000 பேர் இறந்து விட்டனர். இவர்கள், குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்க வில்லை. இதனால், அவர்கள் அவர்கள் அதிருப்தியில் உள்ளதுடன், பணியில் உள்ளவர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

அரசு ஊழியர் சங்க மாநில செயலர் கண்ணன் கூறுகையில், ''புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது என, தமிழக அரசு கூறுகிறது; தமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,'' என்றார்.

பணம் மாயம்:

இதற்கிடையில், பணியில் உள்ளோருக்கு, பிடித்தம் செய்யப்படும் பணமும் முறையாக பதிவாகவில்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்பி உள்ளது. தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, சமீபத்தில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரையிலான, ஓய்வூதிய திட்ட பிடித்தம் தொடர்பான பட்டியல் வந்தது. இதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், பெரும்பாலானவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு மேல், 'மிஸ்சிங் கிரெடிட்' என, பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம், கணக்கில் வரவில்லையே என விரக்தி அடைந்தனர்.

ஏற்கனவே இத்திட்டத்தில் சேர்ந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக் கொடை கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது பிடித்தம் செய்யப்படும் பணமும் கணக்கில் வரவில்லை; எனவே, அதற்கான பட்டியலை எடுத்து, கருவூலத்தில் கேட்க முடிவெடுத்துள்ளோம். - அரசு ஊழியர்

வேலைவாய்ப்பு இணைய தளம்

Click below

http://tnvelaivaaippu.gov.in/Empower/

Friday, December 12, 2014

CPS online statement

Click below

http://218.248.44.123/auto_cps/public/

பொது வினியோக திட்டத்திலிருந்து வருமான வரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுக்கும் வகையில் மாநில உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரிகளின் மாநாடு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அந்த மாநாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து பொது வினியோக திட்டத்துக்கு பயனாளிகளை கண்டறியுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

இதனால் வருமானவரி செலுத்துவோரை பொது வினியோக திட்டத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் டெல்லி மேல்-சபையில் நேற்று இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை ராஜாங்க மந்திரி ரோசகேப் தன்வே, பொது வினியோக திட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த சட்டப்படி பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு பொருட்களை பெறுவதற்கு தகுதியான பயனாளிகளை கண்டறியும் அடிப்படையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்’ என்று கூறினார்.

ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதாக, ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான தகவல், மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி குறித்த அறிவிப்பு, இ-மெயில் மற்றும் தபால் வழியாக கல்வித்துறை அறிவிக்கிறது. மாநில கல்வித்துறையில் இருந்து மாவட்டம் மற்றும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, கல்வித்துறை தரப்பில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

அங்கிருந்து பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. நடுநிலை முதல் மேல்நிலை வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியிருப்பதால், இ-மெயில் வழியாகவும், அவ்வசதி இல்லாத பள்ளிகளில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாகவும் தகவல் அறிவிக்கப்படுகிறது.ஆனால், துவக்கப்பள்ளிகளில் இ-மெயில் தகவல் பரிமாற்றத்துக்கான வசதி இல்லை. தபால் மூலமாகவோ அல்லது உதவித்தொடக்கக் கல்வி அலுவலகம் சென்றோ, தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இதனால், ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது. குறுகிய அவகாசத்தில் மாணவர்களை போட்டிக்கு தயார்படுத்த, ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்; மாணவர்களும் திணறுகின்றனர். இதனால், வகுப்பில் ஓரிருவர் மட்டுமே, போட்டிகளில்பங்கேற்கும் நிலை உருவாகிறது. மற்ற மாணவர்கள், திறமையிருந்தும் அவகாசமின்றி, தயாராவதில் சிக்கில் ஏற்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "

கல்வித்துறையில் இருந்து தகவல் வந்ததும், அவற்றை பள்ளிகளுக்கு இ-மெயில் மற்றும் தபால் மூலமாக உடனடியாக அனுப்புகிறோம். முக்கியமான தகவல் எனில், மொபைல்போனில் தெரிவிக்கிறோம்,' என்றனர்.

தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சுற்றறிக்கை: கடந்த ஜூலையில் 110விதியின் கீழ் 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பணி நிரவல் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்: மதுரை கள்ளிக்குடி வடக்கம்பட்டி பள்ளி, திண்டுக்கல் தொட்டம்பட்டி மேல்கரைபட்டி பள்ளி, நத்தம் புரளிபுத்தூர் பள்ளி, தேனி போடி நாயக்கனூர் ராசிங்கபுரம் பள்ளி, ராமநாதபுரம் திருவாடானை ரெகுநாதபுரம் பள்ளி, சிவகங்கை முடிகண்டம் பள்ளி, விருதுநகர் சாத்தூர் என்.ஜி.ஓ.,காலனி பள்ளி, சிவகாசி கோப்பை நாயக்கன்பட்டி பள்ளி, வெம்பக்கோட்டை முத்தாண்டியாபுரம் பள்ளி ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பு பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

TNPSC : GROUP IIA RESULT PUBLISHED - EXAM DATE : 29/06/2014

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-G2A2014.html

TNPSC : GROUP IV HALL-TICKET PUBLISHED

Click below

http://tnpscexams.net/callletter/tnpsc_182014/index.php

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

Click below

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_60473_2014.pdf