இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 09, 2014

சமூக கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலத்தில்காலியாக இருக்கும் சமூக கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு தற்போது அரசு ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் வரும் ஆசிரியர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வுமூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ள்ள்ஹந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, June 08, 2014

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தகுதி சான்று  வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக  விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். இதற்கு அடையாளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரம் அடங்கிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.

74 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ்களை தயாரித்து வழங்கும்  பணியை எளிமைப்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அணுகுமுறையை கையாள முடிவு செய்துள்ளது. இதன்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நெட் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில்  மட்டுமே வழங்குவது போல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தனது பதிவு எண், பிறந்த தேதி, தேர்வு எழுதிய மாதம், ஆண்டு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இணையதளத்தில் இருந்து சான்றிதழை நேரிடையாக பதிவிறக்கம் செய்யலாம்.

ஆசிரியர் டிப்ளமோ: விண்ணப்பிக்க இன்று கடைசி

    தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 9) கடைசி நாளாகும். தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்திசெய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் ஜூன் 2 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர் நலனுக்காக விண்ணப்ப தேதி, ஜூன் 9 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PAPER 2 - துல்லியமாக உங்களின் வெயிட்டேஜினை அறிந்து கொள்ளுங்கள்.. Thanks to Mr. Kalvisolai Devadosskk

Friday, June 06, 2014

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்

பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 9 முதல், 13 வரை, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடையே, மழைநீர் சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வரும், 9ம் தேதி, பள்ளி அளவில், மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், பேரணி நடத்த வேண்டும். ஜூன் 10 ல், 'மழைநீர் சேகரிப்பு, வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும், ஜூன் 11 ல், ஓவிய போட்டியும், ஜூன்13 ல் மாணவர்களை, 'புராஜக்ட்' செய்யவும், அறிவுறுத்த வேண்டும். மாவட்ட அளவில், 13ம் தேதி, கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு, பரிசு வழங்க வேண்டும், என்றார்.

அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

09.06.2014 முதல் 13.06.2014 வரை மழை நீர் சேகரிப்பு வாரத்தினை பள்ளிகளில் கட்டுரை, ஓவியம் போட்டி மற்றும் கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு

Thursday, June 05, 2014

2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு


2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளிகளின் வேலை மற்றும் விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள் குறித்த அதிகாரபூர்வ பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூனில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும். இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாதமும் வகுப்புகள் நடைபெற வேண்டிய நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த அட்டவணை குறிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் 210 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது

. இதேபோல் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 220 நாட்கள் பள்ளியின் வேலை நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கு ஜூன் 16ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. 10 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும், 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு செப்டம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இதேபோல் அரை யாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு டிச.12ம் தேதி தொடங்குகிறது. ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் 3ம் வகுப்பு தேர்வுகள் 2015 ஏப்.10ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்.25ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2015 ஆண்டு மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதுபோல் கல்வி வளர்ச்சி நாள், பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சி, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த வேண்டிய தினங்கள் குறித்து இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் டிசம்பர் மாதம் குறைந்தபட்சம் 17 வேலை நாட்களும், ஜனவரி மாதம் 18 நாட்கள் குறைந்த பட்ச வேலை நாட்களாக உள்ளன. இதுபோல் ஆண்டுத்தேர்வு நடைபெறும் ஏப்ரல் மாதம் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு 13 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக உள்ளன. இந்த அட்டவணைப்படி அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள்: தேர்வு வாரியம் தகவல

் ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வான - டி.இ.டி., தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தேர்வுப் பணியை, டி.ஆர்.பி., வேகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வந்து கொண்டிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.இதுகுறித்து, அந்த வட்டாரம் கூறியதாவது:துறை வாரியாக, ஆசிரியர் காலி பணியிடங்களை, ஏற்கனவே பெற்றுள்ளோம். பாட வாரியாக, எத்தனை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பதையும், கணக்கு எடுத்துள்ளோம். இந்நிலையில், பல துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வருகின்றன. எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்தால் தான், பாட வாரியாக, தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர் எண்ணிக்கை தெரிய வரும். கூடுதல் இடங்கள் வரவால், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.ஆசிரியர் பணி வழங்குவதில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதன்பின், மாநகராட்சிகள், வனத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும், ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேற்கண்ட துறைகளில் இருந்து தான், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வருவதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் 'சர்பிளஸ்': அச்சத்தில் ஆசிரியர்கள்!

:அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசு விதிப்படி, ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளியில் 1:30, உயர்நிலை பள்ளியில் 1:35, 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் 1:40 என இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாறாக, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, மாநில அளவில் 3,000 ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 'பணிநிரவல்' அடிப்படையில் மாறுதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுஉள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவங்கப்படுவதால், அங்கு 'சர்பிளஸ்' ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,'' என்றார்.

IGNOU ,M.Ed ADVERTISEMENT

-APPLICATION FORM AND GUIDE FOR APPLICANTS FOR BACHELOR OF EDUCATION (B. Ed.)

Wednesday, June 04, 2014

இடை நிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மதிப்பெண் வெயிட்டேஜ் முறை

வருமாறு:–

இடை நிலை ஆசிரியர்கள்

பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண், இடைநிலைஆசிரியர் பயிற்சிக்கு 25 மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 மதிப்பெண்

பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களை சதவீதத்தில் கணக்கில் கொண்டு அதை 15ஆல் பெருக்கி, பெருக்கினால் வரும் தொகையைக் கொண்டு அதை 100 ஆல் வகுக்க வேண்டும். உதாரணமாக ஒரு மாணவர் பிளஸ்–2 தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தால் அதை 15 ஆல் பெருக்கி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது 13.5 மதிப்பெண்.

அதுபோல ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை 25 ஆல் பெருக்கி வரும் தொகையை 100–ஆல் வகுக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் ஆசிரியர் பயிற்சியில் 85 சதவீத மதிப்பெண் எடுத்தால் அதை 25ஆல் பெருக்கி அதை 100 ஆல் வகுத்தால் வரும் மதிப்பெண் 21.25 ஆகும்.

அடுத்து ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை 60 ஆல் பெருக்கி அதை 100 ஆல் வகுக்கவேண்டும்.

உதாரணமாக ஆசிரியர் தகுதி தேர்வில் ஒருவர் 150–க்கு 130 மதிப்பெண் எடுத்திருந்தால் அது 86.66 சதவீதம். அதை 60 ஆல் பெருக்கி 100 ஆல் வகுக்க 51.99 மதிப்பெண் கிடைக்கும். மேற்கண்டவாறு ஒரு மாணவர் மதிப்பெண்களை பெற்றிருந்தால் அவர் 100–க்கு 86.74 மதிப்பெண் எடுத்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்.

பட்டதாரி ஆசிரியர்கள்

இதே போல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பெண் வெயிட்டேஜ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

பிளஸ்–2 தேர்வுக்கு 10 மதிப்பெண்களும், பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்களும், பி.எட்.படிப்பில் எடுத்த மதிப்பெண்களுக்கு 15 மதிப்பெண்களும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் கொடுக்கப்பட உள்ளது.

இந்த மதிப்பெண்கள் அனைத்தும் 100–க்கு கணக்கிடப்பட உள்ளது.

பிளஸ்– மதிப்பெண் சதவீதத்தை 10 ஆல் பெருக்கி அதை கொண்டு 100ஆல் வகுத்தால் வருவது கணக்கிடப்படும்.

அதுபோல பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை கொண்டு அதை 15 ஆல் பெருக்கி அதைக்கொண்டு 100 ஆல் வகுத்தால் கிடைப்பது கணக்கிடப்படும்.

பி.எட்.படிப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை 15 ஆல் பெருக்கி அதை 100 ஆல் வகுத்து கிடைப்பதுதான் அந்த மாணவருக்கு கணக்கிடப்படும் மதிப்பெண் ஆகும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிபெண் சதவீதத்தை 60 ஆல் பெருக்கி அதைகொண்டு 100 ஆல் வகுத்தால் கிடைப்பதை கொள்ள வேண்டும்.

இப்படி 100–க்கு கணக்கிடப்படும் மதிப்பெண்களைக் கொண்டும் இட ஒதுக்கீட்டைக் கொண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம்

ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில், தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது. ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. இதையடுத்து, 15 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமன பணியை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்றிரவு கூறியதாவது

: கடந்த ஆண்டு, ஆகஸ்ட் தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர் என, 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு, நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கல்வி தகுதிக்கான, 40 மதிப்பெண் மட்டும் அளிக்காமல், சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துவிட்டோம். தற்போது, புதிய அரசாணையின்படி, கல்வி தகுதிகளுக்கும், டி.இ.டி., தேர்வுக்கும், மதிப்பெண் அளிக்க வேண்டும். சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, மதிப்பெண் அளிக்க வேண்டி உள்ளது. இந்தப் பணியை, இரு வாரங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். அதிகபட்சமாக, 20 நாட்களுக்குள், 72 ஆயிரம் பேரின், 'ரேங்க்' பட்டியலை வெளியிட்டு விடுவோம். அப்போது, 15 ஆயிரம் புதிய ஆசிரியரின் தேர்வு பட்டியலும் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமான சுற்றறிக்கை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சுற்றறிக்கை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இது பற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணனிடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:–

பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்துவதால் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

இதனால் பள்ளிக் கூடங்களுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் மாணவ– மாணவிகளின் பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும்.

இதைபோல ஆசிரியர்களும் வகுப்பறைகளில் செல்போன் பேசக்கூடாது. செல்போனை தங்களது ஓய்வறையிலேயே வைத்து விட்டு செல்ல வேண்டும்.

இது சம்பந்தமான தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளத

ஆசிரியர் தகுதித் தேர்வில், வெற்றி பெற்றவர்களை பணிக்கு தேர்வு செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை செல்லாது என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

மேலும் பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பிலும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்வர்களின் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு புதிய வெயிட்டேஜ் முறையை தயாரித்துள்ள தமிழக அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும். 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும். D.T.Ed/D.E.Ed-ல் அதிகபட்சமாக 25 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

G.O no 71.new TET revised weightage mark

Monday, June 02, 2014

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு : பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், நாளையும், நாளை மறுநாளும் பதிவு செய்து கொள்ளலாம். 'தத்கல்' திட்டத்தில் தேர்வெழுத விரும்பும், தனித்தேர்வர்கள், தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மார்ச்சில் எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகலை, விண்ணப்பத்தை பதிவு செய்யும் அலுவலரிடம் காட்ட வேண்டும். தேர்வெழுத, ஒரு பாடத்திற்கு, 50 ரூபாயும், இதர கட்டணமாக, 35 ரூபாயும் செலுத்த வேண்டும். அத்துடன் கூடுதலாக, சிறப்பு அனுமதி கட்டணமாக, 1000 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக 2 வாய்ப்பு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு ஜூன் 30 வரை விண்ணப்பம் ந

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சாதாரணமாக பிப்ரவரி, மார்ச், மாதங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாவது வழக்கம். தற்போது 2 மாதங்களுக்கு மேல் தாமதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெறும். www.upsconline.nic.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் இந்த மாதம் 30ம் தேதி இரவு 11.59 வரை  விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்கள் இந்த இணையதளத்திலும்,www.upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் இருந்தும் பெறலாம்.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதல் தேர்வு இது ஆகும். வயது வரம்பு கடந்து சென்றவர்களும் இந்த கூடுதல் வாய்ப்பை பயன்படுத்திட முடியும். அதற்கு ஏற்றவகையில் அதிகபட்ச வயது வரம் பில் 2 வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுத மொத்தம் 4 வாய்ப்புகள் மட்டுமே இருந்த நிலையில் இது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒபிசி பட்டியலில் உள்ளவர்கள் 9 முறை முயற்சிக்கலாம். பட்டியல் வகுப்பினர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கட்ட தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும

். தவறான கேள்விக்கு மதிப்பெண் குறையும். சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வும் ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இ&அட்மிஷன் சர்டிபிகேட் வழங்கப்படும்.

Sunday, June 01, 2014

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் 12–ந்தேதி வழங்கப்படுகிறது

   மதிப்பெண் சான்றிதழ் தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. 11 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவு கடந்த 23–ந்தேதி வெளியிடப்பட்டது. ஏற்கனவே பிளஸ்–2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே வேலைவாய்ப்பு பதிவு கம்ப்யூட்டர்களில் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு வழங்கப்பட்டுள்ளது

. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வருகிற 12–ந்தேதி வழங்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மாணவ–மாணவிகள் அவர்கள் படித்த பள்ளிக்கூடங்களிலேயே 12–ந்தேதி பெற்றுக்கொள்ளலாம். மேலும் அவர்கள் பள்ளிக்கூடங்களிலேயே தங்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு அவர்கள் சாதி சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டதையொட்டி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மதிப்பெண் நகலை கொண்டு பள்ளிக்கூடங்களில் பிளஸ்–1 சேர்க்கை நடைபெற்று வருகிறது.