இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 29, 2014

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்

   தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, தலா 100 பள்ளிகள் (உயர்நிலை மேல்நிலை) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும், தலா 50 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, பசுமை தினம் கொண்டாடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, புகையிலை இல்லாத பள்ளி வளாகத்தை உருவாக்குதல், மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி போட்டிகள் நடத்தி, ஒருங்கிணைப்பாளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதற்கான செலவுகளுக்கு தலா ஒரு பள்ளிக்கு 2,500 ரூபாய் என, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டத்திற்கு 80 லட்சம் ரூபாய் காசோலையை , பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ளார்.

நாளை (29.01.14) இரண்டு நிமிட மௌனமும் தீண்டாமைக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவ

ு. நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு.

Tuesday, January 28, 2014

ஆப்சென்ட்' ஆன டி.இ.டி., தேர்வர்கள்சான்றிதழ் சரி பார்க்க இன்றே கடைசி

, 2012 - 13ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது. வாரியத்தின் அறிவிப்பு:கடந்த ஆண்டு, ஆக., மாதம் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த, 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் பங்கேற்காதவர்கள், இன்று நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். 2012ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களும், இதில் பங்கேற்கலாம்; இதுவே, கடைசி வாய்ப்பு.இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 - 13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

எனவே, வரும் பட்ஜெட்டில், 20,ஆயிரம் கோடி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, புதிய திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர். இந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், மிகப்பெரும் சாதனையாக இருக்கும்.இவ்வளவு நிதி ஒதுக்கினாலும், நிதியில், ஆசிரியர், அதிகாரிகளுக்கு, பெரும்பகுதி சம்பளம் அளிக்கப்படுகிறது. இலவச பாட புத்தகங்கள்,சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான இலவச திட்டங்களுக்காக, 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது.

அறிவுசார் பூங்காகடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 'கல்வித் துறைஅலுவலகங்கள் மற்றும் சென்னை, கோட்டூர்புரம்நுாலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டி.பி.ஐ., வளாகத்தில், அறிவுசார் பூங்கா என்ற, பிரமாண்டமான கட்டடம் கட்டப் படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிப்பு அளவிலேயே நிற்கிறது

Monday, January 27, 2014

"டான்செட்' நுழைவுத் தேர்வு: அறிவிப்பு வெளியீடு

முதுநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்யலாம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.

2014-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மார்ச் 22 ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மார்ச் 23 ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம். பிப்ரவரி 18 கடைசித் தேதி. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 20 கடைசித் தேதியாகும். இதுகுறித்த விவரங்கள் www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இயக்குநர், எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மை இயக்குநர் ஆகியவை மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பதவிக்கு நிகரானவை):

அருண் பிரசாத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர். சென்னை. பொன்னையா, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை,சென்னை- திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

புகழேந்தி, துணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர். நூர்ஜஹான், கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், திருவண்ணாமலை - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர், சென்னை.

சரோஜா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், தூத்துக்குடி - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

லத்திகா, கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை - தூத்துக்குடி எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

சுப்ரமணியம், செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம். சென்னை- துணை இயக்குநர், மின் ஆளுமை, பள்ளிக் கல்வி இயக்ககம்.

Sunday, January 26, 2014

"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம் காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம். 2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாற்றினர்.

இதன் பின்னர், புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள் தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1 விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில் அதிகமான ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர். இந்நிலையில், மேலும் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2 தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும் நிலையில்,இவர்களில் பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகின்றனர். இதன் மூலம் சில உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே பாடத்திற்குரிய ஆசிரியர்கள் எண்ணிக்கை 40:1 விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணி நிரவல் இன்றி, 2012 பணி நிரவலுக்கு பின் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமான இடத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு இராது

. பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில், "பணிநிரவல் என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள பள்ளிகளில் இருந்து ஜூனியர் நிலை ஆசிரியர்களை மாற்றம் செய்வது. இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின், நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு பணிநிரவலில் மாறுதல் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனாலும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் சூழலால் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களின் பணிநிரவல் வாய்ப்பு பறிபோகும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர் வரை பணிநிரவலில் மாறுதல் பெற வாய்ப்புள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன், ஏற்கனவே பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்,பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றனர்.----

Wednesday, January 22, 2014

உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு : இணை இயக்குனர் பேட்டி

"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 6.6 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இதில், தாள்-1ல் 12,600 ; தாள்-2ல் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் சரிபார்க்கப்படும். மாவட்டந்தோறும் ஜன.,20 முதல் 27 வரை இப்பணி நடக்கிறது.

அனைவருக்கும் பணி கிடைக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.சிவகங்கையில், ஆய்வுக்கு வந்த, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் கூறுகையில், " ஆசிரியர் தேர்வு வாரிய வழி காட்டுதல் படி, சான்று சரிபார்த்தல் பணி நடக்கிறது. கல்வி தகுதிப்படி, "வெய்ட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்கி, இறுதி பட்டியல் தயாரித்து ஒப்படைக்கப்படும். பின்னர் இனசுழற்சி முறையில் பணி நியமன பட்டியல் வெளியாகும். சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்று, இறுதி பட்டியலில் இடம் பெற்ற 80 சதவீத ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால் நிம்மதி

"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு, ஜன.,23 மதியம் முதல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.ஆர்.பி., யால் அனுப்பப்பட்ட உத்தரவில், "சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பட்டப் படிப்பின் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது.

வழக்கமாக, அரசு பணி நியமனங்களுக்கு, "டிகிரி' சான்று மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்களே கேட்கப்படும். "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்று, இதுவரை கேட்டதில்லை. டி.இ.டி.,யில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களிடமும், இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது டி.ஆர்.பி.யால் பிறப்பிக்கப்பட்ட, புதிய உத்தரவால் டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றோர், பல்கலைகளில், "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ் கேட்டு குவிந்தனர். "காணவில்லை' என, போலீசில் புகார் செய்து, நாளிதழ்களில் விளம்பரம் செய்து, பின், பல்கலைகளில் 3,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, "டூப்ளிகேட்' செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும் நிலை இருந்தது. இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கேட்பதை கட்டாயப்படுத்த வேண்டாம்' என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களின், "10+2+3' என்ற ஆர்டரில், ஆண்டுகள் மாறியிருக்கும் பட்சத்தில்தான் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுகள் தேவைப்படும். முறையான ஆர்டரில் படித்து, சான்றிதழ் பெற்றவர்களுக்கு "டிகிரி' மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்கள் போதுமானது' என்றார்.டி.ஆர்.பி.,யின் இந்த உத்தரவால், ஜன.,23 ல், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் பட்டதாரிகள், நிம்மதி தெரிவித்துள்ளனர்.

Tuesday, January 21, 2014

CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை


PFRDA - CPS - GUIDELINES FOR WITHDRAWAL OF 25 % OF ACCUMULATED CONTRIBUTIONS BY NPS SUBSCRIBERS CLICK HERE... 
PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது
நிபந்தனைகள்:
1) தேவைகள்
a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு
b) குழந்தைகளின் திருமணம்
c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது)

d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது குடும்பத்தினர்க்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது.
1. Cancer
2. Kidney Failure (End Stage Renal Failure)
3. Primary Pulmonary Arterial Hypertension 
4. Multiple Sclerosis
5. Major Organ Transplant
6. Coronary Artery Bypass Graft
7. Aorta Graft Surgery
8. Heart Valve Surgery 
9. Stroke
10. Myocardial Infarction (First Heart Attack)
11. Coma 
12. Total blindness
13. Paralysis
இது போன்ற தருணங்களில் நாம் நமது CPS முதலிட்டில் இருந்து 25% வரை பெற்றுக்கொள்ள முடியும். 
ஆனால் இதற்கு நாம் CPS திட்டத்தில் குறைந்தது 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இது போன்று நாம் 3 முறை நமது CPS முதலிட்டிலிருந்து 25 % மிகாமல் பெற்றுகொள்ள முடியும். 
ஆனால் குறைந்தது 5 வருட இடைவெளியில். 
அதே வேளையில் மருத்துவ தேவைக்கு மட்டும் இந்த 5 வருட நிபந்தனை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வாக்காளர் தின' உறுதிமொழி: தேர்தல் கமிஷன் உத்தரவு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஜன., 24 முதல் ஜன.,26 வரை, 'வாக்காளர் தின' உறுதிமொழி எடுக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விபரம்: தேசிய வாக்காளர் தினம் ஜன., 25. அன்று, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், ஜன.,24 ல், கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்கவேண்டும். ஜன., 25 ல், 'வாக்காளர் தின விழா' நடக்கும் இடங்களிலும்; ஜன., 26 ல், குடியரசு தின விழாக்களிலும், 'வாக்காளர் தின' உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், ஓட்டுச்சாவடிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 'வாக்காளர் தினம்' கொண்டாட வேண்டும்.

அரசியல் சாராத பிரமுகர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே மேடையில் அமர வேண்டும். முதல் முறையாக புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தின 'பேட்ஜ்' அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும். விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும், என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்

தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்தும் தேதியை, அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், செய்முறை தேர்வுகளை நடத்தி, அதற்கான மதிப்பெண் விவரங்களை, பிப்., 28க்குள், தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Monday, January 20, 2014

அரசு வேலை மற்றும் ஆசிரியர் பணிக்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ள எண்ணிக்கையாகும் என்று தமிழக அரசின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 90 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 45 லட்சத்து 12 ஆயிரத்து 169 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகுப்புவாரியாக பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலப்புத் திருமணம் செய்தோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் சிறப்புப் பிரிவினராகக் கருதப்படுகின்றனர். அதன்படி, கலப்புத் திருமணம் செய்த 27 ஆயிரத்து 640 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 543 பேரும் பதிவு செய்துள்ளனர். கல்வித் தகுதிகள்: இதில் 31 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் பத்தாம் வகுப்பு படித்தவர்களாகவும், பிளஸ் 2 முடித்தவர்கள் 22 லட்சத்து 66 ஆயிரத்து 195 பேரும் அடங்குவர். மேலும், இளநிலை பட்டங்களில் கலைப் படிப்புகள் படித்தோரில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 17 பேரும், அறிவியல் பிரிவில் படித்தவர்களில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 261 பேரும், வணிகப் பிரிவில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 153 பேரும், பட்டதாரி ஆசிரியர்களில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 14 பேரும், பொறியியல் பட்டதாரிகளில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 725 பேரும், மருத்துவம் படித்தோரில் 6 ஆயிரத்து 922 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கணவரின் சம்பளம் எவ்வளவு? : அறிய மனைவிக்கு முழு உரிமை

"அரசு ஊழியர்களின் மனைவியருக்கு, தங்கள் கணவர்களின் சம்பள விவரத்தை தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியதாவது: அரசு ஊழியர்களின் மனைவியருக்கு, தங்கள் கணவர்களின் சம்பளம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. குடும்பத்தை நடத்துபவர்கள் என்ற முறையில், தங்கள் கணவர்களின் சம்பளத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம், மனைவியருக்கு உள்ளது. அரசு ஊழியர்கள் அல்லது அரசு அதிகாரிகளின் சம்பள விவரங்களை, மூன்றாவது நபர்களின் சொந்த விஷயமாக கருத முடியாது. அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டால், சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், அதை தெரிவிக்க வேண்டும்.

டில்லியில், இதுபோன்ற தகவல்களை, உள்துறை அமைச்சகம் தெரிவிப்பது இல்லை என, புகார்கள் வந்துள்ளன. உள்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் மனைவி, தன் கணவரின் சம்பள விவரத்தை கேட்டபோது, தகவல் தர மறுத்து உள்ளனர். இனிமேல், இது போல் மறுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறினா

GROUP - I C SERVICES EXAMINATION DISTRICT EDUCATIONAL OFFICER D.E.O EXAM -

 மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு  தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014  மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11

Sunday, January 19, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது. 

   அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி(  தாள்1), 18ம் தேதி(தாள் 2)  நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட் சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர். இவற்றில் தாள் 1ல்  12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று முதல் சான்று சரிபார்ப்பு 32 மாவட்டங்களில் நடக்கிறது. கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கடைபிடிக்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் போடும் முறை இந்த முறை இரண்டு தேர்விலும் தேர்ச்சி  பெற்றவர்களுக்கு கடைபிடிக்கப் போவதாக ஆசிரியர் தேர்வு  வாரியம் தெரிவித்துள்ளது.

இன்று தொடங்கும் இந்த சான்று சரிபார்ப்பு 27ம்  தேதி வரை நடக்கிறது. சான்று சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால்  அதை பதிவிறக்கம் செய்து கொண்டு உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அடையாளச் சான்று, கல்விச் சான்றுகள், சாதிச் சான்றுகள், அட்டஸ்டட் ஜெராக்ஸ் நக ல்கள், 3 போட்டோக்கள் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் சான்று சரிபார்ப்பு பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த 4 இயக்குநர்கள் தலைமையில் நடக்கிறது. 20 இணை இயக்கு நர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலத்தில் 412 ஒன்றியங்களில், 3, 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதித்து அறியும், அடைவுத்திறன் தேர்வு நாளை துவங்க உள்ளது. இதற்காக, ஒன்றியத்திற்கு ஒவ்வொரு வகுப்பிற்கும், 10 பள்ளிகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு நாளை தமிழ், கணிதமும், 22-ல் ஆங்கிலமும், 8ம் வகுப்பிற்கு 23ல் தமிழ்,கணிதம், 24-ல் ஆங்கில தேர்வும் நடக்கும். தேர்வு அறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு கண்காணிப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர் அல்லது சிறப்பு கல்வியாளர். இவர்கள் தான் பணிபுரியும் ஒன்றியத்திலிருந்து அடுத்த ஒன்றியத்தில் கண்காணிப்பாளராக இருக்க வேண்டும். இரண்டாவது கண்காணிப்பாளராக ஆசிரியர் ஒருவர் செயல் படுவார்கள்.மாணவர்களுக்கு ஒரு வினாத்தாளும், ஆசிரியர்களுக்கு ஒரு வினாத்தாளும், தனித்தனியாக வழங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்களின் அடைவுத்திறன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுக்கான கல்வி திட்டம் தயாரிக்கப்படும்.

மாணவர், ஆசிரியர் விடைத்தாள் மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் இணையதளம் மூலம், பதிவேற்றம் செய்யப்படும், என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

TET Weigtage marks G.O-252,dt 5.10.2012