இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 19, 2013

டி.என்.பி.எஸ்.சி.:30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனத்துக்கு குரூப்-1 தேர்வு விரைவில்.

30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வு வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிற இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்று தமிழக அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. போட்டிக்கு காரணம் இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், அதேபோல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சேருபவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றுவிடலாம்.

யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வுசெய்யப்படும் அனைவருக்கும் சொந்த மாநிலத்திலேயே பணி (ஹோம் ஸ்டேட் கேடர்) கிடைத்துவிடுவதில்லை. ஆனால், குரூப்-1 தேர்வு மூலமாக இந்த பணிகளுக்கு வருபவர்கள் தமிழ்நாட்டிலேயே பணியை தொடரலாம். இதனால், குரூப்-1 தேர்வு எழுவதுவதற்கு தமிழக இளைஞர்கள் மத்தியில் பலத்த போட்டியிருக்கும். யு.பி.எஸ்.சி. தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு கைகொடுப்பது குரூப்-1 தேர்வுதான். 100 காலியிடங்கள் குரூப்-1 பதவிகளில் 2012-ம் ஆண்டுக்கான 25 காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த அக்டோபர் மாதம் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2013-ம் ஆண்டுக்கான 100 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த காலியிடங்களில், 33 துணை ஆட்சியர், 33 துணை கண்காணிப்பாளர் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) பதவியில் மட்டும் காலியிடம் ஏதும் இல்லை. வணிகவரி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட இதர பணிகளில் காலியிடங்கள் வரப்பெற்றுள்ளதாகவும் பணியாளர் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

IGNOU B.ed decenber 2013 exam Hall Ticket

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்க கூடாது பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகள் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் என்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக 14 வயது வரை உள்ள மாணவ–மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆசிரியர் தகுதி தேர்வை அந்தந்த மாநில அரசுகள் நடத்த வேண்டும் என்றும் 2009–ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதை தமிழக அரசு கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதி முதல் அமல்படுத்தி வருகிறது. நியமனம் செல்லாது அதன்படி 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 11–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தால் அந்த நியமனம் செல்லாது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளதால் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியில் தான் சேருகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர யாரும் முன்வருவதில்லை. நீடிக்கக்கூடாது இந்த நிலையில் 2011–ம் ஆண்டு நவம்பர் 15–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நியமனம் செல்லத்தக்கது அல்ல.

இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு விதி விலக்கு அளிக்கலாமா என்று பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. ஆனால் அதற்கு வழி வகுக்காமல் 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி செல்லத்தக்கது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற முடிவை ஏற்று பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதிக்கு பின்னர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்று கூறி உள்ளது.

அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள் By

அடுத்த காலண்டர் ஆண்டில் (2014) பொங்கல், தீபாவளி பண்டிகைகள் உள்பட 20 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

ஜனவரி 1- ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 14-பொங்கல்-மிலாது நபி

ஜனவரி 15- திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16-உழவர் திருநாள்

ஜனவரி 26-குடியரசு தினம்

மார்ச் 31-தெலுங்கு வருடப் பிறப்பு.

ஏப்ரல் 13-மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு

ஏப்ரல் 18-புனித வெள்ளி

மே 1- மே தினம்

ஜூலை 29-ரம்ஜான்

ஆகஸ்ட் 15-சுதந்திர தினம்

ஆகஸ்ட் 17-கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 29-விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி-ஆயுத பூஜை

அக்டோபர் 3-விஜய தசமி

அக்டோபர் 5-பக்ரீத்

அக்டோபர் 22- தீபாவளி

நவம்பர் 4- மொஹரம்

டிசம்பர் 25-கிறிஸ்துமஸ்.

வருங்காலத்திற்கு' வந்த சோதனை : இன்று உலக குழந்தைகள் தினம்

  ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெப் அமைப்பு, ஆண்டுதோறும் நவ., 20ம் தேதியை, உலக கு ழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றது. உலகில் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் பொதுநிலைப்பாட்டை ஏற்படுத்தவும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, சுரண்டல் மற்றும் பாகுபாட்டை நீக்கவும், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் அனைத்து வன்முறைக்கும் எளிதில் ஆளாகுவோர் குழந்தைகள் தான். அவர்களுக்கு அடிப்படைக் கல்வி மறுக்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளிகளாக, குறைந்த சம்பளத்தில் கடின வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். தெருக்களில் வாழும் அவல நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். பல நாடுகளில், குழந்தைகளிடையே ஆயுத கலாச்சாரம் பரவி வருகிறது. உள்நாட்டு போர், வன்முறை மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக, குழந்தைகளின் உடல் மற்றும் உள்ளம் பாதிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் கடத்தல், பள்ளிகள் மீதான தாக்குதல், கொடுமைப்படுத்தல், கொலை செய்தல் போன்ற தாக்குதல் பெருகி வருவது வேதனை அளிக்கும் விஷயம்.குழந்தைகள் நாட்டின் கண்கள்.

குழந்தைகளின் மீது செலுத்தப்படும் அநீதி, எதிர்கால உலகின் மீது செலுத்தப்படும் அநீதி. அது வருங்கால உலகை நிச்சயம் பாதிக்கும்.

மொபைல் மூலம் ஆங்கிலம்: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்

  இந்தியா மிக முக்கியமான ஒரு நாடு. இந்தியர்களின் ஆங்கில தேவையை அறிந்து, அதற்கேற்ப, ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். இந்தியாவின் பெரும்பகுதி மக்களிடம், ஆங்கிலத்தைக் கொண்டு செல்ல, மொபைல் போன் மற்றும் இணைய தளங்களை பயன்படுத்துகிறோம். "மொபைலில் ஆங்கிலம்' என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும், தொலைபேசி மூலம், ஒரு வார்த்தையை சொல்வது அல்லது எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அதன்மூலம் ஆங்கில உரையாடலை அறியலாம்.

இத்தி"ட்டத்தில், ஆரம்ப நிலை, இடைநிலை, முன்னேறிய நிலை என, மூன்று நிலைகள் உள்ளன. மொபைல் மூலம், ஆங்கிலம் கற்றோரின் தகுதியை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிந்து, அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கிறது. இதற்கு, "அப்ளைடு லேப், ஏ.ஏ. எஜுடெக்' ஆகிய நிறுவனங்களின் மென்பொருள் உதவுகிறது. இவ்வாறு, மார்ட்டின் டேவிட்சன் கூறினார்.

அப்ளைடு மொபைல் லேப் தலைமை நிர்வாக அதிகாரி, மிரிகங்க திரிபாதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ஆகியோர், விழாவில் கலந்து கொண்டனர்.

மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதிய கண்காணிப்பாளர் நியமனம்

   ஜூலையில் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 'பி' பிரிவு வினாத்தாளில், ஏராளமான கேள்விகள், எழுத்துப் பிழையுடன் இடம் பெற்றன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட, ஒரே கேள்விக்கு, மாறுபட்ட விடைகள் இடம் பெற்றிருந்ததால், தேர்வர்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர். வணிகவியல் தேர்வு, 'டி' பிரிவு வினாத்தாளிலும், இதுபோன்ற குழப்பம் நீடித்தது. இதுதவிர, சமீபத்தில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வுகளிலும், உத்தேச, 'கீ ஆன்சரில்' இடம் பெற்ற தவறுகள் திருத்தப்படாமல், முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதனால், 88 மதிப்பெண் பெற்ற பலர், சரியான விடையளித்தும், மதிப்பெண் கிடைக்காததால் தேர்ச்சி பெறவில்லை என, தேர்வு எழுதியோர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக, டி.ஆர்.பி., இணை இயக்குனர்கள், இயக்குனர்கள் என, அடுத்தடுத்து மதுரை ஐகோர்ட்டில் ஆஜராயினர். வினாத்தாள் தயாரிப்பில் கவனக்குறைவாக இருந்ததாக, டி.ஆர்.பி., தலைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது, டி.ஆர்.பி.,க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்குகள், உடனுக்குடன் டி.ஆர்.பி., கவனத்திற்கு செல்லாததே, அபராதம் வரை சென்றது.

இதன் விளைவாக, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கண்காணித்து, அவற்றின் விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க, மதுரையில் புதிய கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., யில், மொத்தம், ஆறு கண்காணிப்பாளர் பணியிடங்கள் உள்ளன. இதில், ஒரு பணியிடம், மதுரைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பில், மதுரை கிழக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர், முத்துராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தரம் உயர்ந்தும் பணியிடங்கள் இல்லை: "கவுன்சிலிங்' கனவில் ஆசிரியர்கள்

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல், "பொறுப்பு' ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்துறைக்கு உட்பட்ட 5 பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டன. அரசு உத்தரவுப்படி, தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 9 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்க வேண்டும். இந்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றாமல், "பொறுப்பு' ஆசிரியர்களை கூடுதலாக நியமித்து புதிய பணியிடங்கள் உருவாக்குவதை தள்ளிப்போடுகின்றனர்.

இதனால், பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் கனவில் உள்ள ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தேனி மாவட்ட தலைவர் சுதாகர் கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 45 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். மேல்நிலை முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும். சிறப்பு "கவுன்சிலிங்' நடத்தப்பட்டால் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பலருக்கு, பணிமூப்பு அடிப்படையில் உள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மாறுதல் கிடைக்கும். "பொறுப்பு' ஆசிரியர் நியமித்து சமாளிப்பதால், ஒரே ஆசிரியர் இரு பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கும் நிலையுள்ளது, என்றனர்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்

  முந்தைய தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து, உத்தரவிடப்பட்டது. எனினும், பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை, தமிழ் வழியில், படிக்க முடியாத நிலைமை தான் உள்ளது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களில், பலர், தாங்கள் தமிழ் வழியில் படித்ததாக கூறி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.

மேலும், தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து, பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ் வழியிலான கல்வித்தகுதி எனில், '10ம் வகுப்பில் துவங்கி, பணிக்கு உரிய கல்வித்தகுதி வரை, அனைத்திலும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்' என, முதலில், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், 'குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும்' என, பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரத்தில், தற்போது வரை, குழப்பம் நிலவி வருகிறது.

தேவையில்லாத குழப்பம்: இது குறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறியதாவது: தமிழ் வழியில் படித்தவர்கள், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை பெறுவதற்கான வழி முறைகளில், தமிழக அரசு, தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல், இதில், பலரும் குழம்பி வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணி எனில், இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும். 10ம் வகுப்பையும், பிளஸ் 2 படிப்பையும், ஆங்கில வழியில் படித்திருந்தாலும், கவலையில்லை.
அதேபோல், முதுகலை ஆசிரியர் பணி எனில், குறிப்பிட்ட பாடத்தில், முதுகலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்; அவ்வளவு தான். மீடியம் தான் கணக்கு: பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய அரசு பணி எனில், பிளஸ் 2 படிப்பை, தமிழ் வழியில் படித்திருந்தாலே போதும். கல்லூரிகளில், ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும் மாணவர், தேர்வை, தமிழ் வழியில் எழுதுகின்றனர். இதை வைத்து, 'தமிழ் வழியில் படித்திருக்கிறேன்' என, கூறுகின்றனர். எந்த, 'மீடியத்தில்' சேர்ந்திருக்கின்றனரோ, அது தான், கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்

GO 1310 தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் 2014

Monday, November 18, 2013

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்.அருளப்பன் உள்பட 129 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நாங்கள் பணிபுரிகிறோம்

. உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 1988-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்தது. இதன்படி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும், அனைத்து பலன்களையும் எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணை நடந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி இடைநிலை ஆசிரியர்கள் கோரும் ஊதியம் வழங்க முடியாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அனைவரும் பள்ளி கல்வி இயக்ககத்தின் உயர்கல்வி விதிகளின் கீழ் வருகின்றனர். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் வருகின்றனர். மனுதாரர்களை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் விதிகளுடன் ஒப்பிட முடியாது. உயர்நீதிமன்ற அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகள் வேறுபட்டவை. அவை மனுதாரர்களுக்குப் பொருந்தாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1,093 உதவி பேராசிரியர் பணியிடம் : சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி துவக்கம்

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள, 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், மே, 28ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. இதன்படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், ஆகஸ்ட், 12ம் தேதி வரை பெறப்பட்டன.

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி முதல், பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு, சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரி; காமராஜர் சாலையில் உள்ள, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்; அண்ணாசாலையில் உள்ள, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதம், சுயவிவரப் படிவம், ஆளறி சான்று, சான்றிதழ் சரிபார்ப்பு படிவம் ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள், அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும். அழைப்புக் கடிதம், விண்ணப்பத்தாரர்களுக்கு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ததன் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுகின்றனர். விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள், விளம்பரம் செய்யப்பட்ட நாளுக்கு முன் அதாவது, மே, 27ம் தேதிக்கு முன் பெற்ற தகுதியே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு

10,12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என்றும்,தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் சி.பி.எஸ்.இ மண்டல இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Saturday, November 16, 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வு

   இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் கிரேடு–4 பணிக்கான காலியிடங்கள் தமிழ்நாடு தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் கடந்த ஜூலை மாதம் 19–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 23 ஆகும்.

இந்த பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 136 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 36 ஆயிரத்து 250 பேர் எழுதினர். சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 12 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள்–1 பொதுத்தமிழும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தாள்–2 சைவமும், வைணமும் சம்பந்தப்பட்ட தேர்வும் நடைபெற்றது.

காலை, மாலை நடைபெற்ற தேர்வுகள் கொஞ்சம் கடினமாக இருந்ததாக தேர்வு முடித்துவிட்டு வந்த தேர்வாளர்கள் கூறினர்.

823 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பரில் 5 முறை 3 தினங்கள்

  இந்த ஆண்டின் டிசம்பர் மாதம், சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மாத இறுதி நாட்களான, 29, 30, 31 ஆகிய, மூன்று நாட்களும், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் வருகிறது. அது போல், இந்த மாதத்தின், இந்த மூன்று கிழமைகளும், ஐந்து முறை வருகின்றன. இந்த அரிய அமைப்பு, 832 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டு உள்ளது.சிறப்பானது இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இது போல், வழக்கமாக அமைவதில்லை. டிசம்பர் மாத காலண்டரை, பிற மாத காலண்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த சிறப்பு தெரிய வரும். வல்லுனர்களின் கருத்துப்படி, டிசம்பர் மாதம், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது ஒரு அரிய நிகழ்ச்சியாகும்; இத்தகைய அரிய அமைப்பு, 823 ஆண்டுகளுக்கு முன், 1190ம் ஆண்டில் வந்துள்ளது. டிசம்பர் மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றான, 8ம் தேதி, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன என்பது, இந்த நாளின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

நல்லதல்ல ஒரு மாதத்தின் இறுதி நாட்கள், ஐந்து முறை வருவது நல்லதல்ல என்று, ஜோதிட நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். மேலும், ஞாயிற்றுக் கிழமை ஐந்து முறை வருவது கோப உணர்வுகளைத் தூண்டும்; திங்கள் கிழமை ஐந்து முறை வருவது நல்லது; செவ்வாய்க் கிழமை ஐந்து முறை வருவது செலவைத் தூண்டும் என்றும், ஒரு சில ஜோதிட அறிவியலில் கூறப்பட்டுள்ளது.