இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 10, 2013

ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு ; ஜூன் மாதத்திற்குள் முடிக்க அறிவுரை

ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பை, ஜூன் மாதத்திற்குள் முடிக்க கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் வரும் 15ல் ஆறாவது கணக்கெடுப்பு துவங்க உள்ளது. 26 கேள்விகள்: பொருளாதாரக் கணக்கெடுப்பாளர்களுக்கு, கணக்கு எடுப்பதற்கான அனைத்து உபகரணங்களும் வழங்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்டடத்திற்கு சென்று அந்த கட்டடத்தின் உரிமையாளர், அது வீடா அல்லது தொழிற்சாலையா, வீட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் செய்யும் தொழில்கள், கடை என்றால் என்ன வியாபாரம் செய்யப்படுகிறது. தொழிற்சாலை என்றால், என்ன பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எத்தனை பேர் இதில் பணியாற்றுகின்றனர். அவர்கள் வாங்கும் சம்பளம், தனிநபரின் வருமானம் உட்பட 26 கேள்விகள் கேட்கப்படும். தற்போது, வீட்டு வாடகையும், ரியல் எஸ்டேட் தொழிலையும் வருமானமாக சேர்த்துள்ளனர். வரும் ஜூன் மாதத்திற்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டும் என புள்ளியியல்துறை அதிகாரிகள், கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

9 ம் வகுப்பில் முப்பருவ முறை மூன்று தொகுதிகளாக புத்தகம்

ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும், இக்கல்வி முறை அமலாகிறது. எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையில் தமிழ், ஆங்கிலம் இணைத்து ஒரு புத்தகமாகவும்; கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும் ஒரு புத்தகமாகவும் வழங்கப்பட்டது.

  ஒன்பதாம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுதியாகவும்; கணிதம் ஒரு தொகுதியாகவும்; அறிவியல், சமூக அறிவியல் ஒரு தொகுதியாகவும் வழங்கப்பட உள்ளன. "அதிக பாடங்கள் இருப்பதால், புத்தகங்கள், மூன்று தொகுதிகளாக வழங்கப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய கல்விச் செய்திகள்:

* ஒன்பதாம் வகுப்புக்கும் சி.சி.இ. மற்றும் முப்பருவ கல்வி முறை: அமைச்சர் அறிவிப்பு
* ஆசிரியர் தகுதித் தேர்வு கட்-ஆஃப் மார்க் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர்

* தமிழகத்தில் இசை, கவின் கலைக்கு தனி பல்கலைக்கழகம்!

* முதல் தலைமுறை பி.ஏ. பி.எல். மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை: முதல்வர்

* பி.இ. விண்ணப்பம் கடைசி தேதியை மாற்ற முடியாது: உயர்கல்வி அமைச்சர்

* பாலியல் கொடுமை புகாருக்கு பள்ளிகளில் 'ஹெல்ப்–லைன்' வசதி

ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத கட்ஃஆப் மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் வைகைச்செல்வன்

  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:

பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம். எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.

நாளை (11.05.2013) அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் DEEOக்களுக்கான கூட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்ப

ு இன்று (10.05.2013) பல மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மூலம் நடத்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் விருப்ப மாறுதலில் செல்ல விரும்பும் AEEOக்களின் மாறுதல் விண்ணப்பங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆன AEEOக்களிடமிருந்து மாறுதல் விண்ணப்பங்கள் ஆகியவற்றை நாளை (11.05.2013) தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் DEEOக்களுக்கான கூட்டத்தில் ஒப்படைக்க DEEOக்கள் இருப்பதாக அறியப்படுகிறது.  ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பதவியுயர்வு கலந்தாய்வு மற்றும் விண்ணப்பங்கள் அளிப்பது குறித்த தகவல்கள் நாளை (11.05.13) DEEOக்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர

் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Thursday, May 09, 2013

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும் - TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்

1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?

இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில்  இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது

. 2. சென்ற ஆண்டு பயன்படுத்திய மாறுதல் விண்ணப்பப் படிவத்தையே இந்த ஆண்டும் பயன்படுத்தலாமா?

இன்றோ, நாளைக்குள்ளோ இயக்குனரகம், கலந்தாய்வு விதிமுறைகள் குறித்த முழுமையான செயல்முறையையும் படிவத்தையும் வெளியிடும். அதுவரை காத்திருந்து அதை பின்பற்றுவதே சரியாக இருக்கும். 3. இந்த வருட கலந்தாய்வு இணைய (ONLINE) வழியில் நடைபெற வாய்ப்புண்டா?  பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கலந்தாய்வு தேதிகள் ஒரே தேதியில் இல்லாமல் வெவ்வேறு தேதிகளில் நடைபெறுவதால், இணையவழியில் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி dinamalar

பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள ஆங்கில மோகத்தால், தங்களது குழந்தைகளை மெட்ரிக்., பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைகிறது. தமிழ் வழிகல்வியில் படிக்கும் குழந்தைகளை கவர, அரசு 14 வகையான பாடப் பொருட்கள் இலவசமாக வழங்கியும் கூட, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பள்ளிகளில் 20 குழந்தைகளை சேர்த்து, 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் ஆங்கில வழிகல்வி வகுப்புகள் துவக்க, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவக்கி, அதன் அறிக்கையை உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதுடன், தலைமை ஆசிரியர்களே தனிக்கவனம் செலுத்தி, பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கையை அதிகப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வ

2013-14 அட்டவணை
24.05.13- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் 25.05.2013-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல்

28.05.2013 காலை-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் / பதவி உயர்வு 28.05.2013 மதியம்-பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

29.05.2013 காலை-தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
29.05.2013 மதியம் -தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

30.05.2013 காலை - இடைநிலை ஆசிரியர் மாறுதல்  (ஒன்றியத்திற்குள்)
30.05.2013 மதியம் - இடைநிலை ஆசிரியர் மாறுதல்  (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
31.05.2013 - இடைநிலை ஆசிரியர் மாறுதல்(மாவட்ட விட்டு மாறுதல்)

+2 தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

கன்னியாகுமரி - 94.03 திருநெல்வேலி - 94.61 தூத்துக்குடி - 95.46
ராமநாதபுரம் - 89.23
சிவகங்கை - 91.82
விருதுநகர் - 95.87
தேனி - 93.58 மதுரை - 93.77 திண்டுக்கல் - 89.76 ஊட்டி - 84.05 திருப்பூர் - 92.89 கோவை - 92.95 ஈரோடு - 94.28 சேலம் - 89.4 நாமக்கல் - 94.41
கிருஷ்ணகிரி - 83.18
தர்மபுரி - 86.22
புதுக்கோட்டை - 86.95
கரூர் - 91.03 அரியலூர் - 74.94 பெரம்பலூர் - 90.59 திருச்சி - 93.78 நாகப்பட்டினம் - 84.7
திருவாரூர் - 82.53 தஞ்சை - 90.03 விழுப்புரம் - 78.03 கடலூர் - 73.21 திருவண்ணாமலை - 69.91
வேலூர் - 81.13
காஞ்சிபுரம் - 84.73
திருவள்ளூர் - 85.39
சென்னை - 91.82 புதுச்சேரி - 88.2

Wednesday, May 08, 2013

PLUS TWO RESULT - LINK 1 

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:30.05.2013 கடைசி தேதி :14.06.2013 தேர்வு நாள் : 21.07.2013 மொத்தப்பணியிடங்கள்: 2881

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவை அறியலாம்

இன்று காலை வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவை எஸ்.எம்.எஸ். மூலமும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நான்கு இணையதளங்களில் காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும். இணைய தளங்களில் முடிவை காண மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண்களுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும்"நிக்' மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவை அறிய 09282232585 என்ற மொபைல் எண்ணிற்கு ""TNBOARD REGISTRATION NO DOB' என்ற வடிவத்தில் குறுஞ் செய்தியை அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு 125678 என்ற பதிவு எண் மற்றும் 25.10.1995 என்ற தேதியில் பிறந்த தேர்வர் எனில் தனது தேர்வு முடிவை அறிய TNBOARD125678,25/10/1995 என எஸ்.எம்.எஸ். செய்யவேண்டும். இந்த சேவை காலை 10:00 மணி முதல் வழங்கப்படும். எனவே முன்கூட்டியே எஸ்.எம்.எஸ்.செய்ய வேண்டாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2: மே 27-ல் மதிப்பெண் சான்றிதழ்

  பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில் மே 27 முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2013-ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகலைப் பெறவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் மே 10 முதல் மே 13 வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலமே விடைத் தாள் நகலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு விடைத் தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும்போது பதிவிறக்கம் செய்த ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே நகலைப் பதிவிறக்கம் செய்ய முடியும். கட்டணம் எவ்வளவு? விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275-ம் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சலான் மூலம் "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கிக் கிளைகளில் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு: மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 1,010-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்டணம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் சான்றிதழ்: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 27 அன்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு அஞ்சல் மூலம் அவர்களுடைய வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

பதிவு மூப்பு அடிப்படையில் 782 சிறப்பு ஆசிரியர் நியமனம் க

உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளன. 440 உடற்கல்வி ஆசிரியர்கள், 196 ஓவிய ஆசிரியர்கள், 137 தையல் ஆசிரியர்கள், 9 இசை ஆசிரியர்கள் என்று 782 சிறப்பாசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். ஊதியம் 5,200&20,200. தர ஊதியம் 2,800.பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர், பழங்குடியினர் ஒதுக்கீடுகளும் உண்டு.

  1.7.2013 அன்று 57 வயது வரை உள்ளவர்களும் தகுதியுடையவர்கள். 1:5 என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு, பதிவுமூப்பு மற்றும் உரிய கல்வி தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

*2 Results website

Tuesday, May 07, 2013

TRB-DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS

state level employment seniority
Rs.5200-20,200*2800gp

P.et-121&319
DRAWING-55&141
SEWING-44&93
MUSIC-3&6
#Adv.no.1/2013 dt 8-5-2013

தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை: தகவல் வெளியிடுவது கட்டாயம்

தனியார் பள்ளிகளில் ஆரம்பநிலை வகுப்புகளில் எத்தனை இடங்கள் உள்ளன என்ற விவரத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஆரம்பநிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் நலிவுற்ற பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை மீண்டும் அறிவுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: இந்த 25 சதவீத இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மே 11-ஆம் தேதியன்று தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மே 14-ஆம் தேதி பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். அன்றைய தினம் மாலை 2 மணியளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

.இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி மூப்பு வெளியீடு

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான பணிமூப்பு பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.17&12&2011 வரை நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் இந்த பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் ஆவர். தமிழ்பாடத்தில் 4,382 பேர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள். 17&12&2011ஆம் தேதி தகுதி நாளாக கொள்ளப்படும். கணித பாடத்தில் 158 பேர் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களின் தகுதி நாள் 12&7&2011 ஆகும். வரலாறு பாடப்பிரிவில் 346 பேரும், அறிவியல் பாடத்தில் 63 பேரும், ஆங்கில பாடத்தில் 93 பேரும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். தகுதி நாள்: வரலாறு & 19.12.2011, அறிவியல் & 7.12.2010, ஆங்கிலம் & 12.1.2011. இந்த பதவி உயர்வுகள் வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்பட உள்ளது. பதவி உயர்வுக்கான பட்டியல் விவரங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. பெயர் விடுபட்டுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியரின் பரிந்துரையை பெற்று முதன்மை கல்வி அலுவலரை அணுகலாம். இத்தகவலை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.

GO.216 நீதிமன்றத் தீர்ப்புப்படி 1-6-88 முதல்31-12-95 வரை பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு 1-6-88 முந்தைய பணிக்காலத்தையும் சேர்த்து தேர்வுநிலை வழங்க ஆணை

தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாகைளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Monday, May 06, 2013

சட்டப் படிப்புக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்

் நடப்பாண்டில் சட்டப் படிப்புக்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு, மே 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பி.ஏ., பி.எல்.,(ஹானர்ஸ்), பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் ஆகியவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மே 15ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

IGNOU B.Ed. Prospectus for the January 2014 session

Saturday, May 04, 2013

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

   "ஆசிரியர் தகுதி @தர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர். அடுத்த தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப்போல், ஜூலையில் தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், வலியுறுத்தினர். இது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். எனவே, இது தொடர்பாக, முதல்வரின் அறிவிப்பையும், பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை ; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கும், முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட மாநில அளவிலான பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வி முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரு ஆண்டு முழுவதும் பாடத்திட்டங்களை வகுக்காமல், ஓராண்டை மூன்று பருவங்களாக பிரித்து, அதற்கேற்ப பாடத்திட்டங்கள் பிரிக்கப்பட்டு, புத்தகங்களாக்கப்பட்டன. இதனால் பள்ளி மாணவர்களின் புத்தக சுமை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.

அதே போல், தேர்வின் மூலம் பெறப்படும் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து, ஒரு மாணவனின் திறன் மதிப்பிடப்பட்டு வந்தது. அந்த முறையையும் மாற்றி, தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டது. இதில் தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமின்றி, மாணவனின், உற்றுநோக்கும் திறன், ஒழுக்கம், விளையாட்டு, தனித்திறன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு, திறன்கள் மதிப்பிடப்படுகிறது. கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்ட இம்முறை, வரும் கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்புக்கும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மே, 6,7 ம்தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இதில் மாவட்டந்தோறும், ஒவ்வொரு பாடங்களிலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.