இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 21, 2013

பி.பி.இ. பட்டத்தை அங்கீகரித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்

பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது பி.பி.இ. பட்டம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட பி.பி.இ. பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பணி கிடைக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 2012, மே மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தியது.

இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில், மாவட்டந் தோறும் வணிகவியல் பொருளாதாரம் (பி.பி.இ.) படித்த பட்டதாரிகளும் பொருளாதாரப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். பின்னர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பொருளியல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் பி.பி.இ. படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த பட்டத்தை அங்கீகரிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டது. பி.ஏ. (பொருளாதாரம்) படிப்புக்கு இணையான படிப்பு பி.பி.இ. என தமிழக அரசு ஆணை பிறப்பித்ததுடன், பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளில் இப் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருவதை ஆதாரத்துடன் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் காண்பித்தனர். ஆனால், இதுதொடர்பான அரசாணை தங்களது அலுவலகத்துக்கு வரவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தப் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டது.

பி.பி.இ. பட்டதாரிகளின் இந்த நிலையைச் சுட்டிக்காட்டி தினமணி மதுரைப் பதிப்பில் (டிசம்பர் 26) விரிவாகச் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகப் பதிவாளர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பி.ஏ. (பொருளாதாரம்) பட்டத்துக்கு பி.பி.இ. பட்டம் இணையானது என்றும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்றுக்கொண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சனிக்கிழமை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,  பி.பி.இ. பட்டத்தை அங்கீகரிப்பதாகவும், ஏற்கெனவே ஆசிரியர் பணி மறுக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பு அந்தந்த துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கெனவே ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டதால், விரக்தியில் இருந்த பி.பி.இ. பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாகவும், விரைவில் ஆசிரியர் பணிக்கான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் பி.பி.இ. பட்டதாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 1 முதல் 18 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

  பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 18 வரை நடத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான அட்டவணையை அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான மாணவர்களின் பதிவு எண் பட்டியல் ஜனவரி 27-ஆம் தேதி வாக்கில் தயாராகும் எனத் தெரிகிறது. சிறிய மாவட்டங்களில் செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்திலேயே நிறைவடைய வாய்ப்புள்ளதாகவும், பெரிய மாவட்டங்களில் பிப்ரவரி 1 முதல் 18 வரை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். பொதுத்தேர்வுக்குப் போதிய இடைவெளி வழங்கும் வகையில் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

GO.18 M.phil r Ph.d Incentive for BTs

Sunday, January 20, 2013

SSLC March 2013 Time table

2013ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி அட்டவணை 28ல் வெளியீடு : நட்ராஜ்

  2013ஆம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வரும் 28ம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தலைவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ், இந்தாண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள  அனைத்துத் தேர்வுகளுக்கான பட்டியலும் 28ம் தேதி வெளியிடப்படும்.

நடந்து முடிந்த விஏஓ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று 2ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. விஏஓ கலந்தாய்வுக்கு 866 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 450 பேர் மட்டுமே இன்று கலந்தாய்வுக்கு வந்துள்ளனர். 3ம் கட்ட விஏஓ கலந்தாய்வு வரும் 24ம் தேதி நடைபெறும் என்றும் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை பரபரப்பு உத்தரவு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கட

  அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், தொடக்கக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிகளுக்கு கடந்த ஆண்டுக்கான இறுதிகற்பிப்பு மானியம் (ஊதியம்) மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிட்டு வழங்கப்படும். அதன்படி 2012ம் ஆண்டிற்கான கணக்கிடும் பணி உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வருகிற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் வழங்குவது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணியாகும். இறுதி கற்பிப்பு மானி யம் கணக்கிடும்போது, ஆய்வு செய்யப்படும் பள்ளி வேலை நாட்கள் 220 பூர்த்தி செய்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.  

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தலைமையாசிரியர் 5 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி முழு நிதியுதவியுடன் கூடிய முழுமை பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 100 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைத்தொழில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 2010 ஆக.23க்கு பிறகு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்களுக்கே மானியம் விடுவித்தல் வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் தற்காலிக பட்டச்சான்றின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், 2 ஆண்டுக்குள் அசல் பட்டச்சான்றினை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும்.

இல்லையென்றால் வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஊதியம் குறித்து மாநிலக் கணக்காயரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநிலக் கணக்காயர் மற்றும் துறை அதிகாரிகள் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் இறுதி கற்பிப்பு மானியத்தை பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் அங்கீகாரம் ஆணை பெற்ற பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். சுயநிலைப்பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது. பள்ளி செயலர் நியமனங்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மட்டும் மானியம் கணக்கிடுதல் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கத்தடை

மாணவர்களுக்கு டியூஷன்  எடுக்க புதிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் கட்டமாக ஜூலை மாதம் நடந்தபோது 2,800 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த துணைத் தேர்வில் 17,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களில் 19,343 பேருக்கு பணி வழங்கப்பட்டது.    இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையங்களில்(டயட்) இந்த பயிற்சி இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக  பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு: 

அனைத்து மாணவர்களிடமும் அன்புடன் பழகுதல், வேறுபாடு பார்க்காமல் நடுநிலையுடன் நடத்தல், மாணவர்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்துதல் ஏற்படாத வகையில் நடத்தல், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு கற்பிக்கும் போது நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களுடன் எப்படி உரையாடுவது, சக ஆசிரியர்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வது, உள்ளிட்டவை சொல்லித்தர வேண்டும்.  ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் யாரிடமும் நன்கொடை வாங்கக் கூடாது, மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு டியூஷன் நடத்தக் கூடாது, பள்ளியில் உடன் பணியாற்றுவோர் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 19, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18 ஆயிரம் பேர் தேர்வு பெற்றனர்.

பணி நியமனத்திற்கான சான்று சரிபார்ப்பு பணியின் போது, தகுதி இல்லாத பலர், தேர்வு செய்யப்பட்டனர்; இது குறித்து அரசுக்கு, புகார் சென்றது. இவர்களை தகுதி பட்டியலில் இருந்து நீக்க, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படாதோர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அவசர கோலத்தில் சான்றுகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், உரிய சான்றுகள் இன்றி பங்கேற்றுள்ளனர். இது போன்றவர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Newly Appoinment BTs&SGTrs Induction Training Module

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு தேதி பிப்.16க்கு மாற்றம

் : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேதி முதற்கட்டத் தேர்வு பிப்.16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெற இருந்தது. 

Friday, January 18, 2013

புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நலன் குறித்த பயிற்சி : இன்றும், நாளையும் நடக்கிறது

தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி முகாம் ,அந்தந்த மாவட்ட தலைநகரத்தில் ,இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சமீபத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளனர். இவர்களுக்கு, அந்தந்த மாவட்ட தலைநகரில் இன்றும், நாளையும் பயிற்சி முகாம் நடக்கிறது.

இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தொடங்கி வைக்கின்றனர். தலைமை ஆசிரியர்கள் கருத்தாளுனராக இருப்பர். இதில் அரசு திட்டத்தை விளக்குதல், பள்ளியில் ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் 14 வகை இலவச திட்டம், ஸ்மார்ட் கார்டு திட்டம், முதல்வரின் விஷன் முன்னோடி திட்டம், தரமான கல்வி, சுற்றுப்புற தூய்மை, மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், தேசிய குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. இதை அந்தந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவு

தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது. ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும்,  இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா,  கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு 25 புதிய விடுதிகள் ஜெயலலிதா உத்தரவு

  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 83 லட்சம் செலவில் புதிதாக 25 விடுதிகள் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தமிழகத்தில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,277 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 40 பழங்குடியினர் விடுதிகளும், 299 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக அதிக அளவில் மாணவ, மாணவியர் கல்வி கற்பதற்கு முன்வருவதாலும், இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளதாலும், மாணவ, மாணவியர் தங்கி பயிலுவதற்கு அதிக விடுதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

25 புதிய விடுதிகள் 2012–13–ம் நிதியாண்டில் 16 பள்ளி விடுதிகள், 8 கல்லூரி விடுதிகள், 1 ஐ.டி.ஐ விடுதியும் என மொத்தம் 25 புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஸ். கொடிக்குளம், ராஜபாளையம், அரச்சநல்லூர், எஸ்.புங்கம்பாளையம், கருமந்தக்குடி, தேவக்கோட்டை, ஆத்தூர், தோப்பூர், நெய்கொப்பை, குமராட்சி, பெரியசாமிபுரம், கடம்பன்குளம், ஒஸ்.ஓகையூர், கல்லாக்கோட்டை, சுப்ரமணியபுரம், விராலிமலை, உதகமண்டலம், திருச்சி, உடுமலைப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, நன்னிலம், திருப்பத்தூர், அரக்கோணம், புதுக்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். இதில் ஒரு விடுதிக்கு 50 மாணவ, மாணவியர் வீதம் 1,250 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு பயன் அடைவார்கள்.

75 பணியிடங்கள் இந்த விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு பட்டதாரி காப்பாளர், காப்பாளினி பணியிடம் 1, சமையலர் பணியிடம் 1, காவலர், ஏவலர் பணியிடம் 1 என 3 பணியிடங்கள் வீதம் 25 விடுதிகளுக்கு 75 பணியிடங்களை தோற்றுவிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.புதிதாக தொடங்கப்பட உள்ள 25 விடுதிகளுக்கு அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.3 கோடியே 33 லட்சத்து 3 ஆயிரத்து 600–ம், தொடரா செலவினமாக ரூ.49 லட்சத்து 93 ஆயிரத்து 750–ம் என மொத்தம் ரூ.3 கோடியே 82 லட்சத்து 97 ஆயிரத்து 350 செலவு ஏற்படும். இரண்டு அடுக்கு கட்டில்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 68 கல்லூரி மாணவர் விடுதிகளில் 7,828 மாணவர்களும், 61 மாணவியர் விடுதிகளில் 4,738 மாணவியர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன் பெறும் வகையில், அவர்களுக்கு இரண்டு அடுக்கு கட்டில்கள் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 68 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 7,828 மாணவர்களுக்கு 3,932 கட்டில்களும், 61 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 4,588 மாணவியர்களுக்கு 2,313 கட்டில்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடியே 28 லட்சத்து 1 ஆயிரத்து 475 நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மின்னணு எடை இயந்திரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை சரியாக அளக்க, அனைத்து விடுதிகளுக்கும், உண்டி உறைவிடப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.5 ஆயிரம் விலையில் ஒரு மின்னணு எடை இயந்திரம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்காக ரூ.80 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சுகாதார குட்டை தகளி மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 466 மாணவியர் விடுதிகள், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 16 மாணவியர் விடுதிகள், 100 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆக மொத்தம் 582 விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவியர்களின் உடல் நலத்தைப் பேணவும், விடுதியின் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கவும், ஒவ்வொரு விடுதிக்கும், உண்டி உறைவிடப் பள்ளிக்கும் ஒரு சுகாதார குட்டை தகளி (நாப்கின் இன்சினிரேட்டர்) வழங்கவும், அதற்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Direct Recruitment of Post Graduate Assistants (Revised)for the year 2011 - 12  - After Certificate Verification Individual Query

Wednesday, January 16, 2013

மைக்ரோசாப்ட் நடத்திய தேர்வில் மதுரை சிறுவனுக்கு முதலிடம

்  அமெரிக்காவைச் சேர்ந்த, "மைக்ரோசாப்ட்' நிறுவனம், உலக அளவில் நடத்திய கம்ப்யூர்ட்டர் தேர்வில், தமிழக சிறுவன் பிரணவ், முதலிடத்தைப் பெற்று, சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டம், பாலமேட்டைச் சேர்ந்தவர், கல்யாண்குமார். அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சில், வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன், ப்ரணவ் கல்யாண், 9, அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இவருக்கு, ஆரம்பத்தில் இருந்தே, கம்ப்யூட்டர் மேல் விருப்பம். அதனால், பிரணவ்விற்கு பல்வேறு கம்ப்யூட்டர் நுணுக்கங்களை, கல்யாண் கற்றுக் கொடுத்தார். சமீபத்தில், மைக்ரோ சாப்ட் நிறுவனம் உலக அளவில், சிறுவர்களுக்கான கம்ப்யூட்டர் தேர்வு நடத்தியது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்றனர். அதில், பிரணவ் கல்யாண் முதலிடத்தைப் பிடித்தார். அவனை பாராட்டி மைக்ரோ சாப்ட் நிறுவனம், "உலகின் இளைய சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. இது குறித்து, மதுரையில் உள்ள கல்யாண்குமார் குடும்பத்தினர் கூறியதாவது: குழந்தைகளை, அவர்கள் விரும்பும் துறைகளில் ஈடுபடுத்தினால், அவர்கள் சாதித்து காட்டுவர் என்பதற்கு, பிரணவின் சாதனை, ஒரு உதாரணம். கம்ப்யூட்டர் தேர்வுகளில், பெரியவர்கள் தேர்ச்சி பெறுவது சாதனை அல்ல; ஆனால், 9 வயதே நிரம்பிய குழந்தை, உலக அளவில் வெற்றி பெற்றது, மிகப் பெரிய சாதனை. இந்த சாதனை எங்களுக்கு மட்டுமல்ல; தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரி இறுதிக்குள் இணையதளத்தில் வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் துறையின் இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்கள் தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 34,871 தொடக்கப்பள்ளிகளும் (63%), 9,969 இடைநிலைப் பள்ளிகளும் (18%), 5,167 உயர்நிலைப் பள்ளிகளும் (9%), 5,660 மேல்நிலைப் பள்ளிகளும் (10%) உள்ளதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

. இந்த இணையதளத்தில் வெளியிடுவதற்காகவும், கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காகவும் (உஙஐந - உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த இணையதளம் மற்றும் இதற்கான சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதற்கான சர்வர் உள்ளிட்டவை எல்காட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன. பள்ளிகள், மாணவர்களின் தகவல் திரட்டும் பணி கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கியது. டிசம்பர் இறுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தன. முதல்கட்டமாக, பள்ளிகள், ஆசிரியர்களின் விவரங்களைப் பதிவுசெய்யும் பணி முடிந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் மேலும் கூறியது: அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளின் விவரங்கள் மட்டும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிறகு, அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் விவரங்களும் பரிசோதனை முயற்சியாக பதிவு செய்யப்பட்டன. ஒன்றியத்தில் உள்ள 100 முதல் 140 பள்ளிகள், மாணவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் எந்தப் பிரச்னையும் எழவில்லை. இதைத்தொடர்ந்து, இப்போது மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களின் தகவல்களைப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற 5 முதல் 10 ஆசிரியர்களைக் கொண்டு இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விவரங்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது

. இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தேதி, அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை ஆகிய துறைகள் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன.