இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 12, 2012

முதல் பருவ புத்தகம் திரும்ப பெறும் அரசு பள்ளிகள் "எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டி' வசதிக்காக சிறப்பு ஏற்பாடு

இரண்டாம் பருவ கல்வி இணை செயல்பாட்டுக்காக, முதற்பருவத்துக்கான புத்தகங்களை, குழந்தைகளிடம் இருந்து, அரசு பள்ளிகள், திரும்ப வாங்கி வைத்து கொள்ளும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனதமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல், சமச்சீர் கல்வி முறையில், முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்றுகின்றனர்முழு கல்வியாண்டுக்குரிய புத்தகங்கள், மூன்று பருவங்களுக்கு ஏற்ப பிரித்து, ஒவ்வொரு பருவ முடிவிலும், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வு நடத்தப்பட உள்ளது.

தற்போது, அர மற்றும் அர உதவி பெறும் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் முதல் பருவத்துக்கான தேர்வை முடித்து, விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவத்துக்கான பாட வகுப்புகளை நடத்துகின்றனமூன்று பருவத்துக்கும், பருவம் வாரியாக கல்வி இணைச் செயல்பாடுகள் பாடமாக உள்ளதுகுழந்தைகளின் பாடத் திட்டத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளை, செயல்பூர்வமாக, தெரிந்து கொள்ள, கல்வி இணைச் செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனபிக்சர்ஸ் கலெக்ஷன், போட்டோ கலெக்ஷன், காய்கறிகள் மற்றும் பூக்களின் வகைகளை, செயல் பூர்வமாக, செய்முறையாக அட்டைகளில் ஒட்டி, அவற்றை முழுமையாக அறிந்து கொள்ள, கல்வி இணை செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளனஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை மேம்படுத்தவே, இச்சிறப்பு ஏற்பாடுஇதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும், 20 மதிப்பெண் வழங்கப்படுகிறது தனியார் பள்ளி குழந்தைகள், அவரவர் வசதிக்கேற்ப, கல்வி இணைச் செயல்பாட்டை, விலை கொடுத்து வாங்கிய பொருட்கள் மூலம் நிறைவேற்றுகின்றனர்.

ஆனால், அரசு பள்ளி குழந்தைகளுக்கு, கல்வி இணை செயல்பாடுகள் பெரும் செலவாக உள்ளனவசதி வாய்ப்பற்றோர், கிராமத்தில் வசிப்போர், இப்பணியைச் செய்ய சிரமப் படுகின்றனர். இதனால், தங்கள் பள்ளி குழந்தைகளும், கல்வி இணைச் செயல்பாட்டில், திறன் வாய்ந்தவர்களாக உருவாக வேண்டும் என, யோசித்த சில அரசு பள்ளிகள், முதல் பருவ புத்தகங்களை, சம்பந்தப்பட்ட அரசு பள்ளியே, திருப்பி வாங்கி வைத்துள்ளதுஇரண்டாம் பருவ கல்வி இணைச் செயல்பாட்டுக்கு, முதற்பருவ புத்தகத்தில் உள்ள படங்கள், விளக்கங்கள், கருத்துக்களை பயன் படுத்துகின்றனர் அர துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், "கல்வி இணைச் செயல்பாட்டுக்கு படம், போட்டோ, கருத்து விளக்க பொருட்கள் வாங்கி, மாதம், 100 முதல், 200 ரூபாய்க்கு மேல் செலவாகும்பழைய புத்தகங்களில் இருந்து அவற்றை எடுத்து பயன்படுத்தினால், பெற்றோர் சிரமத்தை குறைக்கலாம் என்பதால், இப்புத்தகங்களை வாங்கி வைத்துள்ளோம்' என்றனர்.

காவலர், துப்புரவு பணியாளர் பணிக்கு 3,640 பேர் தேர்வு

அர ப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அர இணையதளத்தில் (தீதீதீtணஞ்ணிதிடிண), நேற்று வெளியிடப்பட்டனஅர உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு, ஏற்கனவே வெளியாகி இருந்ததுவேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில், இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர

் இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,""இரு பணிகளுக்கும், குறிப்பிட்ட கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படவில்லைவேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்சிலர், 5ம் வகுப்பு படித்துள்ளனர்சிலர், 7ம் வகுப்பு படித்துள்ளனர்இவர்கள், விரைவில், பணி நியமனம் செய்யப்படுவர்'' என, தெரிவித்தன. சம்பளமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என, தெரிகிறது

ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்படுமா : தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்ப்பு

  இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்

நியமனம் : டிஇடி, தேர்வு வழியாக, 25 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜூலையில் நடந்த டிஇடி, தேர்வில், 2,448 பேர் தேர்வு செய்யப்பட்டனர்அக், 14ல் நடந்த, அடுத்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர் இவர்களில், முதலில், 2,448 பேர், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்அடுத்ததாக, 19 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவர்மேலும், 2,900 முதுகலை ஆசிரியரும், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்பாட வாரியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையை, டிஆர்பி, வெளியிடாமல் உள்ளதுமேலும், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை

இணையதளம் : காலியிடங்கள் விவரங்களை, இணையதளத்தில், இரு துறைகளும் வெளியிட்டால், இப்போதே, தங்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என, ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள் கருதுகின்றனர்இடைநிலை ஆசிரியர், பதிவுமூப்பு அடிப்படையிலும், இதர வகை ஆசிரியர்கள், மதிப்பெண் அடிப்படையிலும் நியமிக்கப்பட உள்ளனர்அதனால், காலியிட பட்டியலை வெளியிட்டால், தகுதி வரிசைப்படி, எந்த இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை, இப்போதே தெரிந்துகொள்ள முடியும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்

ஆன்-லைன் : வழக்கமாக, கலந்தாய்வு நடக்கும் இடத்தில், ஒரு மணி நேரம் முன்பு, காலி பட்டியல் வெளியிடப்படுகிறதுஇதனால், பட்டியலை பார்ப்பதற்கு, தேர்வு பெற்றவர்கள், முட்டி மோதும் நிலை இருக்கிறது. சமீபகாலமாக, "ஆன்-லைன்' வழியாக, கலந்தாய்வு நடந்து வருவது, மேற்கண்ட பிரச்னையை தீர்க்கும் என்றாலும், காலியிட பட்டியலை, இப்போதே வெளியிட வேண்டும் என்பது, தேர்வு பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில்,"காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனமுழுமையான விவரங்கள் கிடைத்ததும், இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தன

கூட்டுறவுச் சங்க உதவியாளர் பணி:  விண்ணப்பம் வரவேற்பு

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு பணியாளர் நியமனம் செய்ய உள்ளதால் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:  

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 3,589 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன. இதனால், விண்ணப்பதாரர்களிடம் இருந்து கூட்டுறவு சங்கங்களின் மாநில அள் சேர்ப்பு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

விண்ணப்பம் கிடைக்கும் இடம்: கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, கடலூர்(தலைமையிடம்). இவ்வங்கியின் கடலூர் முதுநகர், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், புவனகிரி, சிதம்பரம், எறையூர், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம், நெல்லிக்குப்பம், நெய்வேலி மெயின் பஜார், 5-வது வட்டம். பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, தொழுதூர், வடலூர், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, செம்மண்டலம், புதுப்பாளையம் ஆகிய கிளைகளில் வேலை நேரத்தில் இலவசமாக  கிடைக்கும்.  இணையதள முகவரி: ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீர்ர்ல்ள்ழ்க்ஷ.ர்ழ்ஞ் என்ற இணையதள முகவரியில் சென்று 108.179.198.54-ல் உள்ள விண்ணப்பத்த்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் (ன்ல்ப்ர்ஹக்) செய்து அனுப்பலாம்.  முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.  

இல்லையெனில் பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன், தலைவர், கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள் சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், என்.வி.நடராஜன் மாளிகை, எண்.170, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  

கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக கிடைக்க வேண்டும்.  கட்டணம்: தேர்விற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்து தேர்வுக்கான கட்டணம் ரூ.250 ஆகும்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இதில் விலக்களிக்கப்படும்.  கட்டணம்

செலுத்தும் முறை: மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் "மாநில ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை-10 (நற்ஹற்ங் தங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற் ஆழ்ன்ங்ஹன், இட்ங்ய்ய்ஹண்-10)' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக எடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.  இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் வரைவோலை பெற்று, சான்றொப்பம் பெற்ற சாதி சான்றிதழுடன் தனியாக கடிதம் மூலம் மாநில ஆள் சேர்ப்பு நிலைய முகவரிக்கு வரும் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 11, 2012

1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைதோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் செய்திக்குறிப்பு

அரசு மேல்நிலை பள்ளிகளில், 11 மற்றும், 12ம் வகுப்புகளில் உள்ள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக, அரசுக்கு ஆண்டுக்கு, 64 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.தற்போதுள்ள, 4,393 பள்ளிகள் மற்றும் புதிதாக துவக்கப்பட்ட, 544 பள்ளிகள் என, மொத்தம், 4,937 பள்ளிகளுக்கு, தலா ஒரு ஆய்வக உதவியாளர் வீதம், 4,937 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

இதில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பவும், 1,764 பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, ஒரு இளநிலை உதவியாளர் வீதம், பணியிடங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்காக, அரசுக்கு, 109 கோடி ரூபாய் செலவாகும். மேலும், 131 பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, ஆய்வகம் போன்ற, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, 152.73 கோடி ரூபா# நிதி ஒதுக்கீடு செய்தும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 10, 2012

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்கீடு: முதல்வர

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வுத்துறையில் பள்ளி பொதுத் தேர்வு பணிகள் துவங்கின : 30ம் தேதிக்குள், பட்டியலை இறுதி செய்ய முடிவு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் முதல் வாரம் துவங்கிவிடும். செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி, முதல் வாரத்தில் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பிப்ரவரியில் செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, ஜனவரி, 15ம் தேதிக்குள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும். இதனால், தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.

பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் பெயர், பள்ளி, குரூப் விவரம், தேர்வெழுதும் பாடங்கள், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட வாரியாக, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடித்து, பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவ, மாணவியர் பெயர் பட்டியல், விரைவில், மாவட்டங்களில் இருந்து வர ஆரம்பித்துவிடும். இம்மாத இறுதியில், எத்தனை பேர், பொதுத்தேர்வை எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். பிளஸ் 2வை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வில், கூடுதலாக, 30 ஆயிரம் பேர் முதல், 40 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம் இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முந்தைய பிளஸ் 2 தேர்வுகள், 1,974 மையங்களில் நடந்தன. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கோரி, பள்ளி நிர்வாகங்கள், தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்து வருகின்றன. 100 மையங்கள் வரை, புதிதாக அனுமதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 10.84 லட்சம் பேர் எழுதினர்; 3,033 மையங்களில், தேர்வுகள் நடந்தன. வரும் தேர்வில், 11.20 லட்சம் பேர் வரை, இத்தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி, 23ம் தேதி வரை நடந்தது. இந்த அட்டவணை, வரும் பொது தேர்வுக்கு பொருந்தாது எனவும், வழக்கம்போல், மார்ச், 20ம் தேதிக்குப் பின் துவங்கி, ஏப்ரல், 10 தேதிக்குள், தேர்வு முடிவடையும் வகையில், அட்டவணை இருக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வுத்துறை பணியாளர்களுக்கும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை

கல்வித்துறையில், ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்குவது போல், தேர்வுத்துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், ஆசிரியர் அல்லாத பணிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களில், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தகுதி உடையவர்களுக்கு, 2 சதவீதம் அளவில், ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது

. இவ்வாறாக, பல ஊழியர்கள், ஆசிரியராக பணி மாறுதல் பெறுகின்றனர். இந்த வாய்ப்பு, தேர்வுத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் தகுதியுடன் பலர், தேர்வுத் துறையில், சாதாரண நிலையில் பணிபுரிந்து வருகின்றனர். தேர்வுத்துறை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தான், தேர்வுத்துறையும் வருகிறது; இதர கல்வித் துறைகளும் வருகின்றன. அப்படியிருக்கும் போது, கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும், ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கி, எங்களுக்கு மறுப்பது, எந்த வகையில் நியாயம் என, தெரியவில்லை. தகுதி வாய்ந்த தேர்வுத்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர் பணி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்வுத்துறை ஊழியர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறுகையில், "இந்த விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தன.

Friday, November 09, 2012

செல்போன் 'சிம் கார்டு' வாங்க புதிய கட்டுப்பாடுகள் அமல்!

செல்போன் 'சிம் கார்டு' வாங்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்போன் சேவை நிறுவனங்களிடமிருந்து சிம்  கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி  வைக்க, மத்திய தொலைதொடர்புத்துறை செல்போன் சேவை இணைப்புகளைப்  பெறுவதற்கு அறிவித்துள்ள புதிய வழிமுறைகள் வருமாறு:

* முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் ப்ரி பெய்ட் மற்றும் சேவைக்கு பின்னர்  பணம் செலுத்துகிற போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்புகளை பெறுவதற்கு  வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால் அதற்கு செல்போன் சேவை  நிறுவனங்களே பொறுப்பு

. * செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்கிற சில்லறை விற்பனையாளர்,  விண்ணப்பதாரரையும், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும்  ஒப்பிட்டுப் பார்த்து, நான் விண்ணப்பதாரரை நேரில் பார்த்தேன், விண்ணப்பத்துடன்  ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தை ஒத்துப் பார்த்தேன் என்று சான்றளிக்க வேண்டும்.

* போலியான ஆவணங்கள் தந்து யாரேனும் செல்போன் சேவை இணைப்பை பெற்று  விட்டனர் என செல்போன் சிம்கார்டு விற்பனையாளர் அறிய வந்தால், இது தொடர்பாக  செல்போன் சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, 15 நாளில் போலீசில்  புகார் செய்து வழக்கு தொடர வேண்டும்.

* சிம் கார்டு வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல்  சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்து, சில்லறை  விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும்.

* சிம் கார்டு இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்போன் சேவை  நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று  சான்றளிக்க வேண்டும்.

* ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி  மற்றொருவர் செல்போன் சிம் கார்டு வாங்கினால், அப்படி செல்போன் சிம்கார்டினை  விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்போன் சேவை நிறுவனம் வழக்கு  தொடர வேண்டும்.

* தவறு செய்கிற சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மீது செல்போன்  சேவை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கத்தவறினால், செல்போன் சேவை நிறுவனங்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGNOU Term end exam time table dec-2012

கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது: ரிசர்வ் வங்கி

தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லை என்றாலும், மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளும் தங்களது கிளை வங்கிகளுக்கும், அதன் ஊழியர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 18ம் தேதி கலந்தாய்வு

் தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தியது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 08, 2012

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவருக்கு வாய்ப்பு

டி.இ.டி., முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், பலர், கடும் மழை காரணமாக, கடந்த மாதம், 31ம் தேதி நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மாவட்ட தலைமை இடங்களில், கடந்த மாதம், 31ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

கடும் மழை காரணமாக, நீண்ட தொலைவில் இருந்ததேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பது குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், நேரடியாக, டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம். அவர்களுக்கு, எவ்வித பிரச்னையும் இல்லை' என, தெரிவித்துள்ளன.

குரூப் - 1 காலி பணியிடம் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

:குரூப்-1 பணியிடங்களில், நிரம்பாமல் உள்ள, 664 காலி இடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. தேர்வாணைய செயலரின் அறிவிப்பு:

குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது.

இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது.இவ்வாறு செயலர் அறிவித்துள்ளார்.