இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 27, 2014

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்-தினகரன்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும். 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட். பதிவு செய்யாமல்  ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் மீண்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை 2-வது பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.  பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்துவருவது வழக்கம்.  ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 ஊட்டியில் துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. மேற்படி தொழில் படிப்புகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.  இதில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும் மாணவ, மாணவியர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப் பதிவு செய்கின்றனர். அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது, பி.எட். படிப்பை ஏற்கெனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கருதி விடுகின்றனர்.  இதனால், பி.எட். படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக, வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது, தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் :

‪#‎கேபினட்‬ அமைச்சர்கள்:

1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.

2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை

3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.

4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.

5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்

6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.

7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.

8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.

9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.

10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.

11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.

12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.

13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.

14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.

15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.

16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.

17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

18.ஜூவல் ஓரம் - பழங்குடியின் விவகாரத்துறை

19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை

20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு

21.ராதா மோகன் சிங்- விவசாயம்

22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி

23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று (26-05-2014)பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இன்று அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

‪#‎இணை‬ அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.

2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்

3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்

4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு

7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.

8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை

9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை

10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.

#இணை அமைச்சர்கள்:

1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை

2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை

3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.

4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.

5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.

6. கிரண் ரிஜிஜு- உள்துறை.

7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.

8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.

9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.

10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.

11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.

12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.

Monday, May 26, 2014

அமைச்சரவை பட்டியல்

அமைச்சரவை பட்டியல் குறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டார். அதன் விவரம்: (பெயரும், அவர்கள் வகித்து வரும் துறைகளும்)

முதல்வர் ஜெயலலிதா-பொதுத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை.

ஓ.பன்னீர்செல்வம்-நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர்தல், பொதுப்பணித் துறை)

நத்தம் ஆர்.விஸ்வநாதன்--மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.

எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.

பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை.

செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

பி.தங்கமணி-தொழில் துறை.

வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை.

வி.மூர்த்தி-பால்வளத் துறை.

எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வேளாண்மைத் துறை.

எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, ஊழல் தடுப்பு.

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

எஸ்.சுந்தரராஜ்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை.

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை.

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.

முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல் தொழில்நுட்பத் துறை.

ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை.

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை.

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை.

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை.

முனுசாமி இடத்தில் யார்? சட்டப் பேரவையிலும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதனுக்கு அடுத்த இடத்தில் கே.பி.முனுசாமி இடம்பெற்றிருந்தார். அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு வைத்திலிங்கம் வந்துள்ளார். வைத்திலிங்கம் வகித்து வந்த நான்காவது இடத்தை, எடப்பாடி பழனிசாமி பிடித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட தொ.கல்வி அலுவலரின் செயல்முறைகள் 994/M4/2014 FLEX board 10*6


SSLC மதிப்பெண் சான்றிதழ் ஜூன் முதல் வாரம் விநியோகம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த 23–ந்தேதி வெளியானது. 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 138 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் மாணவ–மாணவிகள் மதிப்பெண்களை வாரி குவித்தனர்.

499 முதல் மதிப்பெண்ணை 19 மாணவ– மாணவிகள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வினியோகம் செய்யப்படும். 10 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் பிழையின்றி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாணவ–மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தவறு இல்லாமல் பிறந்த தேதி, பெயர், பள்ளியின் பெயர் மற்றும் மாணவரின் புகைப்படம் போன்றவற்றில் எந்த பிழையும் இல்லாமல் பிரிண்ட் செய்யப்படுகிறது.

தற்போது மதிப்பெண் பட்டியல் ஸ்கேனிங் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் கூறும் போது:–

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ஸ்கேனிங் செய்யும் பணி நடந்து வருகிறது. மதிப்பெண் பட்டியலில் சிறு தவறும் ஏற்படாமல் பிரிண்ட் செய்து கொடுக்க முழு கவனத்துடன் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்க அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்றார்.

Sunday, May 25, 2014

ஆகஸ்ட் வரை பழைய பாஸை காண்பித்து பஸ்களில் மாணவர்கள் பயணிக்கலாம்

புதிய பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் பழைய பாஸைக் காண்பித்து பஸ்களில் பயணிக்கலாம் என போக்குவரத்துக்கழகங்கள் அறிவித்துள்ளன. தமிழக அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து போக்குவரத்துக்கழகங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு 2014-15 கல்வியாண்டுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை மாநகர மற்றும் நகர போக்குவரத்துக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 12ஆம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது வெகுக் குறைவாகவே இருப்பதாலும் பல மாவட்டங்களில் பாஸ் தயாரிப்பதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படாததாலும் புதிய பாஸ்களை விரைவாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதால், மாணவர்கள் 2013-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச பாûஸ காண்பித்து பஸ்களில் பயணிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளத

ு. அதன்படி, மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை பழைய பாஸைக் காண்பித்து பஸ்களில் பயணிக்கலாம். இது தொடர்பாக பஸ் நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வரும் கல்வியாண்டிலிருந்து மத்திய அரசு நிதி வழங்கும்

  தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு வரும் கல்வியாண்டிலிருந்து (2014-15) நிதி வழங்க உள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் சமூகரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 25 சதவீத மாணவர்களைச் சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே திருப்பி வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த 2013-14 ஆம் கல்வியாண்டில் மட்டும் 21 ஆயிரத்துக்கும் அதிமான மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், இந்த மாணவர்களுக்கான கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை. இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு திருப்பி வழங்க வேண்டிய கட்டணத் தொகையாக கடந்த ஆண்டு ரூ.25 கோடி மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகை மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டது. ஆனால், இந்தத் தொகையை மாநில அரசுதான் தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டும் என மத்திய அரசு கூறிவந்தது. இதனால், தனியார் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் கட்டணத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, நடப்பாண்டில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்கமாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசே ரூ.25 கோடியை தனியார் பள்ளிகளுக்கு மூன்று மாதங்களில் வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

இப்போது மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட நிதி மூலமாக மத்திய அரசு வழங்கும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் அனைவருக்கும் கல்வித் திட்ட நிதி மூலமாக வரும் கல்வியாண்டிலிருந்து (2014-15) வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு 65 சதவீதம், மாநில அரசு 35 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி வழங்கப்படும். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. இந்தத் தொகையை புதிய அரசு பொறுப்பேற்றதும் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தனர்.

Friday, May 23, 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்- மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக தேர்வு விகிதம்

ஈரோடு -97.88
கன்னியாகுமரி-97.78
நாமக்கல்-96.58
விருதுநகர்-96.55
கோவை-95.6
கிருஷ்ணகிரி-94.58
திருப்பூர்-94.38
தூத்துக்குடி-94.22
சிவகங்கை-93.44
சென்னை-93.42
மதுரை-93.13
ராமநாதபுரம்-93.11
கரூர்-92.71
ஊட்டி-92.69
தஞ்சாவூர்-92.59
திருச்சி-92.45
பெரம்பலூர்-92.33
சேலம்-91.89
திருநெல்வேலி-91.88
தர்மபுரி-91.66
புதுக்கோட்டை-90.48
திண்டுக்கல்-89.84
திருவள்ளூர்-89.19
காஞ்சீபுரம்-89.17
தேனி-87.66
வேலூர்-87.35
அரியலூர்-84.18
திருவாரூர்-84.13
கடலூர்-83.71
விழுப்புரம்-82.28
நாகபபட்டினம்-82.28
திருவண்ணாமலை-77.84
புதுச்சேரி-91.69
 

Thursday, May 22, 2014

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள

   அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களிடம் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பாக பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் படிப்புகள், சட்டப் படிப்புகள், கல்விக் கடன் பெறுவது தொடர்பான விவரங்கள், வேலைவாய்ப்புக்கு உதவும் படிப்புகள், மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள் உள்ளிட்ட விவரங்கள் இந்த வழிகாட்டி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?


   டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது விவரங்களை, ஜூன், 7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது. அறிவிப்பு விவரம்:கடந்த, 2012, ஜூலை 12ம் தேதி, மற்றும் அதே ஆண்டில், அக்டோபர், 14ம் தேதி நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.

எனினும், டி.இ.டி., தகுதி சாறிதழ் கிடைக்காதவர் யாராவது இருந்தால், அவர்கள், தங்களது விவரங்களை, வரும், ஜூன் 7ம் தேதிக்குள், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து, தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும

 
   நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

    இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேவை பட்டியல் தயாரித்து பஸ் பாஸ்கள் அச்சடித்து மீண்டும் மாணவர்களுக்கு வழங்க காலதாமதம் ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாஸ் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியா ண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் வரை 3 மாத காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை அரசு பஸ்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பழைய பஸ் பாஸ் காணாமல் போயிருந்தால், பள்ளி சீருடையில் மாணவர்கள் இருந்தால் அந்த மாணவர்களை அரசு பஸ்கள் கட்டாயம் ஏற்றி செல்ல வேண்டும். பஸ் பாஸ் இல்லை என்பதற்காக எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஏற்றாமல் பஸ்கள் செல்லக்கூடாது என்று போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.