Tuesday, August 27, 2013
Monday, August 26, 2013
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிறைவு பெறாத மாணவர்களுக்கு "சிக்கல்'
. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் ஆன்- லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தவறுகள் ஏற்படாமல் இருக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதன்படி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30.09.1999 க்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே 14 வயது நிறைவு பெறும். இந்த தேதிக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆன்- லைனில் பதிவு செய்ய"சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பின் பிறந்தவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. 01.10.1999 முதல் 31.12.1999 வரை பிறந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களிடம், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதலாம், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பின்பு பிறந்தவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய மாணவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரகம் சென்று அனுமதி பெறுவதற்கு, சென்னைக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.
பல பள்ளிகளில் பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள தேதியை வைத்து ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர். இதில் அந்த மாணவர் பிற்காலத்தில் பணிக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழில் ஒரு தேதியும், மதிப்பெண் சான்றிதழில் வேறு தேதியும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் இன்று தேர்வு
"ராதாகிருஷ்ணன் விருது'க்கு, தகுதி வாய்ந்த 360 ஆசிரியரை தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில் கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி, சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து, தமிழக அரசு, "ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி வருகிறது. விருது, 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, அரசு வழங்குகிறது.
மாநிலத்தில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளி கல்வித் துறை தரப்பில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, இருவர் வீதமும், தொடக்க கல்வித் துறையில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, மூன்று பேர் வீதமும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட வேறு சில துறைகளில் இருந்தும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தத்தில், 360 ஆசிரியர்களுக்கு, வரும் செப்., 5ம் தேதி, விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில், அதிகாரிகள் பரிந்துரை செய்து அனுப்பியுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில் கூடுகிறது
. மாநிலக் குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 360 ஆசிரியரை, தேர்வு செய்ய உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, இந்த வார இறுதிக்குள், அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.செப்., 5ம் தேதி மாலை, சென்னை, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில் நடக்கும் விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், விருதுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித் துறை, மும்முரமாக செய்து வருகிறது.
குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு
குரூப் 4 தேர்வுக்கான விடைகள், தேர்வாணைய இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று முன்தினம், குரூப் 4 தேர்வு நடந்தது. இதில், 12 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், தேர்வாணைய இணையதளத்தில், (www.tnpsc.tn. gov.in) நேற்று வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபனையை, ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது.
Sunday, August 25, 2013
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம் ஏற்படுகிறது. இதுகுறித்து, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, தமிழக நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், எட்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட அளவில் தினமும், 60 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்களுடன், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, பிரசார வழிகாட்டு பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், வகுப்பறைகளில், மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட உள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன்
தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.
Saturday, August 24, 2013
குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் அல்லது டிசம்பரில் வெளியீடு
குரூப்–4 தேர்வில் பொதுஅறிவில் இருந்து 100 கேள்விகளும், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் (மொத்தம் 200 கேள்விகள்) கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 1½ மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 300. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே வேலை உறுதி. காரணம் குரூப்–4 தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது.
தேர்வு முடிந்த ஓரிரு நாளில் வினாக்களுக்கான ’கீ ஆன்சர்’ டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது தவறான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டி.என்.பி.எஸ்.சி.யில் முறையிடலாம். டி.என்.பி.எஸ்.சி.யின் வருடாந்திர காலஅட்டவணையின்படி, தேர்வு முடிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்பட வேண்டும். தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் தேர்வு முடிவு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படலாம்.
Group IV 5566 posts
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, இன்று, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 14 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வு என்பதால், டி.என்.பி.எஸ்.சி., விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இளநிலை உதவியாளர், 3,531 பேர்; வரி தண்டலர், 19; தட்டச்சர், 1,738; சுருக்கெழுத்து தட்டச்சர், 242; நில அளவர், 6; வரைவாளர், 30 என, 5,566 காலிப் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், இன்று காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கிறது.
14 லட்சம் பேர்: இதற்காக, 244 மையங்களில், 4,755 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், 17 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளத
. தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், பெயர் திருத்தம், இன்ஷியல் திருத்தம் மற்றும் ஜாதி திருத்தம் உள்ளிட்ட திருத்தம் கோரும் மனுக்கள், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில், தினந்தோறும் ஏராளமாக குவிந்து வருகின்றன. இவற்றை தவிர்க்கும் வகையில், பள்ளியிலேயே நடவடிக்கை எடுக்க, தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி சேர்க்கையின்போது, மாணவர்களின் பெற்றோரால், சரியான விவரம் கொடுக்கப்பட்டு, பள்ளி பதிவில் தவறு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, திருத்தம் மேற்கொள்ளப்படும். இதில் தவறு ஏற்படாத வகையில், 10ம் வகுப்பு பெயர் பட்டியல் அனுப்பப்படும் முன், அனைத்து விவரங்களையும், தலைமை ஆசிரியர் சரிபார்க்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன், பிறந்த தேதி, பெயர், இன்ஷியல், ஜாதி திருத்தம் கோரும் மனுவுக்கு, உரிய சான்றிதழ்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியரே, திருத்தம் மேற்கொள்ளலாம்.
ஆனால், எக்காரணம் கொண்டும், 10ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் சான்று பெற்ற பின், திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது. நீதிமன்றங்களில், ஒரு தலைபட்ச தீர்ப்பின் அடிப்படையில், திருத்தம் கோரும் விண்ணப்பங்களை பரிந்துரைக்கக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு பெற்றாலும், பள்ளிக்கல்வி இயக்குனரின் அனுமதி பெறாமல், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட பள்ளி ஆவணங்களில் எவ்வித திருத்தமும், தலைமை ஆசிரியர் மேற்கொள்ளக் கூடாது. பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால், பிறந்த தேதி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அசல் மதிப்பெண் சான்று, முதல் வகுப்பு முதல் பயின்ற பதிவுத்தாள், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், எஸ்.எஸ்.எல்.சி., உறுதிமொழிச் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்டவற்றுடன், பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் வழியாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
பி.எட் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை பல்வேறு பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலிங் நிகழ்ச்சி, சென்னையிலுள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், ஒற்றை சாளர முறையில் நடைபெறுகிறது..
ஆகஸ்ட் 30 - மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான கவுன்சிலிங்.
ஆகஸ்ட் 31 - இயற்பியல், ஹோம் சயின்ஸ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 1 - கணிதம் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 2 - விலங்கியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங். செப்டம்பர் 3 - ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 4 - வேதியியல், கணிப்பொறி அறிவியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்
. செப்டம்பர் 5 - தாவரவியல் பாடத்திற்கான கவுன்சிலிங்.
Friday, August 23, 2013
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
. அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என இந்த ஆண்டு 3,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அதோடு, ஏற்கெனவே ஆங்கில வழி வகுப்புகள் உள்ள 320 பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர பல்வேறு புதிய திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வகுத்துள்ளது
. முதல் கட்டமாக, இந்த மாணவர்களுக்கு ஆங்கில வழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.24) பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான எளிய முறைகள் இந்தப் பயிற்சியின்போது கற்றுத்தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில வழி வகுப்புகளைப் பொருத்தவரை ஆங்கில எழுத்துகள், வார்த்தைகளோடு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
. வெறும் கரும்பலகையின் மூலம் மட்டுமே ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் மூலமும் மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், "டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது
. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார். மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர், கார்மேகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக மாற்றப்பட்டார். தற்போது, இந்த மாற்றங்கள், "வாபஸ்' பெறப்பட்டு உள்ளன. ஏற்கனவே இருந்த இடங்களில், இருவரும் தொடர்ந்து பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக இருந்த உமா, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டிருந்தார். இவரின் பணியிட மாறுதலும் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து, டி.ஆர்.பி.,யில் பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
. வர்மா மற்றும் உமா இருவரும், டி.ஆர்.பி.,யில் நல்ல அனுபவம் பெற்றிருப்பதால், அவர்களை, தொடர்ந்து டி.ஆர்.பி., பணியில் பயன்படுத்திக் கொள்வதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ராமராஜ், தற்போது, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தினசரி வருகை பதிவுகளை, ஆன்-லைன் மூலம், பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு, விவரம் கேட்பு, சேமிக்கும் தகவல், விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்போது, ஆன்-லைன் மூலமாகவே பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டில், ஒவ்வொரு பள்ளியிலும், படிக்கும் மாணவ, மாணவியர், அங்குள்ள கட்டட மற்றும் இட வசதி, உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணி நடந்தது.
இதன் அடுத்த கட்டமாக, தற்போது, பள்ளி துவங்கிய உடன் எடுக்கப்படும், மாணவர்கள் தினசரி வருகை பதிவுகளை, அன்றன்றே காலை, 10:00 மணிக்குள், ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தங்களது, தினசரி வருகையை, ஆன்-லைன் மூலம் பதிவு செய்கின்றன. இதன் மூலம், தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும், பள்ளியின் வருகையை வகுப்பு வாரியாக தெரிந்து கொள்ள முடியும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது
: வருகை பதிவேடுகளை, நோட்டுகளில் மட்டும் பதிவு செய்யும் போது, தலைமை ஆசிரியர்களுக்கு தகுந்தது போல், பல மாற்றங்களும் இருக்கும். மாணவர் எண்ணிக்கையை, அதிகமாக காட்டுபவர்களும் உண்டு. அதே போல், வேண்டப்பட்ட ஆசிரியர்கள் தாமதமாக வந்தாலோ, வராமல் இருந்தாலோ, அவர்களுக்கு வருகை பதிவு செய்வதும் நடந்ததுண்டு. ஆனால், தற்போது, ஆன்-லைன் மூலம் காலை, 10:30 மணிக்குள் வருகை பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின், திடீர் ஆய்வுக்கு அதிகாரிகள் வரும் பட்சத்தில், அதில் மாற்ற முடியாது என்பதால், மாட்டிக் கொள்ள நேரிடும். இதனால், முறைகேடு செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு
பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரும் சேர்த்து, பதிவு செய்யப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை, பள்ளிக்கு வரவழைத்து, பெயர் பட்டியல்கள் தயாரிப்பதற்காக, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவர் பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, ரேஷன் கார்டு எண், ஆதார் அடையாள அட்டை எண் உட்பட, 11 விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் தவறு ஏற்படாமல் இருக்க, மாணவரின் தந்தை, வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரின் கையெழுத்துடன், இந்தாண்டு புதியதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரையும், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கேட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி
""டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை,'' என, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார். இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய விவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடி கும்பல், போலியான கேள்விகளை தயாரித்து, தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும், டி.ஆர்.பி.,க்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும். முறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு விடைத்தாள்கள், "ஸ்கேன்' செய்யும் பணி, நேற்று துவங்கியது. டி.இ.டி., தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம்.
விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, விபு நய்யர் கூறினார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கேள்விக்குறி
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டம் இருக்கும் வரை, அதன் நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படும்.
எனவே, அதுவரை, பட்டதாரி ஆசிரியர்களின் சம்பள கணக்கு, தற்காலிக நிலையில் இருக்கும். திட்டம் முடிந்தபின், பொது சம்பள கணக்கிற்கு, ஆசிரியர்கள் மாற்றப்படுவர். இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., நிதியில் இருந்து, சம்பளம் வழங்குவதற்கு வசதியாக, பள்ளி கல்வித் துறை சார்பில், அரசாணை பிறப்பிக்கப்படும். ஏற்கனவே வெளியிட்ட அரசாணை, 2011 உடன் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அரசாணை இல்லாமல், ஒன்றரை ஆண்டுகளாக, ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், அரசாணை இல்லாததை காரணம் காட்டி, "நடப்பு மாதத்திற்கு, சம்பளம் வழங்க முடியாது' என, ஈரோடு மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். இதை, சார் கருவூல அதிகாரிகளும், தெரிவித்துள்ளனர். இதனால், அம்மாவட்டத்தில் பணிபுரியும், 2,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல், பல்வேறு மாவட்டங்களில், "சம்பளம் வழங்க முடியாது' என, கருவூல அதிகாரிகள், கை விரித்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரமண்ட் பேட்ரிக் தெரிவித்தார். பேட்ரிக், மேலும் கூறுகையில், "
"இந்த பிரச்னையை, தொடக்க கல்வித் துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஓரிரு நாளில், பிரச்னையை தீர்ப்பதாக, இயக்குனர் உறுதி அளித்துள்ளார்,'' என, தெரிவித்தார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவத்தின் சார்பில் முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட இருக்கிறது.
இதில், மாணவ, மாணவிகள் பாடங்களில் பொருள்களை எளிதாக புரிந்து கொள்ளும், அதிகம மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற வைக்கும் வகையிலும், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இப்பயிற்சி வகுப்பு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஒவ்வொரு பாடங்களிலும் தலா இரண்டு நாள்கள் ஆக.26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து செப்-11ம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.