இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 26, 2013

கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்று உத்தரவு வந்ததா? கல்லூரி கல்வி இயக்குனர் விளக்கம் -

   கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். கலை, அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. மொத்தத்தில் 633 கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்தும் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கல்லூரி கல்வி இயக்குனரகம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 633 கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவ–மாணவிகள் கலை, அறிவியல் படிப்பை படிக்கிறார்கள். ஆங்கில வழியில் தேர்வு இந்த மாணவர்கள் பட்டப்படிப்பை ஆங்கில வழியில் படித்தாலும் தேர்வை ஆங்கில வழியிலும் எழுதலாம். தமிழ் வழியிலும் எழுதலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் ஆங்கில பேச்சாற்றல் இல்லாததால் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

இதன் காரணமாக ஆங்கில வழியில் மட்டுமே மாணவர்கள் தேர்வை எழுத வேண்டும் என்றும், அவர்களுக்கு கொடுக்கப்படும் அசைன்மென்ட்டையும் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்றும், அதை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா? என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

அரசு உத்தரவு எதுவும் வரவில்லை கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்றோ ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்றோ இதுவரை கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு அரசிடம் இருந்து உத்தரவு எதுவும் வரவில்லை. ஆங்கில பேச்சாற்றல் இருந்தால் எளிதில் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பது குறித்த கருத்து திட்டக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறு கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

Saturday, May 25, 2013

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ; 28, 29ம்தேதிகளில் நடக்கிறது

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும், 28ம்தேதி, மாவட்டங்களுக்குள், பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது. மறுநாள், 29ம்தேதி, மாவட்டத்தில் இருந்து,வேறு மாவட்டங்களுக்கு, பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கும

். இரு நாட்களிலும், 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர் ஆகி@யாருக்கும், இ@ததேதிகளில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. "ஆன்-லைன்' வழியில், இந்த கலந்தாய்வில் பங்@கற்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு செல்லவேண்டும் எனவும், கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுவதும் 7.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலை தேர்வை எழுத உள்ளனர். மத்திய அரசு பணியா ளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்க்காணல் தேர்வு என 3 கட்ட தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின் றனர். இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 5ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. ஆன், லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்தது. நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 7.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் விண் ணப்பித்துள்ளனர்.

இந் நிலையில், சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 45 முக்கிய நகரங்களில் 2,500க்கும் மேற்பட்ட மையங்களிலும், தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் 96 மையத்திலும் இன்று நடைபெறுகிறது. யுபிஎஸ்சி வழக்கமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் காலி பணியிடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வை நடத்து கிறது. ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக யுபிஎஸ்சி ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வுடன், ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப்பணி தேர்வையும் நடத்துகிறது.

ஜூன் 12ம் தேதி கடைசி நாள் தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு நாளை விண்ணப்பம் விநியோகம்

  தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு நாளை (27ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு 2013,14ம் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் நாளை  முதல் ஜூன் மாதம் 12ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான கட்டணம் ரூ.250. இணையதளம் மூலம் ஒற்றைசாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மை கல்வி அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்ட மையத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். அப்போது தமிழகத்தில் எந்த ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கலாம். கல்வி தகுதி மேல்நிலை தேர்வில் குறைந்தபட்சம் 1200க்கு 540 மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆதி திராவிடர், பழங்குடி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். விண்ணப்பதாரர் தொடக்க கல்வி பட்டய படிப்பில் எந்த மொழி பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கின்றாரோ அம்மொழியை பிளஸ் 2 வரை மொழிபாடத்தில் ஒன்றிலோ அல்லது இரண்டிலோ பயின்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஒப்படைக்க வரும் ஜூன் மாதம் 12ம் தேதி கடைசி நாள் ஆகும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.்

Friday, May 24, 2013

தொடக்கக்கல்வி பட்டயபடிப்பு சாளர முறை சேர்க்கை 2013-14

#விண்ணப்பங்கள்  DIET&ALL CEO Office 27-5-13 காலை 10 மணி முதல் 12-6-13 மாலை 5மணி வரை. ஞாயிற்று கிழமை தவிர

#விண்ணப்பகட்டணம் 500,, எஸ்.சி,எஸ்.டி 250
#குறைந்தபட்சம் 540/1200
மதிப்பெண்கள்

#வயது:31-7-2013 அதிகபட்சம் 30 வயது
#விண்ணப்பிக்க கடைசி நாள் 12-6-13மாலை 5 மணிக்குள்

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதி பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி வளாகங்களிலேயே, இணைய தளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழகத்தில், இந்த ஆண்டு, 8.53 லட்சம், மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதினர். பள்ளி மூலமாக தேர்வு எழுதியவர்களில், 7.4 லட்சம் மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளில், தங்களின் கல்வித்தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர், தங்கள் கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பக இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.மாணவ, மாணவியர், மதிப்பெண் சான்றிதழ் பெற, பள்ளிக்கு செல்லும்போது, தங்களது குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை, ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, உடன் எடுத்து செல்ல வேண்டும்.புதிதாக பதிவு செய்வோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, பதிவு செய்யும் நாளிலேயே, உடனுக்குடன் வழங்கப்படும்.

மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், தங்களுடைய கல்வித் தகுதியை, பள்ளிகளில் பதிவு செய்த பின், தங்களுடைய முன்னுரிமையை, வேறு ஒரு வேலைநாளில், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 27ம் தேதி, பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர், 27ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து, வேலைவாய்ப்பு அடை யாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும், மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு, 27ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்

196 தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 27-ல் பணி நியமன கலந்தாய்வு

  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட தாவரவியல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 196 பேருக்கு திங்கள்கிழமை (மே 27) பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட 310 இளநிலை உதவியாளர்களுக்கும் ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,800-க்கும் அதிகமானோரைத் தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாவரவியல் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தாவரவியல் ஆசிரியர்கள் 196 பேர் கொண்ட பட்டியல் பள்ளிக் கல்வித் துறையிடம் அண்மையில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆன்-லைன் மூலம் நடைபெறும் பணி நியமன கலந்தாய்வில் அவர்கள் பங்கேற்று, பணியிடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

10 ஆயிரம் பட்டதாரி  ஆசிரியர்களுக்கு மே 28, 29-ல் இடமாறுதல் கலந்தாய்வு

  தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 28, 29 ஆகிய தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக, இந்தக் கலந்தாய்வு வெள்ளி (மே 24), சனிக்கிழமைகளில் (மே 25) நடைபெறுவதாக இருந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதைத் தொடர்ந்து இந்தக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, மே 28-ஆம் தேதி மாவட்டத்திற்குள் இடமாறுதல் கோரியவர்களுக்காகவும், மே 29-ஆம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கோரியவர்களுக்காகவும் கலந்தாய்வு நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் தமிழகத்தில் அதிகப் பணியிடங்கள் காலியில்லை எனத் தெரிகிறது. ஏற்கெனவே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளன. உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவற்றுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு பெரும்பாலானோர் வரவில்லை. தமிழகத்தில் சென்னை உள்பட 7 இடங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.  2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.

காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்புவதற்காக மீதமுள்ள பணிநாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் மற்றொரு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களை தமிழில் படித்தவர்களுக்காக நடைபெற்ற இந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.  தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், ஆசிரியர் கல்வி பட்டம் ஆகியவற்றை முற்றிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்,  

ஆனால், பெரும்பாலான தேர்வர்கள் முற்றிலும் தமிழ் வழியில் படிக்காமலேயே தமிழ் வழியில் முன்னுரிமை கோரியதாகக் கூறப்படுகிறது. ஆகவேதான் சான்றிதழ் சரிபார்ப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்தும், இளநிலை, முதுநிலைப் பட்டத்துக்கு  கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்தும், ஆசிரியர் கல்விப் பட்டம் (பி.எட்.) பெற்றவர்கள் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்தும் சான்றிதழ்களைப் பெற்றுவர வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தச் சான்றிதழ்களைப் பெற முடியாததாலும் பெரும்பாலானோர் இதில் பங்கேற்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.  மே 27-ல் ஒரு வாய்ப்பு: தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்கெனவே பங்கேற்றவர்கள், இப்போது உரிய சான்றிதழ்களைப் பெற்றிருந்தால், அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை (மே 27) நேரில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம

் தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து விட்ட நிலையிலும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையிலும் மாணவ–மாணவிகள் குறிப்பாக, மாணவிகள் பெரிதும் விரும்பும் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. விண்ணப்பம் எப்போது வழங்கப்படும்? என்பதும் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், மருத்துவ தேர்வுக்குழுவின் செயலாளருமான டாக்டர் சுகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

– தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய 4 இடங்களில் அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 50 சதவீதம் மொத்தம் 200 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்கள் இருக்கின்றன. இவை தவிர, 145 தனியார் நர்சிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 5,087 இடங்கள் கிடைக்கும். கூடுதல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும். டிப்ளமோ நர்சிங் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 23 அரசு நர்சிங் கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 2–வது வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறினார்.

பிளஸ்–2 வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு 27–ந் தேதி வெளியாகிறது

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான பிளஸ்–2 தேர்வு முடிவு வருகிற 27–ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ. அதிகாரி தெரிவித்துள்ளார். மாணவர்களும், பள்ளிகளும் உடனுக்குடன் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை வாரியம் செய்துள்ளது.இந்த ஆண்டும் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை உதவியுடன் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. பள்ளிகள் தங்கள் கோடு மற்றும் இ–மெயில் முகவரியை கீழ்க்கண்ட இணைய தளங்களில் பதிவு செய்து கொண்டால் அவர்களுக்கு அந்த பள்ளிக்கான மொத்த முடிவும் கிடைத்துவிடும். இணையதளங்கள் விவரம் வருமாறு:– www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in

DGE:Practical exam forms for SSLC 2013-14

Thursday, May 23, 2013

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு விவகாரம் * அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை

  தொடக்க கல்வித் துறையில், பதவி உயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர் நிலை குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித் துறை, அறிக்கை சமர்ப்பித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்று, தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற வழியில்லாமல், பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். ஒரே தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களில், பள்ளி கல்வித் துறையில் பணியாற்றுபவர்கள், முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என, பல பதவி உயர்வுகளை பெறுகின்றனர். அதே தகுதியுடன், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியைத் தவிர, வேறு எந்த பதவி உயர்வும் பெற முடிவதில்லை.

நடுநிலைப் பள்ளிகள், அதிக எண்ணிக்கையில், தரம் உயர்த்தப்படுவதால், இருக்கும் ஒரே பதவி உயர்வும், பாதிப்பதாக புலம்பி வருகின்றனர். "தினமலர்' செய்தி எதிரொலி ; இந்நிலை குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று, விரிவாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, இந்த பிரச்னை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பள்ளி கல்வித் துறை, விரிவான அறிக்கையை, நேற்று சமர்ப்பித்தது. இந்த பிரச்னை தீர்வதற்கு, ஒரே ஒரு வழி இருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு, டி.ஆர்.பி., மூலம் நடக்கிறது. ஆனால், பணி நியமனம், பள்ளி கல்வித் துறை, தொடக்க கல்வித் துறை என, இரு துறைகளில் நடக்கிறது. இதை தவிர்த்து, டி.ஆர்.பி., தேர்வு அடிப்படையில், ஒரே பணி நியமனமாக நடந்தால், பிரச்னை வராது என, கல்வித் துறை தெரிவிக்கிறது.

எந்த துறையில் பணியாற்றினாலும், டி.ஆர்.பி., தேர்வு வரிசை அடிப்படையில், பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்யலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து, தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும், தங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

97 அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் ஆங்கில வழி கல்வி

  திருப்பூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் 97 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு வருகிற கல்வியாண்டில் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்று ம் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இரு ந்தது. இதைத்தொ டர்ந்து பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்கில வழி கல்வி தொடங்க வசதிகள் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து அனுப்புமாறு அறிவுறுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க வசதி இருப்பதாக கருதி தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 97 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொ டங்க பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி திருப்பூர் கல்வி மாவட்டத்தில் அவி னாசி ஒன்றியத்தில் 19 பள்ளி கள், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 10, தாராபுரம் ஒன்றியத்தில் 5, வெள்ளகோவில் ஒன்றியத்தில் 6, காங்கயம் ஒன்றியத்தில் 4, திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் ஒரு பள்ளி, திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் 26,

பல்லடம் ஒன்றியத்தில் ஒரு பள்ளி, உடுமலை ஒன்றியத்தில் 9, பொங்கலூர் ஒன்றியத்தில் 3, மடத்துக்குளம் ஒன்றியத்தில் 6, குடிமங்கலம் ஒன்றியத்தில் 6, மூலனூர் ஒன்றியத்தில் ஒரு பள்ளி என்று மொ த்தம் 97 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகிற கல்வியாண்டில் 1ம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்க ஏற்பாடு ந¬ டபெற்று வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.