இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 24, 2012

அகவிலைப்படி 7% உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்!

  டீசல் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் போன்றவற்றால் விலைவாசி   அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7  சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

டீசல் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் போன்றவற்றால் அத்தியாவசிய பொருட்களின்   விலை அதிகம் உயர்ந்து விட்டதால் அகவிலைப்படியை கணிசமான அளவுக்கு உயர்த்த   வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 65 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு   வருகிறது.இந்நிலையில் இதை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய   அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படியை 7 சதவீதம்   உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த ஒப்புதல்  அளிக்கப்பட்டது. அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை   சம்பளத்தில் இனி 75 சதவீதத்தை அகவிலைப்படியாக பெறுவார்கள். இந்த உயர்வு   கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும்.   அகவிலைப்படி உயர்வு காரணமாக 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும்,ஓய்வூதிய   தாரர்களும் பயன்பெறுவார்கள்.

Sunday, September 23, 2012

என்.எஸ்.எஸ்.,மாணவர்களை வேலை வாங்கக் கூடாது ஆசிரியர்களுக்கு உத்தரவு

என்.எஸ்.எஸ்., முகாம்களால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு இடையூறு கூடாது, என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இளைஞர் விவகாரம், விளையாட்டு துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்படுத்தப்படுகிறது. கிராமத்திலோ, புறநகர் பகுதியிலோ இத்திட்ட முகாம்களில் தூய்மை படுத்துதல், மரம் வளர்ப்பு,மேடை நிகழ்ச்சிகள், சமூக பிரச்னைகள், கல்வி, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பல வேலைகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு முகாமுக்கு 25 மாணவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக, ஒரு பள்ளிக்கு 11,250 ரூபாய், நிதி வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், தற்போது முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, முள்வெட்டுதல், புல் வெட்டுதல், கிராமங்களை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்யக் கூடாது. அதற்கென நூறுநாள் திட்ட பயனாளிகள் உள்ளனர். அவர்களின் வேலையை கெடுக்கும் வகையில், கிராம வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. பெரும்பாலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

என்.எஸ்.எஸ்., ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், நடத்தப்படும் முகாமுக்குரிய ரூபாய், அந்த கல்வியாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வந்து விடும். ஆனால், கடந்த ஆண்டு செலவழித்த நிதி இதுவரை வரவில்லை. கேட்டால், முறையான பதிலும், இல்லை. வேறு வழியின்றி கையில் உள்ள பணத்தை போட்டு, இந்த ஆண்டு முகாம் நடத்தும் நிலை உள்ளது, என்றார்.

Saturday, September 22, 2012

டி.இ.டி., மறுதேர்வுக்கு 6 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: டி.ஆர்.பி., தலைவர் தகவல்  

""டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதியவர்களும் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆறு லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளன,'' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, அக்., 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதியவர்கள் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, நாளை முதல், 28ம் தேதி மாலை வரை, 32 மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 6 லட்சம் விண்ணப்பங்களை, தயாராக வைத்துள்ளோம். எனவே, விண்ணப்பங்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் வராது;
அனைவரும், எவ்வித பிரச்னையும் இன்றி விண்ணப்பிக்கலாம்.

நவம்பரில் முடிவு: மறுதேர்வு முடிவு உள்ளிட்ட அனைத்து இறுதிக்கட்டப் பணிகளையும், நவ., 15 க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மறுதேர்வு நடப்பது, அக்., 14 ல், ஞாயிற்றுக் கிழமை. எனவே, தேவையான அளவிற்கு, தேர்வு மையங்களை அமைப்பதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. கடந்த, 6 மாதங்களில், 9 தேர்வுகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். குறைந்த ஊழியர்கள் இருந்தாலும், பிரச்னை இல்லாமல், பல லட்சம் விண்ணப்பங்களை கையாள்வது, எங்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது.

தகுதியிழந்தவர் 202 பேர்: ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். எனினும், சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின், இறுதியாக, 2,209 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். 37 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. எனினும், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். 202 பேர், தகுதியிழந்துள்ளனர். உரிய சான்றிதழ்கள் இல்லாதது, குறிப்பிட்ட பாடத்தில் கல்வித் தகுதி பெறாதவர்கள் என, பல்வேறு காரணங்களால், இவர்கள் தகுதியிழந்துள்ளனர். கையெழுத்தை மாற்றிப் போட்ட விவகாரத்தில், இருவர், ஐந்து ஆண்டுகளுக்கு, டி.ஆர்.பி., தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சவுத்ரி கூறினார்.

382 பேர், "லோ மார்க்': ஏற்கனவே நடந்த, டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வில், 382 பேர், மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளனர்.

முதல்தாள் தேர்வு: ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-75 4 முதல், 9 வரை பெற்றவர்கள்-23 3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-52

இரண்டாம் தாள் தேர்வு: ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-116 4 முதல், 9 வரை பெற்றவர்கள்-40 3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-76

மாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு  

பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவு:

பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து 1.50 நிமிடம், கொடி ஏற்றம், கொடி வணக்கம் 2 நிமிடம், கொடிப்பாடல் 2 நிமிடம், உறுதிமொழி 4 நிமிடம், சர்வசமயவழிபாடு ஒரு நிமிடம், திருக்குறள் மற்றும் விளக்கம் 2 நிமிடம்,தமிழ், ஆங்கில செய்தி வாசிப்பு 4 நிமிடம், இன்றைய சிந்தனை, பழமொழி, பொது அறிவு 2 நிமிடம், பிறந்தநாள் வாழ்த்து அரை நிமிடம் என இருக்க வேண்டும்.

வகுப்பறையில் நடக்கும் வழிபாட்டில், தினமும் ஒரு மாணவர், தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும். இதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். வாரத்தின் இறுதி நாளில் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம் ,மாணவர்கள் பன்முகத்திறனை வெளிப்படுத்தும், விதமாக இருக்க வேண்டும். இதில் ,பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை, மனக்கணக்கு, பொன் மொழிகள், பழமொழிகள், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதை, அனைத்து அரசு உயர்நிலை, மேல் நிலை, நடுநிலை, மாநகாரட்சி, நகராட்சி, ஆங்கிலோ இண்டியன், மெட்ரிக்., பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள்: தேர்ச்சி பெற்றவர்கள் "கிலி'  

   டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே, "கிலி' அடைந்துள்ளனர். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும், அக்., 3ம் தேதி, மறு தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கக்கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே. பணி நியமனம் செய்வதற்கு, இதுவே இறுதித் தேர்வு கிடையாது.

எனவே, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கு தனி வழிமுறைகளை வகுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

டி.ஆர்.பி., முடிவு: "மறுதேர்வில், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனால், அக்.,3ல் நடக்க இருந்த தேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது' என்ற முடிவை, மனுவாக, டி.ஆர்.பி., சமர்ப்பித்தது. அதேபோல், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், நான்குபேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து, அரசு எடுத்துள்ள முடிவையும், மனுவாக டி.ஆர்.பி., சமர்ப்பித்தது. இதை ஏற்று, நேற்று முன்தினம், ஐகோர்ட் உத்தரவை பிறப்பித்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு, அடுத்தவாரம் சென்னையில் கூடி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்கவுள்ளது.

தேர்ச்சி பெற்றவர் "கிலி': குழு எடுக்கும் முடிவை, அரசுக்கு தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும். குழு, எந்த வகையான வழிமுறைகளை உருவாக்கப்போகிறது என, தெரியாமல், தேர்ச்சி பெற்றவர்களும், இனி தேர்வை எழுதப்போகும் தேர்வர்களும், "கிலி' அடைந்துள்ளனர். நேர்முகத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கு தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுமா என, தெரியவில்லை. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் என்ற முறை வந்தால், அது முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே, உயர்மட்டக்குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கப்போகிறது என்பதை அறிய, தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஐ.டி.ஐ மாணவர்களுக்கு கல்வித் தொகை ரூ 500 ஆக உயர்வு

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாததால் நடவடிக்கை

  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் இத்தேர்வை எழுதினர்.   இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இதையடுத்து மறுதேர்வு நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்தது.   அக்டோபர் 3-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத காலஅவகாசத்தை 3 மணி நேரமாக நீட்டிப்பு செய்தது. தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் இந்த தேர்வை தேர்வு கட்டணம் செலுத்தாமல் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமின்றி புதிதாக விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  

இதை ஏற்று தமிழக அரசு சார்பில் தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தேர்வை அக்டோபர் 3-ந்தேதிக்கு பதிலாக அக்டோபர் 14-ந்தேதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.   இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித்சவுத்ரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஐகோர்ட்டு அறிவுரையின்படி புதிதாக தேர்வு எழுதுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். போட்டி பலமாக இருந்தால் தரமான ஆசிரியர்களை தேர்வு செய்யலாம், அந்த அடிப்படையில் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பதாரர்களுக்கு 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.   அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி பெற வேண்டும். விண்ணப்பிக்க 28-ந்தேதி கடைசிநாள். தேர்வு கட்டணம் எஸ்.சி.எஸ்.டி.பிரிவனருக்கு ரூ.250-ம், இதர பிரிவினருக்கு ரூ.500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும்.  

ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 2448 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதற்கு 37 பேர் வரவில்லை. எஞ்சிய 2411 பேரில் 202 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை. மேலும் பலர் 2 பட்டங்களை பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   மீதமுள்ள 2209 பேரை பணியில் அமர்த்துவது குறித்து ஐகோர்ட்டு அறிவுரையின்படி கமிட்டி ஒன்று அமைக்கப்படுகிறது. பள்ளி கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில் பள்ளி கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக்கல்வி இயக்குனர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த வாரம் கூடுகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2209 ஆசிரியர்களை பணியில் எவ்வாறு நியமிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.  

Friday, September 21, 2012

அரசின் கட்டண நிர்ணயம், சி.பி.எஸ்.சி., பள்ளிக்கும் பொருந்தும்-

   "தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, தமிழக அரசு கடந்த, 2009ம் ஆண்டு, கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தை இயற்றியது. நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, தமிழகத்தில் உள்ள, 10,934 தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை, கடந்த, 2010ம் ஆண்டு நிர்ணயித்தது. இதை எதிர்த்து, 6,400 பள்ளிகள், மேல் முறையீடு செய்தன. மாநில அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் முறையிட்டன. இதை நிராகரித்த, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான, புதிய கட்டண நிர்ணயக் குழு, மேல் முறையீடு செய்த, 6,400 பள்ளிகளுக்குமான புதிய கட்டணத்தை நிர்ணயித்தது.

சென்னை திருவொற்றியூர் கவிபாரதி வித்யாலயம் பள்ளி உள்ளிட்ட சில, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், இதனை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தன. அம்மனுக்களில், "மாநில அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய பின், சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய விதிகளுக்கு உட்பட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் சட்டத்தில் குறிப்பிடும் தனியார் பள்ளிகள் என்பது இங்குள்ள நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழக அரசின் இந்த சட்டம் சி.பி.எஸ்.இ., பள்ளிகளையோ அல்லது ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையோ கட்டுப்படுத்தாது&' என்று கூறப்பட்டது. இவை மீதான விசாரணை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பில், தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்று மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தில் குறிப்பிடப்படும் தனியார் பள்ளிகள் என்ற வரையறை, மாநில எல்லைக்குள் செயல்படும் சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்.

அந்த சட்டத்தின்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, 25 சதவீத மாணவர்களை சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, அந்தப் பள்ளிகளுக்கு மாநில அரசு வழங்குகிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரமும் மாநில அரசுக்கு நிச்சயமாக உள்ளது. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கும் உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தற்போது பி.எட்., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

   ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமின்றி தற்போது பி.எட்., படிப்பை புதிதாக படித்தவர்களும் தேர்வெழுதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக பி.எட்., படித்தவர்களும் தேர்வெழத அனுமதி அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். அதன்படி மனுக்கள் நேற்று விசாரனைக்கு வந்தது. இந்த கோரிக்கை குறித்து  ஜூலை மாதத்திற்குப் பின் பி.எட்., படிப்பை முடித்தவர்களும் இத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பதாரர்கள் செப்.,24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கேற்ப ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி மாற்றி அமைக்கப்படுவதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 3ம் தேதி நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இது அக்டோபர் 14ம் தேதிக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

உடம்பை உடைக்கும் புத்தக பை  -Dinamalar Article

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுமை, அங்கு நடத்தப்படும் பாடம் மட்டுமல்ல. அவர்கள் சுமந்து செல்லும் புத்தக பையும் தான். காலையில், புத்தக பையை மாட்டிக்கொண்டு பள்ளி செல்லும் குழந்தையை பார்த்தால் ஒரு நிமிடம் நின்று அவர்களை பார்க்கத் தோன்றும். அந்தளவு அழகாக இருக்கும். குழந்தை, பெரிய பையை கொண்டு செல்கிறார்கள் என சில பெற்றோரும் பெருமையாக நினைக்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? அளவுக்கு அதிகமான பாடப் புத்தகங்களை சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் செய்வோர், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் ஆகியோர் அதிக எடை கொண்ட பையை சுமந்து செல்கின்றனர். இவர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி, தண்டுவடம் பாதிப்பு, கூன் விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் தொகையில் 40 - 80 சதவீதம் பேருக்கு முதுகுவலி பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிச் சுமை, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல், உடல் உழைப்பு இல்லாமை, எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களாலும் இன்றைய இளைஞர்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்.

எங்கு பாதிப்பு அதிகம்:

இது குறித்து பெங்களூரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : "குழந்தைகள் சுமக்கும் "பை'களால் கழுத்து மற்றும் முதுகில் மேல் பகுதியில் கடும் வலி உண்டாகிறது. முதுகின் மேல் பகுதி (40 சதவீதம்), கழுத்து ( 27 சதவீதம்), தோள் பட்டை ( 20 சதவீதம்), முன் கை மணிக்கட்டு (7 சதவீதம்), முதுகின் கீழ் பகுதி (6 சதவீதம்)யில் வலி உண்டாகிறது'. இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க, தேவையான புத்தகங்களை மட்டும் குழந்தைகள் எடுத்துச் செல்ல ஆசிரியர்கள் அறுவுறுத்த வேண்டும். சில பள்ளிகளில் அனைத்து புத்தகங்களையும் எடுத்துவரச் சொல்கின்றன. இதற்கு பதில், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கான "லாக்கர்களை' ஏற்டுத்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு:

பைக்கில் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தால் பைகளை தோளில் தொங்க விடாமல், பைக்கின் முன்பகுதியில் வைத்துச் செல்லலாம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ கூடாது. இதற்கு பதில், சிறிது நேரம் ஓய்வு அல்லது வாக்கிங் அல்லது ரன்னிங் போகலாம். மன அழுத்தம் உடலின் தசைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இச்சமயத்தில் சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்யலாம். புகை பிடிப்பது முதுகெலும்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்பழக்கத்தை அறவே விட்டொழியுங்கள். முறையான தலையணைகளை பயன்படுத்துவதன் மூலம், கழுத்து வலியில் இருந்து தப்பிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும் புத்தக பை:
* தோளில் தொங்க விடப்படும் பை, நன்கு அகலமாக, பட்டையாக இருக்கு வேண்டும்
. * ஒற்றை பட்டையை தவிர்க்க வேண்டும். - குழந்தையின் எடையில், 10 - 20 சதவீத எடைக்கு மேல் பையின் எடை இருக்கக் கூடாது. - புத்தக பையுடன் நடக்கும் போது, சாய்ந்தவாறு நடக்கக்கூடாது. - படத்தில் உள்ளது போல, புத்தக பை, சரிந்து இருக்குமானால், பையின் எடை அதிகரித்து குழந்தை முதுகுத் தண்டு பாதிக்கப்படும

். * பையின் அளவு, குழந்தையின் முதுகின் அளவை விட, அதிகமாக இருக்கக்கூடாது. * "பை'யின் பின்புறம் கீழே "பிடி' இருப்பது நல்லது. * தேவையில்லாத புத்தகம், நோட்டுகளை எடுத்துச்செல்ல வேண்டாம் என குழந்தைகளுக்கு அறுவுறுத்த வேண்டும்