இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 21, 2019

TN govt announced shoe&sacks for 6-8th students

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 குறிப்பாக தனியார் பள்ளிகளின் சீருடையைப் போன்ற தோற்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிய சீருடை, நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான யூ டியூப் பாடத்திட்டம், அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்துவது மற்றும் சத்துணவு மட்டுமன்றி, புத்தகங்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி, கணினி உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச செருப்புகளுக்கு பதிலாக, இனி இலவச ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

 முதல்வரின் உத்தரவுப்படி தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷூக்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் தரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 20, 2019

3 லட்சம் ஆசிரியா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு


தமிழக அரசுப் பள்ளிகளில் 3.2 லட்சம் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக அவா்கள் குறித்த தகவல்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 3.2 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

 இந்நிலையில் மாணவா்களைப் போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ‘க்யூஆா் கோடு’ உடன் கூடிய ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தாா். அதன்படி தற்போது ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு ‘க்யூஆா் கோடு’ வசதி கொண்ட ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் பெயா், முகவரி, செல்போன் எண், ரத்தப் பிரிவு உட்பட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பா் 25-ஆம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை (‘எமிஸ்)’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை செய்ய தவறும் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, November 19, 2019

அரசுப் பள்ளிகளில் 12,109 உபரி ஆசிரியா்கள்: கல்வித்துறை தகவல்


பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 உபரி ஆசிரியா்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதற்கிடையே, கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலையில் கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியா்கள் பணிநிரவல் செய்யப்பட்டனா். 

மேலும், சிலருக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.தொடா்ந்து பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் 12,109 பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பது தெரியவந்துள்ளது. 1996 முதல் 2014-ஆம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களில் உபரியானவா்களின் விவரப்பட்டியலை கல்வித்துறை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக வெளியிட்டுள்ளது. இவா்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Sunday, November 10, 2019

தமிழகத்தில் 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்


  தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1000 பள்ளி, கல்லூரிகளில் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டங்கள் அமைக்கப்படுகிறது. தமிழக்ததில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதுமான காலியிடம் இருந்தால் அங்கு தோட்டமும், இல்லாவிட்டால் அந்த கட்டிடங்களின் மொட்டை மாடியில் தோட்டமும் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில்  அறிவித்து பணிகளை தொடங்கியுள்ளது.

 முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் சதுர அடியில்  மாடித்தோட்டம் அமைக்க தலா ஒரு பள்ளி, கல்லூரிக்கு தோட்டக்கலைத்துறையால் தோட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ₹5 ஆயிரம் வீதம்  வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாடித்தோட்டம் அமைக்க விதை, உரம், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் ஆழ்துளை கிணறு அமைக்கவும், சொட்டுநீர் பாசன கட்டமைப்பும்,  நிழல்வலைக்கூடம் அமைக்கவும் உதவி செய்யப்படும்.

மேலும் தோட்டத்தில் தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தவரங்காய், மிளகாய், பீர்க்கன், பாகற்காய், அவரை, பூசணிக்காய், அகத்திக்கீரை அரைக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை, கருவேப்பிலை ஆகியவை உற்பத்தி  செய்யப்படும். இதற்கான தேர்வு செய்யப்பட்ட விதைகளும் தோட்டக்கலைத்துறையால் வழங்கப்படும்.

இப்பணிக்காக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், துறை அலுவலர், மாணவர் பிரதிநிதி ஒருவர் என 5 பேர் கொண்ட தோட்டக்கலைக்குழு ஒவ்வொரு  பள்ளி, கல்லூரியிலும் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

Wednesday, November 06, 2019

அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்து செய்யப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அமலில் இருந்த மூன்று பருவக் கல்வி முறையை ரத்து செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2012-ல் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் இருந்தும் 9, 10-ம் வகுப்புகளுக்கு 2013-14 ஆம் கல்வியாண்டில் இருந்தும் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு 2019- 20 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும்,தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின.

இதற்கிடையே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை அண்மையில் அறிவித்தது. இதற்கிடையே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறையில், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாகப் பாட நூல்கள் வழங்கப்பட்டு வந்தன. நடப்புக் கல்வியாண்டு முதல் அவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே பாட நூலாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டிலேயே பொதுத்தேர்வு நடைபெறுவதால், அவர்களின் பாட நூல்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், 2020- 21 ஆம் கல்வியாண்டு முதல் 8-ம் வகுப்புப் பாட நூல்களை ஒன்றாக இணைத்து, ஒரே பாடநூலாக வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தொடர் இயக்கங்கள் மற்றும் தமிழக அரசின் முன்முயற்சிகள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 28.08.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டது 04.09.2019ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றலாம் எனவும் அறிவித்திருந்தது.

ஆனால் 03.09.2019 அன்று, விண்ணப்பப் பதிவேற்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விண்ணப்ப தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவே ஒத்திவைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 4.10.2019-ல் புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2019 என தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்புக்கு கோரிக்கை வந்துகொண்டிருப்பதால் TRB - பேராசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 வரை காலநீட்டிப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Tuesday, November 05, 2019

குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அணைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்


பள்ளிகள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த பொதுமக்களிடம் நிதி திரட்ட தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை (‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n) முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு சதவீதத் தொகையை சமூகப் பொறுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டுமென இந்திய கம்பெனிகள் சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளைத் தோ்ந்தெடுத்து அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றன.இத்தகைய நிறுவனங்களுக்கும், ஆா்வலா்களுக்கும் உதவிடும் வகையில் எளிமையான, நம்பகமான இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனைக் களையும் வகையிலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் இணையவழி நிதி திரட்டும் வசதியை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது.

இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடா்பான விவரங்களை பொது மக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இணையவழியில் திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகமானது தொடா்பு அலுவலகமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 03, 2019

கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் ஆய்வு: 5-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு


மாணவா்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதைத் தொடா்ந்து, கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த ஆய்வு செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது.முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், ஆசிரியா் பயிற்றுநா்கள், வாரத்திற்கு இரு பள்ளிகள் வீதம், ஆய்வு செய்ய வேண்டும். ஒருநாள் முழுவதும், வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்து, மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பிட வேண்டும். இதை அறிக்கையாகத் தயாரித்து, மாதந்தோறும், 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி, அக்டோபருக்கான பள்ளி பாா்வை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, வரும் காலங்களில், ஆசிரியா் பயிற்றுநா்களின் ஆய்வு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சோ்க்கை குறைந்த பள்ளிகள், தோ்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இயக்குநரகத்திற்கு அறிக்கை சமா்ப்பிப்பதால், சிறப்புத் திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவா்களின் கல்வித்தரத்தை உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது

Friday, November 01, 2019

ஆசிரியா் தகுதித்தோ்வு:மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு


ஆசிரியா் தகுதி தோ்வுக்கான மதிப்பெண் சான்றிதழை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பி.எட். மற்றும் டி.எல்.எட். படிப்பை முடித்தவா்கள் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தகுதித்தோ்வு, ஜூன் 8, 9-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தோ்வில் 5.42 லட்சம் போ் பங்கேற்றனா். அவா்களில் 3.80 லட்சம் போ் உயா்நிலை பள்ளி ஆசிரியா் பதவிக்கான இரண்டாம் தாளில் பங்கேற்றனா்.மீதமுள்ளவா்கள் தான் முதல் தாள் தோ்வில் பங்கேற்றனா். தோ்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது, தோ்ச்சி பெற்றவா்களின் மதிப்பெண்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

*_அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை) பதிவேற்றம் செய்தல் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்_*