இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 22, 2018

மானிய விலை இருசக்கர வாகனம் பிப் 24 வரை வழங்கப்படும்

உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதை எளிமையாக்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் (மொபட் அல்லது ஸ்கூட்டர்) வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதை செயல்படுத்தும்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இத்திட்டத்தினை செயல் படுத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா பிறந்த நாளில்

ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற பிப்ரவரி 24-ந் தேதி முதல், உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. பணிபுரியும் மகளிர் மற்றும் திருநங்கையர் அவர்களுக்கு ஏற்றவகையில் கியர் இல்லாத, ஆட்டோ கியர் 125 சி.சி. திறனுக்கு மிகாமல் இருக்கும் இருசக்கர வாகனத்தை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களும் வாங்கலாம்.

தங்களது சொந்த நிதி அல்லது வங்கிகள் மூலமாக கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம். வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கும். வாகனத்தை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு யாருக்கும் மாற்றவோ, விற்கவோ கூடாது.

யார்-யாருக்கு தகுதி?

சுயதொழில் புரிபவர், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசாங்க நிதி உதவிபெறும் நிறுவனங்கள், அரசாங்க தொழில் திட்டங்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், மக்கள் கற்றல் மையம்) தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், வங்கி வழிநடத்துனர்கள் மற்றும் ‘ஆஷா’ பணியாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பில் பதிவு செய்த மகளிர் போன்றோர் மானியம் பெற தகுதியுடையவர்கள்.

தொலைதூரங்கள், மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்கள், மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை, 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கையர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆண்டு வருமானம்

ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். பயனாளி 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேற்று முதல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வழங்கப் படுகிறது. விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட அலுவலகங்களிலேயே நேரடியாகவோ அல்லது விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ பிப்ரவரி 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உள்ள தேர்வுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர் தனது சொந்த நிதியில் வாகனத்தை வாங்கினால், வாகன பதிவிற்கான சான்றை பயனாளி அளித்த பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும்.

நேரடியாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ பயனாளி முதலில் வாகனத்தை வாங்கி, அதற்கான மானியத்தை கோரும் விண்ணப்பத்தை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள்?

பயனாளிகள் விண்ணப்பத்துடன் இருப்பிடத்திற்கான ஆவணம், வயது மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணம், வருமான சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அமைப்புச்சாரா நல வாரியத்திலிருந்து பெற்ற அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அத்துறையிடமிருந்து பெற்ற அடையாள அட்டை, பணிபுரிவதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீட்' தேர்வு, 'சிலபஸ்' : சி.பி.எஸ்.இ., விளக்கம்


'நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து மாநில பாடத்திட்டங்களும் இணைந்த, 'சிலபஸ்' பின்பற்றப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெளிவுபடுத்தியுள்ளது. மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வாயிலாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விதிகளை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., வகுக்கிறது.

தேர்வுக்கான சட்டங்கள் மற்றும் அரசாணைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு பொறுப்பான, மத்திய மனிதவள அமைச்சகம் தலையிடுவதில்லை. சில ஆண்டுகளாக, எம்.சி.ஐ., வகுத்த பாடத்திட்டத்தின்படி, சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து மாநில பாடத்திட்டங்களையும் இணைத்தே, நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படியே, அனைத்து மாநில மாணவர்களும், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், 'இந்த ஆண்டு நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமே பின்பற்றப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாக, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இது, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு குழு, நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில், '2017ல் பின்பற்றப்பட்ட, அதே பாடத்திட்ட முறைகளின்படியே, இந்த ஆண்டும், நீட் தேர்வு நடத்தப்படும். 'அதில், எந்த மாற்றமும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்' என, கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக, தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 73 ஆயிரம் பேர் உட்பட, 1.5 லட்சம் மாணவர்கள், தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

EMIS -பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 29-1-18



Tirupur book fair -2018

Click below

https://app.box.com/s/qpc4886p7uuufar7rlmj7m1r38ji1142

Sunday, January 21, 2018

I.T G.O final -2018

Click below

https://app.box.com/s/s9g560umym5crzi8tdyp27oah3blflyu

ASER report 2017

தூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு


மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. இதேபோல், நடப்பாண்டிலும், ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை, நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், இணை இயக்குனர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர் இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய, இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்

Saturday, January 20, 2018

அரசின் இரு சக்கர வாகன திட்டத்துக்கு நாளை முதல் பிப். 5வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

கியர் இல்லாத 125சிசி இயந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அதாவது 50 சதவீதம் தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும் என்றும், இரு சக்கர வாகனம் 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதாரஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஊரின் கடைநிலைப்பகுதி மலைப்பகுதி, மகளிரை குடும்ப தலைவராக கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி (பெண்), திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மகளிர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனத்தை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மேலும், மனுவுடன் பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல், உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல், வேலை வழங்கும் அலுவலரால், நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், நிறுவனத் தலைவர் சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்) உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான மனுக்கள் நாளை முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், திருச்சி உட்பட மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாள்.

Friday, January 19, 2018

CPS interest

போலியோ தடுப்பு மருந்து: பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


போலியோ தடுப்பு மருந்து குறித்து பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில், வரும் 28 மற்றும் மார்ச் 11 ஆகிய நாள்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம்களாக செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் காலை இறை வணக்கத்தின்போது இது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தொண்டர்கள், தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் இந்தப் பணிக்கான ஒத்துழைப்பை சிறப்பாக வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து இந்த முகாம்கள் சிறப்பாக செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

பி.எப்., வட்டி: அரசு உத்தரவு


பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 7.6 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்களிடம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு, 2017 அக்டோபர், 1 முதல், டிச., 31 வரை, 7.8 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.6 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசின், நிதித்துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Thursday, January 18, 2018

5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்


தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். 'இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்' என்றும் அவர் கூறினார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

பல சிறிய நாடுகளிலும்கூட, ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்யாமலேயே 9-ஆம் வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, 7-ஆம் வகுப்பு மாணவருக்கு, 4-ஆம் வகுப்பு கணிதத்தைப் போடத் தெரிவதில்லை.

இதை மாற்றி, முறையான, தரமான தொடக்கக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தோடு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை (போர்டு எக்ஸாம்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் நடத்தப்படும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மே மாத துணைப் பொதுத் தேர்வில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இந்தச் சட்ட மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டன. எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு சில மாநிலங்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டுவிடும்.

8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'


எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், இன்று, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும், 29ல் பொது தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தோர், இன்று முதல், அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்து உள்ளது

எமிஸ்' இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு


எமிஸ்' இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள், பணிகளை முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களை திரட்டி, ஆவணமாக்கும் வகையில், 'எமிஸ்' எனப்படும், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம், 2012ல் துவங்கப்பட்டது.

இதில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை, களையும் வகையில், அண்ணா பல்கலை தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையதளம், 2017 ஜூனில் உருவாக்கப்பட்டது. பள்ளி வாரியாக, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றிய தகவல்கள் அடிப்படையாக வைத்து, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. எனவே, 'ஆதார்' எண் கட்டாயம் இணைக்க வேண்டுமென, வலியுறுத்தப் படுகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் தகவல் பதிவேற்றும் பணிகள் முழுமை பெறவில்லை. இடம் பெயர்வு காரணமாக, வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து, அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, புதிய பதிவு எண் உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பதாக, புகார் எழுந்தது. இதனால், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, நேற்று முதல், 25 வரை, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் ஒருவர் கூறுகையில், 'எமிஸ் பதிவு எண் இல்லாத மாணவர்களின், தகவல்களை புதிதாக சேர்க்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

'இவ்வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து வகை பள்ளிகளும், 25க்குள், மாணவர்களின் தகவல்களை பதிவேற்றும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 'இக்காலக்கெடு இறுதியானது என்பதால், தலைமையாசிரியர்கள் அலட்சியம் காட்டக் கூடாது' என்றார்.

B Ed பட்டப்படிப்பு பயிற்சி அரசாணையில் ஆணையில் திருத்தம்.



Wednesday, January 17, 2018

*English phonetics Training for primary upper primary trs!!!*

Click below

https://app.box.com/s/eqgiod4fyq7lxs4ahnearpipw9t4d5kd

EMIS


அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில் மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை


தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர். 1 முதல் 5 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மெரூன் நிற கால் சட்டை - வெளிர் சந்தன நிறச் சட்டையும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் ஸ்கர்ட்- சட்டையும் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பச்சை நிற கால்சட்டையும், மாணவிகளுக்கு பச்சை நிற சுடிதாரும் சீருடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகளை அரசே வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சீருடைத் துணி உற்பத்திக்கான நூல் ஒப்பந்தப் புள்ளி பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் கைத்தறி, துணிநூல் துறை மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிகழாண்டில் சீருடைத் துணி உற்பத்தி, விநியோகப் பணிகள் தாமதமாகும் எனத் தெரிகிறது. இதுகுறித்து துணிநூல் துறையினர் கூறியதாவது:

அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பள்ளிச் சீருடையை அறிமுகம் செய்து அரசு அறிவித்துள்ளது. இந்தச் சீருடைகள் உற்பத்திப் பணியை 125 நாள்களுக்குள் (மே மாதத்துக்குள்) முடித்து சமூகநலத் துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் பள்ளிக் கல்வித் துறை மூலம் சீருடைகள் விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு மே மாதத்துக்குள் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 2 ஜோடி சீருடையும், அடுத்த இரண்டு மாதங்களில் தலா ஒரு ஜோடி சீருடையும் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

வரும் கல்வியாண்டில் 1,6&9 ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் தயார்


தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடைசியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதுபோல 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை உள்ள பாடத்திட்டங்கள் 7 வருடங்களுக்கு முன்பாக மாற்றி அமைக்கப்பட்டது. பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வரும் கல்வி ஆண்டில் அமல்

1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக பல்வேறு கூட்டங்கள் நடத்தி எப்படி பட்ட பாடத்திட்டத்தை கொடுக் கலாம் என்று எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு முடிவு செய்தது.

இதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கருத்துகளில் தேவையானவை மற்றும் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தெரிவித்தவற்றில் சிறந்த கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு புத்தக சுமை இருக்கக்கூடாது என்று கருதி பருவ முறையில் (ஒரு ஆண்டுக்கு 3 பருவமாக ) பாடப்புத்தகங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது.

பாடத்திட்டம் தயார்

முதல் கட்டமாக 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்பட 7 மொழிகளில் புதிய பாடத்திட்டம் தயாராகி வருகிறது. 1, 6, 9 வகுப்புகளில் முதல் பருவ பாடத்திட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டும் தயாரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்த பாடத்திட்டத்தில் மனப்பாடத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் புரிந்து கொண்டுபடிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிக அளவில் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டம் சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆர்வத்துடன் படிப்பார்கள்

மொத்தத்தில், படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கும் விதமாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை


தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன் கூடிய, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன.

வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, மாணவர்களின் முழு விபரங்களையும் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு தேர்வுக்கு முன், இந்த பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின், 'ஆதார்' எண், மொபைல்போன் எண், பெற்றோர் விபரம், முகவரி, ரத்தப் பிரிவு, கற்பிக்கும் மொழி, கல்வி மேலாண் தகவல் அமைப்பான, 'எமிஸ்' எண் ஆகியவை, ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற உள்ளன.

இந்த அட்டையில், சிறிய வகை, 'சிப்' பொருத்தவும், அதன் மூலமாக மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு மேற்கொள்ளவும், கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.