இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, November 18, 2017

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு


தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 வகுப்புக்கு பிறகு மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த 13ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக 100 மையங்களை தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு அரசு தரப்பில் கேட்டுக்ெகாள்ளப்பட்டது. இதற்காக, தமிழக அரசு தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 73 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக பதிவு செய்தனர்.

அதன்படி முதற்கட்டமாக 25 மையங்களில் இணையதளத்துடன் கூடிய கணினிகள் பொருத்தப்பட்டு, சென்னையில் இருந்தபடியே இணையதளம் வழியாக புரஜெக்டர் திரை மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. சென்னையில் எம்ஜிஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்தது.

தமிழகத்தில் 11 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பாசிரியர் பாடத்திட்டம்


தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர, கடந்த 1972ம் ஆண்டு சிறப்பாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. இதில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடம் கற்பிக்கப்படுகிறது. 1972ம் ஆண்டு முதல் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியின்படியே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பாடங்கள் கற்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1987ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த பாடத்திட்டம் 2006ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பின்னர், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு சென்ைனயில் பணிமனை அமைக்கப்பட்டது. 2வது கட்ட பணிக்குபின், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பாடதிட்டத்தில், 6ம் வகுப்புக்கு புள்ளி, கோடு, வடிவம் குறித்த பாடத்திட்டம், 7 மற்றும் 8ம் வகுப்புக்கு கற்பனை ஓவியங்கள் வரையும் பயிற்சி பாடத்திட்டம், 9ம் வகுப்புக்கு காகிதம் கொண்டு வெட்டி ஒட்டுதல் (கொலேஜ் வர்க்), சோப்பு கட்டிங் தயாரித்தல் பாடத்திட்டம், 10ம் வகுப்புக்கு வரலாற்று சின்னங்கள், குகை ஓவியங்கள், நாகரிக உடைகள் என்ற முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.

ஒரு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 30 பாடங்களில், 20 பாடங்கள் வகுப்பு வேளைகளிலும், 10 பாடங்கள் வீட்டு பாடங்களாகவும் வரைந்து முடிக்கும் வகையில் இப்புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இப்புதிய பாடத்திட்டங்களுக்கு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால், இப்பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. 2006ம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். நீண்ட இழுபறிக்கு பிறகு சிறப்பாக தயாரிக்கப்பட்ட இப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து சிறப்பாசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது

அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு


பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 1 - 8ம் வகுப்பு வரையில், கல்வித் தரம் மேம்பட, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

அதில், 5ம் வகுப்பு வரையான இடைநிலை ஆசிரியர்களுக்கும், 6 - 8ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில், நடப்பு கல்வியாண்டில், 'கற்றல் விளைவுகள்' என்ற தலைப்பில், நாளை முதல், 30 வரையில், தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக, பயிற்சி கட்டடங்கள் தயார் செய்யப்பட்டன. இதில், தாமதம் ஏற்பட்டு உள்ளதால், பயிற்சி நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.இதனால், பயிற்சிகள் அனைத்தும் தேதி குறிப் பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன

Thursday, November 16, 2017

தமிழகம் முழுவதும் 36 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கணினி அறை அறிவியல் ஆய்வு கூட வசதி


தமிழகம் முழுவதும் 36 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது. தற்போது, இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை 39 ேகாடி செலவில் கட்டப்படும் என்று சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பள்ளிகள், வேலூரில் 2, தர்மபுரி 1, திருவண்ணாமலை 3, விழுப்புரம் 4, சேலம் 1, கோவை 2, திண்டுக்கல் 1, திருச்சி 2, பெரம்பலூர் 1, கடலூர் 3, திருவாரூர் 4, தஞ்சாவூர் 1, புதுக்கோட்டை 5, மதுரை 1, தூத்துக்குடி 1, திருநெல்வேலி 1, கிருஷ்ணகிரி 1 உள்பட தமிழகம் முழுவதும் 36 பள்ளிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 39 கோடி செலவில் இப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

பொதுப்பணித்துறையின் மூலம் இதற்கான பணிகளுக்கு தற்போது டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 15 கோடி செலவில் 137 கூடுதல் வகுப்பறைகள், 3 கோடி செலவில் அறிவியல் ஆய்வகம்,1.71 கோடி செலவில் கணினி அறை, 3.73 கோடி செலவில் கலை மற்றும் ஓவிய அறை, 5.34 கோடி செலவில் நூலக அறை கட்டப்படுகிறது. இந்த பணி முடிந்த பிறகு கணினி, ஆய்வக தளவாட பொருட்கள் வாங்கப்படுகிறது. இதற்காகவும், தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. 6 மாதத்திற்குள் முழுவதுமாக இப்பணிகளை முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்


ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது. நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது. அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்

*கணித பாடத்திற்கான கற்றல் விளைவுகள் பயிற்சி கட்டகம்:-*

Click below

https://app.box.com/s/13aunuo36piplyqzowktnd6j0wbuk2ab

Wednesday, November 15, 2017

24ல் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ-ஜியோ மீண்டும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதில் 12 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7 வது சம்பளக்கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஜாக்டோ-ஜியோ ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் ஆகஸ்ட் 26 மற்றும் 27ம் தேதிகளில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், புதிய ஊதிய விகிதங்களை அரசு அறிவித்தது. இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். இதை வலியுறுத்தி 24ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி உயர்மட்டக் குழு கூடி ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கும்என்று தெரிவித்தனர்.

எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் : தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள்


எம்.பி.,- - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், புதிய வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், 'நபார்டு' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், வகுப்பறைகள் கட்டப்படுகின்றன

. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியில், பள்ளிகளுக்கு, வகுப்பறைகள் கட்டித் தருகின்றனர். ஆனால், ஏற்கனவே, இந்த நிதியில் கட்டப்பட்ட பல வகுப்பறைகளின் தரம், கேள்விக்குறியாக இருப்பதால், தலைமை ஆசிரியர்கள், இதை விரும்புவதில்லை. 25 ஆண்டுகள் : அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்களின் ஆயுள், 25 ஆண்டுகள் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும் கட்டடங்களில், பெரும்பாலானவை, ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.காரை பெயர்வது, தரமற்ற தளம், விரிசல் உள்ளிட்டவை ஏற்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. முழுக்க முழுக்க, ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்டப்படுவதால், இக்கட்டடங்களின் தரத்தை, பொதுப்பணி, பள்ளிக்கல்வித் துறைகள் என, எதுவும் கண்காணிப்பதும் இல்லை. ஒப்பந்ததாரரும், 'பலருக்கு கமிஷன் வழங்க வேண்டி இருப்பதால், இதற்கு மேல் தரமாக கட்ட முடியாது' என, வெளிப்படையாகவே கூறுகிறார்.

நாங்களே பொறுப்பு : கட்டடத்துக்கோ, குழந்தைகளுக்கோ சேதம் என்றால், அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இதனால், பல பள்ளிகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, குடோன்களாகவும், வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.பல்வேறு திட்டங்களில், பொதுப்பணித் துறை மூலம், வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எம்.பி., - எம்.எல்.ஏ., மூலம் வரும் கட்டடங்களை, நாங்கள் விரும்புவதில்லை. இருப்பினும், பலர் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது.எனவே, பள்ளிகளில் எந்த நிதியில் வகுப்பறை கட்டினாலும், அதன் தரத்தை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு


மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை, புதிய மொபைல் ஆப் மற்றும், ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

4th lesson plan

Click below

https://app.box.com/s/jf0hav7gz678eg1m0s0rp20urw6jwcvt

Tuesday, November 14, 2017

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.லிட் ஊக்க ஊதியம் பிடித்தம் செய்யும் திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பள்ளி மாணவர்களுக்கு 'கலையருவி' திருவிழா : நிகழ் கல்வியாண்டு முதல் அமல்


தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளைத் தெரிந்து கொள்ளவும், அத்தகைய கலைகளைப் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாகவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை நிகழ் கல்வியாண்டு முதல் நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற நிலை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்திக்க முடியாத, தனக்குள் இருக்கும் தனித் திறமையை வெளிப்படுத்த நேரமில்லாத நிலை உள்ளது. மேலும், இதற்கு பெற்றோர்களும், பள்ளிகளில் ஆசிரியர்களும் அனுமதிப்பதில்லை. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டுகளும், மன அமைதி, சிந்திக்கும் ஆற்றலுக்குத் துணை புரியும் வகையில் ஓவியம், இசை, நடனமும், மொழித் திறனை வளர்த்துக் கொள்ள கவிதை, கட்டுரை, கதை, பாடல் எழுதுதல் உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவே, இதற்காகப் பள்ளிகளில் பாட வேளை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு நடத்தி, மதிப்பெண்களும் வழங்கப்பட்டு வந்தன. காலப் போக்கில் இத்தகைய பாடப் பிரிவுகளுக்கு அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் காலிப் பணியிடங்களாகவும், ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் அத்தகைய சிறப்புப் பாடங்களுக்குப் பாட வேளை ஒதுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டன. இத்தகைய போக்கை மாற்ற தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் வெளிப்பாடாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், நிகழ் கல்வியாண்டு முதல் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், தமிழக கலைகளைக் கற்றுக் கொள்ளவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கலை வடிவங்களில் மொழியாற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மிகம், நாட்டுப்புறக் கலைகள் என சுமார் 154 -க்கும் மேற்பட்ட கலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களின் தனித் திறன், குழுத் திறன்களை வளர்த்து கொள்ளும் விதமாக, போட்டிகளைத் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு பிரிவுகளில், பள்ளிகள் அளவில் நடத்த வேண்டும். பின்னர், அவற்றில் முதலிடம் பெறுவோருக்கு ஒன்றியம், கல்வி மாவட்டம், மாவட்டம், இறுதியாக மாநில அளவில் என அடுத்தடுத்த நிலைகளில் தரமுடன் கூடிய திறனை வெளிப்படுத்துவோருக்கு அங்கீகாரமும், பரிசுகளும் அளிக்க இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பள்ளிக் கலைத் திருவிழா வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நிகழ் கல்வியாண்டு (2017 - 18) முதல் கலைத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். குழந்தைகள் தினவிழா அரசு சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:- மாணவ-மாணவிகள் 16 மணிநேரம் பெற்றோர்களிடமும், 8 மணிநேரம் ஆசிரியர்களிடமும் இருக்கிறார்கள். நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து அவர்களுக்கு தக்க அறிவை ஊட்டிவருகிறார்கள்.

மத்திய அரசு எத்தகைய போட்டித்தேர்வை கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 73 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாத இது போன்ற பயிற்சி எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் இல்லாதது. மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், என்ன படிப்பை படித்தால் வேலைகிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு வசதியாக விரைவில் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசம்.

புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைத்து கொடுக்கப்பட உள்ளது. அந்த பாடத்திட்ட வரைவு வருகிற 20-ந்தேதி இணையதளத்தில் வெளியிட உள்ளோம். தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரி செய்ய டிசம்பர் மாதத்திற்குள் பயிற்சி மையங்களை தொடங்க உள்ளோம். 32 மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இவை அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும். ஸ்மார்ட் கார்டில் சிம் கார்டை பொருத்த நினைத்தோம். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி சிம் கார்டு இல்லாமல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன.

திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி, நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன. அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்கு களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.