இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 10, 2017

இனி, 'ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்!'; கணினி முன் அமர்ந்து கல்லூரியை தேர்வு செய்யலாம்


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை.

உத்தரவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கை, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.இந்நிலையில், 2016ல் நடந்த கவுன்சிலிங்கில், மாணவர் சேர்க்கை செயலராக இருந்த,பேராசிரியை இந்துமதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்தார். இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது.

அதை தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், ஆன்லைனிலேயே கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்காக, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அறிமுகம் ஏற்கனவே, 2015 வரை, இவர், இப்பொறுப்பில் இருந்துள்ளார்.

அவரது மேற்பார்வையில், வரும் கல்வி ஆண்டில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகங் களில், ஆன்லைன் கவுன்சிலிங் உதவிமையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்கள், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.விண்ணப் பங்கள் ஏற்புக்கு பின், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விருப்ப இடங்களை பதிவு செய்யும் முறை அறிமுகம்செய்யப்படும். பின், அவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைக்கு ஏற்ப, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

வழிகாட்டல்: எனவே, வரும் கல்வி ஆண்டில் மாணவர் களும், பெற்றோரும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்திற்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. எங்கேயும் அலையாமல், கணினி முன் இருந்து, கல்லுாரியை தேர்வு செய்யலாம். 'இதற்கான வழிகாட்டல் மற்றும் அறிவிப்புகள், பிப்ரவரி யில் அறிவிக்கப்படும்' என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

கலை அருவித் திட்டம்

திருப்பூர் வடக்கு tnptf புதிய பொறுப்பாளர்கள்

திருப்பூர் வடக்கின் வட்டாரத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்:
பாலசுப்பிரமணியன்
செயலாளர்:
முத்துச்சாமி
பொருளாளர்:
மரியசெல்வராஜ்

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்:
திருநாவுக்கரசு
கார்த்திக்

துணைத்தலைவர்
*ராமசாமி
*தர்மராஜ்
*சிந்துஜா

துணைச்செயலாளர்

*ஜெயலட்சுமி
*சந்திரசேகர்
*அசோக் பாண்டி

வட்டார செயற்குழு உறுப்பினர்

*கா.கார்த்திகேயன்
*கி.தரணி
*ப.லதா
*தமிழரசன்
*எஸ்.கருணாகரன்
*சி.ராம்குமார்
*ப.மணிகண்டபிரபு
*த.ராஜ்
*ஆர்.மாரியப்பன்
*ஆர்.அருண்பிரகாஷ்
*த.கார்த்திகேயன்
*டி.தங்கமணி
*தா.நந்தகுமார்
*F.மெர்ஸி வித்யா
*கோ.காளிதாஸ்

பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


பூலுவபட்டி பள்ளி அறிவியல் கண்காட்சியில் முதலிடம்



திருப்பூர் வடக்கு, பூலுவபட்டி குறுவளமைய அறிவியல் கண்காட்சியில்
பூலுவபட்டி துவக்கப்பள்ளி முதலிடம்

*மழைகாலத்தில் அறுந்துவிழும் மின் கம்பிகளினால் ஏற்படும் விபத்தினை தடுக்கும் தானியங்கி சிக்னல் செய்த மாணவிகள் தீபராகவி,ரூபிகாவுக்கு பாராட்டுக்கள்

ஊ.ஒ.து பள்ளி, பூலுவபட்டி
திருப்பூர் வடக்கு

Thursday, November 09, 2017

தேசிய திறனாய்வு தேர்வு 18ம் தேதி நடக்கும்


தேசிய திறனாய்வு தேர்வு வரும் 18ம் தேதி நடக்கும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ்.இ) வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 10ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இத்தேர்வு கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடுவது குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கலாம் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்பது குறித்து அரசே முடிவு செய்யலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வில் 107வது கேள்வியாக வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு, சரியானதை தேர்வு செய்க என்று கூறப்பட்டது. இதற்கு வங்கமொழி என பதிலளித்த வீரமணி என்ற விண்ணப்பதாரர், பாட புத்தகத்தில் வங்கமொழி என்றே கூறப்பட்டுள்ளதால், அந்த விடையை எழுதிய தனக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்கவும், ஒரு ஆசிரியர் பணியிடத்தை தனக்கு நிறுத்தி வைக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்டு சமஸ்கிருதத்தில் பாடப்படுகிறது என்று தெரியவருகிறது. எனவே, கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்தகுதி தேர்வில் சரியா பதிலை எழுதிய மனுதாரர் வீரமணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, அவருக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணையை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய தனி நீதிபதி ஒரு வக்கீல் குழுவையே நியமித்து தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் முதலில் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என்பதையும் பின்னர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது என்றும் முடிவுக்கு வந்துள்ளார். எனவே, வங்க மொழி அல்லது சமஸ்கிருதம் என்ற 2 பதில்களும் சரிதான் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. வங்க மொழி என்று எழுதியவர்களுக்கு 1 மதிப்பெண் தருவதைப்போல் சமஸ்கிருதம் என்று பதில் எழுதியவர்களுக்கும் ஒரு மதிப்பெண் தரவேண்டும்.

எனவே, இந்த விஷயத்தில் தனி நீதிபதி 1 மதிப்பெண் மனுதாரருக்கு தரவேணடும் என்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேலும் கல்வி நிறுவனங்களிலும் அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தையும் அரசிடமே இந்த நீதிமன்றம் விட்டுவிடுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது

அரியர்' எழுத கூடுதல் அவகாசம்: அண்ணா பல்கலை. சிறப்புச் சலுகை


பொறியியல் கல்லூரித் தேர்வில் தோல்வியடைந்த பாடங்களுக்கான அரியர் தேர்வு எழுத கூடுதல் அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தை 2017- ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழகம், குறிப்பிட்ட கால அவசாத்துக்குப் பின்னர் அரியர் தேர்வு எழுத முடியாத வகையில் புதிய நடைமுறையையும் அறிமுகம் செய்தது.

இதன் காரணமாக, அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தேர்ச்சி பெறாத இணைப்புக் கல்லூரி இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்கள், தவறிய பாடங்களுக்கான தேர்வை மீண்டும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் அரியர் தேர்வு எழுத கூடுதல் கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது அளித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையை ஏற்று இந்தக் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் 2001-2002 கல்வியாண்டு முதல் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி அரியர் தேர்வுகளை எழுதலாம்.

இவர்கள் 2018 பிப்ரவரி மற்றும் 2018 ஆகஸ்ட் பருவத் தேர்வுகளில் மட்டும் அரியர் தாள்களை எழுத அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ள மாணவர்கள், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். பதிவு முடிந்தவுடன் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்படும். இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu, coe1.annauniv.eduஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தேசிய திறனாய்வுத் தேர்வு: இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு


தேசிய திறனாய்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை ('ஹால் டிக்கெட்') வெள்ளிக்கிழமை (நவ.10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தொடர்புடைய பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பயனாட்டாளர் குறியீடு (ன்ள்ங்ழ் ய்ஹம்ங்) மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பி.இ., மாணவர்கள் தேர்வு எழுத சலுகை


அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேரும் மாணவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 2000க்கு மேல் படிப்பில் சேர்ந்தவர்கள், 2018 மற்றும், 2019ல் தேர்வுகள் எழுதலாம். கூடுதல் விபரங்களை, http://coe1.annauniv.edu/, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து உள்ளது


நடுநிலைப்பள்ளி தலையாசிரியர் பி.லிட், பி.எட் ஊக்க ஊதியம் இல்லை


Wednesday, November 08, 2017

சாரணர் இயக்க நடவடிக்கைகளுக்கு ரூ.2 கோடி வங்கியில் டெபாசிட் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சாரணர் இயக்கத்துக்கு நிர்நதர வைப்புத் தொகையாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவை இணைந்து, ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி முகாம் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்தது.

இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் சாரணர் அமைப்பு நல்ல முறையில் இயங்கி வருகிறது. அதற்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி போதாது என்று கோரிக்கை ரூ.2 கோடியில் வைப்புத் தொகை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வட்டியையும் சாரணர் இயக்கத்துக்கு பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். சாரணர் இயக்கத்துக்காக திருவல்லிக்கேணியில் ஒரு இடம் ஒப்பந்த அடிப்படையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் 1996ம் ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்து சாரணர் இயக்கத்துக்கு திரும்பவும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆலந்தூரில் இந்த இயக்கத்துக்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த இடம் தற்போது போலீசின் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீ்ட்டு மீண்டும் சாரணர் இயக்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர,போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக இதுவரை 73 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். விரைவில் 412 மையங்களில் பயிற்சி தொடங்கும். பேரிடர் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கும் வகையில் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையின் போது மாணவ மாணவியரின் புத்தகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

வாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு


தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்; சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும்.

அதன்படி, அக்., 1 - 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக் கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் செய்யக் கோரி, 51 ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, நவ., 30 வரை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர், கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம்.

தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன் - லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம். அக்., மாதத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், அதிகபட்சமாக, முதல்வரின் மாவட்டமான, சேலத்தில், 49 ஆயிரத்து, 323 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மிகக் குறைவாக, அரியலுார் மாவட்டத்தில், 5,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

DEE PROCEEDINGS-TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அரசு உதவி பெறும் தொடக்க /நடு நிலை பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



TNPSC விண்ணப்பதாரர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரை 7-11-17

Click below

https://drive.google.com/file/d/1N1Ei0gsDvnuYJ4w_4Ze8YN_ep1D0q1fN/view?usp=drivesdk

இணை இயக்குநர் பணியிட மாறுதல்

TNPTF NEWS

*JACTTO-GEO வழக்கு நிலவரம் : TNPTF பொதுச் செயலாளர் அறிக்கை - 08.11.17*

*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!*

*வணக்கம்.*

*ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனிநபர் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது தாங்கள் அறிந்ததே.*

*இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு.N.G.R பிரசாத் அவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார்.*

*இவ்வழக்கு விசாரணை தொடர்பான நிர்வாகச் சிக்கல் காரணமாக, உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நீதியரசர்களால் காணொளிக் காட்சி வாயிலாக இங்கிருந்தே வழக்கை நடத்திட சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்தது.*

*ஆனால், இம்முறையிலான விசாரணை எவ்வகையிலும் தொய்வை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற காரணத்தால், சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்த முறையை நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் ஏற்கவில்லை.*

*அதனால், தற்பொழுது மீண்டும் உயர்நீதி மன்ற மதுரைக்கிளைக்கே வழக்கை மாற்றி, மதுரைக் கிளையில் விரைந்து விசாரணைக்குக் கொண்டு வருவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.*

*எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் ஜாக்டோ-ஜியோ வழக்கு உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது என்ற தகவலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது நீதிமன்ற மாண்பினை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், களப் போராட்டத்தின் வாயிலாக நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பு என்பது நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் அறிந்ததே.*

*தனிநபர் தொடுத்த வழக்கின் தலையீட்டாலேயே தற்போதைய நமது களப்போராட்ட வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.*

*நீதிமன்ற மாண்பினை மதிக்கும் நாம் அதன் தீர்ப்பிற்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால், நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் முயற்சிகளுக்கும் மதிப்பளித்து தோழர்கள் அனைவரும் சற்று பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.*

*இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சினையை முழுமையாகக் கலைந்திடும் போராட்ட வியூகத்தை வடிவமைக்க மாநில அமைப்பிற்கு, திண்டுக்கல் மாநிலச் செயற்குழு வழங்கியுள்ள அதிகாரத்தின் மீது தோழர்கள் அனைவரும் கொண்டுள்ள நம்பிக்கையை மாநில மையம் முழுமையாக உணர்ந்தே செயல்பட்டு வருகிறது.*

*தற்போதைய கள ஓய்வை ஆக்கப்பூர்வ அடுத்த கட்ட நகர்விற்கான தயாரிப்புக் காலமாகத் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.*

*ஊதியம் & ஓய்வூதிய உரிமைகளை முழுமையாக மீட்டெடுக்கும் வரை நமது அமைப்பு தொடர்ந்து போராடும்.*

*தோழமையுடன்,*
*செ.பாலசந்தர்,*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Tuesday, November 07, 2017

அனைத்து வகைப் பள்ளிகளிலும் பாரத சாரண - சாரணீயர் இயக்கம் செயல்படுத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு



அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி


அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்து மணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன. மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.

அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது. வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:

அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்க பயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

TNPSC செய்திக் குறிப்பு

Monday, November 06, 2017

மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது


டெங்கு தடுப்பு நடவடிக்கை

TNPTF மாநில செயற்குழு முடிவுகள்


பள்ளி போட்டிகளில் சினிமா பாடலுக்கு தடை


பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது' என, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது. தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும். இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.