மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள ஏதுவாக பள்ளிகளில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் பயிற்சி பெற மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த பயிற்சியில் சேருவதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரம் வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Tuesday, October 24, 2017
போட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்
அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களின் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு செலவுகள், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்கு, மத்திய அரசின் சார்பில், நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியையும், அதற்கான திட்டங்களையும், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், பள்ளியின் நிர்வாக பணிகள், அதற்காக பெற்ற நிதி, செலவு செய்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி செலவுக்கு, அரசிடமும், மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில், எந்த முறைகேடும் இல்லாமல், பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும்.
பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, பெற்றோருடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கந்துவட்டி சட்டம் சொல்வது என்ன?
கந்து வட்டி சட்டம் சொல்வது என்ன?
2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
18% மேல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை, ரூ. 30 ஆயிரம் அபராதம்.
தினசரி வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் வசூலுக்கு தடை.
2013 - கந்து வட்டி கொடுமைகள் பற்றி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு நீதிபதி கிருபாகரன் கடிதம்.
கந்து வட்டி கொடுமையை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி நியமனம்.
கந்து வட்டி கொடுமையை தடுப்பதற்கான பரிந்துரைகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.
கந்துவட்டி கொடுமைகளை அறிவதற்கு மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.
காவல் துறையில் புகார் அளிக்கும் போது அதன் நகலை கண்காணிப்பு குழுவிடம் வழங்க வேண்டும்.
புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
சட்டம் குறித்த தகவல்களை திரையரங்குகளில் ஒளிபரப்ப வேண்டும்.
கந்துவட்டி தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும்.
2014 - கந்துவட்டிகாரர்களை கைது செய்ய கேரளா பின்பற்றிய ஆப்ரேஷன் குபேராவை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தல்.
2014ம் ஆண்டு கந்துவட்டி விடுபவர்களை கைது செய்ய கேரளாவில் ஆப்ரேஷன் குபேரா திட்டம் அமல்.
கேரளாவில் 773 பேர் கைது, 1448 பேர் மேல் வழக்கு.
கந்து வட்டி வசூலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது.
Monday, October 23, 2017
Sunday, October 22, 2017
வருமான வரம்பு உயர்வு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் M.B.C பிரிவு மாணவர்களுக்கான கிரீமிலேயர் வருமான உச்சவரம்பு ரூ8லட்சமாக உயர்வு. வரும் கல்வியாண்டு முதல் அமல்
அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான பல்வேறு புதிய திட்டங்களை, கல்வித்துறை அறிவித்து வருகிறது
இதன்படி, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'எலைட்' சிறப்பு பயிற்சி திட்டம், 'பெஸ்ட்' மாதிரி தேர்வு திட்டம், காலை, மாலை சிறப்பு வகுப்புகள், தினமும் மாதிரி தேர்வு திட்டம் போன்றவை, பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, மாணவர்களை தயார் செய்வதற்கு, அரையாண்டு தேர்வுக்கு முன், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு, நவ., 13ல் துவங்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை, தேர்வு அட்டவணையை தயாரித்து உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நவ., 13ல் துவங்கும் தேர்வு, நவ., 24ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, நவ., 15ல் தேர்வு துவங்கி, நவ., 24ல் முடிகிறது. இதற்கேற்ப, பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்கவும், மாணவர்களை தயார்படுத்த வும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
போராட்டமா; சமரசமா? ஜாக்டோ - ஜியோ இன்று முடிவு
தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே, அரசுடன் சமரசம் செய்து கொள்வதா; மீண்டும் போராட்டத்தை தொடருவதா என, முடி வெடுக்கப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
அதிருப்தி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, செப்டம்பர் மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியது. உயர்நீதிமன்றம் தலையிட்டு, போராட்டத்தை நிறுத்தியது. ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு குறித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, ௨௦௧௬, ஜன., முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடையாது என, தமிழக நிதித்துறை அறிவித்தது. அதனால், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். முரண்பாடு : ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என, பல சங்கங்களும், முதல்வரிடம், மனு அளித்துள்ளன. ஜாக்டோ - ஜியோ அமைப்பின், அவசர கூட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதில், நிலுவை தொகையை தர மறுப்பது மற்றும் ஆறாவது ஊதியக்குழு முதல் தொடரும் ஊதிய முரண்பாடுகள் தொடர்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ முறையிட உள்ளது.'இந்த வழக்கில், அரசு, என்ன விளக்கம் அளிக்கிறது என்பதை பொறுத்தே, அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்; நிலுவைத் தொகை தர மறுத்தால், மீண்டும் போராட்டம் என்ற நிலையை எடுக்க வேண்டி வரும்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது.
கொசு வந்தது; டெங்கு வந்தது' : பள்ளிகளில் ஓவிய போட்டி
கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் ஆகிய வற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி என, ௧௩௧ வகை தலைப்புகளில், போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான, மாணவர்களின் ஓவிய போட்டியில், 'கொசு வந்தது, டெங்கு வந்தது; டெங்குவை பரப்பும் கொசுக்களின் வாழ் இடங்கள்' என்ற தலைப்பும், இடம் பெற்றுள்ளது.சுத்தமான வகுப்பறை, சூப்பரான வகுப்பறை; எனக்கு பிடித்த பெண்மணி, பாக்கெட் உணவுக்கு பை, பை போன்ற தலைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன.
ரூ50,000க்கு மேல் ரொக்க பரிவர்த்தனை: அசல் ஆவணம் கட்டாயம்
ரூ.50000க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்வோரின் அடையாள நகல்களை அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
50000-க்கும் மேல் ரொக்கமாக வங்கி பரிவர்த்தனை செய்வோர், அடையாள ஆவண நகல் மற்றும் பான் எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடையாள ஆவண நகல் தருபவர்கள், அவை போலியாகவோ, மோசடி செய்ததாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் இதுதொடர்பான அறிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தரும் அடையாளச் சான்றின் நகலுடன், அசல் ஆவணத்தை சரிபார்த்து வங்கிகள் பதிவு செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Saturday, October 21, 2017
புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் இலவச நூலகம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அறிவாற்றலை பெருக்கவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது. பொது நூலகத்துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டம் வேலூர், விழுப்புரம், கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.
ஆனால் பல மாவட்டங்களில் மைய நுலக அதிகாரிகள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டனர். இந்நிலையில் தற்போது இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பள்ளியிலேயே தங்களுக்கு தேவையான புத்தகங்களை கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக படிக்க முடியும். இத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் நூலக பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்ட மைய நூலகங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோல் அருகில் உள்ள கிளை நூலகங்கள் மூலமாகவும் பெறலாம். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தால் அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி
வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது தொடர்பான உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இந்த விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட, 2017ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் 2ஆவது திருத்த விதிகளின்படி, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கிறது. இந்த விதிகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மேற்கொண்டு அறிவுரைகளுக்காக காத்திருக்காமல், வங்கிகள் இதை செயல்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 2017-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், தனி நபர்கள் பல்வேறு நிரந்தர கணக்கு எண் அட்டைகளை (பான்) வைத்திருப்பதை தடுக்கும் வகையில், பான் அட்டைகளுடன் ஆதாரை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதுதொடர்பாக 2005-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வங்கியில் சேமிப்பு கணக்கைத் தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிக மதிப்புத் தொகையை பரிவர்த்தனை செய்வதற்கும் ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதேபோல், ஏற்கெனவே வங்கியில் கணக்குகளை வைத்திருப்போர், தங்களது கணக்குகளுடன் ஆதாரை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த வங்கி அளித்த பதிலில், வங்கிக் கணக்குடன் ஆதாரை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதையே ரிசர்வ் வங்கி தற்போது மறுத்துள்ளது.
முன்னதாக, ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அதில் தனிநபர் ரகசியம் காத்தல் தொடர்பான வழக்கில் மட்டும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது, தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதார் தொடர்பான இறுதி தீர்ப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. பொதுத் துறை வங்கி அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை வெளியிடும் வரையிலும், வங்கி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளின் அதிகாரிகள் சங்கம் (ஏஐபிஒசி) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆட்கள் பற்றாக்குறையால் வங்கிகளில் பணிபுரிவோர் நெருக்கடிக்கு ஆளாகிவரும் நிலையில், ஆதாரை வங்கி கணக்குடன் இணைக்கும் பணியை மேற்கொள்வது என்பது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தரப்பில், சில வங்கிகள், தங்களது குறிப்பிட்ட கிளைகளுக்கு ஆதாரை புதிதாக பதிவு செய்யும் வசதிகளை செய்துதரும்படி உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்' எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, 'ஆதார்' எண் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளது.
இந்நிலையில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, 'ஆன் - லைனில்' பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது. மிக முக்கியமாக, மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். ஆதார் இல்லாவிட்டால், ஆதார் எடுப்பதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும்; அதுவும் இல்லாவிட்டால், அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்து, சுய உறுதிமொழி படிவம் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.
Friday, October 20, 2017
மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' கல்விமுறை: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' எனப்படும் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார். இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள பயிற்சி மையங்கள் 412ல் இருந்து 450 ஆக உயர்த்தப்படும் என்றும், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரு வருட காலம் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் இப்பயிற்சி மையங்களுக்கான அனுமதி வரும் 24ஆம் தேதி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பரில் ஸ்மார்ட் கார்டு
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் 35414, நடுநிலைப் பள்ளிகள் 9708, உயர் நிலைப் பள்ளிகள் 5705, மேனிலைப் பள்ளிகள் 7206 இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 1 கோடியே 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு அடையாள அட்டை போன்ற மாணவர்கள் முழு விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையின் அறிவித்தார்.
இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாணவர்களின் தகவல்களை திரட்டும் பணி தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நேற்று ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது. தற்போது அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்மார்ட் கார்டு அச்சிடும் இயந்திரம் வாங்கியதும் அச்சிடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, டிசம்பர் முதல் வாரத்தில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்குவார்கள். அதில் 1 கோடியே 25 லட்சம் மாணவ, மாணவியர் ஸ்மார்ட் கார்டுகள் பெறுவார்கள்.
3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: ரூ.60 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 770 பள்ளிகள் மற்றும் 11 வட்டாரங்களில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மெய்ந்நிகர் வகுப்பறை என்னும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்பட்டன.
இவற்றின் மூலம் 770 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் நேரடியாக கற்றல் கற்பித்தல் பெற்றுவருகின்றனர். அதேபோல 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் ஆசிரிய மாணவர்களும் கற்றல் கற்பித்தலை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 3 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்ததை அடுத்து தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது ரூ. லட்சம் செலவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கிளாசுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள உபகரணங்களை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் செயல்படுத்தி காட்டினர். இந்த ்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களும் பங்கேற்று ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களை பார்த்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த உபகரணங்களை அமைச்சர் பார்ப்பார். அதற்கு பிறகு அந்த உபகரணங்கள் வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும். நவம்பர் மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கும்.
அக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள,87 ஆயிரம் பள்ளிகளில், ௪௭ லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அவர்களில், ௧௮ லட்சம் பேர், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், தனியார் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களை விட, பொதுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர்; தேர்ச்சி விகிதமும் குறைவாக உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, அக்., ௨௩ முதல், அனைத்து பள்ளி களிலும், சிறப்பு வகுப்பு துவக்கப்படுகிறது. மாணவர்கள் சோர்வாகாமல் இருக்க, ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத்தினர், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் சுண்டல், பிஸ்கட் போன்ற சிற்றுணவு வழங்கப்பட உள்ளது