இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 18, 2017

பெரியார் -2017, தோட்டா

*பெரியாரும் 2017ம்*

எல்லோருக்கும் தெரிந்தது தான்; பெரியாரை கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பனத்தனத்தின் எதிர்ப்பாளராகவுமே பார்க்க வைத்து அவரது பல சிந்தனைகளை புதைக்கும் செயலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், இந்த தாடிக்கார கிழவன் எதை பற்றி தான் சிந்திக்கவில்லை / எதை பற்றி தான் கருத்துக்களை சொல்லவில்லையென யோசித்து பார்த்தால் ஆச்சரியத்தை விட அதிர்ச்சி தான் மிஞ்சுகிறது. 

நவீன விவசாயம், பசிக்கு மருந்து, மாற்று உணவு, கர்ப்பத்தடை, குடும்பக்கட்டுப்பாடு, திராவிடம், தேசியம், கல்வி, மறுமணம், பரீட்சை, வர்ணாசிரமம், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், சாதி, சட்டம், ஒழுக்கம், மூடநம்பிக்கை, முட்டாள்தனம் என எல்லா இடத்திலும் எல்லா களத்திலும் நம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை விட்டு சென்றிருக்கிறார் பெரியார். 

இன்றைய தேதியில், மதவெறியும், போலியான தேச பக்தியும் நம்மை கட்டியணைக்க வரும் வேளையில், இந்த கருப்பு சட்டை கிழவனின் கைத்தடியை கடன் வாங்கித்தான் அவைகளை அடித்து விரட்ட வேண்டும். 

பெரியாரின் ஒட்டு மொத்த சிந்தனைகளையெல்லாம் ஒரு சிறு   கட்டுரையில் அடைத்துவிட முடியாது. ஆனால் கடல் நீரை கையளவு கிண்ணத்தில் அள்ளி வந்தாலும், அது அதே கடல் நீர் தானே.

இன்றைய நாட்டு நடப்புக்கு பொருத்தமான பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை மட்டும் இங்க பதிவிடுகிறேன். இதை பதிவிடும் நோக்கம் ஒன்றே ஒன்று தான்; தயவு செய்து அவரின் கருத்துக்களை படியுங்கள், பின்பற்ற வேண்டுமென்று அவசியமெல்லாம் இல்லை, ஆனா படியுங்கள், ஏனெனில், 'நான் சொல்கிறேன் என்பதற்காக நான் சொன்ன எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்' என சொன்ன ஒரே சிந்தனைவாதி தந்தை பெரியார் மட்டும் தான்.

பெரியார் இதில் பல கருத்துக்களையும் கேள்விகளையும் எழுப்பி 70-80 வருஷங்கள் முடிந்து விட்டன. இது தான் அவர் காலங்கள் தாண்டி வாழும் சிந்தனையாளர் என்றும், நம் காலம் முடியும் வரை அந்த கிழவனின் கரம் பிடித்து நடக்க வேண்டும் என்றும் நம்மை தெளிய வைக்கும் காரணி.

இது மாட்டுக்கறிக்கு:
பூச்சிகளையும் புழுக்களையும் அழுக்குகளையும் மலத்தையும் சாப்பிடும் கோழியையும் மீனையும் மனிதர்கள் சாப்பிடும் போது, புல்லும் புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் சாப்பிடும் மாட்டின் இறைச்சியை ஏன் சாப்பிடக்கூடாது?

இது ஜல்லிக்கட்டுக்கு:
தமிழன் தன்னை இந்தியன் என நினைத்ததால் தமிழர் வீரத்தையும் கலையையும் பண்பாட்டையும் இழந்தான்; தமிழன் தன்னை இந்து என கருதியதால் மானத்தையும் ஞானத்தையும் உரிமையையும் இழந்தான்.

இது Demonetisationக்கு:
படிப்பு வேறு அறிவு வேறு என்பதை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், படித்த முட்டாள்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே படித்த மூடர்களாய் தான் இருப்பார்கள். 

இது Anit-Indianக்கு:
......... இந்த லட்சணத்தில் கல்வியோடு இப்ப தேசபக்தியும் புகட்டப்படுகிறது. இது அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தான காரியமாகும். கடவுள் பக்தி மத பக்தி போலவே இந்த தேசபக்தியும் மனிதர்களின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கி விடுகிறது. அதிலும் நமது நாட்டு தேசபக்தி நினைப்பதற்க்கே பயங்கரமா இருக்கிறது. இது பழைமையை பேசி பின்னாள் போக பார்க்கிறதே தவிர முன்புறம் பார்ப்பதில்லை.

அன்பு :
அன்பு ஒருவரிடம் மட்டும் தான் இருக்கவேண்டும் என சொல்வது முரண்பாடான ஒன்று. காதல் என்பது மிக மிக அற்பமான சாதாரண விஷயம், காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்கு சிறிதும் பொருந்தாது. ( இதை சொன்ன வருஷம் 1940, நவம்பர் )

Media:
உலகில் பத்திரிக்கைகள் 2 விதமானவை, மக்கள் வாழ்க்கையை முன்னேற்ற நடத்தப்படுபவை, தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக்கொள்ள நடத்தப்படுபவை. நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றால், அவர்களை சார்ந்திருக்கும் பத்திரிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ ஸ்ட்ரைக்:
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி தரலாம் என விவாதிக்க தான் அரசியல் திட்டத்தில் கொள்கையாக இருக்கிறதே தவிர, ஒரு முதலாளி இவ்வளவுக்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என ஏதாவது கொள்கையோ திட்டமோ இருக்கா?

No comments:
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மையெல்லாம் அநேகமாக செத்துப்போனவர்களிடம் தானே தவிர உயிரோடு இருப்பவர்களிடம் இல்லை.

Exam:
உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்த படிப்புக்கும் பரிட்சையாக இருக்கக்கூடாது. அப்படியானால் அர்ச்சகனும் புரோகிதனுமே ஒப்புவிக்க முடியும். உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு வருடமும் தேர்ச்சிக்காக பரீட்சிக்க கூடாது.

சினிமா:
நம்ம பெண்கள் அலங்கார பொம்மைகளாகவும், ஆண்களின் கண்களுக்கு விருந்தானத்திற்கும் முக்கிய காரணம் இந்த பாழாய் போன ஒழுக்கமற்ற சினிமா படங்களே ஆகும்.

கூவாத்தூர் ரிசார்ட்:
ஸ்தல ஸ்தாபனங்களில், சட்ட சபைகளிலும், பாராளுமன்றத்திலும், மற்ற இடங்களிலும் நமது மக்கள் பிரதிநிதிகள் நடந்துக்கொள்ளும் தன்மைகளை பார்த்தால் நமது ஜனநாயகத்தின் யோக்கியதை விளங்கவில்லையா?

நாத்திகன்:
நாத்திகன் என்பவன் கடவும் இல்லை என்பவன் என்று அர்த்தம் கிடையாது. புராண, இதிகாச, வேத சாத்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களே, அவற்றை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்ப்பவர்களே நாத்திகர்.

டிவி விளம்பரங்கள்:
பெண்கள் நகைகளின் மேலும் சேலைகள் மீதும் பிரியத்தை ஒழியுங்கள். இவற்றில் பிரியம் வைத்தால் ஜவுளிக்கடைகளின் அலங்காரத்திற்கு தினம் தினம் புது சேலைகள் மாற்றி நிறுத்திவைக்கப்படும் பொம்மைகள் போலத்தான் மதிக்கப்படுவீர்கள்.

பசுவதை:
இந்துக்கள் தான் பசு விஷயத்தில் மோசமாக நடந்துக்கொள்கிறார்கள். வண்டியிலும் ஏரிலும் செக்கில் பூட்டி இழுத்து அது சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். பருவத்தில் காளைகளை கட்டிப்போட்டு விதர்களை நசுக்குகிறார்கள். பாலை கன்றுக்கு கொடுக்காமல், புல்லை போட்டுவிட்டு பாலை தாங்கள் குடிக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள்.

காதல் கல்யாணம்:
வாழ்க்கை துணை விஷயத்தில் காதல் மட்டும் போதாது. அறிவு அன்பு கல்வி பொருத்தம் வேலை அனுபவமெல்லாம் வேண்டும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருந்தது என்றால், அப்போதைய அறிவுக்கு அது போதும்.

பாபா ராம் ரஹீம் வகையறா:
கடவுள் தன்மை என்பது அயோக்கியத்தன்மைகள் தஞ்சமடைய பாதுகாப்பான இடமாகி விட்டது. அவர்களுக்கு தண்டனை என்பதும் சிறைச்சாலை என்பதும் காலிகள் உடலை இளைப்பாறி உடலை தேற்றிக்கொண்டு வரும் இடமாகி விட்டது.

வாமன ஜெயந்தி வாழ்த்துறவங்களுக்கு:
மாற்றான் பெண்களிடம் கிருஷ்ணன் செய்த லீலையை பற்றி வாய் பிளந்து பேசி கை தட்டி கேட்பவன், தனது வீட்டிலே கிருஷ்ணனை அதே லீலைகளை நடத்த விடுவானா?

பெரியார் கருத்துக்கள் இந்த காலகட்டத்திற்கு உதவாது என்ற கிச்சாவுக்கு சொல்லியிருக்கார்:
பழைய அபிப்ராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் பரிசோதனை செய்யப்படலாம். அப்படி பரிசோரிப்பது நடுநிலையில் தவறாமல் இருந்தால் வேண்டும். பரிசோதிக்க வேண்டுமென பேசிவிட்டு பின்வாங்குபவன் யாராயிருந்தாலும் கோழையாவான்.

இன்னமும் நமக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான சிந்தனைகளையும் நாம் கேட்கவேண்டிய கேள்விகளையும் நூறாண்டுகளுக்கு முன்பே போதித்து போய் விட்டான் இந்த சுயமரியாதை சித்தன். மோடியை நினைக்கும் போது இந்த தாடியையும் நினைக்க வேண்டுமென அதே நாளில் அவருக்கே முன்பே பிறந்திருக்கிறான் இந்த கிழவாடி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ;-) :-)

சித்தர்களுக்கு சாவில்லையென்று கதையடிப்பார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும், பெரியார் என்னளவில் சித்தர் தான். சுயமரியாதை சித்தர் எனலாம். 

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே" என்று ஒரு சித்தரே பாடிய பாடல் உண்டு.

யோகமும் தியானமும் செய்து சைவம் பழகி 70 வயதில் இறந்த ரமணர் பலருக்கு மகரிஷி என்றால், அதற்கு மேலும் முப்பது வருடங்கள் மூத்திர பையை சுமந்துக்கொண்டு இந்த தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனை முன்னேற்றத்திற்கு ஓயாது உழைத்தவன் எனக்கு மகாமகாரிஷி.

தமிழ் அழியும் வரை பெரியார் சிந்தனைகள் வாழும், பெரியாரின் சிந்தனைகள் அழியும் போது தமிழர் அழிந்திருப்பர்.

--தோட்டா

1985 ஜாக்டா போராட்டம்


Sunday, September 17, 2017

ஜான் கோல்ட்

குழந்தைகளை நம்புங்கள்.

       அதைவிட மேலானது ஏதுமில்லை. குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும். அச்சம், அவநம்பிக்கை என்று நீண்டகாலமாக நிலைத்து வரும் இச்சுழற்சியை உடைப்பதன் மூலமும், குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமும் சாதிக்க வேண்டும். இதைச் சாதிக்க மிகப்பெரிய நம்பிக்கை வேண்டும். ஆனால் இதை சாதித்து விட்டால் அபூர்வமான புதையலே நமக்காகக் காத்திருக்கின்றது.

      - ஜான்கோல்ட்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது: கல்வித்துறை அறிவுறுத்தல்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளிலும் அல்லது தனியாக மையங்கள் அமைத்தும் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (டியூஷன்) எடுக்கக் கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்த விவரம்:-

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்கள் அரசு சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்ற போதிலும், தங்களது வீடுகளில், மாணவர்களுக்கு தனிப் பயிற்சி வகுப்புகள் (டியூஷன்) நடத்தி வருகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் அந்தந்த வகுப்புகள் மற்றும் இடங்களுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

தொடக்க நிலை வகுப்புகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300 வரையிலும், உயர்நிலை வகுப்புகளுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கணிதம், வேதியியல் என ஒவ்வொரு பாடத்துக்கும் தனியாக மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் நடத்தும், தனிப்பயிற்சி மையங்களில் காலை மற்றும் மாலைநேரங்களில், மாத சம்பளம் பெற்று பாடம் நடத்துகின்றனர். மாதந்தோறும் கட்டணம்: இதன் காரணமாக பிளஸ் 1, பிளஸ் 2 எடுத்து வரும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களும், பத்தாம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் அரசு நிர்ணயித்தபடி பாடங்களை நடத்துவதில்லை என்றும் தாங்கள் நடத்தும் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு வரவழைத்து பாடம் நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும், மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் மாணவர்கள், பெற்றோர் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். புகார் அளித்த பெற்றோர்: இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுக்கத் தடை உள்ளது. இதை ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில் மற்றும் தனியாக தனிப்பயிற்சி வகுப்புகள் எடுப்பதைக் கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அனைத்துத் துறைகளிலும்...: இது குறித்து தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து தனிப்பயிற்சி வகுப்புகள் எடுக்கக் கூடாது என அதிகாரிகள் கூறுவது வரவேற்கத் தக்க ஒன்றுதான். ஏனெனில் இது குறித்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதை மருத்துவத்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் நோயாளிகளை தாங்கள் வைத்திருக்கும் மருத்துவமனைக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பெறும் மதிப்பெண்கள், நீட் மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு மருத்துவப்படிப்புகளில் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அத்தகைய முக்கியவத்துவம் வழங்காவிட்டால் பொதுத்தேர்வுகளின் மாணவர்கள் போதிய கவனம் செலுத்த மாட்டார்கள். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசே பயிற்சி மையங்களை ஏற்பாடு செய்து வருவதால் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அபராதத்தில் யாருக்கு விலக்கு? எஸ்.பி.ஐ., தீவிர ஆலோசனை


சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையில் இருந்து, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஆலோசித்து வருகிறது. நாட்டின் மிகப் பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை இந்தாண்டு ஏப்ரலில் அமல்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, இதில் மாற்றம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக, வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர், ரஜ்னிஷ் குமார் கூறியதாவது:நாடு முழுவதும் ஸ்டேட் வங்கியில், 40 கோடி வங்கி கணக்குகள் உள்ளன. அதில், அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை, 13 கோடி. இந்த கணக்குகளுக்கு அபராதம் கிடையாது. மீதமுள்ள, 27 கோடி கணக்கில், 20 சதவீதம் பேர், மாத குறைந்தபட்ச இருப்பை பராமரிப்பதில்லை. இதுபோன்றவர்களுக்கே அபராதம் விதிக்கபடுகிறது.

ஜூன் மாதத்தில், இந்தக்கணக்குகளில் இருந்து, 235 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில், ஸ்டேட் வங்கியின் இந்த அபராதத் தொகை மிகவும் குறைவே. வங்கி கணக்குகளை பராமரிக்க அதிகம் செலவிடுகிறோம். செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்யவே, இந்த அபராத முறை கொண்டு வரப்பட்டது. இந்த அபராத முறைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், மூத்த குடிமக்கள், மாணவர்கள் போன்ற ஒரு சிலரின் கணக்குகளுக்கு மட்டும் இந்த அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்; விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, September 16, 2017

இலவச பயிற்சி மையங்கள்

பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 400க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் இம்மாத இறுதிக்குள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ விளக்கக் கூட்ட பொறுப்பாளர்கள்


தேசிய அடைவுத் தேர்வு

DEE PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு SMART CLASS ROOM ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு


ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி


ஐன்ஸ்டீன் தியரி

ஐன்ஸ்டீன் சொன்ன E=MC^2-ஐ இவ்வளவு ஈஸியாக விளக்க முடியுமா?
ஜெ.ஆபிரகாம்

உலகில் இதுவரைக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் பல சமன்பாடுகளைத் தந்திருக்கிறார்கள். அதில், சார்பியல் கொள்கை (the Theory of Relativity), ராமன் விளைவு (Raman's Effect) போன்றவற்றை போல முக்கியமானது ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு(E=MC^2). ”இது தெரியுமே” என்பவர்களிடம் விளக்கம் கேட்டால் யோசிக்கத்தான் செய்வார்கள்.

ஆரம்பம் :
1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது ஆராய்ச்சியை சமர்ப்பிக்கிறார்.அதுதான் E=MC^2.
இதில் M- நிறை ,E- ஆற்றல், C- ஒளியின் திசைவேகம். மேலும், செல்வதற்கு முன் நிறை (Mass), ஆற்றல்(Energy) பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆற்றல் (Energy):
ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்.
நிலக்கரி ஒரு நிலை ஆற்றல். இதை எரிக்கும் போது வெப்ப ஆற்றலாக மாறுகிறது. இது ஜுல் என்ற அழகால் அளக்கப்படுகிறது..

W=Mg என்பது அனைவரும் அறிந்ததே.
நிறை kg லும், எடை N அலகிலும் அளக்கப்படுகிறது.
எடுத்துகாட்டு: ஐஸ் கட்டி 100கிராம் என்றால் அது உருகி தண்ணீராக மாறினால் கூட அதே 100கிராம்தான் இருக்கும். ஆக, நிறை ஆனது மாறிலி.

கதைக்குள் வருவோம்.  E=MC^2
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் மிகக் குறைந்த நிறையைக் கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே ஐன்ஸ்டீன் சொல்வது.

சில எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்.

1.ஒரு பீரங்கி மற்றும் ஓர் இரும்புக் குண்டை எடுத்துக்கொள்வோம். இந்தக் குண்டை அதிக ஆற்றலுடன் உந்தி வெளியே தள்ளும் போது,  ஒளியின் திசைவகத்தில் சென்று கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

நாம் வெளியே தள்ளும் ஆற்றலில் (energy)ஒரு பாதி மட்டும் வேகத்தை அதிகப்படுத்தும். மற்றொரு பாதி, அந்த இரும்புக் குண்டின் நிறையை (mass) அதிகப்படுத்தும்.

ஆக, ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய எந்த ஒரு பொருளின் வேகத்தை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் அதன் நிறையைத்தான் அதிகப்படுத்தும்.

2. ஒரு கால்பந்தை ஒருவன் மெதுவாக கிக் செய்கிறான்.அது உருண்டு வந்து காலில் படுகிறது. நம்மீது ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
அதே பந்தை அதிக வேகத்தில்(m/s) கிக் செய்கிறான் என்றால் அது உங்கள் முகத்தில் வந்து படும் போது அந்தப் பந்தின் நிறையானது முதலில் இருந்ததை விட அதிகமாகக் காணப்படும். அதுவே அந்த பந்தானது ஒளியின் வேகத்தில் சென்றால் நினைத்துப் பாருங்கள்.

PV=MRT.. ஆக, திசைவேகம் அதிகரித்தால் நிறையும் அதிகரிக்கும். அதாவது நேர்த்தகவில் இருக்கும்.


3. ஆற்றலை நிறையாகவும், நிறையை ஆற்றலாகவும் மாற்ற முடியும்.
தங்கக் கட்டியை எடுத்து சுமார் 10-20 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தினால், அதனுடைய நிறையானது 0.000000000000014கிலோ கிராம் அதிகரிக்கும்.

வெப்பப்படுத்துவதை நிறுத்தினால் பழைய நிலைமைக்குத் திரும்பும்.

ஆகவே, நிறையும் ஆற்றலும் சமம்..(E=M).
இதில் C^2 என்பது மாறிலி..(3×10^8 *3×10^8 = 9×10^16 m/s)
இதைத்தான் ஆற்றல்-நிறை சமன்பாடு E=MC^2 என்று சொல்கிறோம்..

நிறை  ஒரு kg என்றால் C^2=9×10^16m/s. ஆக,  9,00,00,00,00,00,00,00,00 joule ஆற்றலை வெளிவிடும். இந்த ஆற்றல் ஐரோப்பா கண்டத்தை ஒரு மணி நேரத்துக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும். 

மிக குறைந்த நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்றோமே. அது எப்படி என்று பார்ப்போம்.
யுரேனியம் 235 உடன் ஒரே ஒரு நியூட்ரானை மோதச் செய்தால், அது யுரேனியம் 236 ஆகும். மேலும் , பிரிந்து 141 BR + 92kr + 3நியூட்ரான் ஆகும். இதற்கு பெயர்தான் அணுக்கரு பிளவு(Nuclear Fission)..

இந்த 3 நியூட்ரான்கள் அருகில் உள்ள 3 யுரேனியத்துடன் மோதி அதே வினை நடைபெறும் .
அதோடு 9 நியூட்ரான்கள் வெளிவரும் ...
9 நியூட்ரான்கள் 9 யுரேனியத்துடன் இணைந்து 27 நியூட்ரான்களாக , அப்படியே சங்கிலித் தொடர் (chain reaction) நடத்துகிறது.

என்ன நடக்கிறது :
யுரேனியம் + நியூட்ரான்
235+1=236u

பிளவின் போது
140.883 + 91 +  3×1.008=235.812u
236- 235.812 =0.188u

0.188 u இது மாதிரி குறைந்த அளவு ஆற்றலை ஒரு யுரேனியம் நியூட்ரானிடம் மோதி வெளி வருகிறது. இதேபோல் பல கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்தும்....

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டில் யுரேனியத்தின் அளவு 0.860கிராம் மட்டுமே. அதாவது நமது பேனா மூடியின் நிறையின் பாதி அளவே.
0.8 கிராம் 15,000,000 அளவு TNT ஐ வெளிப்படுத்தியது. சுமார் 80000 பேர் இறந்தனர்..

ஐன்ஸ்டீன்ஸ் E=MC^2 விளக்கம் என்பது குறைந்த அளவு நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே.

அணுகுண்டு இப்படித்தான் வெடிக்கிறது:

போரின் போது,  எடுத்துக்காட்டாக, அணு குண்டில் யுரேனியம் 100கி இருந்தால்தான் சங்கிலித் தொடரை ஏற்படுத்தும்.
ஆனால் ,95 கி மட்டுமே நிரப்பப்படும்.

குண்டு போடும் இடத்திற்கு வந்த உடன் 10கி உந்தித் தள்ளி 105கி ஆக ஆக்கி விடும். இது 100ஐ விட அதிகம் என்பதால் நியூட்ரானுடன் வினைபட்டு மிக அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும். அதாவது 5000 செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும்.

அறிவியலை ஆக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அழிவுக்குப் பயன்படுத்தினால் நினைக்க முடியாத சேதங்களை ஏற்படுத்தும். இந்தக் கதிர் வீச்சினால் ஏற்படும் புற்று நோய், DNA மாறுபாடு ஆகியவை அபாயகரமானவை.

அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டு வலிமை வாய்ந்தது. அது வெடிப்பதை நாமோ நமக்கு அடுத்தத் தலைமுறைகளோ நிச்சயமாக பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

Friday, September 15, 2017

ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு


தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.

முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும். முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.

முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டத்தில் தன் பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன் பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன், எத்தனை அரசு ஊழியர்களுக்கு அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்படாமல் உள்ளது, எப்போது செலுத்தப்படும், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இந்த வழக்கில் நிதித் துறை முதன்மை செயலாளரையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது. எனவே ஓய்வூதியம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக வரும் திங்கள்கிழமை (செப்.18) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.