இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 02, 2017

அறிவியல் பாட செய்முறை பதிவு 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


மார்ச் 2018ல் நடக்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்கள், முதன் முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள், ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்கள் மற்றும் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு இந்நாள் வரை பெயர் பதிவு செய்திராத தனித் தேர்வர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து தனித் தேர்வர்களும் வரும் 5ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீதம் வருகை தந்த தனித் தேர்வர்கள் மட்டுமே 2017-18 கல்வி ஆண்டில் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, வரும் 30ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு


ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன.

அதை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஊதிய விகிதங்களை மாற்றிஅமைப்பது குறித்து, பரிந்துரைகள் அளிக்க, ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது.இக்குழு, சென்னை, கடற்கரை சாலையில் உள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில், மே, 26, 27ல், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.

இரண்டு நாட்களில், 150க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கை மனு அளித்தனர்.இரண்டாம் கட்டமாக, நேற்று விடுபட்ட சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடம், கருத்து கேட்கப்பட்டது. இன்று மாலையுடன், கருத்து கேட்பு நிகழ்ச்சி முடிகிறது

மொபைல் நிறுவனங்களுக்கு 'டிராய்' நெருக்கடி


மொபைல் போன் நிறுவனங்கள், அறிவித்தபடி, 'இன்டர்நெட்' வேகத்தை வழங்குவதில்லை என, புகார்கள் குவிந்து வருவதால், அப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முடிவெடுத்து உள்ளது. 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவன வருகைக்குப் பின், தொலை தொடர்பு துறையில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதனால், ரிலையன்ஸ் உட்பட, அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு விலையை குறைத்து வருகின்றன. அது போதாதென, மொபைல் இன்டர்நெட் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளன. பின், தங்களது இன்டர்நெட் சேவை தான் மிக வேகமானது என, வாடிக்கையாளர்களை கவர, அறிவிப்பு வெளியிட்டன. ஆனால், அந்நிறுவனங்கள் கூறியபடி, இன்டர்நெட் வேகமாக செயல்படவில்லை என, ஏராளமான புகார்கள் கூறப்படுகின்றன.

எனவே, அந்த புகார்களை, ஜூலை, 17க்குள், kapilhanda@trai.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி, டிராய் அறிவித்துள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, 011- - 2322 0209 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், அனைத்து கருத்துக்களும், www.trai.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.

பயிற்சி

Thursday, June 01, 2017

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு


அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு


அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.

அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்


முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது. இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.

இதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்பிஐ., புதிய சேவை கட்டணம் : 10 அம்சங்கள்


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :

1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.

3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும்.

5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.

6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.

8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.

10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

B.L.O SPECIAL CAMP 9.7.17 and 23.7.17

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை கட்டணங்கள் அமலுக்கு வந்தது


பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதுவரை இலவமாக அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும். 2 லட்சம் ரூபாய் வரை 15 ரூபாய், 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய் என கட்டணம் இருக்கும்.

அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம். இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்.களில் மாதந்தோறும் 4 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் பணம் எடுக்க முடியும், அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு சொந்த கணக்கு இருக்கும் கிளையில் 50 ரூபாயும், ஏ.டி.எம்.ல் 10 ரூபாயும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தலா 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். 10 காசோலைகள் உள்ள புத்தகத்திற்கு 30 ரூபாயும், 25 காசோலைகளுக்கு 75 ரூபாயும், 50 காசோலை உள்ள புத்தகத்திற்கு 150 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இவற்றிற்கு சேவை வரியும் உண்டு. அதேபோன்று ஸ்டேட் வங்கி யின் வட்டி எனப்படும் ஸ்மார்ட் போன் செயலில் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 31, 2017

சேமநல நிதி கணக்கு அறிக்கை மாநில கணக்காயர் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்


இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை சார்பில் முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) எஸ்.சுரேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017ம் ஆண்டிற்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில காணக்காயர் அலுவலக வலைதளத்தில் www.agae.tn.nic.in ஜூன் மாதம் முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படயுள்ளது.

எனவே பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாரர்கள் இந்த வலைதளத்தில் இருந்து தாங்களின் 2016- 2017ம் ஆண்டின் வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

பள்ளி திறக்கும் நாளில் இரண்டு 'செட்' சீருடை


பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு இரண்டு, 'செட்' சீருடைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவு அருந்தும், 45 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு, நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சீருடைகளை, பள்ளிக்கல்விக்காக, சமூக நலத்துறை தயார் செய்து வழங்குகிறது.புதிய கல்வி ஆண்டு, இன்று துவங்கும் நிலையில், முதற்கட்டமாக, இரண்டு செட் சீருடைகள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் முதல் நாளில், இரண்டு செட் சீருடையும், பின், ஆக., - செப்டம்பரில், மீதமுள்ள இரண்டு செட் சீருடையை வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பான்' எண்ணுடன் ஆதாரை இணைக்க எஸ்.எம்.எஸ்., வசதி


பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, எஸ்.எம்.எஸ்., மூலமாக இணைக்கும் வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு இல்லாமல் அதை செய்ய முடியாது. அந்த பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, வருமான வரித்துறை அறிவித்தது.

பின், வருமான வரித்துறையின் இணையதளத்தின் மூலமாக, பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்கும் வசதி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவற்றை, மொபைல் போனில் இருந்து, எஸ்.எம்.எஸ்., வழியாக இணைக்கும் வசதியை, வருமான வரித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.  இதன்படி, UIDPAN என அடித்து, இடைவெளி விடாமல், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், ஒரு எழுத்து இடைவெளி விட்டு, பான் கார்டு எண்ணையும் டைப் செய்து, அதை, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்

உடனே, பான் கார்டும், ஆதார் கார்டும் இணைக்கப்பட்டு விடும். ஆனால், பான் கார்டில் உள்ள பெயருக்கும், ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் சிறிய வித்தியாசம் இருந்தாலும், எஸ்.எம்.எஸ்., வசதியை பயன்படுத்த முடியாது  அவ்வாறு பெயரில் சிறிய மாற்றம் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அருகில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு செல்ல அறிவுறுத்தி, எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பப்படும்.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கான புதிய மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ) மாதிரி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

Click below

https://drive.google.com/file/d/0B9vI3zgChya6WXp6d3JGdnYtaTA/view?usp=sharing

News

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு  ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ஊதியக்குழுவிற்காக விவரம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநரின் நடவடிக்கைகள்

Click below

https://app.box.com/s/f6u1ehime5x3glbt1c4tly979rozkemu

4th std dictation words

https://app.box.com/s/wfxajlhp2sxxefx20r4sk8xvhb6pjtn1

Dictation words

https://app.box.com/s/ve212xm0vpn4v6264pbg6nbdu4t69wwf

https://app.box.com/s/56staabhs5wjbdn709qw3st2o48havd6

https://app.box.com/s/uuj1gyhto8mfdxiuvaye41b336io4mfo

https://app.box.com/s/wfxajlhp2sxxefx20r4sk8xvhb6pjtn1

Tuesday, May 30, 2017

இன்ஜினியரிங் பதிவுக்கு இன்று கடைசி நாள்


அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைகழகத்தின் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே பொறியியல் படிக்க விரும்பிய மாணவர்கள் அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கினர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 12ம் தேதி வெளியானது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஜூன் 22ம் தேதி இன்ஜினியரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு இன்று கடைசி நாளாகும்.

*தமிழக அரசின் ஊதிய மாற்றக்குழுவுடன் ஊதிய மாற்றம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம்.*


Monday, May 29, 2017

ஊதியக்குழுவிடம் TNPTF அளித்த கோரிக்கை

Click below

https://app.box.com/s/3zs24wpggoo5f9s7hupsh3ux3otk0bqt

10ம் வகுப்பு துணைத் தேர்வு : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வு எழுத வராதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்புவோர் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுத வராதவர்கள் ஆகியோருக்காக ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அவர்கள் படித்த பள்ளிகள், தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 31ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 பணமாக செலுத்த வேண்டும்.

ஹால்டிக்கெட்டுகளை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மாணவர் சேர்க்கை அரசு சட்டக் கல்லூரியில் ஜூன் 2 முதல் விண்ணப்பம் வினியோகம்


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஏஎல்எல்பி(5 ஆ ண்டுகள்), எல்எல்பி(3 ஆண்டுகள்) சட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. 5 ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 3ஆண்டுக்கான படிப்புக்குரிய விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், பூம்பொழில், எண் 5, டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலை, சென்னை-28 முகவரியில் பெற்றுக் கொள்ள வேண்டும். தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்ப கேட்புக் கடிதம் மற்றும் எந்த பாட பிரிவு படிக்க விரும்புகிறார் என்பதை குறிப்பிட்டு எழுத வேண்டும். மேலும், இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரி, விழுப்புரம், தர்மபுரி, ராமநாத புரம் சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலங்களில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகள் இணைத்து, சட்டப் பல்கலைக் கழக, ‘‘தலைவர், சட்டப் படிப்பு சேர்க்கை 2017-2018’’ என்பவரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். அல்லது இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஜூன் 23 மற்றும் ஜூலை 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 4,480 பேருக்கு பதவி உயர்வு, மாறுதல் உத்தரவு


தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 4,480 பேர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது.

தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 22ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிந்தது. அதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 252, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 276, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் 139, பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் 122, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு 261, பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதல் 20, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 625, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 500, இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் 1408, இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் 582, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் 238, பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 57 என மொத்தம் 4,480 பேர் உத்தரவு பெற்றுள்ளனர்.

மாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் 01:06:2017 அன்று பணியில் சேர இயக்குநர் வழிகாட்டுதல் செயல்முறை..