Click below
https://drive.google.com/file/d/0B9vI3zgChya6WXp6d3JGdnYtaTA/view?usp=sharing
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
https://app.box.com/s/ve212xm0vpn4v6264pbg6nbdu4t69wwf
https://app.box.com/s/56staabhs5wjbdn709qw3st2o48havd6
https://app.box.com/s/uuj1gyhto8mfdxiuvaye41b336io4mfo
https://app.box.com/s/wfxajlhp2sxxefx20r4sk8xvhb6pjtn1
அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைகழகத்தின் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே பொறியியல் படிக்க விரும்பிய மாணவர்கள் அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கினர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 12ம் தேதி வெளியானது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஜூன் 22ம் தேதி இன்ஜினியரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்தநிலையில், அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு இன்று கடைசி நாளாகும்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வு எழுத வராதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்புவோர் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுத வராதவர்கள் ஆகியோருக்காக ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அவர்கள் படித்த பள்ளிகள், தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 31ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 பணமாக செலுத்த வேண்டும்.
ஹால்டிக்கெட்டுகளை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஏஎல்எல்பி(5 ஆ ண்டுகள்), எல்எல்பி(3 ஆண்டுகள்) சட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. 5 ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 3ஆண்டுக்கான படிப்புக்குரிய விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், பூம்பொழில், எண் 5, டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலை, சென்னை-28 முகவரியில் பெற்றுக் கொள்ள வேண்டும். தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்ப கேட்புக் கடிதம் மற்றும் எந்த பாட பிரிவு படிக்க விரும்புகிறார் என்பதை குறிப்பிட்டு எழுத வேண்டும். மேலும், இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரி, விழுப்புரம், தர்மபுரி, ராமநாத புரம் சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலங்களில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகள் இணைத்து, சட்டப் பல்கலைக் கழக, ‘‘தலைவர், சட்டப் படிப்பு சேர்க்கை 2017-2018’’ என்பவரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். அல்லது இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஜூன் 23 மற்றும் ஜூலை 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 4,480 பேர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது.
தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 22ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிந்தது. அதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் 252, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 276, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் 139, பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் 122, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு 261, பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதல் 20, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 625, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 500, இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் 1408, இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் 582, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் 238, பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 57 என மொத்தம் 4,480 பேர் உத்தரவு பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆட்டோக்களில் மைக்-செட் பொருத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும். இதற்காக ஒரு ஒன்றியத்துக்கு ரூ.3 ஆயிரம் ஒதுக்கி தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித்துறை நேற்று வெளியிட்ட உத்தரவு: தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
* இலவச கல்வி குறித்து பொதுமக்கள் அறியும்படி பேனர்கள் வைக்க வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்ய வேண்டும்.
* ஒரு ஒன்றியத்துக்கு 2 ஆட்டோக்கள் வீதம், 3 நாட்களுக்கு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பிரசாரம் செய்ய வேண்டும். 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை இதை செய்து முடிக்க வேண்டும்.
* ஒரு ஒன்றியத்துக்கு 2 ஆட்டோ வீதம் 413 ஒன்றியங்களுக்கு 826 ஆட்டோக்களுக்கு ஆகும் செலவின விவரம்: ஆட்டோ வாடகை ரூ.1500, ஆட்டோ பின்னால் பேனர் வைக்க ரூ.500, ஒலிபெருக்கி, மைக் செட் வாடகை ரூ.1000, செலவிட வேண்டும்.
* டிவி, வாட்ஸ் ஆப், ரேடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை ஜூன் 6ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் கடன் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெறலாம்.
தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம். கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம். சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம். இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன.
அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். 'இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இயங்கி வரும் அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சேர்க்கையை கோவை அரசு பொறியியல் கல்லூரி நடத்துகிறது. இதுகுறித்து அரசின் அறிவிப்பு:
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விரும்புவோர் www.gct.ac.in, www.tn-mbamca.com ஆகிய இணையதளங்கள் மூலம், வரும் ஜூன் 1 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்-லைன் பதிவுக்கு ஜூன் 30 கடைசி நாளாகும். பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, ரூ. 300-க்கான விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
"செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை-2017, அரசு பொறியியல் கல்லூரி, கோவை 641013' என்ற முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களை சம்மந்தப்பட்ட இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நிகராக, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆங்கில மொழியில் பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்காக, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த நிலையை மாற்ற, அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே, ஆங்கில மொழி திறனை வளர்க்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, முதல் கட்டமாக, தொடக்கப் பள்ளிகளில், பிளாஷ் கார்ட் அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆங்கில எழுத்து, பழம், காய்கறி, விலங்கு, பறவை போன்றவற்றின் பெயர்களை விவரிக்க, வண்ண படங்களுடன் கூடிய அட்டைகளை பயன்படுத்தி, வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்துக்கேட்பு கூட்டம், சென்னையில், நேற்று துவங்கியது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், ௨௦௧௬ல், அமல்படுத்தப்பட்டன. அதை தங்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, பரிந்துரைகளை அளிக்க, நிதித்துறை செயலர் சண்முகம் தலைமையில், ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்துக்கள் கேட்க முடிவு செய்தது.அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில் நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது. இது குறித்து, நிதித்துறை செயலர், சண்முகம் கூறியதாவது:
அரசு அங்கீகாரம் பெற்ற, 149 சங்கங்களிடம், மனுக்களை பெற உள்ளோம். அதன்பின், ஜூன், 2 மற்றும் 3ல், ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கங்களிடமும், மனுக்கள் பெறப்படும். ஜூன் இறுதிக்குள், அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.
வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலை மாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.