இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 23, 2017

வாடிக்கையாளர்களுக்கு 4 சதவீத வட்டி வழங்குகிறது பேடிஎம்


பேடிஎம் நிறுவனம் புதிதாக துவங்கவுள்ள வங்கி மூலம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4 சதவீத வட்டி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்ட பின்பு டிஜிட்டல் முறை பண பரிமாற்றத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இதனால் ஆன் - லைன் பண பரிமாற்ற நிறுவனமான பே டிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. தற்போது 2.2 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் தற்போது தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனம் கட்டண வங்கியை துவங்கி இருக்கிறது. பேடிஎம் வங்கி இந்த வங்கியை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்யவும் மாற்றவும் மட்டுமே முடியும் கடன் வாங்க முடியாது.

அந்த நிறுவனத்தில் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்ய முடியும். பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் 4 சதவீதம் வரை வட்டியும் வழங்க இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூ 25,000 பணத்திற்கும் ரூ 250 பணம் வழங்குகிறது(கேஷ் பேக்). மேலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு, செக் புக், மற்றும் டி.டி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மற்றும் இந்த வங்கியில் துவங்கப்படும் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எதுவும் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி வாடிக்கையாளர்கள் இலவச இணைய வழி பண பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த வங்கிக்காக நாடு முழுவதும் 31 கிளைகளையும், 3 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மையங்களையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தை அரசு பாண்ட்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தையே வட்டியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. எந்த அபாயகரமான முதலீடு செய்யவும் விரும்பவில்லை என அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தேர்வுத்திட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணி நிரவல் நடைபெற உள்ளதால் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் மாற்றம்

2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். அதேபோல 2019-2020 கல்வியாண்டில் 2,7,10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்கும். 2020-2021 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

சிறந்த கல்வியாளர்களை வைத்து பாடத்திட்டத்தில் மக்கள் மன ஓட்டத்துக்கு இணையாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்துத் தரப்பினர் கருத்தும் பாடத்திட்டம் வரைவுக்குப் பெறப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 11ஆம் வகுப்பில் தேர்ச்சியடையவில்லை என்றால், மாணவர்கள் தொடர்ந்து 12ஆம் வகுப்பு படிப்பார்கள். தோல்வியடைந்த மாணவர்கள் அந்த ஆண்டு ஜூன் மாதமே மறுதேர்வு எழுதுவர்' என்று கூறினார்.

FLASH NEWS *G.O.NO.100, பள்ளிக்கல்வி -+1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு, தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு*



கல்லூரியைப் போல +1ல் தோல்வி அடைந்த பாடத்துக்கு அரியர் தேர்வு: செங்கோட்டையன்


பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை, கல்லூரிகளில் எழுதுவது போல அரியர் தேர்வு எழுத வழி வகை செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கும் 2017-18ம் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, பிளஸ் 1 வகுப்புக்கும் இனி பொதுத் தேர்வு நடத்தப்படும். பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து +2 படிக்கலாம். தோல்வி அடைந்த பாடத்தைப் படித்து ஜூன் அல்லது ஜூலையில் அரியர் தேர்வெழுதி தேர்ச்சி பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், +1 வகுப்புக்கான செய்முறை தேர்வும், +2 வகுப்புக்கான செய்முறை தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதுநிலை ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகும் வரை தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்றும் தமிழகக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இந்தவாரம் கண்மனியில்... எனது வரிகள்

Monday, May 22, 2017

TET PAPER II ANSWER key

Click below

https://docs.google.com/uc?export=download&id=0B9Z5J_lSXCmlQ0l3Z2w5eGg3Zzg

TET PAPER I ANSWER KEY TRB

Click below

https://docs.google.com/uc?export=download&id=0B9Z5J_lSXCmlRlRVS1FJZFMxWU0

டி.இ.டி., தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் - 1ல், 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 555 பேரும், தாள் - 2ல், 5 லட்சத்து, 12 ஆயிரத்து, 260 பேரும் தேர்வுகளை எழுதி உள்ளனர்.இத்தேர்வின், கேள்வித்தாளுக்கு உரிய தற்காலிக விடைக்குறிப்புகள், http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றின் மீது, தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, வரும், 27க்குள், ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு விடைக்கும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, பிரத்யேக படிவத்தில், ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களின் ஆதாரத்தை மட்டும் அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதுாரக் கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்கப்படாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது


வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது. பள்ளிக்கல்வி துறையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான, 'ரேங்க்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், மூன்று நிறங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்பட உள்ளன. அதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத்தேர்வும் அமலாக உள்ளது. புதிய மதிப்பெண் முறை இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில், வினாத்தாள் முறை மற்றும் மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதலில், பிளஸ் 1க்கும், அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கும் புதிய மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, தற்போது பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கு, தலா, 1,200 ஆக இருக்கும் மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்படும். மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலத்திற்கு, தலா, 100 மதிப்பெண்களும், முக்கிய பாடங்களுக்கு தலா, 100 மதிப்பெண்களும் வழங்கப்படலாம் என, ஆலோசிக்கப்படுகிறது. அரசாணையாக இதில், செய்முறை தேர்வு இருக்கும் பாடங்களில் அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுக்கு, தலா, 10 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு, 80 மதிப்பெண்களும் இருக்கும் என, தெரிகிறது. மேலும், நான்கு முக்கிய பாடங்களில், ஒரு பாடம் மட்டும், விருப்பப் பாடமாக வழங்கப்பட உள்ளது. அதேபோல், தேர்வு எழுதும் நேரத்தையும், மதிப்பெண்ணுக்குஏற்ப குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'இதற்கான கோப்பு, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின், அரசாணையாக வெளியிடப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வினாத்தாளும் மாறுகிறது!

பொதுத்தேர்வுகளில் மாற்றம் வரும் போது, வினாத்தாள் தயாரிப்பு முறையும் மாற்றப்பட உள்ளது. மாணவர்கள், புத்தகத்தில் உள்ள வரிகளை மனப்பாடம் செய்து, கட்டுரை வடிவில் எழுதும் தேர்வு முறை, தற்போது உள்ளது. இதில், அதிக மதிப்பெண் பெற்றாலும், போட்டி தேர்வுகளிலும், உயர் கல்வியிலும், மாணவர்களால் ஜொலிக்க முடிவதில்லை. எனவே, வினாத்தாளில், சி.பி.எஸ்.இ., போல் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதில், சரியான விடையை தேர்வு செய்யும், 'அப்ஜெக்டிவ்' முறை வினாக்கள் அதிகமாக இருக்கும். மேலும், பாடத்தில் உள்ள அடிப்படை சூத்திரங்களை பயன்படுத்தி, சிந்தித்து விடை எழுதும் வகையிலான, புதிய வினாக்களும் இடம்பெற உள்ளன.

காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்


அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை இருந்தால் 2 இடைநிலை ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம்.

மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களை நியமிக்கலாம். மேலும் தொடக்கப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ளலாம். 2016 ஆக., 1 கணக்கெடுப்பின்படி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக கணக்கிடப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (மே 24) பணி நிரவல் செய்யப்பட உள்ளனர்.

கடந்த காலங்களில் 5 மாணவர்கள் குறைந்தால் கூட உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர். இந்த ஆண்டு 'ஆன்லைன்' மூலம் கலந்தாய்வு நடப்பதால் ஒரு மாணவர் குறைந்தால் கூட, உபரி ஆசிரியரை பணிநிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால், அப்பணியிடங்கள் அனைத்தும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே சமயத்தில் ஆயிரம் பணியிடங்கள் காலாவதியாவதால், புதிய பணி வாய்ப்பு குறையும். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,' என்றார்.

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு


தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், கடந்த 19ல் துவங்கியது.

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு, இன்று நடக்கவிருந்த கவுன்சிலிங், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்காலிகமாக ஒத்தி வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை ஐகோர்ட்டில், வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகும் வரை, பதவி உயர்வு கலந்தாய்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும், இப்பதவிக்கான, கவுன்சிலிங் நடக்கவிருக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:பட்டதாரி ஆசிரியர்கள், பணி மூப்பு அடையும் முன், தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், 2008ல், சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினர். பள்ளிக்கல்வித் துறை சார்பில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். ஜூன் இறுதிக்குள், காலியாக உள்ள, 250 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், பதவி உயர்வால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மறுகூட்டலுக்கு அவகாசம்

10-ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 24 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது.

கோவை தணிக்கைக் குழு வழங்கிய M.Philல் ஊக்க ஊதியத்திற்கு தகுதியான பல்கலைக்கழக பட்டியல்.





Sunday, May 21, 2017

ஐடிஐ-க்களுக்கு பள்ளி அந்தஸ்து: மத்திய அரசு திட்டம்


தொழில் பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தொழில் பயிற்சிகளை ஐடிஐ-க்கள் அளித்து வருகின்றன. எனினும், அங்கு பயிற்சியை முடித்த மாணவர்கள், பள்ளிகளில் படிப்பை முடித்த மாணவர்களைப் போல கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஐடிஐ-க்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை அளிக்கலாம் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் திறன் மேம்பாடு - தொழில் முனைவு நலத் துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.

அதனை ஏற்றுக்கொண்ட மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற ஒரு தனி வாரியத்தை, ஐடிஐ-க்களுக்காக அமைக்க முடிவு செய்துள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் புதிய வாரியம், பள்ளிகளில் அரசுத் தேர்வுகள் நடத்தி வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையாக, ஐடிஐ-க்களில் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும். இந்தச் சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள், 10-ஆவது மற்றும் 12-ஆவது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இணையாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர முடியும்.

அதற்காக, சிபிஎஸ்இ, பல்கலைக்கழக மானிய ஆணையம், மாநில கல்வி வாரியங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாடெங்கிலும் உள்ள 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐடிஐ-க்களில் பயிலும் மாணவர்கள் பலனடைவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

அதிரடி மாற்றம்

பிளஸ் டூ பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 11,12 ம் வகுப்பு பாடதிட்டத்திலும் மாற்றம் கொண்டு வர விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

* பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு பதிலாக மொத்த மதிப்பெண் 600-ஆக குறைகிறது.

* பிளஸ் டூ தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

* பாடவாரியாக 100 மதிப்பெண் கேள்வியில் 90 மதிப்பெண் கேள்வி பாடத்திலிருந்து வரும், 10 மதிப்பெண் கேள்வி மாணவர் செயல்திறன் தொடர்புடையதாக இருக்கும்

* நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அப்ஜெக்டிவ் முறை கேள்விகளும் இடம் பெறுகிறது

* பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளை ஒருங்கிணைத்து ஒரே சான்றிதழாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அதிகரிக்காத மாணவர் சேர்க்கை


கடந்த 10 ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காத நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 1500 பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 28 பாட வேளைகளுக்கு பதிலாக 14 பாட வேளைகளில் மட்டுமே பணிபுரியும் நிலை உள்ளது.

தமிழகத்தில் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு தொடக்கப் பள்ளி, 3 கி.மீட்டரில் ஒரு நடுநிலைப் பள்ளி, 5 கி.மீட்டரில் ஓர் உயர்நிலைப் பள்ளி, 8 கி.மீட்டரில் ஒரு மேல்நிலைப் பள்ளி வீதம் இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையின் காரணமாக, சுற்றளவு விதிமுறைகளுக்கு மாற்றாக, குறுகிய இடைவெளியில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உருவாகிவிட்டன.

இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. தற்போது, தமிழகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 3,500-க்கும் கூடுதலாக உயர்ந்துவிட்டன. இதில், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் ஒன்றியத் தலைநகரங்களில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் (மேல்நிலை வகுப்புகளில்) பயிலும் நிலை உள்ளது. பிற பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சராசரியாக 50-க்கும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வோர் ஒன்றியத்திலும் குறைந்தபட்சமாக 6, அதிகபட்சமாக 12 மேல்நிலைப் பள்ளிகள் வீதம் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆசிரியர்கள் வரை பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாட வேளை இருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், 90 சதவீத அரசு முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 பாட வேளைகளில் மட்டுமே (50 சதவீதம்) பணியாற்றி வருவதாகத் தெரிகிறது.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், பல பிரிவு மாணவர்களை ஒரே பாட வேளையில் வைத்து வகுப்பு நடத்தும் நிலையும் உள்ளது. ஆனால் பணி நேரத்தை அதிகரித்து காண்பிக்க, பாடவேளை அட்டவணையை தனித் தனியாக அமைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்புக்கு தகுதியான ஊதியம் கிடைக்காத நிலையில், அரசின் வழிகாட்டுதலில் (28 பாட வேளை) 50 சதவீத பணிகளை கூட நிறைவேற்றாத அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் ஊதியத்துக்கு பெரும்தொகை செலவிடப்படுகிறது. ஆனாலும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை என்பது இன்றுவரை குற்றச்சாட்டாக உள்ளது. இதுபோன்ற சூழலில், தேர்வு மைய கண்காணிப்பு பணி, விடைத் தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்வதிலும் ஒவ்வொரு முறையும் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்னை ஏற்படுகிறது. தாங்கள் சார்ந்த சங்கங்களின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.

தங்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்க ஒன்றிணையும் ஆசிரியர்கள், அதே ஒற்றுமையை கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் செயல்படுத்துவதில்லை. எதிர்கால தலைமுறையின் நலன் கருதியும், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை தவிர்க்கும் வகையிலும், ஆக்கப்பூர்வமான சீரமைப்பு நடவடிக்கைளை தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: முதுகலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 40 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது உண்மைதான். இந்த நிலை, கடந்த 10 ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது. ஊராட்சி ஒன்றிய அளவில் குறைவான மாணவர்கள் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கலாம்.

இன்றைய சூழலில், ஒரு ஒன்றியத்தில் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தரமானதாக இயங்கினால் போதுமானது. குறைவான மாணவர்கள் எண்ணிக்கையோடு பெயரளவுக்கு பள்ளிகள் நடத்துவதை விட, ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி சிறப்பாக நடத்த முடியும். ஒன்றியத்துக்குள் பள்ளிகளை இணைக்கும்போது, ஊதியமாக வழங்கப்படும் கணிசமான தொகை மிச்சமாகும். அதில் ஒரு சிறு பகுதியை செலவிட்டால், மாணவர்களை அழைத்து வர தனிபேருந்து வசதி கூட ஏற்படுத்த முடியும் என்றார்.