இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 11, 2017

ESI,P.F நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்:ஊழியர்கள் கடும் அதிருப்தி


இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழி லாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இஎஸ்ஐ, பிஎப் நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், பிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும். இதில், குரூப்-ஏ பணியிடங்கள் மத்திய அரசு வாரியம் மூலமும், குரூப்-பி, சி, டி ஊழியர்கள் மாநில அரசு வாரியம் மூலமும் தேர்வு செய்யப்படுவர். மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள இந்த இரு வாரியமும் தேசிய கவுன்சிலின் கீழ் இயங்கும்.

இந்த மசோதாவை நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்து சட்டமாக இயற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுகுறித்து தற்போது பொதுமக்களிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது. இந்நிலையில், புதிய தொழிலாளர் கொள்கை மசோதாவுக்கு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுவைக்கான வருங்கால வைப்பு நிதி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கிருபாகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையின் மூலம், இபிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும். குறிப்பாக, சந்தாதாரர்களிடம் இருந்து பிஎப் பணம் வசூலிப்பது, அவர்களுடைய ஆவணங்களை பாதுகாத்தல், அவர்களுக்கான சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட ஆறு வகையான பணிகள் தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 2 கோடி வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் கள் உள்ளனர். அவர்கள் செலுத்தும் பிஎப் தொகையை இந்த தனியார் ஏஜென்சிகள் வசூலித்து பராமரிக்க உள்ளன. தனியார் ஏஜென்சிகள் சந்தாதாரர்களின் பணத்தை எந்தளவுக்கு பத்திரமாக கையாளுவார்கள் என்பது கேள்விக்குறியாகிவிடும்.

உதாரணமாக, போக்குவரத்து துறை பிஎப் நிறுவனத்திடமிருந்து பிரிந்து சென்று தனது ஊழியர் களுக்கு பிஎப் தொகையை அந்த நிர்வாகமே வசூலிக்கத் தொடங்கியது. ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சரியாக பராமரிக்கத் தெரியாததால் தற்போது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது.

மேலும், வருங்கால வைப்பு நிதி மத்திய, மாநில அரசின் வாரியத்தின் கீழ் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதன்படி, அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசும், குரூப் பி, சி, டி ஊழியர் களை மாநில அரசும் நியமிக்கும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி வாரியத்துக்கு முதலமைச்சர் தலைவராக இருப்பார்.

இவ்வாறு பிரிக்கும் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. தமிழகத்தில் மாநில அரசு ஊழியர் களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக வும், கேரளாவில் ஓய்வு பெறும் வயது 56 ஆகவும் உள்ளது.

எனவே மத்திய அரசின் கீழ் உள்ள எங்கள் துறை மாநில அரசின் கீழ் வரும்போது ஊழியர்கள் ஓய்வு பெறுவது, பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இப்புதிய மசோதா மூலம் வீட்டில் ஒருவரை பணியமர்த்தினால் கூட அவர்களுக்கு அந்தக் குடும்பத் தலைவர் சமூக பாதுகாப்பு நிதி செலுத்த வேண்டும்.

இவ்வாறு கிருபாகரன் கூறினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2011க்கு முன்பு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை


கடந்த 2011ல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கவுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை கடந்த மாதம் 1ம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் 2010 நவம்பர் 15ம் தேதி, 2011 ஜனவரி 11 மற்றும் 24ம் தேதிகளில் பல்வேறு தனியார் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சரோஜினி, சுதா உள்ளிட்ட ஏராளமானோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகி, மனுதாரர்களிடம் பள்ளிக்கல்வித் துறை எந்த உத்தரவாதத்தையும் கட்டாயப்படுத்தி பெறவில்லை என்றார். இதைக் கேட்ட நீதிபதி, ‘‘ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு இது கடைசி வாய்ப்பு எனவும், இந்த தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் எனவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த 2011ம் ஆண்டு முதல்தான் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே அதற்கு முன்பு பணியில் சேர்ந்த தங்களுக்கு இது பொருந்தாது என வாதிட்டுள்ளார். எனவே, 2011ம் ஆண்டுக்கு முன்பிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை. அவர்களை தேர்வு எழுத சம்மந்தப்பட்ட துறை கட்டாயப்படுத்தக கூடாது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவித்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்


மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடங்களுக்கு இணையாக, தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 2006 முதல் அமலில் உள்ளது. இந்த பாடத்திட்டம், 2003ல் தயார் செய்யப்பட்டது. எனவே, 14 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தை, தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம், 2013ல் தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசு ஒப்புதல் வழங்காமல், கிடப்பில் போட்டது. இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாயமாகியுள்ளது. இந்த தேர்வில், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, 54 வகை பாடத்திட்டங்களில் இருந்து, கேள்விகள் இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டம், 'அப்டேட்' செய்யப்படவில்லை. எனவே, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என, கல்வியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி, நமது நாளிதழில், பல முறை செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சி.பி.எஸ்.இ.,க்கு ஈடாக, புதிய பாடத்திட்டம் தயார் செய்யும் பணியை, பள்ளிக் கல்வித்துறை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாட புத்தகங்களின் அம்சங்கள், தமிழக பாட புத்தகங்களில் உள்ளனவா என, ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ள ஆசிரியர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பாட புத்தகங்களில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ள அம்சங்களை, தமிழில் மொழி பெயர்க்கும் பணி துவங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன. எனவே, பழைய புத்தகங்களை மாற்ற முடியாது.

ஆனால், பிளஸ் 1 பாட புத்தகத்தில், சி.பி.எஸ்.இ.,யிலுள்ள சில பகுதிகளை கூடுதலாக சேர்க்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மே இறுதியில், இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

டெட்' தேர்வுக்கு இருவகை 'ஹால் டிக்கெட்'


ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வுக்கு, இரு வகையான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப் பட்டுள்ளன.தமிழகத்தில், 2010ல், அமலான கட்டாய கல்விச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலித்ததில், பல விண்ணப்பங்களில் புகைப்படம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இரு வகையான ஹால் டிக்கெட்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இணையதளத்தில், அதன் விவரங்களை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

TET hall ticket

Click below

http://admit.examsonline.co.in/

Monday, April 10, 2017

டிரங் அண்ட் டிரைவ்வுக்கு ரூ10,000 அபராதம்; சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்


புதிய சட்டத்திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்திருத்த மசோதா: சாலை பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டம் 1988, சில திருத்தங்களுடன், சட்டத்திருத்த மசோதாவாக நேற்று(ஏப்.,10) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

அபராதம்: புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் ரூ.500-ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000-மும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000-மும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000மும் அபராதமாக விதிக்கப்படும்.

இழப்பீடு: விபத்து தொடர்பான காப்பீட்டுத் தொகைகள் திருத்தப்பட்டு, விபத்தில் பலியானோருக்கு ரூ.பத்து லட்சம் வரை இழப்பீடும், விபத்தில் காயமடைவோருக்கு ரூ.ஐந்து லட்சம் வரை இழப்பீடும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கட்டாயம்: சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சமாக டிரைவிங் லைசன்ஸ், வாகனப் பதிவு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் தனியார் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலும் கூடுதலாக வழங்கப்படுகிறது.

அதன்படி வரும் 2017 -2018 -ஆம் கல்வியாண்டுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 9,000 சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர், தொடக்கப்பள்ளி) நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் 1,26,262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள 10,000 -க்கும் மேற்பட்ட அரசு இ -சேவை மையங்களைப் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்படும்.

மாவட்ட வாரியான சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளின் பட்டியல் மற்றும் அந்தப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த சேர்க்கைக்கு ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெட்' ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்பணி முடிவடைந்தது. இன்று(ஏப்.,11) முதல் டெட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை டி.ஆர்.பி., இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) ‛டவுன்லோடு' செய்து கொள்ளலாம்.

ஊதியக்குழு கருத்து தெரிவிக்க 'கெடு'


எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து, வரும், 15க்குள் கருத்துகள் அனுப்பும்படி, ஆசிரியர் சங்கத்தினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய, தமிழக அரசு, ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது. இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர், அரசு அலுவலர்கள், ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டு, ஆய்வறிக்கை தயார் செய்கின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறை சங்கங்களுக்கு, ஊதிய ஆய்வுக்குழு, கடிதம் அனுப்பி உள்ளது. அதில், வரும், 15க்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, ஆசிரியர் சங்கங்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்., 14க்குள் முடிக்க கெடு


தமிழகத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஏப்., 14க்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 31ல் முடிந்தது; 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். மொழி பாட விடைத்தாள்கள், மார்ச் 31 முதல் திருத்தப்படுகின்றன. கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, ஏப்., 2 முதல் திருத்தம் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' ரத்து செய்யப்பட்டுள்ளது. பல கட்ட ஆய்வுக்கு பின், மொழி பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கும் நிலை ஏற்பட்டால், தேர்வுத்துறை அனுமதிக்கு பின் வழங்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்., 14க்குள் விடைகளை திருத்தி முடிக்க வேண்டும்; பின், மதிப்பெண்ணை சரி செய்யும் பணிகளை துவங்க வேண்டும் என, ஆசிரியர்களை, தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பிளஸ் 2 விடை திருத்தம் தீவிரம் :

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தமும், தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்., 5ல் துவங்கிய விடை திருத்தம், மொழி பாடத்திற்கும், மற்ற முக்கிய பாடங்களுக்கும் தனித்தனியே நடந்து வருகிறது. ஏப்., 21க்குள், விடை திருத்தத்தை முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்


ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் ஏற்படும் குளறுபடிகளை நீக்க, சில வழிமுறைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன் 10 முக்கிய அம்சங்கள்:

1.நாடு முழுவதும், 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 25 கோடி பேர் மட்டுமே, நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை பெற்றுள்ளனர். இவர்களில், 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர்.

2.ஆதார் எண் விவரங்களையும், பான் கார்டு விவரங்களையும் இணைக்கும் பணியை, 1.08 கோடி பேர் மட்டுமே இதுவரை முடித்துள்ளனர்.

3.கறுப்பு பண ஒழிப்புக்கு இது மிகவும் உதவும் என்பது வருமான வரித்துறையின் எண்ணம். அதற்காகவே இந்த ஏற்பாடு.

4.ஆதார் எண் அட்டையில், பலருக்கும் முழு பெயரும் இருக்காது. இனிஷியல் மட்டுமே இருக்கும். ஆனால், பான் கார்டில் முழு பெயரும் இருக்கும். இதுபோன்ற நிலையில், ஆதார் எண்ணுக்கான இணைய தளம், பான் கார்டு விவரங்களை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்ளாது; ஆதாரம் தேவை எனகேட்கும்.

5.இதுபோன்ற சூழ்நிலையில், பான் கார்டை ஸ்கேன் செய்து, ஆதார் இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யலாம். பான் கார்டை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஆதார் எண் நிர்வாகத்திடம் வருமான வரித்துறை கூறியுள்ளது.

6.பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்து இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை சேர்த்து இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு தரப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி விவரம் ஒன்றாக இருந்தால் தான் பிரச்னை தீரும்.

7.வெவ்வேறு பெயர்களை பதிவு செய்துள்ள பெண்களுக்கு மேலும் ஒரு தீர்வு முன் வைக்கப்படுகிறது. வருமான வரி தாக்கலின் போது ஓ.டி.பி.,அதாவது ஒரு முறை பாஸ்வேர்டு, அவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த மொபைல் எண், இரண்டு தரப்பிலும் ஒன்றாக இருந்தால் சிக்கல் தீர்ந்து விடும்.

8.இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ஆதார் எண் பதிவின் போது மொபைல் போன் எண் தகவலை தந்து இருக்க மாட்டார்கள். ஆதார் இணைய தளத்திற்கு சென்று மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய முயன்றாலும், அதற்கான சாப்ட்வேர் அனுமதி அளிப்பது இல்லை.

9.இதுபோன்ற சூழ்நிலையில், அருகில் உள்ள ஆதார் அலுவலகம் அல்லது ஏஜென்ட்டிடம் சென்று, போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அப்போதும் ஆதார் இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை. இதனால், மொபைல் எண்ணை பதிவு செய்வது, விலாசத்தை மாற்றுவது எளிதில் நடப்பதில்லை.

10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால், ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில், வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்

CPS NEWS: வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கவில்லை.

Sunday, April 09, 2017

நோட்டு புத்தக விலை உயர்வு ஒரு குயர் ரூ.3 வரை அதிகரிப்பு


கடும் வறட்சியினால் காகிதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு நோட்டு புத்தகத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண நோட்டு ரூ.3 வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பேப்பர் மற்றும் ஸ்டேசனரி வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வகுமார் கூறியதாவது:

காகித ஆலை மூலப்பொருட்களின் விலையேற்றம், வறட்சியினால் சவுக்கு மரங்களின் வளர்ச்சி சரிவு காரணமாக காகிதம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் ஒரு டன் காகிதம் ரூ.7 ஆயிரம் வரை விலை உயர்ந்து விட்டது. இதனால் இந்தாண்டு மூன்று முறை விலை உயர்ந்தது; சாதா நோட்டு புத்தகம் கூட ஒரு குயருக்கு ரூ.3 வரை அதிகமாக விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2 குயர் லாங் சைஸ் நோட்டு ரூ.38க்கு விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.43க்கு விற்கப்படுகிறது. ரூ.30க்கு விற்ற பைண்டிங் இல்லாத நோட்டு இந்த ஆண்டு ரூ.35க்கும், கடந்த ஆண்டு ரூ.14 முதல் 15க்கு விற்ற ஒரு குயர் நோட்டு ரூ.18க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

பெயர் குழப்பம் இனி இருக்காது பான் கார்டில் ஆதார் எண் இணைப்பு சுலபம்


பான் கார்டில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அரசு கூறினாலும், பொதுமக்களுக்கு அதில் பெரும் சிரமம் இருக்கிறது. பெயர் குழப்பம் ஏற்படுவதால் இணைக்க முடியாமல் உள்ளது. இதை தீர்க்க இரு எளிய முறைகளை அறிமுகம் செய்துள்ளது அரசு. பான் எண் பல வகையில் மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய பான் எண் முக்கியம்.

இப்போது வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல வகையில் முயற்சி செய்து வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு செய்வதை அறவே தடுக்க ஆதார் எண் உதவும் என்று அரசு திடமான நம்புகிறது. மேலும் ஆதார் எண்ணை இணைத்து விட்டால் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என்று எண்ணுகிறது. இதற்காக, பான் கார்டில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். இதன்படி, வருமான வரி அறிக்கையில் இனி ஆதார் எண் முக்கியம். அதற்காக, வருமான வரி வெப்சைட்டில் ஆதார் எண் இணைப்பு வசதி செய்யப்பட்டது.
ஆனால், அதில் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பெயர் குழப்பம் ஏற்படுவதால் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. பெரும்பாலோர் பெயர்கள் ஆதார் கார்டில், அப்பா பெயர் இனிஷியலாக சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பான் கார்டில் தந்தை பெயர் பின்னால் சேர்த்து பதிவு செய்யப்பட்டு ள்ளது. இப்படி பெயர் குழப்பத்தால் ஆதார் எண் பதிவு செய்யும் ேபாது கம்ப்யூட்டர் ஏற்க மறுக்கிறது. இதை தீர்க்க மத்திய அரசு இரு வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஒன்று, வருமான வரித்துறை வெப்சைட்டில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் போது ஏற்படும் சிரமத்தை தடுக்க, ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ அனுப்பும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது, ஆதார் வெப்சைட்டில் போய், பெயர் மாற்றம் செய்யலாம்; அதற்கு, பான் கார்டு நகலை அப்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பட்டம் இதழில் வந்துள்ள எம் பள்ளி மாணவன் ரகுராம் அவர்களின் அறிவியல் கேள்வி