இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 21, 2016

புதிய ஆசிரியர் பணியிட விபரம்-தகுதிதேர்வு

புதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 1000க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

புதிதாக நடத்தப்பட உள்ள டெட் தேர்வில் குறைவான பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்ப வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அதன்படி
மாணவர் பற்றாக்குறை காரணமாக பள்ளிக்கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்,குறிப்பிட்ட சிலபாடங்களில் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) நிரப்ப வாய்ப்பிருக்கிறது

4500 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என கூறியிருப்பதால் எஞ்சிய 3500 காலியிடங்கள் தொடக்க கல்விதுறை,ஆதிதிராவிடர் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருக்கக்கூடும்.

இதனிடையே 1600 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிட அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என கூறினர்

இலவச சீருடை வழங்க இயக்குநரின் செயல்முறைகள்


posted from Bloggeroid

Nmms exam


posted from Bloggeroid

அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் தமிழக கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு


ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுப் பிரச்னை, ஏ.டி.எம்., மையங்களில் நீண்ட வரிசை போன்ற காரணங்களால் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்திருந்தது.

தமிழகத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் இந்தத் தொகை வரவு செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக, மாதத்தில் 18-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள்ளாக கருவூலம்-கணக்குத் துறை மூலமாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பெரும் பிரச்னை: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் உள்பட தமிழகத்தில் அரசு அலுவலக வளாகங்களில் செயல்பட்டுவரும் வங்கிக் கிளைகளில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பலர் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றவும், வங்கிக் கணக்கில் பணத்தை எடுக்கவும் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். அவர்கள் தங்களது பணி நேரத்தில் இவ்வாறு வங்கிக் கிளைகளில் வரிசையில் நிற்பதால் பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. இதனால், அரசு வளாகங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களில் மாலை நேரத்தில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பணம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை கடந்த ஒரு வார காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கோரிக்கை ஏற்க மறுப்பு: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதியன்று ஊதியமும், ஓய்வூதியமும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அப்படி வரவு வைக்கப்படும்போது, லட்சக்கணக்கான ஊழியர்கள், வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களது ஊதியத்தை எடுக்க வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கும் சூழலும் உருவாகும். இந்த நிலையில், மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை ரொக்கமாக வழங்க தலைமைச் செயலக சங்கம் உள்பட அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தக் கோரிக்கை தொடர்பாக, ரிசர்வ் வங்கியுடன் நிதித் துறை அமைச்சக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்பதற்கில்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக வழங்க முடியாத நிலையில், ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் படையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Science worksheet 2-English medium

Click below

https://app.box.com/s/t92g8e5yj4wrodjbaam6ha7s3sxov04r

maths worksheet 2- ENGLISH medium

https://app.box.com/s/i5hnhc92onqs3b4zmcheifzc5cjjvynb

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்


குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:-

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.

விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்பு தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு -ஒரே பாடத்திட்டம் எப்போது?


நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டுவந்த பின்னர் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ என்னும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தவிர, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ், படிப்பில் சேர, ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு மட்டும், ‘நீட்’ தேர்விலிருந்து, மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தனியார் கல்லுாரிகளின்

மருத்துவ மாணவர் சேர்க்கை, ‘நீட்’ தேர்வு அடிப்படையிலேயே நடந்தது.

வரும் ஆண்டுக்கான, ‘நீட்’ தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு டிசம்பர் முதல் விண்ணப்பங்களைப் பெற, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதனால், இன்னும் இரு வாரங்களில், ‘நீட்’ தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில், மொத்தம் 720 மதிப்பெண்களில், 685 மதிப்பெண் பெற்று குஜராத்தைச் சேர்ந்த ஹேட்சஞ்சய் ஷா என்ற மாணவர் நாட்டிலேயே முதல் இடம் பிடித்தார். ஒடிசாவைச் சேர்ந்த ஏகன்ஷ் கோயல், 682 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த நிகில் பஜியா, 678 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழக மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம். இந்தாண்டு நடந்த தேர்வில் முதல் இடங்களைப் பிடித்தவர்களும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 20, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்

மத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

ரூ.10 ஆயிரம் ரொக்கம்

பிரதமர் மோடி கடந்த 8–ந் தேதி 500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி மத்திய அரசின் குருப்–சி ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதன்படி சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காக ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:–

பணத்தட்டுப்பாடு

பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாக பணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள் செயல்படாததால் அதை எடுக்க முடியாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.

முன்பணம்

இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய ஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23–ந்தேதி வரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர் அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கிய பிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடு குறையும்.

20 சதவீதம் இடைக்கால நிதிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறை படுத்தும் வரை இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மோசஸ் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் இச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் வழங்க அரசு முயற்சி எடுத்துள்ளது.அதற்காக நியமிக்கப்பட்டக்குழு பணியை துவங்குவதற்கு முன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும். இல்லாவிடில் டிச.,28ல் சென்னையில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!


தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப் பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதிய இ-மின்னணு பதிவேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு சேர்ந்தது முதல் அவர்கள் ஓய்வு பெறும் வரையில் அவர்கள் பெறும் ஊதியம், நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, பணி வரன்முறை, பணி நிரந்தரம், பதவி உயர்வு, பணிக் காலத்தில் பெற்ற தண்டனைகள், அயல் பணி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பணிப் பதிவேட்டில் (சர்வீஸ் ரெஜிஸ்டர்) பதிவேற்றம் செய்யப்படும்.

ஒவ்வோர் அரசு ஊழியருக்கும் தனித் தனியாகப் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேட்டை, தாங்கள் பணிபுரியும் துறையின் அதிகாரி கவனித்து வருவார். மேலும், பணிப் பதிவேட்டில் ஊழியரின் குடும்ப விவரம், கல்வித் தகுதிகள், உடல் தகுதிகள், குடும்ப நல நிதி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அரசு ஊழியரின் பணியிடமாறுதலின் போது, இந்தப் பணிப் பதிவேட்டில் பதிவு செய்து, ஊதியச் சான்றிதழுடன் உரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தப் பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, அதற்கு ஒப்புதலாக ஒவ்வோர் அரசு ஊழியரும் ஆண்டுக்கு ஒரு முறை கையெழுத்திட வேண்டும்.

புத்தக வடிவிலான பதிவேடு: இந்தப் பணிப் பதிவேடுகள் ஆரம்ப காலத்திலிருந்தே தாள்கள் வடிவில் பெறப்பட்டு, பின்னர் புத்தக வடிவில் மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பணிப் பதிவேட்டின் பக்கங்கள் நிறைவு பெற்றதும், இரண்டாவது பணிப் பதிவேடு பதிவு செய்யப்படும். ஆண்டுக்கணக்கில் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேடுகள் கிழிந்துவிடும் நிலையும் உள்ளது. அவற்றை பைண்டிங் செய்பவர்களிடம் கொடுத்து தைத்துவைத்து பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

மின்னணு பணிப் பதிவேடு: இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளைக் கணினிமயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மின்னணு பணிப் பதிவேடு (இ-எஸ்ஆர்) திட்டத்தில், தற்போதுள்ள காகிதத்தால் ஆன புத்தக வடிவ பணிப் பதிவேடுகளின் தகவல்களை அப்படியே மின்னணு முறையில் கணினியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகக் கருவூலத் துறையின் உத்தரவின் பேரில், மாவட்ட கருவூல அலுவலர்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை மின்னணு முறையில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக, மாவட்டங்கள்தோறும் அனைத்துத் துறை அலுவலர்களையும் அழைத்து, கருவூல அதிகாரிகள் இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு துறையினரும் பணிப் பதிவேடு தகவல்களைச் சரிபார்த்து, அதை நிறைவாகத் தொகுத்து அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் கருவூல அலுவலர் இளங்கோ பிரபு கூறியதாவது: புத்தக வடிவில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளைக் கணினி முறையில் தொகுத்து நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கருவூல ஆணையரின் உத்தரவின் பேரில், இதற்காக பணிப் பதிவேடுகள் குறித்த தகவல்களைச் சரிபார்த்துத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம். விரைவில் இந்தத் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய பயிற்சி பெற்ற குழுவினர் மாவட்டத்துக்கு வர உள்ளனர்.

இவர்கள், துறை வாரியாக தற்போதுள்ள பணிப் பதிவேடுகளின் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்வர். அதன்பிறகு, அந்தந்த துறை அலுவலர்கள், கணினி வாயிலாக பணிப் பதிவேடு தகவல்களைப் பதியவும், பராமரிக்கவும் முடியும். தேவைப்படும் போது அந்தத் துறையின் தலைமைக்கும், அரசுத் துறை ஆய்வுக்காகவும் பதிவேடு குறித்த தகவல்களை இணைய வழியில் அனுப்பி வைக்கலாம். இதன்மூலம், புத்தக முறை பணிப் பதிவேடுக்கு விடை கொடுத்து, எளிதாகப் பதிவு செய்தும், பார்த்தும் பராமரிக்க முடியும். அதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது என்றார் அவர். பணிகள் எளிதாகும்: இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சுமார் 13.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம் ஊழியர்களுக்கும் பணிப் பதிவேடு புத்தகமாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நவீனத் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் எளிதாகத் தகவல்களைப் பதிவு செய்யவும், பராமரிக்கவும் முடியும். காகித முறையால் பதிவேடு சேதமாவது தடுக்கப்பட்டு, தகவல்கள் நீண்ட காலம் பாதுகாப்புடன் இருக்கும் என்றனர் அவர்கள்.

Saturday, November 19, 2016

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்


மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும் 2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில் கிடைக்கிறது. ரூ.500 இதுவரை தமிழகத்துக்கு வந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரை விற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்த போதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டு வினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டு எப்ேபாது வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வந்தது. இது குறித்து அந்த அதிகாரிகள் கூறுகையில்,

“ புதிய ரூ.500 நோட்டு ஒரு சில மாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்த பணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில் புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.

எமிஸ்'(EMIS) விபரங்கள் மாயம் : ஆசிரியர்கள் கோபம்

தமிழகத்தில், அனைத்து மாணவர்களுக்கும், தனித்தனி அடையாள எண் கொடுக்கப்பட்டு, அதையே பொதுத் தேர்வு சான்றிதழ்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு கொண்டு வரப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, மாணவ, மாணவியரின், பெயர், முகவரி மற்றும், 'ஆதார்' எண் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் விடுபட்டவர்களுக்கான, ஆதார் எண்களை சேர்த்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை தர, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, இன்னும் தொலைபேசி வசதி இல்லை; இதில், தொடக்கப் பள்ளிகளின் நிலை மிக மோசம். அதேபோல், இணையதள வசதியும், பல பள்ளிகளில் இல்லை. எனவே, இணையதள மையங்களில், ஆசிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து, எமிஸ் திட்டத்தில், விபரங்களை பதிவு செய்கிறோம். இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு, இதற்கு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவர் விபரங்கள், 'ஆன்லைனில்' திடீரென மாயமாகி விடுகின்றன. அதை தேடி எடுக்க, பல நாட்கள் ஆகின்றன. எனவே, எமிஸ் எண்ணுக்கு பதில், ஆதார் எண்ணை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்


காலியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் பாலச்சந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். வணிகவியல், பொருளியல் படித்தவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி காலியிடங்களை, தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Friday, November 18, 2016

பழைய ஓய்வூதிய திட்டம் நிபுணர் குழுவின் காலம் நீட்டிப்பு


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் காலம் டிசம்பர் 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை குறித்து ஆராய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் நபர், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர் பிரஜேஷ் சி.புரோகித், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு சங்கங்களின் கருத்துகளை மூன்று கட்டங்களாகக் கேட்டு அறிந்தது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் காலம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், நிபுணர் குழு தனது இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அதனுடைய காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 26-ஆம் தேதி வரை நிபுணர் குழு செயல்படும் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.