பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், நாளை முதல், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் உடைய பாடத்துக்கு தலா, 305 ரூபாய்; ஒரு தாள் பாடத்துக்கு, தலா, 205 ரூபாய் மற்றும், 'ஆன்லைன்' கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
Wednesday, July 27, 2016
10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'
B.ed application issue -2016-17
பி.எட். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்
பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரி உட்பட 13 மையங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.
Tuesday, July 26, 2016
7வது ஊதியக்குழு ஊதியம் ஆகஸ்ட் முதல் அமல்
சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, இந்த சம்பள உயர்வை அமல்படுத்தும் வகையிலான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வேலைத் திறனை அதிகரிக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களுக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வை ரத்து செய்வது குறித்தும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள, எம்.ஏ.சி.பி., எனப்படும், 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர் களின் சம்பளம், அடுத்த நிலைக்கு தானாகவே உயர்த்தப்படும்; இதைத் தொடருவதற்கு கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது.
அதே நேரத்தில் இதில் சில மாற்றங்கள் செய்து, கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பாக வேலை செய்யாவிட்டாலும், சம்பளம் உயரும் என்ற மனநிலையில், மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். சிறப்பாக பணியாற்றும்
ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, அரசு ஊழியர்கள் தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கே சம்பள உயர்வு, பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். அதன்படி, 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, முதல், 20 ஆண்டுகளில், சிறப்பாக பணிபுரியாத ஊழியர்களுக்கான, சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும், வழக்கமான பதவிஉயர்வுக்கான அடிப்படை தகுதியையும், நன்று என்பதில் இருந்து மிகநன்று என்று உயர்த்த வேண்டும்.இவ்வாறு கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.இந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அப்படியே ஏற்று, அரசாணையிலும் அது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'இனி சிறப்பாக பணியாற்றாத, அரசு ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காது' என, நிதித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
'தகவலை மறைத்தால் வேலையிலிருந்து நீக்கலாம்'
''பணியில் சேருவதற்கு முன்போ, பணியில் இருக்கும்போதோ, தன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், கைது செய்யப்பட்டது, விடுதலை செய்யப்பட்டது உள்ளிட்ட தகவலை, ஊழியர்கள் மறைத்தால், அவர்களை பணியில் இருந்து நீக்கும் அதிகாரம் வேலை அளிப்போருக்கு உள்ளது,'' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அரசுப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, அவ்தார் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல பந்த் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில்கூறியுள்ளதாவது:
பணியில் ஒருவர் சேரும்போது அல்லது பணியில் இருக்கும்போது, தன் மீது உள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை மறைக்கக் கூடாது. இவ்வாறு மறைத்து பெறும் பணி உத்தரவு செல்லாது என்று உத்தரவிடுவதற்கு வேலை அளிப்போருக்கு அதிகாரம் உள்ளது.
அதே நேரத்தில், ஊழியரால் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படக் கூடிய பாதிப்பு, அதன் தன்மை, அது நடந்த காலம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த முடிவை வேலை அளிப்போர் எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
அடுத்த மாதம் முதல்புது சம்பளம் கிடைக்கும்:
#ஆகஸ்ட் முதல் ஊதியம்
#குறைந்தபட்சம் 7000முதல் 18000வரை
#ஊதிய உயர்வு ஜனவரி அல்லது ஜூலை 1ம் தேதி.3% ஊதியம்
#2.57மடங்காக இருக்கும்
1ம் வகுப்பிலிருந்தே 'ஆதார்' விபரம் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினிதிட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழக அரசின், 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பல பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறையும் நிலையில், ஆசிரியர் பணியிடத்தை தக்கவைக்கவும், இலவச பொருட்களை, 'அபேஸ்' செய்யும் வகையிலும், போலி பெயரில் மாணவர்கள் இருப்பதாக, கடந்த ஆண்டுகளில் கணக்கு காட்டினர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுதோறும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், சேரும் பள்ளி, முன்பு படித்த பள்ளி, ஆதார் எண், ரத்த பிரிவு வகை சேர்க்கப்படுகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின், விபரங்களை பதிவு செய்து அதை மாநில கணினித் தொகுப்பில் இணைக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிகளை ஆசிரியர்கள், ஆக., 7க்குள் முடிக்க, கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நவ., 30 வரை இலவச 'அட்மிஷன்' : மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவு
'வரும் நவம்பர், 30ம் தேதி வரை, கட்டாய கல்வி சட்டத் தில், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும்.
இந்த சட்டத்தில் மற்றொரு விதியின் படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், எல்.கே.ஜி., எனப்படும் பள்ளி நுழைவு வகுப்பிலும்; மெட்ரிக் பள்ளிகள் என்றால், 1ம் வகுப்பிலும், அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீதம் இலவச இடஒதுக்கீடு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், 8,000 நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், இந்த சட்டப்படி, 89 ஆயிரம் பேருக்கு இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், பலர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பள்ளிகளை நாடுகின்றனர். ஆனால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாக கூறி, பெற்றோரை திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து, 'வரும் நவம்பர், 30 வரை இலவச கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை சேர்க்கலாம்' என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்
TNPTF news
சுற்றறிக்கை
தோழர்களே,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட்டுள்ள TR சுப்ரமணியம் குழுவின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடத்திட்டம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், மாணவர்அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கம் வரும் 30/07/2016 சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்துகிறார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கல்வி நலன் காப்பதில் அதிகமான பங்கு உள்ளதால் நடக்கவிருக்கும் சென்னை கருத்தரங்கத்தில் வட்டாரச்செயலாளர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களின் பங்கேற்பினை உறுதி செய்திட வேண்டும். கலந்து கொள்ள வரும் தோழர்கள் சென்னை மாநில அலுவலகத்தில் வருவதை கூடுமானவரை தவிர்த்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செ. பாலசந்தர், பொதுசெயலாளர். TNPTF.
Monday, July 25, 2016
மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய உத்தரவு
தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை ஆய்வு செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் வாசிப்புத் திறன், கணிதத்தில் கூட்டல், கழித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் தர மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது. வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தல், மாணவர்களின் எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகளை எழுதுதல் மற்றும் எளிய கணித முறைகளில் அடிப்படைத் திறன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்: கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு
தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை குறித்து, சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதம் நடத்திக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என கல்வி உரிமைக்கான பாதுகாப்புக் கூட்டமைப்பின் (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்பாளர் நா.மணி கூறினார்.
சென்னையில் அவர்திங்கள்கிழமை நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:- 23 ஆசிரியர், மாணவர்களின் சங்கங்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்த அமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு அளித்துள்ள 200 பக்கப் பரிந்துரைகளில் பல அம்சங்கள் விவாதத்துக்குரியன.
எனவே, கல்வியாளர்களையும் உள்ளடக்கிய குழு அமைத்து வரைவு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் கருத்துக் கேட்டறிய 3 மாத கால அவகாசம் வேண்டும். இதற்காக புதிய வரைவு கொள்கை குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவறிக்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால், அதை எதிர்த்து பிரசாரம் செய்வோம்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-இல் திருச்சியில் 3,000 பேரைத் திரட்டி கோரிக்கை மாநாடும், 30-இல் சென்னை லயோலா கல்லூரியில் கருத்தரங்கமும் நடைபெறும் என்றார். பேட்டியின்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் மோசஸ் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
சொந்த ஊராட்சிகளில் பணி புரிபவர்கள், ஒரே உள்ளாட்சி நிர்வாகத்தில் நீண்டகாலம் பணிபுரிபவர்கள் ஆகியோரை தேர்தல் பணியில் ஈடுபடக் கூடாது என்பதை மாவட்ட, மாநில மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊழியர்கள் உறவினர்கள் போட்டியிடும் உள்ளாட்சிகள் மற்றும் அந்த ஊள்ளாட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என கூறியுள்ளார்
TNPTF NEWS
*TNPTF*
இன்று நமது TNPTF மாநில பொறுப்பாளர்களுடன் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து உபரி ஆசிரியர் பணி நிரவல் குறித்து பல்வேறு ஐயங்களை எழுப்பினோம் ,அவர் அதற்கு பயனுள்ள வழிமுறை ஒன்றை சொன்னார் .எல்லா ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவில் இளையோரை கணக்கெடுத்து அதை மாவட்ட அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரித்து , மாவட்ட காலிப்பணயிடம், தேவைப் பணியிடங்கள் நிரப்பிய பின்னும் இருக்கின்ற உபரி ஆசிரியர்களை ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலே தொடரலாம்.
61 க்கு மூன்று ஆசிரியர் என்ற விகிதத்தில் இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 55 ஆக குறைந்தாலும் மூன்றாவது பணியிடத்தை உபரியில் கணக்கிலெடுக்க மாட்டோம் என இயக்குநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்
கோ-ஆப்டெக்ஸ் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் நிரப்பப்பட உள்ள 100 உதவி விற்பணையாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி தினமாகும்.
பணி: உதவி விற்பணையாளர்
காலியிடங்கள்: 100
தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.1983 தேதியின்படி 18 - 33-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் 'THE TAMILNADU HANDLOOM WEAVERS' CO-OPERATIVE SOCIETY LTD' என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016
மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.cooptex.gov.in/cooptexadmin/upload/%20Recruitment.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Saturday, July 23, 2016
எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் இன்று முதல் பதிவிறக்கலாம்
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு நிதியுதவி பெரும் கல்லூரிகள் மற்றும் சுய நிதி கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான 2016ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்பங்களை பெற www.annauniv.edu என்ற இணையதளத்தில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை பதிவு செய்து தங்களுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது..பேரம்!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.
ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,
மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும், உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் கவுன்சிலிங் நடக்கும்.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள், ஆக., 20; வேறு மாவட்டத்துக்கு, 21ம் தேதி; பதவி உயர்வு கவுன்சிலிங், 22ம் தேதியும் நடக்கும்.
* உடற்கல்வி, தையல், இசை, கலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் ஆக., 23ம் தேதி; வேறு மாவட்டங்களுக்கு, 24ல் கவுன்சிலிங் நடக்கும்.
* பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆக., 27 முதல், 29ம் தேதி வரை பணி நிரவலும், செப்., 3ம் தேதிமாவட்டத்திற்குள்ளும், 4ல் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக, செப்., 6ல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்
இந்நிலையில், ஆசிரியர், அலுவலர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும். அரசியல் புள்ளிகள் மூலம், காலியிடங்களுக்கான கோரிக்கைகள் வரத் துவங்கி உள்ளன. அதிக போட்டி உள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும், பேரத்தை அரங்கேற்ற, சில இடைத்தரகர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், 'யாரிடமும், 'வி.ஐ.பி., கோட்டா' என்ற அடிப்படையில், இடமாறுதல் செய்யக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு, தலைமை செயலகத்தில் இருந்து வந்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன
டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிக்கு நாளை முதல் 2ம் கட்ட விண்ணப்பம்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பான, டி.டி.எட்., டிப்ளமோ படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2 முடித்து டி.டி.எட்., படித்திருந்தால் போதும். தமிழகத்தில், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கட்டுப்பாட்டில், 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், 13 ஆயிரத்து, 800 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், 3,500 பேர் விண்ணப்பித்து, 1,000க்கும் குறைவானவர்களே இப்படிப்பில் சேர்ந்தனர். காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. பிளஸ் 2 சிறப்பு உடனடி துணைத் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியான நிலையில், டிப்ளமோ படிப்பில் சேர உள்ள மாணவர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வரும், 8ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நடக்கும். 'விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும்' என, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்