இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 16, 2016

10ம் வகுப்பு முடித்தோருக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு நாளைதொடக்கம்


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினைச் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் 15 நாள்களுக்கு இந்தப் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஆண்டுகளைப் போன்று, இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 18) வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் நாளிலிருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு, ஜூலை 18-ஆம் தேதியையே பதிவு மூப்பு தேதியாகக் கொண்டு வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படும்.

மதிப்பெண் சான்று அளிக்கப்படும் பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவுகள் இப்போது மேற்கொள்ளப்பட உள்ளது.

என்ன ஆவணங்கள் தேவை?: மதிப்பெண் சான்று வழங்கப்படும் தினத்தில் மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை எடுத்து வர வேண்டும். மேலும், மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. முறையில் பயின்ற மாணவர்களும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் (http:tnvelaivaaippu.gov.in) பதிவு செய்யலாம். மேலும் தங்கள் மாவட்டத்துக்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தூய்மைப்பள்ளி திட்டத்திற்கான மொபைல் ஆப் வெளியீடு


https://play.google.com/store/apps/details?id=com.glt.sv

மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது. நிதி ஒதுக்கீடு : இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கழிப்பறைகளை, தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாத சம்பளம் மற்றும் கிருமி நாசினி வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து, கை கழுவ சோப்பு, கைத்துண்டு தர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை ஊக்குவிக்க, சிறந்த துாய்மை பள்ளிகளுக்கு, மத்திய அரசு, 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருது வழங்குகிறது. இதை பெற, அரசு பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நாடு முழுவதும், 500 பள்ளிகளை தேர்வு செய்து தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில், 39 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதில், பள்ளிகளின் அடிப்படை வசதிகள், சுகாதாரம் குறித்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 50 ஆயிரம் ரூபாய் : இதுதவிர, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, 'ஸ்வச் வித்யாலயா மொபைல் ஆப்' மூலமும் பள்ளிகள் தனியாக விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்வர்.

மாவட்ட குழுவில் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், சிறந்த மூன்று தலைமை ஆசிரியர்கள், இன்ஜினியர், உடல்நல அலுவலர், இரு தன்னார்வலர்கள் இடம்பெறுவர். மாநில குழுவில் பள்ளிக்கல்வி செயலர், இயக்குனர், உடல்நல இயக்குனர், இரு தலைமை ஆசிரியர்கள், தலைமை இன்ஜினியர், பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் இடம்பெறுவர். தேசிய குழுவில், தலைமை கல்வி செயலர், துணை செயலர் இடம்பெறுவர். மாநிலத்தில், 40 பள்ளிகள் தேர்வு செய்து, அதில், 20 பள்ளிகள், தேசிய போட்டிக்கு பரிந்துரை செய்யப்படும். 20 பள்ளிகளுக்கு விருது, அங்கீகார சான்று வழங்கப்படும். சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்படும், 500 பள்ளிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதி, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்த வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விபரம், நவ., 25ல் அறிவிக்கப்பட உள்ளது.

பள்ளிகள் அருகில் நொறுக்கு தீனி விற்க தடை


அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

வறுத்த உணவு, சிப்ஸ், குளிர்பானம், நுாடுல்ஸ், பீட்ஸா, பர்கர், உருளைக்கிழங்கு பிரை, சாக்லேட், சமோசா உள்ளிட்ட கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகமுள்ள நொறுக்கு தீனி, உணவுகளை, பள்ளி வளாகத்துக்குள்ளும், பள்ளியை சுற்றி, 200 மீட்டர் துாரத்திலும்

விற்பனை செய்யக் கூடாது. இதை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் செயல்படும் கேன்டீனுக்கு பெற்றோர், ஆசிரியர், மாணவர்களை கொண்ட மேற்பார்வை குழு அமைத்து, ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே மாணவர்களுக்கு கிடைப்பதை கண்காணிக்க வேண்டும். உணவு தயாரிப்பில் தரமான முறையை பின்பற்ற ஆய்வு நடத்த வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.வாரத்துக்கு, குறைந்தபட்சம் இரு பாடவேளை, விளையாட்டுக்கு ஒதுக்கி, உடல்திறன் மேம்படும் வகையில் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த வேண்டும்.

வீடுகளிலும் மாணவர்கள், அதிக நேரம், 'டிவி' பார்ப்பதை தவிர்த்து, உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகளில் கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.

All transfer form for Elementary dept

Click below

DEE district transfer forum

https://app.box.com/s/1aciuimqkpxrdwleouas2ukfp66utkol

Mutual transfer form

https://app.box.com/s/if6k4z8fuhgp6yh4f3koscachlhhgffp

Transfer form

https://app.box.com/s/wbcbj0ri7grvicv99p7f7hndcc9i347o

Online application

https://app.box.com/s/bz0drsp1oo24uvgszcqg4nxuqzh3ef1o

G.O No.209 Dt: July 15, 2016 PROVIDENT FUND - General Provident Fund (Tamil Nadu) - Rate of Interest for the period 01.04.2016 to 30.06.2016 - Orders - Issued.

Click below

https://app.box.com/s/5ku4il9l50neqcuchuc5yo3faqwf23u1

ஆனந்தவிகடன்-சொல்வனம் 14-7-16

Elementary director proceeding for general transfer 2016

வண்ணதாசனின் ஒளியிலே தெரிவது

Click below
https://m.facebook.com/story.php?story_fbid=1141757789216555&id=100001470339226

Transfer schedule-Elementary

பள்ளிக்கல்வி மாறுதல் கலந்தாய்வு 2016

English reading book

Click below

https://app.box.com/s/p3flpwz9fcsun91m7fvu9x2g5tft3vuz

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி கணக்கு முடித்தல் சார்பு

Friday, July 15, 2016

Online entry swachh bharath procedure


Online entry :   www.mhrd.gov.in -> Swachh vidyalaya -> swachh vidyalaya puraskar -> login
-> school login -> Regiatration -> school informationv& mobile no  give the details -> OTP PIN SEND UR MOBILE.  (UDISE CODE : & PIN NO) SHORTCUT METHOD : 103.7.128.243:8080/login.aspx -> registration steps-> Enter U Dise code : Enter password : -> submit  FILL THE WATER & TOILET INFORMATION etc.,

புதிய கல்விக்கொள்கைக்கு சிறுபான்மை பள்ளிகள் அதிருப்தி


மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கல்வி கொள்கையால் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி கழகத்தின் செயலாளர் அருளப்பன், தமிழக ஆயர் பேரவை சட்டப்பிரிவு துணை செயலாளர் ஜான் கென்னடி ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு இந்தியாவில் கல்வி கொள்கையை மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி, வருகிற ஜூலை 31ம் தேதி புதிய கல்வி கொள்கையை வெளியிட இருக்கிறது. மத்திய அரசின் கல்வி கொள்கை நாட்டுக்கு பயன் அளிக்குமா? என்பதே எங்களின் கேள்வி. இந்தியாவின் புதிய கல்வி கொள்கை சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பாதகமாக அமையுமோ என்ற அச்சம் உள்ளது. காரணம், தேசிய கல்வி கொள்கை-2016 வரைவு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கல்வி கொடுத்ததில் கிறிஸ்தவ சமூகம் முன்னிலையில் உள்ளது. ஆனால், வரைவு அறிக்கையில் கிறிஸ்தவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இது சிறுபான்மை சமூகத்தினரை அன்னியப்படுத்துவது போல் உள்ளது. புதிய கல்வி கொள்கையில் எல்ேலாருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்.

ஆனால், யோகா, சமஸ்கிருதம், குலக்கல்வி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிற மாதிரி வரைவு அறிக்கை உள்ளது. இது சிறுபான்மையினருக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை சமூகங்களின் உரிமை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை கீழ் நோக்கி போகக்கூடாது, உயர்ந்த இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். ஏதோ ஒரு சாயம் பூசப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு எங்கள் கருத்துக்களை அனுப்பி உள்ளோம். சர்வதேச அளவில் இந்திய கல்வி கொள்கை சிறப்பாக இருக்க வேண்டும். சிறுபான்மை பள்ளிகளை ஊக்குவித்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. புதிய கல்வி கொள்கை பற்றி இன்று சென்னையில் 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகம் முழுவதும் 750 ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை


தமிழகத்தில் தொடங்கப்பட்ட 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன்முதலாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டப்பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் திட்டத்தின்கீழ் கல்வி அளிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு செயல்வழிக் கற்றல் என்ற பாடத்திட்டத்தை எளிமையான செயல்வழிக் கற்றல் என்று மாற்றப்பட்டது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக் கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 தொடக்கப்பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றப்பட்டது.

2014-2015 கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 750 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கற்றலை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. ஆங்கில செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரித்தன. ஆனால் தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் அமல்படுத்தப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே, ஆங்கில வழிக்கல்வியை கற்பித்து வருகின்றனர். கூடுதல் பணி சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழிக்கல்வி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி பாடங்களை கற்க முடியாமல் போகிறது. இதனால் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறுகின்றனர் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பள்ளியில்வேலை வாய்ப்புபதிய ஏற்பாடு


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும் 18 முதல் மதிப்öண் சான்று வழங்கப்பட உள்ளது. மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளி களிலேயே, வேலை வாய்ப்பு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே, மதிப்பெண் சான்று பெற செல்லும் மாணவ, மாணவியர், தங்களது ஆதார் எண், ரேஷன் கார்டு, மொபைல் எண், "இ-மெயில்' ஆகிய விவரங்களை கொடுத்து, தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துகொள்ளலாம்.

வரும், 18 முதல், ஆக., 2ம் தேதி வரை, வேலை வாய்ப்பு பதிவு அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கும். அனைவருக்கும் முதல் நாள் பதிவு மூப்பு வழங்கப்படும். மேலும், டttணீண்:// tணதிஞுடூச்டிதிச்ச்டிணீணீத.ஞ்ணிதி.டிண என்ற இணையதள முகவரில் சென்று, கல்வித்தகுதியை பதிவு செய்துகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு அசல் சான்றிதழ்:18ல் வினியோகம்


ஜூலை, 18 முதல், பள்ளிகளில், 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச் மாதம் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவுக்கு பின், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஜூன், 1ல் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ், ஆக., 29 வரை மட்டுமே செல்லத்தக்கது. எனவே, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை, 18ல் அந்தந்த பள்ளிகள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

தனித்தேர்வர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தங்க சேமிப்புப்பத்திரம் 18ம் தேதி வெளியீடு


மத்திய அரசு, நான்காவது தவணையாக, வரும் 18ம் தேதி, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிடுகிறது.



நடப்பு நிதியாண்டில், முதன் முதலாக மேற்கொள்ளப்படும் இவ்வெளியீட்டில், குறைந்தபட்ச முதலீடு, 2 கிராமில் இருந்து, 1 கிராம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர், அதிகபட்சமாக, 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு, 2.5 சதவீதம் ஆண்டு வட்டி அடிப்படையில், அரையாண்டிற்கு ஒருமுறை வட்டித் தொகை வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட, தங்க பத்திரங்களில், 5, 6 மற்றும் 7 ஆண்டுகளில், வெளியேறும் வசதியும் உள்ளது.

அனைத்து வங்கி கிளைகள், குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்களிலும், தங்க சேமிப்பு பத்திரங்களில், வரும் 22ம் தேதி வரை முதலீடு செய்யலாம். கடந்த மூன்று தவணைகளில் வெளியிடப்பட்ட தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம், மத்திய அரசு, 1,320 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. 4.50 லட்சம் பேர், 4,908 கிலோ தங்கத்தை, பத்திரங்கள் வடிவில் வாங்கியுள்ளனர்.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும், டீசல் 42 பைசாவும் குறைந்தது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

Battery test 2016-17

Click below

https://app.box.com/s/fia40fhh0v98kpyvu52qa6w0cqvm4smq

தென் மேற்கு பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Click below

https://app.box.com/s/b7w0eanwyny1m093ygxg0hunl2miu4gs

TIRUPUR DEEO leave list 2016-17

Click below

https://app.box.com/s/6dmjtbqwwblcya8rzcj5bthewea70giz

Thursday, July 14, 2016

2016-17 ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் 21ல் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு


தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதில் இடம்பெறலாம் என தெரிகிறது. சில பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 133 இடங்களை கைப்பற்றி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது. அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். 4 நாட்கள் கூட்டம் நடைபெற்று, ஒத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து, தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் எப்போது தொடங்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், 21ம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை வருகிற 21ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் தனபால் கூட்டியுள்ளார். அன்று காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய கூட்டம் முடிவடையும். அதன் பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில் எத்தனை நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடத்துவது மற்றும் துறைவாரியான மானியக்கோரிக்கை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். அனேகமாக, பட்ஜெட் தொடர் ஒரு மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. பால் விலையை குறைப்பது, மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது, அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது மற்றும் அதிமுக அரசு தேர்தலின் போது அறிவித்த பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு சில பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

500 அரசு பள்ளிகளுக்கு ரூ50 ஆயிரம் பரிசு:மத்திய அரசு திட்டம்


இந்தியா முழுவதும் சுகாதாரமான 500 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கும் பிரதமர் மோடியின் தேசிய இயக்கத்திற்கு 'ஆன்லைனில்' பதிவு நடைபெறுகிறது.

துாய்மை பாரதம் திட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி கழிப்பறைகள் தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதசம்பளம், கிருமி நாசினி வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து, கை கழுவ சோப்பு, டவல் தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடியின் 'துாய்மையான பாரதம், துாய்மையான பள்ளிகள்' எனும் புதிய தேசிய இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் அரசு பள்ளிகளுக்கு 'துாய்மை பள்ளி' என தேசிய விருது வழங்கப்படுகிறது. 500 பள்ளிகளை தேர்வு செய்து தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் துவக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

சுய மதிப்பீடு

இத்தேர்வு 'ஆன்லைன்' மூலம் நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு 39 கேள்விகளுடன் நான்கு விடைகள் அடங்கிய சுயமதிப்பீட்டு படிவம் அளிக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள், பயன்பாடு ஆகியவற்றை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

பள்ளியில் குடிநீருக்கு என்ன செய்கிறீர்கள் என கேள்விக்கு, 4 விடைகள் அளிக்கப்பட்டிருக்கும். வசதியினை 'டிக்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பதில்களுக்கு ஏற்ப மொத்தம் 100 மதிப்பெண் வழங்கப்படும்.

தேர்வு குழுக்கள்

மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்வர். மாவட்ட குழுவில் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், சிறந்த மூன்று தலைமை ஆசிரியர்கள், இன்ஜினியர், உடல்நல அலுவலர், இரு தன்னார்வலர்கள் இடம்பெறுவர். மாநில குழுவில் பள்ளி கல்வி செயலர், இயக்குனர், உடல்நல இயக்குனர், இரு தலைமை ஆசிரியர்கள், தலைமை இன்ஜினியர் , பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் இடம் பெறுவர். தேசிய குழுவில் தலைமை கல்வி செயலர், துணை செயலர் இடம் பெறுவர்.

மாநிலத்தில் 40 பள்ளிகள் தேர்வு செய்து, அதில் 20 பள்ளிகள் தேசிய போட்டிக்கு பரிந்துரை செய்யப்படும். 20 பள்ளிகளுக்கு விருது, அங்கீகார சான்று வழங்கப்படும். சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யும் 500 பள்ளிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் நிதி, உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்துவதற்கு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விபரம் நவ., 25ல் அறிவிக்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க பள்ளிகள் சுயமதிப்பீடு கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றன.

இடமாறிதல் அரசாணையின் சிறப்பம்சங்கள்


ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணை, ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின், 'வாட்ஸ் ஆப்'களில் வலம் வருகின்றன.

அரசாணை அம்சங்கள்

உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரே, பொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன், பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும்.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, முதலில் ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.

உயர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும், பின், மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும்

கண் பார்வையற்றவர், மாற்றுத்திறனாளி, ராணுவ வீரர்களின் துணைவியர், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோயாளி, கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்

கணவன், மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால், இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன், மனைவி என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள், அதே தகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.