Monday, July 11, 2016
அடுத்த மாத இறுதிக்குள் பஸ் பாஸ்
பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.வி.சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்கிட, அனைத்து பேருந்துகளையும் தினமும் சரியான நேரத்தில் இயக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட அனைத்து வழித்தடத்திலும் தடையில்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016-17ம் கல்வி ஆண்டிற்கான இலவச பயண அட்டைகளை மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தூய்மைப் பள்ளிகளுக்கு விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப் பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு, நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான பள்ளிகள் இயக்கம்(Swachh Vidyalaya Puraskar)
துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், தேசிய, மாநில, மாவட்ட அளவில் தூய்மைப் பள்ளிகள் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் இந்த விருதை பெற, நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் பள்ளியினை பதிவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து தண்ணீர், கழிவறை, கைகழுவும் வசதி, இயக்குதலும் மற்றும் பராமரித்தலும், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது.
அதன்படி விருதுக்கு விண்ணப்பித்த பள்ளிகளின் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர், 3 ஆசிரியர்கள், ஒரு பொறியாளர், மாவட்ட உடல்நல அலுவலர் மற்றும் இரண்டு தன்னார்வலர்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
அதைத்தொடர்ந்து இந்த விருதுக்கான பள்ளிகள் தேர்வு செய்யப்படும். இந்த விருதை பெற விரும்பும் பள்ளிகள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்: புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன.
ஐந்து ஆண்டுகளாக...: தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் செய்யப்படுகிறது. இதற்கு, மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து, கவுன்சிலிங் என்ற கலந்தாய்வு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் கோடை விடுமுறை
யில் நடத்தப்படும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக, இந்த கலந்தாய்வு தாமதமாகவே நடத்தப்படுகிறது. இதனால், பள்ளிகள் துவங்கி, சில மாதங்களான பின், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த கலந்தாய்வுக்கு பிறகே, காலியிடங்களில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் இட மாறுதல் பெற முடியும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நடப்பு மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கலந்தாய்வுக்காக புதிய விதிகளை, பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
ஓரிரு தினங்களில்... : 'இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியாகும்; முறைகேடு, தில்லுமுல்லுக்கு இடம் அளிக்காமல், அதிகாரிகள் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு, அதிகாரத்தை தள்ளி வைத்து விட்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கிகள் வேலைநிறுத்தம்
வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஸ்டேட்பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட 5 வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதே போல் வராக்கடன் வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாரத்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து திட்டமிட்டப்படி நாளையும், நாளை மறுநாளும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வேலைநிறுத்தம் காரணமாக வங்கி பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
Sunday, July 10, 2016
தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
7வது ஊதியக்குழு அறிவிக்கை எப்போது?
7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்பதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும், குறைந்தபட்ட ஊதியம் ரூ.18,000 என்பதை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதையடுத்து இந்த கோரிக்கைகளைப் பரிசீலிக்க உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இதனால், 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வருமா? அல்லது காலதாமதமாகுமா? என்று கேள்வி எழுந்தது. முக்கியமாக, ஜூலை மாத சம்பளம், ஓய்வூதியத்துடன் 7-ஆவது ஊதியக்குழுவின் பலன்கள் கிடைக்குமா அல்லது காலதாமதமாகுமா என்ற குழப்பம் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தில்லி வட்டாரங்கள் கூறுகையில், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவது தொடர்பான அரசு அறிவிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
Saturday, July 09, 2016
Forms
M.L form
Click below
https://app.box.com/s/gmmpza7qfh1l8844h93kff7jqt62q05g
C.L form
Click below
https://app.box.com/s/6ry21hknvnic3zyo8quf7rlggbui8l77
E.L form
Click below
மூன்று சுழி “ண” , இரண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? :-
படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?
தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனுசுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
(வர்க்க எழுத்து-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம்.
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் த மட்டும்
(பந்து)
தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்பு சி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.
Friday, July 08, 2016
இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள் : எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரிப்பு
தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்பு சி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.
Thursday, July 07, 2016
வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்;