இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 06, 2016

சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் தேதி வருகிற மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக ‘சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வருவார்கள்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டை சேதம் அடைந்ததாக கூறி 43 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 18 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அட்டை பிரிண்ட் செய்யும் பணி இன்று அல்லது நாளை முடிவடையும். புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்கள், விலாசம் மாற்றம், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை, தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். வாக்காளர் அட்டை: தற்போது கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களும் இ-சேவை மையங்களில் பணம் கட்டி கலர் படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.15 முதல் ரூ.20 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பிரசாரம் செய்வதை கண்காணிக்க தேர்தல் ஆணையம் புதிய சாப்ட்ேவர் வாங்கியுள்ளது. இதன்மூலம் அவர்களின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்படும்.

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால், ஆங்கிலத்தில் தங்களின் இனிஷியலை எழுதுகின்றனர்' என, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குணமால் என்பவர், பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம், அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும், அதையும் தமிழில் எழுதவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். இனிஷியல் என்பது, தந்தை அல்லது கணவர் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக பெரும்பாலும் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்


மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர். இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில்,“வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம்.

இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

SSA ஜனவரி பயிற்சிக்கான அட்டவணை

Salem dist deeo order second term exam timetable

Tuesday, January 05, 2016

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா வங்கி.கிடைக்குமிடங்கள்


சென்னையில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.

காஞ்சிபுரம்- குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

திருவள்ளூர்- ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

கடலூர்-மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி,

விழுப்புரம்- பூந்தோட்டம் ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

தஞ்சை- மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி,

நாகப்பட்டினம்- சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி,

திருவாரூர்- அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி,

மதுரை- வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளி,

தேனி- என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திண்டுக்கல்- பழனி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளியிலும்,

விருதுநகர்- த.பெ.ந.மகளிர் மேல்நிலைப் பள்ளி,

சிவகங்கை - மதுரை ரோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி,

திருநெல்வேலி - அரசு மேல்நிலை பள்ளியிலும் (ரத்னா திரையரங்கு எதிரில்),

தூத்துக்குடி- லசால் மேல்நிலைப் பள்ளி,

கன்னியாகுமரி- நாகர்கோவில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி,

வேலூர் - வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி,

திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப் பள்ளி,

சேலத்தில் மறவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி,

நாமக்கல் - ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி,

தருமபுரி - அதியமான் அசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி,

கரூர் - கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு     உயர்நிலைப் பள்ளி,

பெரம்பலூர் - வெங்கடேசபுரம் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி,

புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி,

கோவை - ராஜ வீதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

உதகை- குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,

கிருஷ்ணகிரி - பெங்களூர் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திருப்பூர் - விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி

பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கற்றல் கையேடு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெறுவர்கள் தேர்ச்சி பெறவும், தேர்ச்சியின் விளம்பில் இருப்பவர் அதிக மதிப்பெண் பெறவும், அதிக மதிப்பெண் பெறுவர் முழு மதிப்பெண் பெறும் வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல், புவியியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு கற்றல் கையேடுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்கையேடுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்'சிடி'யாக வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் பயன் பெறும் வகையில் கல்வித்துறை சார்பில் www.chiefeducationalofficer.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் பயன் பெறும் வகையில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 'சிடி'யாக வழங்கிய கையேட்டை அனைத்து மாணவர்களும் புத்தகமாக மாற்றுவது என்பது காலதாமதமாகும். இதை தவிர்க்க இணைய தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த முகவரியில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். ஓரிரு நாளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் கையேடும் இணைய தளத்தில் வெளியிடப்படும்,” என்றார்.

ரயில் முன்பதிவில் மாற்றம்


ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு விண்ணப்பிக்கும் போது, இஷ்டம் போல் பெயரை குறிப்பிடுவதை தடுக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.ரயில்களில் பயணிக்க, தினமும் சராசரியாக, 25 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில், முன்பதிவு செய்பவர்களில் பெரும்பாலானோர், தங்களது பெயரை சுருக்கமாகவும், இஷ்டம் போல் எழுதுவதையும், வாடிக்கையாக கொண்டு உள்ளனர். உதாரணத்திற்கு, வி.கே.எம்., என விண்ணப்பத்தில் பெயரை குறிப்பிட்டு முன்பதிவு செய்வர்.

அடையாள அட்டையை பரிசோதிக்கும் போது, வினோத் குமார் மல்கோத்ரா என இருக்கும். முன்பதிவின் போது குறைந்தபட்சம் மூன்று எழுத்து இருந்தால் போதும் என்பதால், இந்த பெயரை கணினியும் ஏற்றுக் கொள்ளும்.இதன்மூலம், முதல் மூன்று எழுத்துடன் ஒத்துப்போக கூடிய பெயர் உள்ள எவரும் பயணிக்க முடியும் என்ற நிலை இருந்தது. மேலும், முன்பதிவு துவங்கியவுடன் டிக்கெட்டை விரைவாக உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், சிலர் இந்த முறையை சாதகமாக பயன்படுத்தினர். இனி இந்த முறையை கையாள முடியாது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில் முன்பதிவில் இஷ்டம் போல் பெயர் எழுதுவதை தடுக்க, தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய, 'சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்' பிரிவு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இனி, பெயரை சுருக்கமாகவோ அல்லது, பெயரின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டாலோ, முன்பதிவின் போதே டிக்கெட் உறுதி செய்யாமல் நிறுத்தப்படும்.

மேலும், பயணத்தில் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும், விரைவில், புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்


போதிய அடிப்படை வசதிகள் மற்றும் இடவசதி இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, 4 வாரகால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றம் இந்தியா என்ற: அமைப்பின் இயக்குநர் நாராயணன் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து எதிர் பதில் மனுத் தாக்கலுக்கு 2 வாரகால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு


பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் மாதம் நான்காம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

G.O 1-dt.4.1.16-Finance department-Bonus -Adhoc bonus -Special bonus for the year 2014-15-sanction Order release.G.O

Click below

https://app.box.com/s/flo99iev9koxbexwudl7vm1giz5vrcok

Monday, January 04, 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக கொண்டு எழுதவேண்டும்; தமிழக அரசு உத்தரவு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சிறுபான்மையின மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கற்றல் சட்டம்

தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006-ல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1-ல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006-ம் ஆண்டு முதல் 1-வது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும்.

அதன்படி படித்த அந்தமாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர். சிறுபான்மை மொழியில் படிக்கலாம் இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பலதடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பகுதி 2-ல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனுகொடுத்துள்ளார்.

அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. தமிழ் பாடப்புத்தகம் வினியோகம் அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கஇயலாது எனவே 2015-1016 கல்விஆண்டில் 10-வது வகுப்பு தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது. இவ்வாறு த.சபீதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக வைத்து எழுதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது.இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, January 03, 2016

3ம் பருவ பாடப்புத்தகம் வழங்கினாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தடை


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. ஆனால், அதை வைத்து உடனடியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. கனமழை காரணமாக இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது. இரண்டாம் பருவத்தேர்வுகளே இன்னும் நடக்காத நிலையில், மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்தினால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் என்பதால், புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பின்தான் மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்படும். தற்போது ஒரு மாதம் வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரியில் புத்தகம் கொடுத்தால் அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகிவிடும் என புத்தகங்களை இப்போதே வழங்கியுள்ளனர். இரண்டாம் பருவத்தேர்வு நடத்தப்படும் முன் மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்த தொடங்கினால் மாணவர்கள் குழப்பம் அடைவர் என்பதால், தேர்வு முடியும் வரை புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், புத்தகங்களை மாணவர்களிடம் வழங்கிவிட்டு பத்திரமாய் வீட்டில் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை பெயரளவில் கொடுத்துவிட்டு, மீண்டும் பெற்று பள்ளி அலமாரியில் வைத்துள்ளனர். ஏனெனில், ஆர்வ மிகுதியில் புதிய பாடத்தில் மாணவர்கள் கவனம் சென்றுவிட்டால் இரண்டாம் பருவத்தேர்வில் பின்னடைவு ஏற்படும்’ என்றனர்.

பிப்.5-இல் கோவில்பட்டியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு.திரிபுரா மாநில முதல்வர் பங்கேற்கிறார்


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6-ஆவது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5-இல் தொடங்குகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மோசஸ், பொது செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆசிரியர், மாணவர்களின் நலன், கல்வி நலன், சமுதாய நலன், தேசிய நலன்களுக்காக பாடுபட்டு வரும் இந்த அமைப்பின் மாநில மாநாடு பிப்ரவரி 5, 6, 7 ஆகிய 3 நாள்கள் கோவில்பட்டி நடைபெறுகிறது. முதல் 2 நாள்கள் பிரதிநிதிகள் மாநாடும், மூன்றாம் நாள் முற்பகல் பெண் ஆசிரியர்கள் மாநாடும், பிற்பகலில் ஆசிரியர்களின் பேரணியும் நடைபெறும். தமிழகத்தின் புகழ் பெற்ற கல்வியாளர்கள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள், தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் பேசுகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்துகொண்டு பேசுகிறார் என்றனர்.

ESI recruitement.notification

Click below

https://app.box.com/s/g9gpdmmxziooom27kizq7w15nvedxaig

Saturday, January 02, 2016

PONGAL bonus anounced

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் அறிவிப்பு
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.
A&B -1000/-
C&D-3000/-

CBSE exam dates

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.

10-ம் வகுப்பினருக்கு மார்ச் 28-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பினருக்கு ஏப்ரல் 22-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வு அட்டவணை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு


முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.

அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயில ஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர். முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர்.

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது. இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.