இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 11, 2015

பி.எட். மாணவர் சேர்க்கை எப்போது? படிப்பு காலத்தை அதிகரிப்பதிலும் குழப்பம்

இந்த கல்வியாண்டு (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், கலந்தாய்வு மேலும் தள்ளிப்போகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். பி.எட். மாணவர் சேர்க்கை ஜூலை மாதம் தொடங்கப்பட்டு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அறிவுறுத்தியுள்ளபோதும், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், என்.சி.டி.இ.-யின் புதிய வழிகாட்டுதலின்படி (2014 வழிகாட்டுதல்) பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த கால அவகாசமும் கோரப்பட்டது. ஆனால், என்.சி.டி.இ. இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதே நேரம் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் புதிய வழிகாட்டுதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், பி.எட். இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. மேலும் ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், 2015-16 கல்வியாண்டுக்கான பி.எட். கலந்தாய்வு நடத்த திட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து நடத்த தயாராக உள்ளது. இந்த நிலையில், சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதன் காரணமாக பி.எட். சேர்க்கை மேலும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் கூறியதாவது: படிப்புக் காலம் முதன் முறையாக 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறபோது, அதற்கான பாடத் திட்டம் சேர்க்கை நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அனைத்து கல்லூரிகளுக்கும் குறிப்பாக தன்னாட்சி கல்லூரிகளுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதோடு, உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம், ஓரிரு நாள்களில் கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.14) முதல் விண்ணப்ப விநியோகத்தை தொடங்குமாறு வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், உயர் கல்வித் துறையை அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற காரணங்களால், 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, நிகழாண்டில் பி.எட். ஓராண்டாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றனர்.

தீர்ந்தது ஆசிரியர் சம்பள பிரச்னை

தமிழக பள்ளிக் கல்வியில், மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும், 50 ஆயிரம் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான, சம்பள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட, 1,000 உயர்நிலை, 8,000 நடுநிலை பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட, 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., ஆகிய திட்டங்களின் கீழ், மாத சம்பளம் தரப்படுகிறது.

இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாறுபடும். எனவே, ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாதந்தோறும் சம்பளம் வழங்க, தனித்தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, பள்ளிக்கல்வி பணியாளரில், 1,764 பேர்; இளநிலை உதவியாளரில், 4,393 பேர்; ஆய்வக உதவியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கடந்த மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என, புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, நமது நாளிதழில் கடந்த, 9ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் திட்டத்திலுள்ள பணி இடங்களை, ஓராண்டுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, நேற்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் வந்துள்ளது. இதனால், இனி, ஓர் ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்

செப்டம்பர் 15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், அடுத்த மாதம், 15ம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், அன்றைய தினம் முதல், அக்டோபர் 14ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும்.

அத்துடன், செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 4ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, நவம்பர் 16ம் தேதிக்குள், நடவடிக்கை எடுக்கப்படும்.இதன்பின், துணை வாக்காளர் பட்டியல், டிசம்பர் 15லும், இறுதி வாக்காளர் பட்டியல், 2016 ஜனவரி 11ம் தேதியும் வெளியிடப்படும். 'வாக்காளர் பட்டியலில் இருந்து, வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன், தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பட்டியலை சரி பார்க்க, வீடு வீடாக செல்லும்போது, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்டுகளை, உடன் அழைத்து செல்லலாம்' என்றும், தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின், 69வது சுதந்திர தினம், வரும், 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாள், அரசு விடுமுறை தினமாக வரும் போது, ஆசிரியர்கள், மூன்று நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்து விடுவர். அதை தவிர்க்க, இந்த ஆண்டு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும், சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அரசு பள்ளிகளில், வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான, 15ம் தேதி, கட்டாயம் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

01.06.2014க்கு முன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி - தொ.க.இயக்குனர் செயல்முறை

Monday, August 10, 2015

பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க ஆக.19 கடைசி

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 13 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

பிளஸ் 2 பொதுத் தேர்வை ஏற்கெனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் பதினாறரை வயது பூர்த்தியும் ஆகியவர்கள் "நேரடி தனித் தேர்வர்களாக' இந்த துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சேவை மையங்கள்: விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கென, கல்வி மாவட்டம் வாரியாக அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்ட சேவை மையங்களுக்கு வியாழக்கிழமை (ஆக.13) முதல் சென்று விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பத்தைப் பதிவு செய்ய ஆகஸ்ட் 19 கடைசித் தேதியாகும்.

தேர்வுக் கட்டணம்: பிளஸ் 2 தேர்வை ஏற்கெனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த துணைத் தேர்வில் பங்கேற்க பாடம் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனுடன் இதர கட்டணமாக ரூ. 35, ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 செலுத்தவேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ. 150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ. 2 என மொத்தம் ரூ. 187 செலுத்த வேண்டும். அதனுடன் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள்:

செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1, செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2, செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1, அக்டோபர் 1 - ஆங்கிலம் தாள்-2, அக்டோபர் 3 - இயற்பியல், பொருளியல், அக்டோபர் 5 - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச் சத்து-உணவுக் கட்டுப்பாடு, அக்டோபர் 6 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல், அக்டோபர் 7 - வேதியியல், கணக்குப் பதிவியல், அக்டோபர் 8 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம், அக்டோபர் 9 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு தமிழ், அக்டோபர் 10 - அனைத்து தொழில் பிரிவு தியரி, அரசியல் அறிவியல், செவிலியர் பாடம் (பொது), புள்ளியியல். மேலும் விவரங்களுக்கு www.tndge.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கல்வியியல் கல்லூரிகளில்யோகா கட்டாயம்

கல்வியியல் கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2015--16 முதல் யோகா பாடத்தை தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கட்டாயமாக்கி உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் யோகா கற்று கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு கற்று கொடுக்க முதலில் ஆசிரியர்கள் யோகா தெரிந்திருக்க வேண்டும். இதற்காக கல்வியியல் கல்லுாரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2015--16 முதல் யோகா பாடத்தை தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கட்டாயமாக்கி உள்ளது. மேலும் யோகாவை ஏற்காத கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரித்துள்ளது. ஓராண்டிற்கு 32 மணி நேரம் செயல்முறை பயிற்சியும், 16 மணி நேரம் 'தியரி'யும் உள்ள வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குனர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் கூறியதாவது: பெங்களூருவில் நடந்த தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கூட்டத்தில் யோகா பாடத்தை செயல்படுத்துவது குறித்து கல்லுாரி முதல்வர்கள், பல்கலை துறைத்தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. யோகா பாடத்திற்கு தினமும் ஒரு பாடவேளை ஒதுக்கப்படும், என்றார்.

The Score list for the Candidates who appeared in the Common Entrance Test(M.Phil./ Ph.D.) held on 19.07.2015

Click below

https://app.box.com/s/xge0qo2i46yorjzn8vxaqahh9kgntm6n

தமிழகத்தில் 69% சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

அதனால், ஒசி பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் லோகேஸ்வரி உள்ளிட்ட 8 மருத்துவ கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.

Sunday, August 09, 2015

அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் ஒரே இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்

மத்திய அரசின் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் உயர்கல்வித் துறை, சமூகநீதி மேம்பாட்டுத் துறை, பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சிறுபான்மையினர்நலத் துறை, பள்ளிக் கல்வி- எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கல்வி உதவித் தொகைகள் குறித்த நேரத்தில் விரைவாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தேசிய இ-கல்வி உதவித்தொகை இணையதளத்தை (http//sholerships.gov.in) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களால் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட அவர்களுடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இணையத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்படும்.

விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டு விட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாணவர்கள் இந்த இணையதளம் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.

தேசிய திறனறி தேர்வு அறிவிப்பு

'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனறித் தேர்வு நவ., 8ம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அளவிலான முதற்கட்ட தேசிய திறனறித் தேர்வு தமிழகத்தில் நவ., 8ம் தேதி நடக்கும்.

இதற்கான விண்ணப்ப அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வியின் தேர்வுத் துறை தனியே அறிவிக்கும். இதில் வெற்றி பெறும் அனைத்து மாநில மாணவர்களுக்கும் தேசிய அளவில் இறுதிகட்ட தேர்வு அடுத்த ஆண்டு மே 8ம் தேதி நடக்கும். இந்த தேர்வில் மனநிலை தாள், மொழித்தாள், கல்வித்திறன் அறிதல் என மூன்று தாள்கள் எழுத வேண்டும். தலித் மாணவர்களுக்கு, 15 சதவீதம், பழங்குடியினருக்கு, 7.5 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்கள் 'சென்டம்' வாங்க முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், பாஸ் மார்க் மற்றும் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பாடம் நடத்துவது எப்படி என, ஆசிரியர்கள், 1,556 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓரளவுக்கு...:தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, பிளஸ் 2 தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில, 'ரேங்க்' பெறவில்லை.

அதேநேரத்தில், 10ம் வகுப்பில், அரசு பள்ளி மாணவர்கள், மாநில அளவில், ஓரளவுக்கு முன்னிலை பெற்றனர். அதனால், பிளஸ் 2 தேர்விலும், அரசு பள்ளி மாணவர்கள், மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெறும் வகையில், முயற்சிகள் எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு, 'பயிற்சிக் கட்டகம்' என்ற புத்தகம் மூலம் பயிற்சி தரப்படுகிறது; இப்புத்தகத்தின் நகல்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு முதற்கட்டமாக, ஒரு மாவட்டத்தில், ஒரு பாடத்துக்கு, மூன்று முதுநிலை ஆசிரியர்கள் வீதம், 32 மாவட்டங்களிலும், 11 பாடங்களுக்கு, 1,556 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் அளிக்க உள்ளனர். முதற்கட்டமாக, ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களுக்குபின், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இங்கு பயிற்சி பெறும் மூன்று ஆசிரியர்களும், தங்கள் ஒன்றியத்திலுள்ள மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தருவர்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதப் பதிவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்களுக்கு, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

Saturday, August 08, 2015

சிறப்பாசிரியர் நியமனம்

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது
  

அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன.

கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில் 782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சிறப் பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளி யிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 95 மதிப் பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் செயல்பாடு போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும்.

இந்த நிலையில், 440 உடற்கல்வி ஆசிரியர்களையும், 196 ஓவிய ஆசிரியர்களையும், 137 தையல் ஆசிரியர்களையும், 9 இசை ஆசிரியர்களையும் (மொத்தம் 782 காலியிடங்கள்) மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு திரும்பப்பெற்றுள்ளது. சிறப்பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ரத்துசெய்யப்பட்ட அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்களும் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். தற்போது, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து கணிசமான காலியிடங்கள் வந் துள்ளன.

இந்த 3 கல்வி ஆண்டு களுக்கான புதிய காலியிடங்கள் மற்றும் முந்தைய பழைய 782 காலியிடங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை ஒரே போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போட்டித் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் தையல்,ஓவியம்,உடற்கல்வி உள்ளிட்ட 1400 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர்.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

வேக கட்டுப்பாட்டு கருவி அக்., 1 முதல் கட்டாயம்

புதிய வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை, அக்டோபர், 1ம் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், அந்த உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழக அரசு இறங்கி உள்ளது.

'கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. அதனால், 'பஸ், லாரி, வேன் உட்பட, பொது போக்குவரத்து வாகனங்களில்; இனி, உற்பத்தியின் போதே வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்; அக்., 1ம் தேதி முதல், இதை செயல்படுத்த வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி,

*அதிகபட்சம், 80 கி.மீ., வேகத்திற்கு மேல், வாகனம் செல்லாதபடி, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.

* பள்ளி வாகனம், காஸ், டீசல் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அதிகபட்சமாக, 60 கி.மீ., வேகத்திற்குள் செல்லும் வகையில், வேகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

* போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

* தற்போது, இயக்கத்தில் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களிலும், அடுத்த ஆண்டு ஏப்ரல், 1ம் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். எனவே, இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருந்தால் மட்டுமே, அக்., 1ம் தேதி முதல், 'பெர்மிட்' வழங்குவோம்.

பள்ளி வாகனங்களில், ஏற்கனவே, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளது. புதிதாக உற்பத்தி செய்யப்படும், 'ஆம்னி' பஸ்களிலும், இந்த கருவி பொருத்தப்படுகிறது. அரசு பஸ்கள், லாரி, வேன் உள்ளிட்ட பிற பொது போக்குவரத்து வாகனங்களில் மட்டுமே, இந்த கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

'பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு வழங்கும் பஸ் பாஸ் பயன்படுத்தி, அரசு பஸ்களில், பள்ளிகளுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் போது, பல மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக, ஆங்காங்கே, வாகனங்களில் அடிபட்டு, மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு, ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூறியுள்ளதாவது: பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும். பஸ் நிறுத்தங்களில், மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்காமல், பஸ் வரும் போது ஒதுங்கி நிற்கும்படியும், ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றிக்கையில் தெரிவித்துள்ளார்.