இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 29, 2015

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக அரசு பள்ளிகளில் சிறப்பு பாடத்திட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில், சி.சி.இ., என்ற செயல்முறை வழி கற்றல் அமல்படுத்தப்படுகிறது.

அதேநேரம், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வரையிலான மாணவர்களுக்கு, சிறப்புப் பாடங்களும் நடத்தப்படுகின்றன. இவற்றில், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கைவினை போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இதற்காக, 22 ஆயிரம் ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் சரியாக வழங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் காணாமல் போனதாகவும், தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம் புகார் அளித்தது. இந்தப் புகாரை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி, புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைத்துள்ளது.

இதில், ஒவ்வொரு பாடவாரியாகவும் கவின் கலைக்கல்லுாரி பேராசிரியர், கலை ஆசிரியர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினரின் பாடத்திட்ட தயாரிப்புப் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில், இணை இயக்குனர் குப்புசாமி மேற்பார்வையில் பாடத்திட்ட தயாரிப்பு நடக்கிறது.புதிய பாடத்திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாகவும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையிலும், காலத்துக்கு ஏற்ற பல புதுமைகளுடன், சிறப்புப் பாட வழிகாட்டு பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப் - 2 'கீ ஆன்சர்' குறித்து ஆக., 4க்குள் கருத்து சொல்லலாம்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் - 2 பதவிகளான, துணை வணிகவரி அதிகாரி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு உதவியாளர் உட்பட, 1,241 காலியிடங்களுக்கு, கடந்த 26ம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்தது. 4 லட்சத்து, 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. இதில் தவறான விடைகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து ஆகஸ்ட், 4ம் தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!


அடுத்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை பெறும் போது, அத்துடன் அந்த மாணவனின் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு அடுத்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை அதற்கு முன்னதாக உறுதி மொழி படிவத்தில் அரசு தேர்வுத்துறை பெறுவது வழக்கம். தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய விபரங்களை உறுதி மொழி படிவத்தில் பெற்று, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்ராதேவி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்,

“பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர் மற்றும் அவரது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அந்த மாணவரின் முழு பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம், பெற்றோர் மற்றும் காப்பாளர் விபரங்களை உறுதி மொழி படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் உறுதி மொழி படிவத்தில் தேர்வு எழுதும் மாணவனின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாணவனுக்கு ஆதார் எண் இல்லை என்றால் அவர்களது பெற்றோரின் ஆதார் எண்ணை கட்டாயம் உறுதி மொழிபடிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இறுதியாக மாணவர் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் அந்த உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து பெற வேண்டும்.
உறுதி மொழி படிவத்தில் உள்ள விபரங்களை வகுப்பு ஆசிரியர்கள் ஒரு முறைக்கு, இரு முறை சரிப்பார்த்து கையெழுத்திட வேண்டும். இவற்றை பள்ளி தலைமையாசிரியர் சரிப்பார்த்து இறுதியில் கையெழுத்திட்டு அரசு தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றில் தவறு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” கூறப்பட்டுள்ளது.

Tiruppur Dist Leave list

Click below

https://app.box.com/s/1779g1sfbz0aqxc6w4t0vsvex2a7kbat

Tuesday, July 28, 2015

உடல்நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வுபெற்று செல்பவர்கள் வேறு பணியில் சேர்ந்தால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலிசபெத் ராஜாராம் (54). மகப்பேறு மருத்துவ நிபுணரான இவர், உடல்நலம் சரியில்லை என்று கூறி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை நிராகரித்து சுகாதாரத்துறைச் செயலர் 8.6.2015ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எலிசபெத் ராஜாராம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்திய நாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் மருத்துவப் பணி முக்கியமானது. அவரை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்தால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் அவர் இதுவரை அரசின் சலுகையை அனுபவித்துவிட்டு தற்போது விருப்ப ஓய்வு கேட்பதை ஏற்க முடியாது என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தான் சிகிச்சை அளித்தால் நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் என மனுதாரர் தெரிவித்துள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவம் மேற்கொள்ளக்கூடிய தைரியமும், நம்பிக்கையும் இல்லை. அப்படியிருக்கும் சூழலில் பணியில் இருக்குமாறு கட்டாயப்படுத்துவது தேவையற்றது. மனுதாரர் தான் உடல்ரீதியில் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கும்போது, அவரிடம் எப்படி சிகிச்சைக்கு வருவார்கள். அவர் சிறப் பாக பணிபுரிவார் என்பது கேள்விக் குறியாக இருக்கும்போது, அவரை தொடர்ந்து பணிபுரிய கட்டாயப் படுத்துவது தேவையற்றது. அவரைத் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தால் அவருக்கும், மருத்துவமனைக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஒரு மருத்துவர் தன்னால் சிகிச்சை அளிக்க முடியாது என்று சொல்லும்போது அவரிடம் அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரை சிகிச்சைக்கு அனுப்புவார்களா? அவரை பணியில் இருக்கச் சொல்வதற்கு பதில், அவருக்கு தகுதியான ஒரு மருத்துவரை நியமனம் செய்யலாம். மருத்துவர்களுக்கு கட்டாய ஓய்வு தரக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது. அதே அரசாணையில் உடல்நல பாதிப்பைக் கூறி விருப்ப ஓய்வு கேட்டால் அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டுமா என்பது சொல்லப்படவில்லை. இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் தலையிட முடியும். அதன் அடிப்படையில் மனுதாரரின் மனு ஏற்கப்படுகிறது. மனுதாரருக்கு விருப்ப ஓய்வு மறுத்து 8.6.2015-ல் சுகாதாரத்துறைச் செயலர் பிறப் பித்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. மருத்துவர்கள் சிலர் துறைரீதியான நடவடிக்கையை சந்திக்க பயந்து உடல் நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வில் செல்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். அப்படி விருப்ப ஓய்வில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது.

விருப்ப ஓய்வுக்கு பிறகு மனுதாரர் வேறு மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடாது. அப்படி வேறு மருத்துவமனையில் சேர்ந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

குரூப் 2 கீ ஆன்சர் வெளியீடு

சுமார் 4.78 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2 பதவியில் அடங்கிய 18 வகையான பதவிகளில் 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www,tnpscexams.netல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் ஒரு வாரத்தில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பொதுவாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றால் கீ ஆன்சர் ஒரு வாரத்தில் வெளியிடுவது வழக்கம்.

ஆனால், தேர்வு நடைபெற்ற இரண்டே நாளில் கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்டோ அமைப்பை தடை செய்ய கோரிக்கை

ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.இதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ், முதல்வர் அலுவலகத்தில், கொடுத்துள்ள மனு:அரசுப் பணியில் இல்லாதவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களின் சங்க விவகாரங்களில், தொடர்பு வைத்திருக்கக் கூடாது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துச்சாமி மற்றும் கவுரவ பொதுச்செயலர் அணணாமலை ஆகியோர், ஆசிரியர் சங்கங்களின் தலைமை நிர்வாகிகளாக, செயல்படுகின்றனர். மேலும், அவர்கள் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், தி.மு.க.,வின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலர்களாகவும் இருக்கின்றனர்.மூன்றுபேரும், தி.மு.க.,வினரின் துாண்டுதல்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை, தமிழக அரசுக்கு எதிராக, போராடத் துாண்டி விடுகின்றனர்.கடந்த, நான்கு ஆண்டு களில் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்கியதற்கு, மூன்று பேரும், நன்றி தெரிவிக்கவில்லை.

இப்போது, மூன்று பேரும், சில ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, 'ஜாக்டோ' என்னும் அமைப்பை உருவாக்கி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த, ஆசிரியர்களை துாண்டி வருகின்றனர். பள்ளிக்குச் சென்று, அழைப்பு விடுக்கின்றனர்.எனவே, அரசுப் பணியில் இல்லாதவர்கள் தலைமையில் செயல்படும், ஆசிரியர்கள் சங்கங்களின், அங்கீகாரத்தை, உடனே ரத்து செய்ய வேண்டும். இவர்கள் தலைமையில் செயல்படும், 'ஜாக்டோ' அமைப்பை, தடை செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொது விடுமுறை.30-7-15 அரசாணை

CTET exam 2015

��TNPTF MANI��

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015

The Central Board of Secondary Education, Delhi will be conducting the 8th Edition of Central Teacher Eligibility Test (CTET) on 20.09.2015 (Sunday) for a candidate to be eligible for appointment as a teacher for classes I to VIII.
Candidates can apply only On-line for CTET-SEPT 2015 on CTET website - www.ctet.nic.in
IMPORTANT DATES:
Submission of On-line application 30.07.2015 to 19.08.2015
Last date for Online Submission of application 19-08-2015
Last date for payment of fees Through E-Challan or Debit/Credit Card by the candidate 20-08-2015 (before 03:30 PM)
Period for On-line Corrections in Particulars (No correction will be allowed in any particulars after this date) 21.08.2015 to 25.08.2015
Download Admit Card from CTET website 04.09.2015
Schedule of Examination
DATE OF EXAMINATION PAPER TIMING DURATION
20.09.2015 PAPER - II 09.30 TO 12.00 HOURS 2.30 HOURS
20.09.2015 PAPER - I 14.00 TO 16.30 HOURS 2.30 HOURS

தகுதித்தேர்வை எதிர்நோக்கும் பட்டதாரிகள்

ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள்

மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.) கொண்டு வந்தது. 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010-ல் அமல் படுத்தப்பட்டு, 2011-ல் விதி முறைகள் வெளியிடப்பட்டன.

மேற்கண்ட விதிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரி யர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 2012-ல் ஜூலை மற்றும் அக்டோபரி லும், 2013-ல் ஆகஸ்டிலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலமாக அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு முடிய இன்னும் 5 மாதங்களே உள்ளன. எனவே, இந்த ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்படுமா? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் தளர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.

Monday, July 27, 2015

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் (2001- 2006) அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது எனவும், தொடக்க கல்வியில் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர் விகிதாசாரம் கணக்கில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கவும் முடிவானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நேரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும் அந்த இடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டன.

இதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சியல் '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' என்ற விதியை மாற்றி 100 சதவீதம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப (எண்:239, 240) உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பழைய உத்தரவை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாணவர்கள் டாப் ரேங்க்குக்கு திட்டம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் மற்றும் அதிக தேர்ச்சி பெற, கண்காணிப்பு குழு அமைப்பது உட்பட, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளத் துறை, வனத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை உட்பட, பல துறைகளின் கட்டுப்பாட்டில்செயல்படுகின்றன.

ஆனாலும், மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதலில், இந்தப் பள்ளிகளில் கற்பித்தல் முறை மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும், மாணவ, மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மிக மோசமாக உள்ளன. மொத்த தேர்ச்சி விகிதம், மாநில, 'ரேங்க்' பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தரத்துடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் கல்வித் தரம், சராசரி நிலைக்கும் கீழே செல்கிறது. பல கோடி ரூபாய் செலவில், 14 இலவச திட்டங்கள் அளித்தும், கல்வித்தரம் மோசமாக இருப்பதால், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும், குறைந்த மதிப்பெண் பெற்ற தலைமை ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில், நடப்பு கல்வியாண்டில், புதிய அதிரடி திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:

* தேர்ச்சி மற்றும் மதிப்பெண் குறைவான பள்ளிகளில், சிறந்த ஆசிரியர்களை நியமித்தல் அல்லது சிறப்பு பயிற்சி அளித்தல்.

* அனைத்து அரசு பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் மாதாந்திர முன்னேற்றம், ஆசிரியர்களின் முயற்சிகளைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் குழு அமைத்தல்.

* மாணவ, மாணவியருக்கு, பெற்றோர் -ஆசிரியர் கழக வினா வங்கிகள் மற்றும், 'பயிற்சி கட்டகம்' என்ற சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்குதல்.

* வகுப்பில் முன் இருக்கை மற்றும் பின் இருக்கையில் அமரும், அனைத்து மாணவ, மாணவியருக்கும் சமமான கற்பித்தல் வாய்ப்புக் கிடைக்கும் வகையில், மாணவர்கள் வரிசையை மாற்றி பாடம் கற்பித்தல்; அடிக்கடி திருப்புதல் தேர்வு நடத்துதல்; புத்தகத்தின் பின்பக்கமுள்ள வினாக்களை கண்டிப்பாக படிக்க வைத்து, அவற்றுக்கு வகுப்பறை தேர்வு நடத்துதல்.

* சராசரி மற்றும் கற்றல் குறைந்த மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோருடன் ஆலோசித்து, சிறப்புப் பயிற்சி அளித்தல். இப்படி பல புதிய திட்டங்களை, இந்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு

இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இந்த முறை, கவுன்சிலிங் குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, கவுன்சிலிங்குக்கான புதிய விதிமுறைகளை, 10 நாட்களுக்கு முன், தமிழக அரசு வெளியிட்டது.

அதில், 'ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்; அதற்கு முன் நிர்வாக நலன் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம் நடக்கும்' என, தெரிவிக்கப்பட்டது. 'இந்த விதிமுறைகள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. 'விதிமுறைகளை மாற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறைக்கு மனுக்கள் அனுப்பின. சில சங்கங்கள் சார்பில், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், கவுன்சிலிங் விதிமுறைகளில், சில மாற்றங்கள் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கவுன்சிலிங் குறித்த தேதி அறிவிப்பு, நேற்று வெளியாக இருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலிங் விதி முறைகளில், மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

பள்ளிகளின் காலியிட விவரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேல், ஒரே இடத்தில் பணிபுரிவோருக்கு, கட்டாய மாறுதல் இருக்காது என்ற விதி இடம் பெற வாய்ப்புள்ளது கல்வித்துறை அதிகாரிகள்.. ஆதிதிராவிடர் பள்ளி பொதுமாறுதல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அதேபோல, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடை நிலை ஆசிரியர், உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திடம், இடமாறுதல் கோரி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டும், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைவையட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார்.

உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல்கலாம் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மேல் மிகுந்த பாசமுள்ளவர். அதிகமாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க விரும்புவார். இந்தநிலையில் அவரது மறைவு மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.