இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 09, 2015

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு இனி உள்ளாட்சி நிர்வாகமே செய்யும்

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம். இதன்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), நிர்மல் பாரத் மற்றும் சி.எஸ்.ஆர்., (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) முறையில் ஏர்போர்ட் மற்றும் என்.எல்.சி., நிர்வாகங்கள் பங்களிப்பிலும் அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன

.இந்நிலையில் அரசு பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால் கழிப்பறை பராமரிப்பு கேள்விக்குறியானது. இது அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனால் அவற்றின் பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.163 கோடி அத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் 100 சதவீதம் இப்பணி முடிந்துள்ளது. அரசு பள்ளிகளில் பதவி உயர்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இதனால் இவற்றின் பராமரிப்பு பணி உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றார். எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு நிதி எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7500 வரை பள்ளி பராமரிப்பு நிதி வழங்கப்படும். இது கட்டடம், புதிய நாற்காலி வாங்குவது உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்தாண்டு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் கழிப்பறை பராமரிப்புக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல்

வங்கி கணக்கு முறையாக பராமரிக்கப் படாததால் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன.மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மூலம் பொதுத்துறை வங்கிகளில் துவங்கப்பட்ட 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கில் அவை நேரடியாக செலுத்தப்படுகின்றன.

அக்கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் அக்கணக்குகளை வங்கிகள் ரத்து செய்கின்றன. இதனால் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“இடை நிற்றலை தவிர்க்க மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் துவங்கி பிளஸ் 2 முடிக்கும் வரை மாணவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு 5,000 ரூபாய் செலுத்துகிறது.

இதுபோல் மற்ற உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் அக்கணக்குகள் செயல்பாட்டில் இல்லாதது, எண் தவறு உள்ளிட்ட காரணங்களினால் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அக்கணக்கை மாணவர்கள் முறையாக பராமரிக்க வேண்டும். அந்த விபரத்தை ஒவ்வொரு ஆண்டும் தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும்,”என்றார்.

பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் எடுக்க சிறப்பு புத்தகம்

அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களின், கேள்வி - பதில் அடங்கிய, 'பயிற்சி பெட்டகம்' என்ற, சிறப்புப் புத்தகம் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியே பயிற்சி பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வல்லுனர் மற்றும் ஆசிரியர் குழுக்கள் இணைந்து, பல ஆண்டுகளின் கேள்வித் தாள் மற்றும் மாணவர்களின் திறனை ஆய்வு செய்து, இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான வினா மற்றும் விடைகள்; தேர்வுக்கு வரும் முக்கிய பாடப்பகுதி; பாடங்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள்; எந்த கேள்விகளை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்; எந்தப் பகுதியைப் படித்தால், பாடங்களின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம் போன்ற விவரங்கள் இந்த புத்தகத்தில் இருக்கும். இந்த புத்தகங்கள், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் வழங்கப்படும். மாணவர்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம்; விற்பனைக்கு கிடையாது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் உண்டா? தினமலர்


வரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வராமல், அரசு பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான, ஜூலை, 15ம் தேதி, 'கல்வி வளர்ச்சி நாள்' என, கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:காமராஜர் பிறந்த நாளுக்கு இன்னும், சில நாட்களே உள்ளன. கல்வி வளர்ச்சி நாளை ஒட்டி, மாணவ, மாணவியருக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடத்த, குறைந்தது, 10 நாட்களுக்கு முன் பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், உத்தரவு வராததால், இன்னும் போட்டிகளை துவங்கவில்லை. தனியார் பள்ளிகளில் போட்டிகளை நடத்த பயிற்சி அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

விடுப்பு விபரம்

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்)

வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)

வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார்
30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம்.
அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. தற்செயல் விடுப்பு ( Casual Leave)

ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு.
விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக
காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

4. ஈட்டிய விடுப்பு (Earned Leave)

ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு
விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது.
6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும்.
தகுதி காண் பருவத்தினருக்கு இதில் பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை
பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது
240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.

5. மருத்துவ விடுப்பு (Medical Leave)

மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை
விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுத்தால்
அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த
ஆண்டுகளுக்கு ஏற்ப விடுப்பு எடுக்க. L தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு
பணி முடித்தவர் 90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540 நாட்கள்
வரை எடுக்க தகுதி உண்டு.

6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs)

சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள்
இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை
ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.

7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave)

திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும்.
உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும்
உண்டு.

8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave)

குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.

9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave)

அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம்
(Transfer - Joining Time)

இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால்
6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள்
சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால்

துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

செப் 2வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்

செப்.2ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிந்தரை செய்துள்ளதைக் கண்டித்து செப்டம்பர் 2ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழிய சம்மேளன தலைவர் வெங்கடாச்சலம், இதனைத் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறு திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Wednesday, July 08, 2015

ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது.அதிகாரி விளக்கம்

ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை தலைமைச் செயலக உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், படிப்படியாக ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது அடிப்படை சம்பள கணக்கு விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கருவூலம்-கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஜூலை மாதத்துக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால் மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 7 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்களில், 80 சதவீதம் பேருக்கு (சுமார் 6.8 கோடி பேர்) ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.2 கோடி பேருக்கு வழங்கப்படவில்லை.

அவர்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இந்த நிலையில், ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலக உயரதிகாரிகள் அளித்த விளக்கம்: ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது. தலைமைச் செயலகத்திலுள்ள பல உயரதிகாரிகளுக்கே ஆதார் எண் இன்னும் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில், ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படுவதாக வெளியிடப்படும் அறிவிப்புகளைக் கண்டு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதேசமயம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களிடம் இருந்து ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டுமென கருவூலம்-கணக்குத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களில் 55 சதவீதம் பேரிடம் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆதார் எண் கிடைக்கப்பெற்றவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக அவற்றை கருவூலத் துறைக்கு தெரிவிக்கலாம் என்று தலைமைச் செயலக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, July 07, 2015

வேலைவாய்ப்பு பதிவு 15ல் பள்ளிகளில் துவக்கம்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கான பதிவை, வரும், 15 முதல் மேற்கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில், தங்களின் பத்தாம் வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அட்டை எண், ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு, மொபைல் போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை, மாணவ, மாணவியர் எடுத்து வர வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்த எண் தெரியவில்லை எனில், வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி, தெரிந்து கொள்ளலாம்.வரும், 15 முதல், 29 வரை, வேலைவாய்ப்பு பதிவுப்பணி, அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். மதிப்பெண் சான்று வழங்கும் தேதியே, பதிவுமூப்பு தேதியாக பதியப்படும். மேலும்,www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், வேலைவாய்ப்பக பதிவை மேற்கொள்ளலாம்.

பொதுத்தேர்வில் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 10ம் தேதி பரிசு

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. கடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில், முதலிடம் பிடித்த, 21 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த வாரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

மீதமுள்ள மாணவ, மாணவியருக்கு, 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இதில், பள்ளிக் கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், வனம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று, தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாநில ரேங்க் பெற்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளனர்.-

3மாதங்களில் குரூப்2 தேர்வு நடத்த திட்டம்

போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் உதவி கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில், 70 காலியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு, இன்னும், இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வை, மூன்று மாதங்களுக்குள் நடத்தாமல், படிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வணிகவரி உதவி கமிஷனர்:தமிழக அரசு துறைகளில், போலீஸ் டி.எஸ்.பி., உதவி கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 70 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் போட்டித் தேர்வு அறிவிப்பை, இன்னும், இரு தினங்களில் வெளியிட, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.

அக்., 18ம் தேதி அல்லது அதே மாதத்தில், வேறு தினங்களில் தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பட்டதாரிகள் சிலர் கூறியதாவது:வழக்கமாக அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, குறைந்த பட்சம், ஆறு மாத கால இடைவெளியில், தேர்வுகள் நடக்கும். இந்த இடைவெளியில் தான், தேர்வர்கள் சிறப்பு பயிற்சி பெற்று, தங்களை தயார் செய்து கொள்வார்கள். ஆறு மாத காலம்:ஆனால், மூன்று மாதங்களுக்குள் தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளதால், தேர்வர்கள் தயாராக போதிய கால அவகாசம் இல்லை.

அக்.,18ம் தேதி மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யும் போட்டித் தேர்வு நடத்த உள்ளதால், குழப்பம் ஏற்படும்.எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்காக தயார் செய்வோருக்கு அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து குறைந்தது, ஆறு மாத கால அவகாசத்துடன் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

11.07.2015 PRIMARY CRC-SABL-ENGLISH POWERPOINT...

Click below

https://drive.google.com/file/d/0ByAIJo2ODgwFRkZPRzY4bm53WVU/view?usp=sharing

கோவை மாவட்ட SSA Co ordinator procedings

பி.எப் தொகை திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத்திட்டம்

பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத் திட்டம்!
மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டு வருதிறது. தற்போது இதன் அளவு 100 சவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஃ பணத்தை மக்கள் சரியான காரணத்திற்காகப் பயன்படுத்த தவறுவதால் திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைத்து மீதமுள்ள தொகையைப் பணியாளரின் ஒய்விற்குப் பின் பென்ஷன் முறையில் அளிக்க முடிவு செய்துள்ளது EPFO அமைப்பு.

100% திரும்பப் பெறுதல்
தற்போது உள்ள முறையின் படி ஊழியர்களுக்கு வேலை பறிபோனால் இரண்டு மாதத்திற்குப் பிறகு முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளலாம் திருமணச் செலவுகள் போன்ற காரணங்களுக்காகப் பி.எஃ பணத்தில் 100% எடுத்துக்கொள்ளலாம்.

75% மட்டுமே
ஆனால் ஊழியர் சேமலாப நிதி அமைப்பின் ஆய்வுகளின் படி ஊழியர்கள் மேற்கொண்ட காரணங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்யாமல் பிறவற்றிக்குச் செலவு செய்வதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கவே இத்தகை முடிவுகளுக்கு மத்திய அரசிடம் இவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது. காலப்போக்கில் இதன் அளவு 50 சதவீதம் வரையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

1.30 கோடி
ஒவ்வொரு வருடமும் EPFO அமைப்பு சுமார் 1.30 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஊழியர்களுக்குத் திரும்ப அளிக்கிறது (Withdrwal). இதல் 65 லட்சம் ரூபாய் 100 சதவீதம் முழுமையாகத் திரும்பப் பெறுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து EPFO அமைப்பின் தலைவர் கேகே ஜலன் கூறுகையில், ஊழியர்கள் பி.எப் கணக்கை ஒரு சேமிப்பு கணக்காக மட்டுமே நினைக்கின்றனர். இதனைக் களைந்து 25 சதவீத பி.எப் தொகை அவர்களின் ஒய்வுதிய காலத்தில் பயன்படும் வகையில் அமைக்கவே இப்புதிய மாற்றத்தைச் செயல்படுத்தத் திட்டமிடுகிறோம் என அவர் தெரிவித்தார்.

அறிவிப்பு
பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்கும் பரிந்துரையை மத்திய அரசிடம் உள்ளது, கூடிய விரைவில் இதற்கான முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Monday, July 06, 2015

ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு முழுக்கு

அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது. அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கவும், ஆங்கில மொழி உச்சரிப்பு வீடியோவுடன் கூடிய, 'சிடி'க்கள் மூலம், பாடம் கற்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு, இரண்டு, 'சிடி'க்கள் வழங்கப்பட்டன. இவற்றை வழங்கி, ஓர் ஆண்டைத் தாண்டிவிட்ட நிலையில், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி வகுப்பு பெரும்பாலான பள்ளிகளில் துவங்கப்படவில்லை. இதுகுறித்து, தொடக்கப் பள்ளி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகள் தோறும் ஆய்வு நடத்தியதில், பல இடங்களில், 'சிடி'க்கள் சரியாக, 'பிளே' ஆகாததால், பயிற்சியைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிந்தது. ஆங்கில மொழி உச்சரிப்பு சரியாகத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை உள்ளதால், இந்தத் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது. இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், இந்தப் பயிற்சி வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் பலர் அடிப்படை ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் என்பதால், சிறப்புப் பயிற்சி இல்லாமல், அவர்களால், இந்தப் பாடங்களை எடுக்க முடியவில்லை. அடுத்த கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கையை, கல்வித் துறை மேற்கொண்டால் தான், இந்தக் கல்வி ஆண்டில் இருந்தாவது, மாணவர்களுக்குச் சரியாகப் பயிற்சி அளிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு நிறைவு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (சனிக் கிழமை) முடிவடைந்தது. 4 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் (தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு) சேர 3,500-க் கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 2,760 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

பயிற்சி பள்ளியை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு சனிக்கிழமை முடிவடைந்தது. கலந்தாய்வின் நிறைவில் மொத்தம் 1,510 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக் கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

Sunday, July 05, 2015

நல்லாசிரியர் தேர்வு அரசு புது முடிவு

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 15 ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, ஆக., 10ம் தேதிக்குள், பட்டியல் அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்காக, மாவட்ட வாரியாக தேர்வுக் கமிட்டி அமைக்கவும், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், அரசியல்வாதிகள் சிபாரிசு பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த காலங்களில், நல்லாசிரியர் விருதுக்கு, பட்டியலில் இடம் பிடிக்க, பலவிதமாக, 'கவனிக்க' வேண்டியிருந்தது. ஜாதி, மதம், அரசியல் செல்வாக்கு, கல்வித் துறையில் உள்ள தொடர்பு அடிப்படையில், தேர்வுப் பட்டியல் இருந்தது.

இந்த ஆண்டு ஊழல் இல்லாத, 100 சதவீதம் தகுதியான, ஆசிரியர்கள் பட்டியலைத் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, அரசியல்வாதிகளின் சிபாரிசு தடுக்கப்பட்டு, சரியான நபர்களுக்கு விருது வழங்கப்படும்.இதுகுறித்து, மாவட்டத் தேர்வுக் கமிட்டியினர், எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளனர். இதையும் மீறி, பட்டியல் தயாரிப்பில் ஊழல் நடந்தால், மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வுக் கமிட்டி மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விதம், பள்ளி தேர்ச்சி விகிதம், ஒழுங்கு நடவடிக்கையின்மை, யோகா, நாட்டு நலப்பணித் திட்டம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்களையே, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.