இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 25, 2015

முதுகலை கல்வி தமிழில் படிக்காதவருக்கு முன்னுரிமை கிடையாது

முதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை புதூரைச் சேர்ந்த ஜே.ஸ்டீபன்ராஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு:

தமிழகத்தில் 2013-2014, 2014-15-ம் ஆண்டுகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் பிஏ (பொருளாதாரம்), பி.எட் படிப்புகளை தமிழ் வழியில் பயின்றேன். எம்.ஏ (பொருளாதாரம்) ஆங்கில வழியிலும் பயின்றேன். எனக்கு அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான ஒதுக்கீட்டில் வேலை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.சொக்கலிங்கம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசாணையில், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் யார் என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முழு கல்வியையும் தமிழில் முடித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த அரசாணையின்படி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடியும்.

இளங்கலை படிப்பையும், முதுகலை படிப்பையும், பிற படிப்புகளையும் தமிழ் வழியில் கற்றவருக்குதான் தமிழில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க முடியும். மனுதாரர் முதுநிலை கல்வியை ஆங்கிலத்தில் படித்துள்ளார். இதனால் மனுதாரருக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகை பெற முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை. எனவே, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இளங்கலை படிப்பையும், முதுகலை படிப்பையும், பிற படிப்புகளையும் தமிழ் வழியில் கற்றவருக்குதான் தமிழில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க முடியும்.

Lab technician syllabus

ஆய்வக உதவியாளர் பாடத்திட்டம்

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு பாடத்திட்டம்
Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs:

1. Science (SSLC Standard Level)

2. General Knowledge

TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern:

Science = 120 Questions

General Knowledge = 30 Questions

Total = 150 Questions

Mark Split up

Book List for Study Materials for TNDGE Tamil Nadu School Lab Assistant Exam

Science

(120 Questions) Give More Importance to Science Topics)

Subject

Preferred Books

Biology

6th- 10th Samacheer Kalvi Biology Books

Physics

6th- 10th Samacheer Kalvi Physics Books

Chemistry

6th- 10th Samacheer Kalvi Chemistry Books

General Knowledge

(30 Questions)

History

6th- 10th Samacheer Kalvi History Books

Geography

6th- 10th Samacheer Kalvi Geography Books

Economics

6th- 10th Samacheer Kalvi Economics Books

Civics/Polity

6th- 10th Samacheer Kalvi Civics Books

Friday, April 24, 2015

பங்குச் சந்தையில் 5 பி.எப் நிதியை முதலீடு செய்ய அனுமதி

பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி

பி.எப். நிதியை சூறையாடுகிறது மோடி அரசு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.பி.எப். நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது என்று சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும்,

மோடி அரசு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தியுள்ளது.2014-15ம் ஆண்டு கணக்கின்படி பி.எப். நிதியத்தில் மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடி அளவிற்கு தொழிலாளர்களின் சேமிப்பு பணம் குவிந்திருக்கிறது. இந்த பெரும் தொகை, பெரு முதலாளிகளின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களும், ஊழியர்களும் வியர்வை சிந்தி சேமித்த இந்தப் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் சூறையாடி பெருமுதலாளிகளின் கைகளில் சேர்ப்பதற்கு மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, 15 சதவீத நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போவதாக அரசு முதலில் அறிவித்தது. ஆனால் எந்தவிதத்திலும் பங்குச் சந்தையில் பி.எப். நிதியை முதலீடு செய்யக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்நிலையில், 5 சதவீத நிதியை முதற்கட்டமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

தற்போது ரூ.80 ஆயிரம் கோடியாக உள்ள ஒட்டுமொத்த பி.எப். நிதியானது, நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் பங்குச் சந்தையின் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும்.முதலீடு செய்யத்தக்க நிதியின் அளவே ஒரு லட்சம் கோடியாகும். ஒட்டுமொத்தத்தில் பி.எப். வாரியத்தின் கையில் உள்ள நிதியின் மதிப்பு ரூ.6.5 லட்சம் கோடி ஆகும்.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் சொத்தினை கபளீகரம் செய்வதற்கு, தனது முதல்படியை துவக்கியிருக்கிறது மோடி அரசு. இதற்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கண்டனக் குரல் வலுத்துள்ளது.

பி.இ 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்

பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூன் இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள், மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.

விண்ணப்பங்களைப் பெற மே 27-ஆம் தேதி கடைசி நாள். அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விடுமுறை நாள்களில் கிடையாது: ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். ஆன்-லைனில் பதிவிறக்கம்: பி.இ. விண்ணப்பத்தை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.

மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது:

பாடங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் அட்டவணை, கட்டாயம் இடம்பெற வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் நகல்களை கொண்டு, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தர பட்டியல், 14 நாட்களுக்குள் அறிவிப்பு பலகையில் இடம் பெற வேண்டும். வரும் ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இளங்கலை படிப்புக்கு தகுதியானவர்கள்.

உரிய வயது வரம்பு தகுதியை பின்பற்றாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான சான்றிதழ்கள் கண்டறியப்பட்டால், மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

இன்ஜினியரிங் மே 6, எம்.பி.பி.எஸ் மே11 விண்ணப்பங்கள் வழங்கப்படும்

தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதியும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் மே, 11ம் தேதியும் துவங்குகின்றன. தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ம் தேதி வெளியாகிறது என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோக தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 11ம் தேதி துவங்கும். 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும் கிடைக்கும். மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்தில்இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தரப்பட உள்ளன. மே, 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே, 29ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

வினாத்தாள் மறு திருத்தம் முடியும் தேதிக்கு ஏற்ப, ஜூன், 12ல், கலந்தாய்வுக்கான, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக துவக்கப்பட்டுள்ள, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், 100 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, அரசு முயற்சித்து வருகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு முடிந்துள்ளது; விரைவில் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். இன்ஜி., விண்ணப்பம்: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதி துவங்குகிறது. சென்னையில், நான்கு இடங்களிலும், தமிழகம் முழுவதும், 60 இடங்களில் வினியோகம் செய்யப்படும். 2.40 லட்சம் விண்ணப்பங்கள் தரப்படும்.

அண்ணா பல்கலை வளாகத்தில், 29ம் தேதி வரையும், பிற இடங்களில், 27ம் தேதி வரையும் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 29ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில், 'திருநங்கை' என்ற பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை, 500 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 250 ரூபாய் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எத்தனை இடங்கள்?

* தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது. ஓமந்தூரார் புதிய அரசு கல்லூரியில், 100 இடங்களுக்கான அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியைப் பொறுத்தே, சுயநிதி கல்லூரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற விவரம் தெரிய வரும்.

* இன்ஜினியரிங் படிப்புக்கு, அண்ணா பல்கலையின், 16 அரசு கல்லூரிகளும், 596 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. இதில், 2.30 லட்சம் இடங்கள் உள்ளன. மூன்று சுயநிதி கல்லூரிகள் மூட அனுமதி கோரி உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு பற்றிய விவரங்கள், ஏப்., 30ல் தெரியும். அதன்பிறகே, இன்ஜினியரிங் இடங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைக்கும்.

Thursday, April 23, 2015

கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம்

கிழிந்த பழைய நோட்டுகள் இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பழைய, கிழிந்த மற்றும் அழுக்கான, குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கப்படவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் சுத்த நோட்டுக் கொள்கையின் கீழ், தனிச் சிறப்பு ஏற்பாடாக நாளைக்கு (25–ந் தேதி) 32 வணிக வங்கிகளின் 195 கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதோடு, கிழிந்த, சிதைந்த நோட்டுகள் மற்றும் குறைபாடுடைய நோட்டுகளையும் குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் நாளை மாற்றிக்கொள்ளலாம்.

எந்தெந்த வங்கிகள்?

அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேசன் வங்கி, அலஹாபாத் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைசியா வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, பெடரல் வங்கி, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, டி.என்.எஸ்.சி வங்கி, கதோலிக் சிரியன் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் முக்கிய கிளைகளில் இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாக்காளர் பெயர் நீக்கல்,சேர்க்க ஒரே விண்ணப்பம்

தமிழகம் முன்னிலை

அகில இந்திய அளவில் வாக்காளர்கள் தகவல்களை அளிப்பதில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்தப்பணியை மேலும் துரிதப்படுத்துவதற்காக தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளில் வரும் 26-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாளை (இன்று) 32 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி நிலவரப்படி 18 வயது நிரம்பியவர்களில் 4 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரத்து 832 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இது 81.4 சதவீதமாகும். ஆதார் அட்டை பெறதாத 20 சதவீதம் பேருக்கும் ஆதார் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தானியங்கியில் விவரம் சேகரிப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்தம் செய்ய 6, 7 மற்றும் 8 ஏ என்ற 3 வகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு குழறுபடியை சந்திக்கின்றனர்.

இதனை போக்க விரைவில் ஒரே விண்ணப்பம் மட்டும் வழங்கப்பட்டு அந்த படிவத்திலேயே பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு எளிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் தானியங்கி முறையில் தொலைபேசி மூலமாக வாய்ஸ் மூலமாக தானாகவே வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. குடும்பங்களில் விடுபட்டவர்களை கண்டுபிடித்து சேர்ப்பதற்காக 1997-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களின் தகவல்கள் பெறப்பட்டு உள்ளன.

மே முதல் வாரத்தில் பி.இ ,எம்.பி.பி.எஸ் விண்ணப்பம் விநியோகம்

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி (மே 7) அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த நடைமுறைகள் தீவிரமாகியுள்ளன.

பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க எந்தத் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்பது ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ஆம் தேதி வெளியானவுடன் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்கும்; அதற்கு முன்பாக எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த அரசு அறிவிக்கை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எம்.பி.பி.எஸ்., பி.இ. கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போன்றே நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டைப் போன்றே பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது: 2015-16 பொறியியல் கலந்தாய்வு, எந்தவித மாற்றங்களும் இல்லாமல் கடந்த ஆண்டைப் போன்றே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக கலந்தாய்வு முடிக்கப்பட்டு விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6-ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல், நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றிபெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பர். நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

மதிப்பெண் விவரம் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 2 மதிப்பெண், 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 4 மதிப்பெண், 4 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 6 மதிப்பெண், 6 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு 8 மதிப்பெண், 10 ஆண்டுகள், அதற்கு மேல் காத்திருப்போருக்கு 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண், இளங்கலைப் பட்டப் படிப்பு, அதற்கு மேல் படித்திருந்தால் 3 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். தனியார், அரசுப் பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்ததற்கான சான்று இருந்தால் அதற்கு 2 மதிப்பெண்கள். மேலும், நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு

வரும் கல்வியாண்டில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கப்போவதில்லை என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை காமராஜர் அரங்கத்தில் அந்த சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஆளுநர் ரோசய்யா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார், செய்தியாளர்களிடம் பேசினார்.

கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது என்று அவர் கூறினார்.

இதன்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டண நிலுவைத் தொகை 150 கோடி ரூபாயை அரசு வழங்கவில்லை என அவர் புகார் தெரிவித்தார்.

நிலுவைத் தொகையை மே மாதம் இறுதிக்குள் தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ப்ளஸ் 2&பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார்.

இரு தேர்வு முடிவுகளும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் மட்டுமே காண முடியும். அதன்படி கீழ்க்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து மதிப்பெண் பட்டியலையும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.
இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in