இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 23, 2015

Lab technician vacancy list

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம் 

Kanchipuram 204 vaccancies

Thiruvannamalai-226

Vellore-286

Virudhunagar-154.

Ariyalur 87

Chennai 33

Dindigul 96

Erode 147

Kanyakumar i94

Madurai 52

Nagapattinam 138

Ramanathapuram106

Nilgiri 81

Theni 65

Tirunelveli 106

Thiruvallur 179

Tiruppur141

Viluppuram 317

Kanyakumari--94

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பிரதான தேர்வுகள் மே 5,6,7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குரூப் 1 பிரதான தேர்வுகள் மே 2,3,4-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்வுகளை ஒத்திவைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Wednesday, April 22, 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

Tuesday, April 21, 2015

JACTO total

Click below

https://app.box.com/s/tand0ujxzawms4uerr8f009nhe4cf274

Lab technician apply

Lab Technician:
14000 lab assistant  post in Govt Schools.
Eligible:10th passed
Application:Rs.150
Application Available: Avinashi Govt HS School,
Tirupur Nanjappa HS School,
Tirupur KSC HS School, (near old bus stand in Tirupur)
Tirupur Palaniammal HS School,
Dharapurm Govt HS School,
Udumalai Govt HS School.
Application issue from 24.5.2015 to 6.5.2015
Last Date: 6.5.2015
Exam Date:31.5.2015
Question type:
Science & GK,
120+30=150 Questions.
Total marks=150
Exam Time:  2.30Hrs
10.00 To 12.30

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.

அரசுப் பள்ளிகளிலும் கோடை வகுப்பு துவக்கம்

பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே பிளஸ்2 மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, இந்த திட்டத்தை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் சிலவும் பின்பற்ற தொடங்கிவிட்டன. இதற்கான உத்தரவை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வாய்மொழியாக பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் முழுவதும் ெதாடர்ச்சியாகவும் மே மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற அளவிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பாடத்தின் ஆசிரியர் 3 நாள் இடைவெளியிலும், மாணவர்கள் அனைத்து நாட்களும் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நெல்லை மாவட்ட தலைவர் சண்முகையாபாண்டியன், செயலாளர் பாபுசெல்வன் வெளியிட்ட அறிக்கை: ஒரு சில அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும் என முதுகலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைகிறது.

மேலும் ஓராண்டு தொடர்ந்து கல்வி கற்ற மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கும் விடுமுறை தேவைப்படுகிறது. பிளஸ்1 வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் மாவட்ட அளவில் வெளியிடப்படாத நிலையில் பிளஸ்2 வகுப்புகளுக்கு உரிய பாடத்தை அனைத்து மாணவர்களுக்கும் நடத்த ஆசிரியர்களை நிர்பந்திப்பது கண்டிக்கத்தக்கது. பலர் ஆண்டு இறுதித் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே கோடை கால வகுப்புகளை நடத்துவது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மனரீதியாக மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே சிறப்பு வகுப்பு நடத்தும் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு எப்போது?

மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசு அதிகாரிகள்- ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், அதிகாரிகளுக்கும் பொருந்தும். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்த வேண்டுமெனில், மாநில அரசு தனியாக உத்தரவை வெளியிட வேண்டும். அதன்படி, இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு பணத்தையும் ரொக்கமாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஐஏஎஸ் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கணக்காயர் அலுவலகம், தமிழக கருவூலத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநில அரசு ஊழியர்கள்: தமிழகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பணிபுரியும் அரசுத் துறை ஊழியர்கள்- அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதற்கான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன.

இதுகுறித்த கோப்புகள் கையெழுத்தானவுடன் அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஓரிரு நாள்கள் அல்லது இந்த வார இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றன.

பத்தாம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதால், எந்த விடை எழுதி இருந்தாலும் அதற்கு மதிப்பெண் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. * பத்து மதிப்பெண் 'கிராப்' பகுதி கேள்வியில், 47 (பி) கேள்வியில் வைப்பு தொகை மற்றும் வட்டி ஆகியவற்றை 'எக்ஸ் மற்றும் ஒய்' அச்சுக்களில் மாற்றி எழுதி இருப்பினும் முழு மதிப்பெண்கள் வழங்கலாம் என தேர்வு துறை இயக்குனர் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏடிஎம்மில் பணம் வரவில்லையா? வங்கி அபராதம் அளிக்கும்

ஏ.டி.எம்., மையங்களில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, இயந்திரத்தில் இருந்து பணம் வராமல், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்ததாக புகார் அளித்தால், குறிப்பிட்ட வங்கி அபராதத்துடன் தொகையை திரும்ப வழங்கும்.

இதுகுறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டும் முறையில் கூறியிருப்பதாவது: ஏ.டி.எம்., மையத்தில், பண பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கில் இருந்து பணம் குறைந்தால், சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று, புகார் படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும். அல்லது தொலைபேசி மூலம், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.

புகார் கிடைத்த, அடுத்த ஏழு வேலை நாட்களுக்குள், கணக்கில் குறைந்த தொகை வங்கிக் கணக்கில் வரவாகிவிடும். அதற்கு மேல் தாமதமாகும், ஒவ்வொரு நாளுக்கும், 100 ரூபாய் அபராதத்துடன் வங்கி பணத்தை தரும். பண பரிவர்த்தனை நடந்து, 30 நாட்களுக்குள் புகார் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் பெற தகுதியுண்டு. அதற்கு மேல், வங்கியிடம் இருந்து அபராத தொகை கிடைக்காது. ஏழு நாட்களுக்குப் பின், அபராதமின்றி, கணக்கில் குறைந்த தொகை மட்டும் வரவாகி இருந்தால், ரிசர்வ் வங்கியின் புகார் பிரிவில் புகார் அளிக்கலாம். விசாரணையில், வங்கி தரப்பில் தவறு இருந்தால், அபராதம் வழங்க, புகார் பிரிவு உத்தரவிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத ரயில்வே டிக்கெட் அலைபேசி மூலம் பதிவு வசதி இன்று முதல் அமல்

முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது.

சாதாரணமாக, ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ய, ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுன்டர்களில் வரிசையில் நின்று, டிக்கெட் பெற வேண்டும். இன்று முதல், டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்க தேவையில்லை. 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பம் கொண்ட, ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யப்படும், அப்ளிகேஷன்கள் எனப்படும் செயலிகள் மூலம், டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ரயிலில் பயணிக்கும் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட்டின், 'சாப்ட் காப்பி'யை காண்பித்து பயணம் செய்யலாம். இதனால், பேப்பர் பயன்பாடு குறைவதுடன், ரயில் நிலையங்களில் காத்திருக்கத் தேவையும் இல்லை.

இப்போது முதற்கட்டமாக, ஆண்ட்ராய்டு போன்களில், டிக்கெட் பெறலாம். பிளாக்பெர்ரி போன்ற தொழில்நுட்பங்களில் இயங்கும் போன்கள் மூலம், இப்போதைக்கு இந்த டிக்கெட் எடுக்க முடியாது. என்ன செய்ய வேண்டும்:

* ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போனில், 'கூகுள் பிளே ஸ்டோர்' செல்ல வேண்டும்.

* ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவன அப்ளிகேஷனை, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.

* அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, எந்த ஊருக்கு வேண்டுமானாலும், முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கலாம்.

* டிக்கெட் கட்டணத்தை, 'ரயில்வே இ - வாலட்' எனப்படும், பணம் செலுத்தும் முறைக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தின் மூலம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

* பயணத்தின் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட் நகலை காண்பித்தால் போதும்; பேப்பர் டிக்கெட் கிடையாது.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை வரும் ஜூலை 14 தேதிக்கு

Monday, April 20, 2015

9ம் வகுப்பில் இனி ஆல் பாஸ் கிடையாது


ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும் 9ம் வகுப்பு வரை ‘பெயில்’ ஆக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இந்த நடைமுறையால் மாணவர்கள் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த நடைமுறையால் 50 முதல் 60 சதவீத மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை எழுத, படிக்க கூடத் தெரியாமல் 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். பொதுத் தேர்வில்பலர் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்வித்துறை நடப்பு ஆண்டு 9ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை நிறுத்தி, தகுதி குறைவாக உள்ள மாணவர்களை வடிகட்ட உத்தரவிட்டுள்ளது.

தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக குறைக்கவும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், “9ம் வகுப்பு வரை `ஆல் பாஸ்’ நடைமுறையால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தேர்விற்கு மட்டும் வந்து செல்லுகின்றனர். சில ஆசிரியர்களும் பாடங்களை முறையாக நடத்துவதில்லை. 5, 8ம் வகுப்பில் `ஸ்கிரின் டெஸ்ட்’ வைத்து மாணவர்களின் திறனைக் கண்டறிந்து மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும்” என்றனர்.

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.ஜாக்டோ அமைப்பினருடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ” 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களின் பணிவரன்முறை செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணி நடத்தினார்கள். பிறகு ஏப்ரல் 19-ந் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு தீர்த்து வைக்கவேண்டியது நம் கடமையாகும்.

போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தை தி.மு.க.வின் சார்பில் ஆதரிக்கிறேன். ஆசிரியர்களை எந்த வித தாமதமும் இன்றி உடனே அழைத்துப்பேசி அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வுகாணுமாறு நான் அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரும் கல்வியாண்டில் பி.எட்,எம்.எட் இரண்டு ஆண்டாகிறது

பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் இந்தப் புதிய வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும் புதிய வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் - கல்வி-ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே அறிவு பறிமாற்ற கூட்டுறவை ஏற்படுத்துதல் - என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வேதச மாநாடு தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சந்தோஷ் பாண்டா பேசியது:

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) என்.சி.டி.இ. கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. வருகிற ஜூலை மாதம் முதல் இந்த புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வழிகாட்டுதலின் படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும். இதற்கு தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வருகிற ஜூலை முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும். ஒருவேளை இதற்கு எதிராக தீர்ப்புகள் வருமானால், அதை எதிர்த்து என்.சி.டி.இ. போராடும் என்றார். யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ்: நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆசிரியரின் பங்கு மிகப் பெரியது. இதை உணர்ந்துதான் ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. திறன் மிக்க 1000 ஆசிரியர்களை உருவாக்கி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடியில் இரண்டு ஆசிரியர் கல்வி மையங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. காக்கிநாடாவிலும், வாராணசியிலும் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 220 ஆசிரியர்களுக்கு பயிற்சிளிக்கப்பட்டு, பல்வேறு பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது. யுஜிசி அண்மையில் இரண்டு இணைய பாடத் தொகுப்புத் திட்டங்களை அறிமுகம் செய்தது. அதாவது அனைத்து 77 இளநிலை படிப்புகள், அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகளின் பாடங்களும் யுஜிசி இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதை இலவசமாக மாணவர்கள் பயன்படுத்த முடியும். இதுபோல, பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஆசிரியரே தேவையில்லை என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இருந்தபோதும், நேரடியாக கற்பித்தலை வழங்குவதும், குறிப்பிட்ட பாடத்துக்கு தொடர்புடைய பிற கருத்துகளை தெளிவுபடுத்தியும், சந்தேகங்களுக்கு நேரடி பதிலளிக்கவும் ஓர் ஆசிரியரால் மட்டுமே முடியும். எனவே, ஆசிரியர்கள் கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, ஒரு பாடத் துறையோடு நின்று விடாமல் பல்வேறு துறை அறிவையும் பெற்றிருப்பது அவசியம் என்றார்.

1175 வகுப்பறைகள் ஜூனில் திறப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார். மதுரை, தேனி உட்பட எட்டு மாவட்டங்களின் எஸ்.எஸ்.ஏ., திட்ட பொறியாளர், ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

மாநிலத் திட்ட பொறியாளர் சுதாகரன், ஒருங்கிணைப்பாளர் காயத்ரி பங்கேற்றனர். இதில் இணை இயக்குனர் பேசியதாவது: மாநிலத்தில் இந்தாண்டு 128 புதிய தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இவை உட்பட கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற அடிப்படையில், 2014-15ல் ரூ.64.62 கோடியில் 1175 புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்ட எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 50 சதவீத பணிகள் முடிவுற்றன. மீதமுள்ள பணிகளை ஜூனிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசென்று முடிக்க வேண்டும்.

இதுதொடர்பாக திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி உத்தரவின்படி கோவை, விழுப்புரம் மண்டலங்களில் ஆய்வு நடந்தது. இன்று (ஏப்.,21) திருச்சி மண்டலத்தில் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது என்றார்.

திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுரைகள்

Click below

https://app.box.com/s/yd2ve6nbrmdldve0sj50xwysp4vgh6do

Sunday, April 19, 2015

பி.எட் படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு

பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:மே 8ம் தேதி - இந்திய சமூகத்தில் கல்வி; 9ம் தேதி - கற்றல் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, 11ம் தேதி - கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு, 12ம் தேதி - விருப்ப பாடங்கள், 13, 14ம் தேதிகளில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.

மே 15ம் தேதி - முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் பாடத்தேர்வுகள் நடக்கும்.மே 16ம் தேதி - பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி அறிவியல், உயிரி அறிவியல், வரலாறு, புவியியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும்; மே 18ம் தேதி- முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் கட்

'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

திருத்தம் தொடர்பாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் விடை திருத்து மைய அதிகாரிகள், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டு உள்ளதாவது: விடைத் திருத்தம் குறிப்பிட்ட நாளில் துவக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும், ஒரே நேரத்தில் திருத்தம் துவங்கப்பட உள்ளது.

ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்துவதில், அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெயரும், திருத்தப் பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர், உடனடியாக பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அனுப்ப வேண்டும்.திருத்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, விடுமுறை தரக் கூடாது. திருத்தப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், 'ஆப்சென்ட்' ஆக கணக்கிடப்படும்.அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.