இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 16, 2014

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களை விட, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு, பணி நியமனத்தின்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

சம அளவில்

கடந்த 2012ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், சம அளவில், அரசுப் பணி நியமனம் பெற வழிவகை செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, செவிலியர்களை நியமனம் செய்யும்போது, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியருக்கு மட்டுமே, முன்னுரிமை வழங்கினால், அது, மற்ற துறைகளின் நியமனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

குழப்பம் ஏற்படும்

நர்சிங் மாணவியர் கேட்பதுபோல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள், தங்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் வேலை தர வேண்டும் என்றும், அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், தாங்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும் என்றும் கேட்க ஆரம்பித்தால், குழப்பம்தான் ஏற்படும். அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர ஆரம்பித்தால், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம், வேலைவாய்ப்புக்கு எங்கே போவது என்ற நிலையும் உருவாகும்.

எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான செவிலியர் பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரிகளின் மாணவியருக்கே, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகள் என, இரண்டையும் சமமாகவே கருத முடியும். அரசு பணி நியமனங்களின்போது, இரு தரப்பினருக்கும், சமமான வாய்ப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர்

வழக்கு விசாரணையின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: தனியார் கல்லூரிகளில், எளிதாக இடம் கிடைத்து விடுகிறது. ஆனால், அரசு நர்சிங் கல்லூரிகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெற்று, மிகுந்த சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், அரசு நர்சிங் கல்லூரிகளில் படிப்பவர்களே, அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் சென்று பணிபுரிகின்றனர்.

அதனால், அதிக அளவில் பயிற்சி பெற்று, கூடுதல் தகுதிகளுடன் இருக்கின்றனர். நர்சிங் பயிற்சியின்போதே, அரசுக்காக வேலை செய்து, அரசோடு சேர்ந்து செயல்படுகின்றனர். எனவே, அரசு பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

Saturday, November 15, 2014

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்துடன் தகவல்களை கேட்டு பெற்றேன். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணப்பலன் கொடுப்பது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை கூட வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், 'பாஸ்' போட்டு விடுகின்றனர். இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு, 40; 50; 60 மதிப்பெண் என, நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில், தோல்வி அடையச் செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில், மாணவர் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், பள்ளி கல்வித்துறை, எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை.

மாறாக, அந்தந்த பள்ளி ஆசிரியர் குழுவே, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில் குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பிலேயே, வடிகட்டுவது, தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்தரசன், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் மூலம், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வெவ்வேறு வகையான மதிப்பெண் நிலவரத்தை அறிந்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னை, ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2012 13ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, ஆங்கிலம், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு, தலா , 10 மதிப்பெண் நிர்ணயித்துள்ளனர். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு, 15 மதிப்பெண் என, நிர்ணயித்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், தலா, 40 மதிப்பெண் என்றும், வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில், தலா, 60 மதிப்பெண் என்றும் நிர்ணயித்துள்ளனர். அரசு பள்ளிகளில், 10 மதிப்பெண் முதல், 15 மதிப்பெண் வரை தான் உள்ளது. உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 40 மதிப்பெண், 60 மதிப்பெண் என, நிர்ணயிப்பது, எந்த வகையில் நியாயம். உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களை, அதிகளவில், 'பெயில்' ஆக்குகின்றனர்.

கல்வித்துறை, அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகை மதிப்பெண்ணை, தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, முத்தரசன் கூறினார். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'இந்த பிரச்னையை, செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் சரி செய்யப்படும். அனைத்து வகை பள்ளிகளுக்கும், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, சரிசமமான மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும்' என, தெரிவித்தது.

Friday, November 14, 2014

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: 1.39 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா

    நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா கூறினார். பள்ளி கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (நவ.14) கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்று கட்டுரை, பேச்சுப் போட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியதோடு, சிறந்த 30 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா பேசியது: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ. 64 ஆயிரத்து 485 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்யும் வகையில் காலியாக இருந்த 76,338 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டு, இதுவரை 72,557 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ஆசிரியர் அல்லாத 15,820 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இதுவரை 8,881 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முழுமையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டியது. அதன் காரணமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவ, மாணவிகள், 2014-15 கல்வியாண்டில் 89,941 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 நலிவுற்ற மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்காக மத்திய அரசின் சார்பில் தமிழகத்துக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர். விழாவில் முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு B

   தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

மனுவில், தமிழகத்தில் 1442 பெண்கள் பள்ளிகளிலும், 4278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்றதாக உள்ளன. மாணவர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்த் தொற்றுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கல்வித்துறை இணைய தளத்தில், 4375 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும் அதில் மாணவர்கள் படிக்கும் 4060 பள்ளிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 2012-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகளை ஏற்படுத்திடவும் அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்கவும் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள் ஏற்படுத்தி, அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான தகவல்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட வேண்டும். 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆன் - லைன் வழி தேர்வு திட்டம்: ரத்து செய்ய தேர்வாணையம் முடிவு


கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்' வழியில் நடந்த குரூப் 2 முதன்மை தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாக, ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர், நட்ராஜ், ஆன்-லைன் வழி தேர்வை அமல்படுத்தினார். குறைந்த தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வில் மட்டும், புதிய திட்டத்தை அமல்படுத்தினார். இந்த வகை தேர்வு, தேர்வாணைய அலுவலகத்தில் மட்டும் நடந்து வந்தது. இதனால், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

கடந்த 8ம் தேதி, குரூப் 2 முதன்மைத் தேர்வு, மாநிலம் முழுவதும், 44க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வு, இரு தாள்களாக நடத்தப்பட்டது. காலையில், ஆன்-லைன் வழியிலான தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளித்தல் முறையிலான தேர்வும் நடந்தது. இதில், ஆன்-லைன் வழியிலான தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததாலும், சில மையங்களில், 'சர்வர்' முடங்கியதாலும், குறித்த நேரத்தில், தேர்வு துவங்கவில்லை. மறைமலை நகர் அருகே உள்ள ஒரு மையத்தில், ஒரு அறையில், 'சர்வர்' கோளாறால், தேர்வெழுத முடியாத 43 தேர்வர்கள், போராட்டம் நடத்தினர். கடைசியில், இவர்களுக்கு, மறுநாள் புதிய தேர்வு நடத்தப்பட்டது.

சென்னை செங்குன்றத்தில் அமைக்கப்பட்ட மையத்திலும், 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டது. இப்படி, பல மையங்களில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக, ஆன்-லைன் வழி தேர்வு, தேவைதானா என, தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. மின்சார பிரச்னையையும், தொழில்நுட்ப பிரச்னையை யும், தவிர்க்க முடியாது என்பதால், ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, விரைவில், 'போர்டு' கூட்டத்தில் ஆலோசித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது. சரியாக திட்டமிடாததால் தோல்வியில் முடிந்த திட்டம்: பெரிய அளவில் நடத்தப்படும் எந்தத் திட்டத்தையும், அரசு அதிகாரிகள் திறம்படக் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு, அடிக்கடி எழுகிறது. அரசு செயல்படுத்தும் இலவச திருமணமானாலும், நலத் திட்ட உதவிகளானாலும், எப்போதும் குழப்பமே மிஞ்சுகிறது.

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் கூட, பயனாளிகளுக்கு, திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகே, அரசின் தங்கத் தாலி கொடுக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், அதிக அளவில் தேர்வர்கள் கலந்து கொள்வர் என்பது, அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தும், போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கவில்லை. தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, அவற்றில், மின் வசதி, கம்ப்யூட்டர் சர்வர் வசதிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டியது, தேர்வு நடத்தும் அமைப்பின் கடமை. 'ஏற்பாடுகளை துல்லியமாகச் செய்யாமல், மேம்போக்காக கடமையாற்றும் அதிகாரிகளின் போக்கே, இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்' என, தேர்வர்கள் கூறுகின்றனர்.

கே.வி., பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற உத்தரவால் சர்ச்சை: 70 ஆயிரம் மாணவர் பாதிக்கப்படுவர் என கல்வியாளர்கள் புகார்

'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனால், 70 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கே.வி.எஸ்., என, அழைக்கப்படும், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின், ஆளுனர்கள் குழும (போர்டு ஆப் கவர்னர்ஸ்) கூட்டம், அதன் தலைவரான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கடந்த மாதம், 27ம் தேதி நடைபெற்றது.

அப்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மனி மொழி போதிப்பதை கைவிடுவது என்றும், அதற்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வேண்டுமானால், ஜெர்மன் மொழியை, மாணவர்கள் கூடுதல் பாடமாக கற்றுக் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள, 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருத மொழி கற்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவர் என்றும், அதனால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழியை போதிப்பதில்லை என்ற முடிவு, நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில், ஊடகங்கள் குழப்பமான செய்திகளை வெளியிட்டு, பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றன.இந்த முடிவை மத்திய அரசு ஏன் எடுத்தது என்பது தொடர்பாக, அமைச்சகம் சார்பில், விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், சமஸ்கிருத ஆசிரியர்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், ஜெர்மன் மொழியை மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்துஉள்ளனர்.

சமஸ்கிருத மொழியை, மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஜெர்மன் மொழியை அறிமுகம் செய்தது, கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு, ஸ்மிருதி இரானி கூறினார். 114 சதவீதம் அதிகரிப்பு: *சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தியதற்கு, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் ஒன்றான, பா.ம.க., எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, சமஸ்கிருதத்தை கட்டாயமாக திணிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது.

*உயர் கல்வி படிக்க, ஜெர்மன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆறு ஆண்டுகளில், 114 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழி போதிக்கப்பட்டதும் ஒரு காரணம்.

*மத்திய அரசு தற்போது எடுத்துள்ள, புதிய முடிவால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், இனி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் தான் போதிக்கப்படும். ஜெர்மன் மொழி போதிக்கப்படாது. வேண்டுமானால், மாணவர்கள் கூடுதல் பாடமாக அதை கற்றுக் கொள்ளலாம்.

*கல்வி ஆண்டின் மத்திய பகுதியில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதுவரை ஜெர்மன் மொழி படித்த மாணவர்கள், இனி, சமஸ்கிருதத்திற்கு மாற வேண்டியது நேரிடும்.

*கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆங்கிலம், இந்தி மற்றொரு இந்திய மொழி என்ற மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது.

பாலியல் கல்வி குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை பாடமாக சேர்ப்பது குறித்து 8 வாரங்களுக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், அவற்றை பாடமாக புத்தகத்தில் சேர்க்கவும் கோரி, வழக்கறிஞர் சித்ராதேவி என்பவர் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஓராண்டு கடந்தும் அந்த மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Wednesday, November 12, 2014

8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (13.11.2014-வியாழக்கிழமை) விடுமுறை

பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளை நிர்வகிக்க ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஒவ்வொரு குழுவிலும் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பள்ளிகளின் தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது, வகுப்பறை, கழிவறை வசதிகளை மேம்படுத்துவது, பள்ளிகளில் விழாக்களை நடத்துவது, கல்வித் தரத்தை அதிகரிக்க உள்ளூரில் உள்ள பட்டதாரிகளைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் எடுக்கச் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் முதல் கட்டமாக நவம்பர் 14-ஆம் தேதி மதுரையிலும், இரண்டாம் கட்டமாக சென்னையில் நவம்பர் 18-ஆம் தேதியிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதன் பிறகு, மாவட்டந்தோறும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியின்போது பள்ளியை நிர்வகிப்பது தொடர்பான கையேடுகளும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

How to missing credit Cps power point format

Click below

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxdWc1am4zcm44cTA/view?usp=sharing

TRB PG Syllabus

Click below

http://trb.tn.nic.in/PG2014/07112014/msg1.htm

How to Apply CPS Number in Online


1. The first thing you have to done is to print this 3 pages seperately then fill the details with black
ink, after that the photograph of the Govt. Employer should be pasted with his/her signature also
with the pay drawing officer's attestation. These 3 Pages must be scanned within 300 kb in PDF
Format.

2. After these procedures you can visit the below
website: http://218.248.44.123/auto_cps

3. A new page will be opened, in this page you can fill the user name(treasury number) and password (Pay Drawing Officer's code number)
For Ex: Treasury no: 123
Paydrawing Officer's Code No: 123
You can type like Username: 123 Password: 123
Then you click the submit button. After that the new page will be opened and you filled the required details then you click the check button.

4. The next page can be filled with proper details then you click the proceed button.
5. Again the next page will be filled and uploaded the scanned PDF file at last you click the save
button.
6. Before you press the forward button you must confirm the filled details are correct, if any corrections you can go to the draft and pick the particular person's file then you edit any needed corrections.
7. After the clicking the forward button the details of the file forwarded to the chennai data centre. The new CPS number will be alloted with in few days after the verification the person's details.
( For getting the new CPS alloted number you can click the S1 form and download the new CPS number allotment letter).

http://218.248.44.123/auto_cps/

ednesday, 12 November 2014 Alagappa University DDE results exam held on May 2014

Click below

http://alagappauniversity.ac.in/result/DistanceEducation_reval.php