இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 10, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்: 6 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு


   ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் தமிழக அரசின் இரண்டு அரசாணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த அனைத்து தேர்வாளர்களுக்கும் அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பலரும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள்

1 நரேந்திர மோடி பிரதமர்

2 ராஜ்நாத் சிங் உள்துறை

3 சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறை மற்றும் அயல்நாட்டு விவகாரங்கள்

4 அருண் ஜேட்லி நிதி, கம்பெனி விவகாரங்கள், செய்தி ஒலிபரப்பு

5 எம்.வெங்கய்யா நாயுடு நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நாடாளுமன்ற விவகாரங்கள்

6 நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்

7 மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை

8 சுரேஷ் பிரபு ரயில்வே துறை

9 டி.வி.சதானந்த கௌடா சட்டம் மற்றும் நீதித்துறை

10 உமா பாரதி நீர்வளம், ஆறுகள் மேம்பாடு, கங்கை சுத்திகரிப்பு

11 நஜ்மா ஏ. ஹெப்துல்லா சிறுபான்மையினர் நலத்துறை

12 ராம்விலாஸ் பாஸ்வான் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம்

13 கல்ராஜ் மிஸ்ரா குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

14 மேனகா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை

15 அனந்த்குமார் ரசாயனம் மற்றும் உரங்கள்

16 ரவிசங்கர் பிரசாத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

17 ஜகத் பிரகாஷ் நட்டா சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

18 அசோக் கஜபதி ராஜு சிவில் விமானப் போக்குவரத்து

19 அனந்த் கீதே கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்

20 ஹர்சிம்ரத் கௌர் பாதல் உணவு பதனிடுதல் தொழில்கள்

21 நரேந்திர சிங் தோமர் சுரங்கங்கள், எஃகு

22 சௌத்ரி பிரேந்தர் சிங் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரம்

23 ஜுவல் ஒரம் பழங்குடியினர் நலத்துறை

24 ராதா மோகன் சிங் விவசாயம்

25 தாவர் சந்த் கெலாட் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை

26 ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாடு

27 ஹர்ஷ்வர்தன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் இணை அமைச்சர்கள்

28 ஜெனரல் வி.கே.சிங் புள்ளியியல், திட்ட அமலாக்கம்(தனிப்பொறுப்பு)} வெளியுறவுத்துறை விவகாரங்கள்

29 இந்தர்ஜித் ராவ் திட்டமிடல் (தனிப்பொறுப்பு), பாதுகாப்பு

30 சந்தோஷ்குமார் கங்வார் ஜவுளித்துறை (தனிப்பொறுப்பு)

31 பண்டாரு தத்தாத்ரேயா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப்பொறுப்பு)

32 ராஜிவ் பிரதாப் ரூடி திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் (தனிப்பொறுப்பு)

33 ஸ்ரீபாத் எஸ்úஸா நாயக் இந்திய மருத்துவம் (தனிப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

34 தர்மேந்திர பிரதான் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு)

35 சர்பானந்தா சோனோவால் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு (தனிப்பொறுப்பு)

36 பிரகாஷ் ஜாவடேகர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் (தனிப்பொறுப்பு).

37 பியூஷ் கோயல் மின்சாரம், நிலக்கரி, நவீன மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (தனிப்பொறுப்பு)

38 ஜிதேந்திர சிங் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியம், அணு ஆற்றல், விண்வெளித்துறை

39 நிர்மலா சீதாராமன் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனி பொறுப்பு)

40 மகேஷ் சர்மா கலாசாரம், சுற்றுலா, விமான போக்குவரத்து (தனி பொறுப்பு)

41 முக்தர் அப்பாஸ் நக்வி நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை

42 ராம் கிருபால் யாதவ் சுகாதாரம் மற்றும் குடிநீர்

43 ஹரிபாய் பார்த்திபாய்  செüத்ரி உள்துறை

44 சன்வார் லால் ஜத் நீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்துதல்

45 மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குந்தாரியா வேளாண்

46 கிரிராஜ் சிங் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள்

47 ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ரசாயனம் மற்றும் உரம்

48 ஜித்தேஸ்வரா கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்

49 மனோஜ் சின்ஹா ரயில்வே

50 நிகல்சந்த் பஞ்சாயத்து ராஜ்

51 உபேந்திர குஷ்வாஹா மனிதவள மேம்பாட்டுத் துறை

52 பொன். ராதாகிருஷ்ணன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து

53 கிரண் ரிஜிஜு உள்துறை

54 கிருஷ்ண பால் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்

55 சஞ்ஜீவ் குமார் பல்யான் வேளாண் துறை

56 மனுஷ்பாய் தான்ஜிபாய் வாசவா பழங்குடியினர் நலத்துறை

57 ரோசகேப் தாதராவ் தன்வே நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம்

58 விஷ்ணுதேவ் சாய் சுரங்கம் மற்றும் எஃகு

59 சுதர்ஷன் பகத் ஊரக வளர்ச்சித் துறை

60 ராம் சங்கர் கத்தேரியா மனிதவள மேம்பாட்டுத் துறை

61 செüத்ரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல்

62 ஜெயந்த் ஷின்ஹா நிதி

63 ராஜ்யவர்தன் சிங் ரதோர் செய்தி ஒலிபரப்புத் துறை

64 பாபுல் சுப்ரியா பரல் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு

65 நிரஞ்சன் ஜோதி உணவு பதனிடுதல் தொழில்

ePayroll Online ECS User Manual

Click below


http://www.tamilagaasiriyar.com/2014/11/epayroll-online-ecs-user-manual.html?m=1

Know your CPS Number

http://218.248.44.123/auto_cps/public/

வாக்காளர் பட்டியல் ஜன 5ல் வெளியீடு

வா‌க்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , நீக்க மற்‌றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இன்று கடைசி நாள் என்ற போதிலும்,இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்க முடியும்.

இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் வா‌க்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்‌றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய திருத்தப் பணி இன்றுடன்‌ முடிவடைகிறது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ந‌டந்த சிறப்பு முகாம்களில் பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி மாதம் இருபத்தைந்தாம் தேதி, தேசிய வாக்காளர் தினத்தன்று வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த வாய்ப்புகளை தவறவிட்டவர்கள்  இணையதளம் மூலமாக பெயர்களை சேர்க்கவோ ,நீக்கவோ அல்லது‌ திருத்தங்களை மேற்கொள்ளவோ விண்ணப்பிக்க முடியும்.

கல்விச் சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்: கல்வித்துறை

பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில், சமீபத்தில் கல்விச் சுற்றுலாவின்போது அதிகரித்து வரும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மாநில அரசுகள், தகுந்த விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டது.

தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைக்கான தொகுப்புகளை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், கலைத் திட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்தல்; மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அவர்கள் சார்ந்த அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற மாணவர்கள் மட்டுமே கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க இயலும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், சுற்றுலாவில் பங்கேற்கும்போது, உள்ளூர் சுற்றுலா முகவரின் துணையை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள், ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே இருக்கவேண்டியது அவசியம். மாணவர்களின் ஒப்புதல் கடிதம் மற்றும் உடன் செல்லும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் அவசர பாதுகாப்பு நடவடிக்கையில் உதவுவோம் என்ற ஒப்புதல் கடிதமும் பெற வேண்டும். கோவை மாவட்ட பள்ளிகளுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை தொடக்க கல்வி அலுவலகத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை பின்பற்றாமல் கல்விச் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Saturday, November 08, 2014

தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதானத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 8 மாவட்டங்களில் 44 மையங்களில் நடைபெற்ற தேர்வை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் மட்டும் 12 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1,264 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இணையதளம் மூலம் தேர்வு:

குரூப் 2 பிரதானத் தேர்வு, முதல் முறையாக இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை தேர்வாணையத் தலைவர் பாலசுப்பிரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதன்பின், தேர்வாணையத் தலைவர் கூறுகையில், ""வரும் தேர்வுகளையும் இணையதளம் மூலமே நடத்த ஏற்பாடு செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.,) கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்துக்குள் முடிவு வெளியாகும்'' என்றார்.

இணையதளக் கோளாறு: சில இடங்களில் இணையதளக் கோளாறு காரணமாக, தேர்வு நிறுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 300 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 270 பேர் தேர்வு எழுதினர். இணையதளக் கோளாறு காரணமாக 42 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 42 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதே இடத்தில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.

28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்

திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள், அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் (ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 1988 முதல், 95ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60 ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை ெவளியிட்டது.அதன்படி, சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெறப்பட்ட, ஓய்வூதியதாரர்களின் கோப்புகள் மீதான, தேவையான ெதளிவுரைகள், தமிழக அரசிடம் இருந்து கிடைத்ததும், திருத்திய ஓய்வூதியத்தை வழங்க உத்தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு, ஒரு நபர் பரிந்துரை யின் பேரில், 100 உத்தரவுகளை, கடந்த ஆண்டு, ஜூலை, 23ம் தேதி ெவளி யிட்டது. இதன் மூலமும். திருத்திய ஓய்வூதியம் தெடார்பான கோப்புகள் வந்து குவிகின்றன.இதனால், அதிக வேலைப்பளு ஏற்பட்ட போதும், சிரமத்திற்கிடையில், ஓய்வூதிய தாரர்கள், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை, 28,889 ஓய்வூதியதாரர்களுக்கு, திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட விவரங்கள் வேண்டி, 2192 கோப்புகள், சம்பந்தப்பட்ட துறை அலுலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே, தங்கள் கோப்புககளை திரும்ப பெற்றவர்கள்;

இனி கோப்புகளை அனுப்புபவர்கள், ஓய்வூதிய கொடுப்பு ஆணை எண், பணிப்பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்திற்கான முகாந்திரம், பணிப்பதிவேடு கிடைக்காவிட்டால், நான்காவது ஊதியக்குழு அடிப்படையிலான, ஊதிய அட்டவணை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.மேலும், ஓய்வூதியதாரர்களின் விருப்பப்படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும், கருவூலம் அல்லது சார் கருவூலத்தின் பெயர் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், சென்னை, அண்ணாசாலையில் உள்ள, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில், துணை மாநில கணக்காயரை (ஓய்வூதியம்) தொடர்பு கொள்ளலாம்.

Friday, November 07, 2014

தமிழகத்தில் புதிய பள்ளிகள் தொடங்க 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!


  தமிழகத்தில் வரும் 2015-16ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தொடங்குவதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொடக்க கல்வி இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில்,

''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2015-16ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளி விபர வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2015-16ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் மற்றும் உயர் தொடக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பகுதிகளில் புதியதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்குவதற்கும், தற்போது தொடக்கப் பள்ளிகளாக இயங்கி வரும் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான விண்ணப்பங்களை வரும் 10ஆம் தேதிக்குள் தனி நபர் மூலம் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' எனக் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21dkRqeVBXQ1R2d1E/view?usp=sharing

தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.


இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10 முதல் 26 வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை விவரம்:

தமிழ்ப் பாடத்தில் 277 பேர், ஆங்கிலப் பாடத்தில் 209 பேர், கணிதப் பாடத்தில் 222 பேர், இயற்பியல், வேதியியலில் தலா 189 பேர், உயிரியலில் 95 பேர், விலங்கியலில் 89 பேர், வரலாறு பாடத்தில் 1989 பேர், பொருளாதாரத்தில் 177 பேர், வணிகவியலில் 135 பேர், உடற்கல்வி இயக்குநர்களாக 27 பேர் என மொத்தம் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்போடு, பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு ஆண்டுப் பட்டப் படிப்பை முடித்திருந்தாலோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான படிப்புகளைப் படித்திருந்தாலோ அவர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

எனினும், வேறு பிரிவில் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அவர்களது படிப்பு, அறிவிப்பாணையில் உள்ள பாடங்களுக்கு இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருந்தால் போட்டித் தேர்வு எழுதலாம். இந்த அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பே இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் எந்த இடத்தில் விண்ணப்பத்தை வாங்கினாரோ அதே இடத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். பிரதான பாடம், கல்வி முறை, பொது அறிவு ஆகியவை தொடர்பாக 150 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

பதிவு மூப்புக்கு 4 மதிப்பெண்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புக்காக மொத்தம் 4 தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வரை வழங்கப்படும். ஒராண்டு முதல் மூன்றாண்டு வரை 1 மதிப்பெண், 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண், 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண் என வழங்கப்படும்.

பணி அனுபவத்துக்கு 3 மதிப்பெண்: அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்றியிருந்தால் பணி அனுபவத்துக்கு 3 தகுதிகாண் மதிப்பெண் வரை வழங்கப்படும்.

1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

செஸ் இறுதிப்போட்டிசென்னையில் நடக்கிறது A

:பள்ளி மாணவ, மாணவியரிடையே, மாநில அளவிலான, செஸ் இறுதிப் போட்டி, வரும், 13ம் தேதி, சென்னையில் நடக்கிறது.கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் நினைவுத்திறனை வளர்க்கும் வகையில், செஸ் போட்டி நடத்தப்படுகிறது.ஏற்கனவே, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மண்டலம் என, பல நிலைகளில், போட்டி நடந்தது.இதையடுத்து, மாநில அளவிலான இறுதிப் போட்டி, வரும், 13ம் தேதி, சென்னை, வேப்பேரியில் உள்ள டவுட்டன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, 360 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, மறுநாள், 14ம் தேதி, சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் குழந்தைகள் தின விழாவில், பரிசு வழங்கப்படும்.

பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம்: தனித் தேர்வர்கள், தேர்வுக்கு பதிவு செய்ய வசதியாக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது.

இதன் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி மாலை, 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீது நடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை


      “பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம் அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது:

பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும். அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும் 100 சதவீத தேர்ச்சியை எட்டாத பள்ளி களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது, என்றார்.

Thursday, November 06, 2014

TRB PG

TRB PG EXAM notification

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB
விண்ணப்ப விநியோகம் 10.11.2014 கடைசி தேதி 26.11.2014
எழுத்துத் தேர்வு 10.1.2015
மொத்த பணியிடம் 1807

தமிழ்-227,
ஆங்கிலம்-209,
கணிதம்-222,
இயற்பியல்-189,
வேதியியல்-189,
தாவரவியல்-95,
விலங்கியல்-89,
வரலாறு-198,
பொருளியல்-177,
வணிகவியல்-135,
உடற்கல்வி இயக்குநர்-27

EMIS students Profile data form

Click below

https://app.box.com/s/gaizy4yu72z8hjnn7rjr