இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 04, 2014

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர் எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர் எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

3 கிலோ மீட்டர்:

தமிழக அரசின் பள்ளிக் கல்வி கொள்கைப்படி, 300 பேர் மக்கள்தொகை குடியிருப்பை கொண்ட கிராமத்தின், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில், ஒரு துவக்கப்பள்ளி, 500 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமத்தின், மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில், ஒரு நடுநிலைப்பள்ளி இருக்க வேண்டும். அந்த வகையில், நடுநிலைப் பள்ளியாக உள்ள பள்ளிகள், மாணவர்களின் எண்ணிக்கை, குடியிருப்பு, இடவசதி ஆகியவை அடிப்படையாக கொண்டு, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மாணவரின் எண்ணிக்கை மற்றும் வசதியை அடிப்படையாக கொண்டு, உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில், மாநிலம் முழுவதும், 100 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதியதாக தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும், தலா, ஒரு தலைமை ஆசிரியர், எட்டு பட்டதாரி ஆசிரியர் என, 900 பணியிடங்கள் புதியதாக நிரப்பப்படும். ஆனால், காலதாமத அறிவிப்பால், ஏற்கனவே 10ம் வகுப்பு படித்து முடித்த மாணவர், அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பிளஸ் 1 வகுப்பு காலாண்டு தேர்வையும், சம்பந்தப்பட்ட பள்ளியில் முடித்துவிட்டார். இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட, 100 மேல்நிலைப் பள்ளிகளிலும், நடப்பாண்டுக்கான மாணவர்களை சேர்க்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதிருப்தி:

தற்போது, பிளஸ் 1 வகுப்பில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லாததால், அவர்கள் நடப்பாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளியில் இருந்து, டி.சி., (மாற்றுச்சான்று) பெற்றுக் கொண்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், மீண்டும் பழைய பள்ளிக்கே, திரும்பி வந்து படிக்க, மாணவர் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல், கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அதன்படி, அந்த பள்ளிகளில், 10ம் வகுப்பு படிப்பு முடித்து, தற்போது, பிளஸ் 1 வகுப்பில், அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் பட்டியல் தயார் செய்யப்படும். பின், அவர்களை அந்த பள்ளி யில் இருந்து விடுவித்து (டி.சி., பெற்றுக் கொண்டு), தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவர். பாடத்திட்டம் ஒரே மாதிரியானது என்பதால், எவ்வித பிரச்னையும் இல்லை. எனவே, பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டி.சி., வழங்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அறிமுகம்:

மேலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியி யல், உயிரியல் படிப்பு கொண்ட, ஒரு குரூப்பும், கலைப்படிப்பு சார்ந்த ஒரு குரூப் மட்டுமே, நடப்பாண்டு அறிமுகம் செய்யப்படும். கூடுதல் கட்டடம் மற்றும் ஆய்வகங்கள் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு வந்து சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, October 01, 2014

உதவிப் பேராசிரியர் நியமனம்:  ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களில் விண்ணப்பித்தோருக்கு அக்.13 முதல் நேர்காணல்


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான நேர்காணல் அக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கல்வித் தகுதி (9), பணி அனுபவம் (15) ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். எனினும், அழைப்புக் கடிதங்களுக்காகக் காத்திருக்காமல் விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பிற பாடங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர்.

இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் 2014, ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கியது. நேர்காணலுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதன்பிறகு, மொத்தம் 34 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் இருக்கும். சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு அரசு சட்டக் கல்லூரிகளில் 50 மூத்த விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது. 131 பேர் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

முக்கிய விடைகள் தொடர்பாக ஆட்சேபம் ஏதும் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 13-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த 281 பேரில் 150 பேர் உரிய தகுதி இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து தொடக்க நடுநிலைப்பள்ளிகளிலும் “தூய்மையான பள்ளி” உறுதிமொழி மற்றும் தூய்மை வாரம் கொண்டாட இயக்குன ர்அறிவுரை

Tuesday, September 30, 2014

பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ?

உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.தமிழகத்தில் டி.இ.டி.,தேர்வு மூலம் தேர்வான இடைநிலை பட்டதாரிகளான 14,700 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டு, உடனே பணியில் சேரும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

இவர்களில், 50 சதவீதம் பேர் சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பில்லாததால், வெளி மாவட்டத்திலுள்ள காலியிடங்களை தேர்வு செய்தனர். நியமன ஆணை பெற்ற 25 சதவீத ஆசிரியர்கள் பணியில் சேராமல் தாமதித்து வருகின்றனர். அரசியல், அதிகாரிகள் சிபாரிசில், நியமன உத்தரவை மாற்றி, சாதகமான இடங்களை பெற காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் மாற்றத்தால் சாதக இடங்களுக்கான உத்தரவை பெறுவதில் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் 25 முதல் 30 சதவீதம் பேர் வரவில்லை என பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், “கலந்தாய்வு மூலம் நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்ததற்கான ஆய்வு நடக்கிறது.

தேர்வு செய்த பள்ளியில் பணியில் சேர்ந்தால், உடனே வேறு பள்ளிகளுக்கு மாற முடியாது என்பதால், சிலர் தாமதித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாள் வரை பணியில் சேராதவர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றனர்.

Monday, September 29, 2014

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2014-2015ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரை 2ம் பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் கல்வி மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இன்று முதல் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான இலவச பாட புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக். 6ம் தேதி அன்று மாணவர்கள் வசம் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இலவச சீருடை வழங்கப்பட வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களும் இப்பணியில் காலதாமதமின்றி விரைவு நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பதை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை 2/2

25) பி.வி.ரமணா பால்வளத் துறை அமைச்சர் - பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி

26) கே.சி.வீரமணி பள்ளிக் கல்வி துறை அமைச்சர் - பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு.

27) எம்.எஸ்.எம்.ஆனந்தன் வனத்துறை அமைச்சர் - வனம்.

28) தோப்பு என்.டி.வெங்கடாசலம் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் - சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு.

29) டி.பி.பூனாச்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் - கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.

30) எஸ்.அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்

31) டாக்டர்.சி.விஜய பாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.

புதிய அமைச்சரவை

ஓ.பன்னீர் செல்வம்

1) ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் - பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை. நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள், பொதுப்பணிகள், சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள்.

2) நத்தம் ஆர் .விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்).

3) ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்.

எடப்பாடி பழனிச்சாமி

4) எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்.

5) பி.மோகன் ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.

6) பி.வளர்மதி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு.

7) பி.பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர் - தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில் நுட்பவியல்.

8) செல்லூர் கே.ராஜு கூட்டுறவுத் துறை அமைச்சர் - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்

செந்தில் பாலாஜி

9) ஆர்.காமராஜ் உணவுத் துறை அமைச்சர் - உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு

10) பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர் - தொழில்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், சிறப்பு முயற்சிகள்.

11) வி.செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம்.

12) எம்.சி.சம்பத் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் - வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம்.

13) அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேளாண்மைத் துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.

கோகுல இந்திரா

14) எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.

15) டி.கே.எம். சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் - கால்நடை பராமரிப்பு.

16) எஸ்.கோகுல இந்திரா கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் - கைத்தறி மற்றும் துணிநூல்.

17) எஸ்.சுந்தரராஜ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன்.

18) பி.செந்தூர் பாண்டியன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.

சண்முகநாதன்

19) எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர் - சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சிக்கழகம்.

20) என்.சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் - ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்.

21) கே.ஏ.ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம்.

22) முக்கூர் என்.சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தகவல் தொழில் நுட்பம்

23) ஆர்.பி உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.

ராஜேந்திர பாலாஜி

24) கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம்,

ANNAMALAI UNIVERSITY RESULTS

Annamalai University
click below

http://annamalaiuniversity.ac.in/dde/get_number.php

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!
ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை 

நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. 

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், 

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். 

எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை. 

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, 

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.

பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை. 

செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை. 

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை. 

பி.தங்கமணி-தொழில் துறை. வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை. 

எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை. 

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வேளாண்மைத் துறை. 

எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, ஊழல் தடுப்பு. 

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை. 

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை. 

எஸ்.சுந்தரராஜ்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை. 

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை. 

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம். 

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை. 

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை. 

முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல் தொழில்நுட்பத் துறை. 

ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை. 

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை. 

பி.வி.ரமணா - பால்வளத் துறை. 

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை. 

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை. 

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை. 

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

Sunday, September 28, 2014

புதிதாக நியமிக்கப்பட்ட 2,174 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம

் தமிழகத்தில் 2011&12 மற்றும் 2012&13ம் ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் நடந்த கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அவ்வாறு பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று (29ம் தேதி) முதல் அக்டோபர் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வேதியியல் பாட ஆசிரியர்கள் 219 பேருக்கு சேலம், சின்ன திருப்பதி ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரியிலும், 317 ஆங்கில ஆசிரியர்களுக்கு திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியிலும், 191 தாவரவியல் ஆசிரியர்களுக்கு ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
283 கணித ஆசிரியர்களுக்கு சின்ன சேலம் சிறுமலர் மேல்நிலை பள்ளியிலும், 178 விலங்கியல் ஆசிரியர்களுக்கு ஈரோடு, நஞ்சுண்டபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியிலும், 313 வணிகவியல் ஆசிரியர்களுக்கு கோபி, தாசம்பாளையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியிலும், 225 இயற்பியல் ஆசிரியர்களுக்கு திண்டுக்கல் பறைபட்டி ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், 270 பொருளியல் ஆசிரியர்களுக்கு தஞ்சாவூர் கே.நெடுஞ் செழியன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலும், 178 வரலாறு ஆசிரியர்களுக்கு மதுரை அழகர்கோயில் மகாத்மா மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மொத்தம் 2174 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது

Saturday, September 27, 2014

பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர். இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2 நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும், என்றார்.

Friday, September 26, 2014

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:

அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன், வாசிப்பு, எழுதும் திறன் ஆகியவற்றை மாணவர்களிடம் கலந்துரையாடி அறிய வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில், நீண்ட நாள் பள்ளிக்கு வராதவர்களின் பட்டியலை எடுத்து, அதற்கான காரணத்தை மாணவர்களிடமே கேட்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு, கழிப்பறை, குடிநீர் வசதி போன்றவை சார்ந்த பள்ளியின் தளவாட பொருட்கள், 'டிவி'மற்றும் நுாலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு செய்ய வேண்டும். என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.