இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 27, 2014

தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை சலுகை, வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலம் உடற்கல்வி ஆசிரியர்கள் புகார்

போதிய கல்வி தகுதி இருந்தும் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால், பல்வேறு சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் பிசிகல் டைரக்டர், அசிஸ்டெண்ட் பிசிகல் டைரக்டர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தனிநபர் விளையாட்டுக்களான ஓடுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குழு விளையாட்டுகள் வரிசையில் ஹாக்கி, கால்பந்தாட்டம், வாலிபால், பேஸ்கட் பால் என அனைத்து விளையாட்டுகளின் வரலாறு, விதிமுறைகள், ஆடும் முறை ஆகியவற்றை கற்று கொடுக்கின்றனர்

. இதுதவிர, மைதானத்துக்கு அழைத்து சென்று பயிற்சியும் கொடுக்கின்றனர். ஆனால், இவர்கள் நான்-டீச்சிங் ஊழியராகத்தான் இன்று வரை கருதப்படுகின்றனர். இந்த துறையில், பி.எச்.டி.பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான். பிசிகல் டைரக்டர், அசிஸ்டெண்ட் பிசிகல் டைரக்டர் என்ற பெயரெல்லாம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. அதற்கு பதிலாக, இவர்கள் பிசிகல் டிரைனிங் இன்ஸ்ட்ரக்டர் என்று அழைக்கப்படுகின்றனர். எம்.பில், பி.எச்டி. பட்டம் பெற்று இருந்தும், யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் விதிப்படி இவர்கள் டீச்சிங் ஸ்டாப் என்ற வரையறைக்குள் இடம் பெறவில்லை. வகுப்பறையில் வைத்து மாணவர்களுக்கு போர்டு, சாக்பீஸ் ஆகியவற்றை கொண்டு பாடம் நடத்துபவர்கள்தான் டீச்சிங் ஸ்டாப் என்றும், இவர்கள் சாக்பீஸ் போன்றவற்றை பயன்படுத்தாத காரணத்தால், நான்-டீச்சிங் ஸ்டாப் என்றும் அழைக்கப்படுகின்றனர். இதனால், இவர்கள் யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் வரையறுத்த கல்லூரி பேராசிரியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு, சம்பளம் மற்றும் விடுமுறையுடன் கூடிய படிக்கும் வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் எதுவும் பெற முடியாமல், பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

ஆனால், நூலகர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் போன்ற நான்-டீச்சிங் ஸ்டாப் ஊழியர்கள், யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். மேலும் துறை சார்ந்த தேர்வுகள் எழுதி, படிப்படியாக, ஜூனியர் அசிஸ்டென்ட், சூப்பிரடென்ட், பர்சர் என பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், வகுப்பறையில் பாடம் எடுக்காததை காரணம் காட்டி, பிசிகல் டிரைனிங் இன்ஸ்டிரக்டர்களுக்கு எம்.பில், எம்.பி.எட். போன்ற தேர்வுகள் எழுத வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால், இவர்கள் தங்களுடைய தகுதிகள் மற்றும் திறமைகளை வளர்த்து கொள்ள முடிவதில்லை. மேலும், இவர்கள் மிகவும் குறைவான கிரேடு சம்பளமான ரூ.2,800க்கு பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: எங்களிடம் முழு கல்வி தகுதி இருந்தும், கடந்த பல வருடங்களாக நான்-டீச்சிங் ஸ்டாப்பாகவே பணிபுரிந்து வருகிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிகிறோம். எங்கள் துறை சார்பில் இருந்து வந்த கோடை வகுப்பான எம்.பிஎட். படிப்பு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் ஆசிரியர்கள் ஆகும் நிலை மறுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு எம்.பில்., எம்.பிஎட்., படிக்க சம்பளத்துடன் கூடிய வாய்ப்பும், அனுமதியும் தர வேண்டும்.

மேலும், பி.டி. ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.9,300 வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.சமூக, பொருளாதார பிரச்னையால், பள்ளி படிப்பை, மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1,500 ரூபாயும், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாயும், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்தத் தொகை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம்) முதலீடு செய்யப்பட்டு, மாணவர்கள், மேல்நிலைக்கல்வி முடித்ததும், வழங்கப்படுகிறது

. l 2011 - 12ல், 313 கோடி; 2012 - 13ல், 353 கோடி; 2013 - 14ல், 381 கோடி ரூபாய், ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இதில், முறையே, 19 லட்சம், 21 லட்சம் மற்றும், 23 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர். l நடப்பு, 2014 - 15ம் கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.l பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் இறுதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அடுத்த மாதம் இறுதியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிப்ப

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.  

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.  பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு மையங்களில் ரூ.500-க்கான வங்கி வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய்ஸ்ரீக்ங் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.

Saturday, July 26, 2014

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600 

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250  

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500 

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200 

 5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

 6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500

 7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000 

8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500 

 10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

  11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500 

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250  

13. Tamilnau Teacher Education University -350.  

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்

Thursday, July 24, 2014

TNPSC GROUP I tentative answer key

பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம்

மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுகளின் விபரத்தில், ரத்தவகை இடம்பெற செய்யும் வகையில், ரத்தம் கண்டறியும் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையிலும், மாணவர்களின் விபரங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, கடந்த ஆண்டு, தொடக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களின் விபரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. மாணவரின் பெயர், தந்தை, தாய் பெயர், ஆண்டு வருமானம், ஜாதி, மொழி, மதம், முகவரி, உடன் பிறந்தவர்கள், ரத்தவகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பெறப்பட்டது. கடந்த ஆண்டு ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களில், கிராம அளவில் உள்ள, ஒரு சில தொடக்க பள்ளிகள், ரத்தவகை குறிப்பிடாமல் வழங்கியிருந்தது.

தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட தொடக்க கல்விக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ரத்தவகை சேகரிக்காத பள்ளிகள், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பள்ளிகளில், ரத்தவகை முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்த வகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ரத்தவகை கண்டறியும் முகாம் நடத்த, அரசு உத்தரவிட்டிருப்பதன் மூலம், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Wednesday, July 23, 2014

பி.எட்., விண்ணப்பம் வினியோக தேதி நீட்டிப்ப

ு "தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், 25ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, '' என, பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2007-08ம் கல்வியாண்டு முதல் இளம் கல்வியியல் (பி.எட்.) பட்ட வகுப்புகள் பயிற்று வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த வகுப்பில் படிக்கும் அனைவரும், நூறு சதத் தேர்ச்சி பெறுகின்றனர். நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஜூன், 16ம் தேதி முதல் ஜூலை, 16ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்தப் பல்கலைக்கழகத்தில், முறைசார் கல்வி வழி (ரெகுலர்) பயிற்றுவிக்கப்படும், இளம் கல்வியியல் பட்ட வகுப்புக்கான விண்ணப்பங்கள் பெறவும், நிறைவு செய்து அனுப்பவும் ஜூலை, 25ம் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ... ஆசிரியர்கள் நியமன விபரம

்.பள்ளிக்கல்வித்துறை: மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம். மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...

SG T =938
BT= 13,777
PG T=2881
SPECIAL T =842
LECTURER =1093

so the vacancy will be increase around 3000 in BT assistant

பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

* பள்ளிக்கூடங்களில் சாதி, மத, சமய , இன வேறுபாட்டு உணர்வுக்கு இடம் அளிக்காமல் கல்வி கற்பிக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்வரவேண்டும்.

பஸ் படிக்கட்டில் பயணிக்க வேண்டாம்

* ஓடும் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வதால் உடல் உறுப்புகள் இழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. இதை ஆசிரியர்கள் இறை வணக்க நேரத்தில் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

*மாணவர்கள் சிறுவர்களாக இருந்தால் பள்ளிக்கு அருகில் சாலைகளை சிறுவர்கள் பாதுகாப்பாக கடக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

*பள்ளிக்கூடத்திற்கு அருகில் வேகத்தடை இருக்கிறதா? என்று ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லை என்றால் உடனே வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி வரக்கூடாது

* பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி ஒட்டிவரக்கூடாது. அவ்வாறு ஓட்டி வரும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கூடங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரை அழைத்து உங்கள் மகனை, பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் வர அனுமதிக்காதீர்கள் என்று சொல்ல வேண்டும். மீறி வந்தால் மாணவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.

அவர்கள் பள்ளிக்கு வரும்போது அல்லது பள்ளியில் இருந்து வீட்டுக்கு போகும்போது இரு சக்கர வாகனத்தில் சென்று ஏதாவது விபத்தில் சிக்கி உயிர்ப்பலியானால் இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு ஆவார்.

இவ்வாறு இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மூன்று வாரங்களில் பணி நியமன உத்தரவு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மூன்று வாரங்களில் பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படாதது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் பேசிய பாலபாரதி, தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டதால் சுமார் 40 ஆயிரம் பேர் கூடுதலாகப் பயன்பெற்றுள்ளனர். மொத்தம் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, பணி நியமனத்துக்குரிய உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் வீரமணி பேசியது: முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட மதிப்பெண் தளர்வால் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் 17 ஆயிரத்து 996 பேர், தாள் இரண்டில் 25 ஆயிரத்து 187 பேர் என மொத்தம் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றிருந்த 29 ஆயிரத்து 518 பேருடன் கூடுதலாக தேர்ச்சி பெற்ற நபர்களுடன் சேர்த்து மொத்தம் 72 ஆயிரத்து 701 பேரின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் 80 வழக்குகள் வரை உள்ளன.

இந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வழக்குகளின் தீர்ப்புகள் அனைத்தும் அரசுக்குச் சாதகமாகவே உள்ளன. எனவே, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் நியமிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள-tnkalvi

>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

>2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452 பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும் கோரியுள்ளது.

>பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல் இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது. அதேபோல் இன்னும் நிரப்பப்பட வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.

>2014-15ம் ஆண்டில் கீழ்காணும் அட்டவணையின் படி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்க உத்தேசித்துள்ளது.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார மைய அளவில் 13நாட்கள்
>குறுவள மைய அளவில் 7நாட்கள் 

உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார மைய அளவில் 11நாட்கள்
>குறுவள மைய அளவில் 7நாட்கள்

>தலைமையாசிரியர்களுக்கு - 5நாட்கள் பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக நியமன செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 5பணியிடை பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

P.F.forms

Tuesday, July 22, 2014

அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது -tnkalvi

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 2014-15ம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் விளையாட்டு போட்டி: மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு

  கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் ஜப்பானில் அக்டோபரில் நடக்கிறது. இதில் மாவட்ட வாரியாக இரு மாணவர்கள் பங்கேற்கலாம். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். இதுகுறித்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:

கிழக்காசிய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளன. அதில் பங்கேற்க கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில், மாவட்ட, மாநில அளவில் சிறந்து விளங்கும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரு மாணவர், ஒரு மாணவி என மாவட்டத்திற்கு இருவரை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே இப்போட்டிக்கு சென்றுவந்த மாணவர்களின் பெயர்கள் இடம் பெறக்கூடாது. www.mhrd.gov.in என்ற இணையதளமுகவரியில் மாணவர்களுக்கான விசா மற்றும் நுழைவுப்படிவம் தரப்பட்டுள்ளது. விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் இரு ஆசிரியர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 'பாஸ்போர்ட்' பெற்றிருக்க வேண்டும். போட்டிக்கு செல்வதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது. அதிக வேலை பளு: டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. இணையதளம்: இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுமாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது.

இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும். கால அவகாசம்: மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது

. இம்மாத இறுதிக்குள்...: இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது

polythine competitions letter

மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன் பேரில் புதிய லோக்பால் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. லோக்பால் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவர கணக்கை தெரிவிப்பது தொடர்பாக நேற்று புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைப்படி மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள சொத்து விபரங்களை ஆண்டுதோறும் மார்ச் 31–ந்தேதி நிலவரப்படி தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்படி ஒரு ஊழியர் தான் வைத்துள்ள ரொக்கப் பணம் எவ்வளவு என்று சொல்ல வேண்டும். வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதித் தொகை மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தனது சொத்து மட்டுமின்றி தன் மனைவி அல்லது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யார், யார் பெயரில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு வாகனங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளதோ அந்த விபரத்தையும் அரசு ஊழியர்கள் எழுதி கொடுக்க வேண்டும். இனி புதிதாக வேலைக்கு சேர்பவர்கள், வேலைக்கு சேரும் நாளில் தனக்குள்ள சொத்துக்கள் விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் ஏற்கனவே சொத்து விபரத்தை தாக்கல் செய்து வருகிறார்கள். என்றாலும் புதிய லோக்பால் சட்டத்தின் கீழும் அரசு ஊழியர்கள் சொத்து விவரக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டுக்கான சொத்து விவரக்கணக்கு படிவத்தை வரும் செப்டம்பர் மாதம் 15–ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசையும், அசையா சொத்து, கடன் விபரங்களை ஜூலை 31–ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் 4 மாதத் தொகை அல்லது ரூ.2 லட்சத்துக்கும் குறைவான சொத்து மதிப்பே இருந்தால் அந்த ஊழியர் சொத்து விவரக்கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய ஊழியர்களுக்கு மூத்த அதிகாரி விதிவிலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.