இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 26, 2014

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி, உடனுக்குடன், "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய, கல்வித்துறை புதிய நடவடிக்கை

 
   தேர்வு முடிவிற்குப்பின், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய, மாணவ, மாணவியர், நீண்ட வரிசையில் காத்திருப்பர். ஒரு நாள் தாமதம் ஆனாலும், பதிவுமூப்பு தள்ளிப்போகும் நிலையும் இருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள், தங்கள் பள்ளியிலேயே, "ஆன் - லைன்' மூலம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள, இரு ஆண்டுகளுக்கு முன், திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும், ஒரே பதிவு மூப்பு கணக்கை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை, தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும், ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது

. பின், பதிவு செய்யப்பட்டதற்கான அட்டைகளும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமான தகவல்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால், அதிக நேரம் பிடிக்கிறது. இதனால், மாணவர்கள் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னையை, இந்த ஆண்டு தீர்க்கும் வகையில், கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் குறித்த முழு விவரங்களும், ஏற்கனவே பெறப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பள்ளி, சொந்த ஊர் உள்ளிட்ட பல விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பயிற்சி :

தேர்வு முடிவு வந்ததும், அதில், மதிப்பெண் சான்றிதழ் எண்களை மட்டும் பதிவு செய்ய வேண்டியது மட்டும் தான் வேலை. இதனால், உடனுக்குடன், எளிதில், பதிவு செய்ய முடியும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரக அதிகாரிகள், ஏற்கனவே, பள்ளி ஆசிரியர், பணியாளர்களுக்கு, "ஆன் - லைன்' வழியில், பதிவு செய்வது குறித்து, பயிற்சி அளித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு பள்ளிக்கும், உபயோகிப்பாளர் அடையாளம் (யூசர் ஐ.டி.,) மற்றும் ரகசிய எண் (பாஸ்வேர்டு) ஆகியவற்றையும், வேலை வாய்ப்புத்துறை வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி, உடனுக்குடன் வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள, ஆசிரியர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா?

"தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடத்திட, அவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறி, நுழைவுத் தேர்வு நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் (ஆர்.டி.இ.,), பள்ளிகளுக்கான விதிமுறைகள் குறித்து, பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை, பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. வழக்கமான பாணியில் தான், தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றை, அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. "ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரை, எந்தக் காரணம் கொண்டும், தோல்வி அடையச் செய்யக்கூடாது; மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது' என்பது முக்கியமான விதிகள்.

ஆனால், இதை, இரண்டையும், பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. தமிழகத்தில், பல முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதும், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வேறு வகுப்புகளில் சேர்த்தாலும், தேர்வு நடத்தி தான், "சீட்' தருகின்றனர். இதேபோல், படிப்பில், மிகவும் பின் தங்கும் குழந்தைகளை, "பெயில்' செய்கின்றனர். இந்த விவகாரமும், வெளியில் தெரிவது இல்லை. இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், "மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளது. வெற்று அறிவிப்புடன் நிற்காமல், அறிவிப்பு, அமல்படுத்தப்படுகிறதா என்பதை, நேரடியாக, களத்திற்கு சென்று ஆய்வு செய்து, விதிமுறையை மீறும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க, துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்

Friday, April 25, 2014

ஜூன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன.

இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர். இதில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 11 முதல் 18 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 20 முதல் 27 வரையிலும் நடைபெறும். தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:

ஜூன் 11 - புதன்கிழமை - இந்தியக் கல்வி முறை

ஜூன் 12-வியாழக்கிழமை-கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2

ஜூன் 13 - வெள்ளிக்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 2, இளஞ்சிறார் கல்வி-2

ஜூன் 14 - சனிக்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி -2

ஜூன் 16 - திங்கள்கிழமை - கணிதவியல் கல்வி -2

ஜூன் 17 - செவ்வாய்க்கிழமை - அறிவியல் கல்வி - 2

ஜூன் 18 - புதன்கிழமை - சமூக அறிவியல் கல்வி -2

 

முதலாமாண்டு தேர்வு அட்டவணை:

ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - கற்கும் குழந்தை

ஜூன் 21 - சனிக்கிழமை - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -1

ஜூன் 23- திங்கள்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) -1, இளஞ்சிறார் கல்வி -1

ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி - 1

ஜூன் 25 - புதன்கிழமை - கணிதவியல் கல்வி -1

ஜூன் 26 - வியாழக்கிழமை - அறிவியல் கல்வி-1

ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் கல்வி-1

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்


    ""பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: கடந்த மார்ச்சில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள், எந்த பாடத்திற்கும், விடைத்தாள் நகல் கேட்டோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள், மே 9 முதல், 14 வரையிலான தேதிகளில், மாலை, 5:00 மணி வரை (ஞாயிறு தவிர), தாங்கள் படித்த பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்; தனித் தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகல் கேட்கும் மாணவர், அதோடு கூடவே, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், மறு மதிப்பீடு அல்லது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் விவரம்: விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு, 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் செலுத்த வேண்டும். இதை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செலுத்த வேண்டும். மறுகூட்டல் எனில், மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடத்திற்கு, 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, 205 ரூபாய் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதை, மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தான், விடைத்தாள் நகல்களை, இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறியவும் முடியும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் நாள், அதற்கான இணைய தள முகவரி, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

Tuesday, April 22, 2014

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்

தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழகத்தில் தேர்தலின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு வரை பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். தற்போது 7 ஆயிரம் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு அன்று காலை 9, 11 மணி மற்றும் பிற்பகல் 1 மணிக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும். தேர்தல் குறித்த விளம்பரத்தை நாளை மறுநாள் வரை பத்திரிகைகளில் வெளியிடலாம். ஆதார், பாஸ்போர்ட் உள்பட 12 அடையாள அட்டை மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். வன்முறை, பணப்பட்டுவாடாவை  தடுக்க தேர்தலின்போது தடை உத்தரவு அமலில் இருக்கும். பணம் வாங்காமல் மனசாட்சியுடன் வாக்காளர்கள்  தங்களது வாக்கை பதிவு  செய்ய வேண்டும்" என்றார்.

Monday, April 21, 2014

கோடை கால பயிற்சி முகாம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

   சென்னை உள்பட தமிழகத்தில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாம்களுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பல்நோக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா விளையாட்டு வளாகம், அசோக் நகர் புதூர் கிரிக்கெட் அகாதெமி மற்றும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய நவீன விளையாட்டு அரங்குகளில் ஆண்டுதோறும் கோடை கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டு அரங்குகளில் ஏப்ரல் 25 முதல் மே 9-ஆம் தேதி வரையிலும், மே 12 முதல் மே 26-ஆம் தேதி வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி முகாம்கள் நடைபெறும். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, ஜுடோ, கோ-கோ, கபடி, டென்னிஸ், டேக்வோண்டோ மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் 15 நாள்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் அண்ணா நீச்சல் குளம், அண்ணா சதுக்கம், மெரீனா கடற்கரை, செனாய்நகர் நீச்சல் குளம், வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய மூன்று நீச்சல் குளங்களிலும் நீச்சல் பழகும் திட்டத்தில் நீச்சல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள் விளையாட்டு அரங்குகளின் அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட பயிற்றுநர்களை காலை, மாலை நேரங்களில் அணுகி விவரங்களை பெறலாம். மாவட்ட அளவில்... இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் கோடை கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே பெற்று, பூர்த்தி செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு மூலம் முதுநிலைப் பட்டம்: அரசுப் பணியில் அமர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவு

  பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு (Preparative Exam) எழுதி எம்.ஏ. பட்டம் பயின்றவர்களை அரசுப் பணியில் அமர்த்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நுழைவுத் தேர்வு எழுதாமல் பட்டம் பெற்றவர்களை நிராகரித்தது சரிதான் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2008-ஆம் ஆண்டு குரூப் 2 வுக்கான அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தியது. அதில் பங்கேற்ற, பிளஸ் 2 படிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலைப் பட்டம் பெற்ற சிலரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

அவர்களை நிகராகரித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தங்களை அரசுப் பணியில் நியமனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் பி.ராமன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பிளஸ் 2 முடிக்காமல், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது.  மேலும், கடந்த 2009-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஒரு ஆணையில், பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றது செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், பிளஸ் 2 முடிக்காமல் குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பிளஸ் 2 முடிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்று குரூப் 2 தேர்வு எழுதியவர்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிராகரித்தது சரிதான். ஆனால், அரசாணை அடிப்படையில் பட்டப்படிப்பு செல்லாது என்பதை முடிவு செய்ய முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையில்தான் பட்டப்படிப்பு செல்லுமா செல்லாதா என்பதை முடிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி அதன் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேரலாம் என யுஜிசி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நுழைவுத் தேர்வு எழுதி பட்டம் பெற்றது செல்லும். எனவே நுழைவுத் தேர்வு எழுதி அதன் மூலம் முதுநிலைப் பட்டம் பெற்று, குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த வேண்டும். மேலும், மனுதாரர்களில் சிலர் நுழைவுத் தேர்வின் உண்மைச் சான்றிதழை சமர்ப்பிக்காமல், அதன் நகலை இணைத்துள்ளனர். அவ்வாறு நகல் இணைத்த மனுதாரர்கள் ஒரு மாதத்துக்குள் உண்மைச் சான்றிதழை தேர்வாணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் சான்றிதழைச் சரிபார்த்து அவர்களைப் பணியில் நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மே 5 கடைசி

கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான -நெட்- தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சேர முடியும். 2014 ஜூன் மாதத்துக்கான தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

   29-6-2014 அன்று இந்தத் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு, www.ugcnetonline.in, www.ugc.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். முக்கியத் தேதிகள்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும், வங்கி சலானை பதிவிறக்கம் செய்யவும் மே 5 ஆம் தேதி கடைசியாகும். சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) கட்டணம் செலுத்த மே 7 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் மற்றும் வருகை படிவத்தை பதிவிறக்கம் செய்ய மே 10 ஆம் தேதியும், ஒருங்கிணைப்பு பல்கலை.யில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 15 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர். 

1.KANYAKUMARI SLB Govt Hr Sec School Nagercoil -629 001 

2.TIRUNELVELI Sara Tucker Girls Hr Sec School, Palayamkottai, Thirunelveli-627 002 

3.THOOTHUKUDI Victoria Girls Hr Sec School, Thoothukudi- 628 002 

4.VIRUDHUNAGAR KVS(B) Hr Sec School, Virudhunagar-626 003  

5.RAMANATHAPURAM Municipal Girls Hr. Sec. School, Ramanathpuram-623501 

6.SIVAGANGAI Maruthu Pandiyar Nagar Govt Hr Sec School, Sivagangai-630 302 

7.THENI Nadar Saraswathi (B) Hr Sec School, Forest Rd, Theni - 625 531 

8 MADURAI O.C.P.M. Girls Hr. Sec. School, Thallakulam Madurai - 2 

9 DINDIGUL Our Lady Hr Sec School, Madurai Rd, Dindigul- 624 001 

10 KARUR Govt. Hr Sec School, Thanthonimalai, Karur - 639 007 

11 ERODE Govt (G) Hr Sec School, Near Paneer Selvam Park, Erode -638 001. 

12 NAMAKKAL Govt.Hr Sec School, Namakkal South, Auditorium, Moganur Rd, Namakkal - 637 001. 

13 TIRUPPUR Jaivai Girls Corporation Hr Sec School, Tiruppur - 641 602 

14 COIMBATORE & THE NILGIRIS Mani Hr Sec School, No 88 Netaji Rd, Papanaiken Palayam, Coimbatore - 641 037 

15 SALEM Saradha Balamandir Matric. Hr. Sec. School, Rajaji Road, Salem -7 

16 KRISHNAGIRI Govt (B) Hr Sec School, Gandhi Rd,Near Apsara Theatre, Krishnagiri -635 001 

17 DHARMAPURI Adhiyaman Govt (B) Hr Sec School, Dharmapuri - 636 701 

18 PUDUKKOTTAI Sri Bragadambal Govt. Hr Sec School Campus, Pudukottai-622 001. 

19 TRICHY ATMRCM Vasavi Vidyalaya Matric. Hr. Sec. School, No.11 Birds Road, Contonment, Trichy-620001

20 THANJAVUR & TIRUVARUR Sri Madha Matric. Hr. Sec. School, Near Kumbakkonam Bus Stand Kumbakkonam 

21 ARIYALUR & PERAMBALUR CSI Hr Sec School, Market St, Ariyalur- 621 704. 

22 NAGAPATTINAM Natarajan Damayandhi Hr Sec School, Velipalayam, Nagapattinum- 610 001 

23 VILLUPURAM Govt (G) Hr Sec School, Thir.Vi.Ka St, Villupuram-605 602 

24 CUDDALORE Sri Varatham Govt Girls Hr. Sec. School, Venugopalapuram Cuddalore-607001 

25 TIRUVANNAMALAI Gandhi Nagar Matric Hr Sec School, Kizhnachipattu, Thiruvannamalai-606 611 

26 VELLORE Govt. Muslim Hr Sec School, Annasalai, Vellore-632 001 

27 KANCHEEPURAM St.Mary's Girls Hr Sec School, Natham Post, Near Old Bus Stand, Chengalpattu- 603 002 

28 THIRUVALLUR Perunthalaivar Kamarajar Govt. (G) Hr Sec School, Venkatapuram, Ambattur-600 053 

29 CHENNAI Govt. Girls Hr. Sec. School, Ashok Nagar, Chennai - 83

தேர்தல் - 2014 சில முக்கிய குறிப்புகள்

Saturday, April 19, 2014

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

   சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. அந்நாளை ஒட்டி, ஆசிரியர் பணியை சிறப்பாக செய்பவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, செப்., 5ல், விருது வழங்கப்படுகிறது

. தேசிய விருதுக்கு உரிய ஆசிரியரை தேர்வு செய்ய, மத்திய அரசு சார்பில், மாநிலத்திற்கு ஒரு கல்வியாளர் நியமிக்கப்படுகிறார். இவர், மாநில குழுவுடன் சேர்ந்து, சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்புவார். பட்டியல் இறுதியானதும் பெயர் அறிவிக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டுக்கான விருது, வரும், செப்., 5ல் வழங்கப்பட உள்ளது. உத்தரகண்ட், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட, பல மாநிலங்களில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்திற்கான பட்டியல், இன்னும் வெளியாகவில்லை. கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர் பட்டியலை இறுதி செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம்.

மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், விரைவில், பட்டியல் வெளியாகும். தமிழக அரசு வழங்கும் விருதுக்கான தேர்வுப் பணி, ஜூனில் துவங்கும்' என, தெரிவித்தது.

எஸ்.எம்.எஸ்., வந்தால் ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்'

     'தேர்தல் பயிற்சிக்கு வரும்படி, ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தாலே, அவர்களை அனுப்ப வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அவர்களில் சிலர், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு, தேர்தல் பணி பயிற்சி வகுப்பிற்கு வரும்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.

ஆனால், விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர்கள், 'எழுத்து பூர்வமாக, கடிதம் வந்தால் மட்டும் அனுப்புவோம்; பணிக்கு வராவிட்டால், 'மெமோ' கொடுப்போம்' என, கூறுகின்றனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராவிட்டால், நடவடிக்கை எடுப்போம்' என, தேர்தல் அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும் போது,''எழுத்து பூர்வமான கடிதம் அனுப்ப தாமதமாகும் என்பதால் தான், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. எஸ்.எம்.எஸ்., வந்தவர்கள், தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வர வேண்டும். எஸ்.எம்.எஸ்., தகவலை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயிற்சி முழு நாள் நடைபெறுவதாக இருந்தால், மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

Wednesday, April 16, 2014

ஜூன் 16-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம

     வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்; மீதமுள்ள வகுப்புகளுக்கு ஜூன் 2-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்வுகள் நிறைவடைந்தன: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் புதன்கிழமையோடு நிறைவடைந்தன. ஓரிரு மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சித் தேதிகளும், தேர்வு தேதிகளும் குறுக்கிட்டுள்ளன

. இதனால், இந்த மாவட்டங்களில் மட்டும் வியாழக்கிழமையும் தேர்வு நடைபெறும். தேர்வுகள் முடிவடைந்தாலும், பள்ளிகள் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வழக்கமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றன. இந்தப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தொடக்கக் கல்வித் துறை:

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்பட உள்ளன. இந்தப் பள்ளிகளில் தேர்வுகள் அடுத்த வாரத்தில் தொடங்குகின்றன. வாக்குப்பதிவு தினத்தையடுத்து, ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தினங்கள் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

1 முதல் 4-ஆம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அந்த மாணவர்கள் மூன்றாம் பருவத் தேர்வை எழுதுவது அவசியம் இல்லை. இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடைகால விடுமுறை விடப்படுகிறது.

அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

    பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், இரு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டதற்காக, அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ல், பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் பகுதி, கேள்வி எண் 14ல், "ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம், 1/3 எனில், அந்த ஆடியின் வகை என்ன...' என, கேட்கப்பட்டது. இதற்கு, "குவிலென்ஸ்' என்பது விடை. ஆனால், "குழிலென்ஸ்' என்ற வேறொரு விடையும் உள்ளது. இந்த கேள்விக்கு, எந்த பதிலை எழுதி இருந்தாலும், அதற்கு, ஒரு மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இரு மதிப்பெண் பகுதி, தமிழ் வழி கேள்வி எண் 29ல், "வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை...' என்ற கேள்விக்கு, ஆங்கில வழி கேள்வித்தாளில், "பயோ - பியூல்' என, கேட்டு, தமிழ்வழி கேள்வித்தாளில், "உயிரி எரிபொருள்' என, கேட்காமல் பொதுவாக கேட்டுவிட்டனர். இதனால், மாணவர்கள், "பெட்ரோல், டீசல்' என, விடை எழுதினர். இதனால், மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், இந்த கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவு விட்டுள்ளதாக, பாட ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.