முதுநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்யலாம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
2014-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மார்ச் 22 ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மார்ச் 23 ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம். பிப்ரவரி 18 கடைசித் தேதி. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 20 கடைசித் தேதியாகும். இதுகுறித்த விவரங்கள் www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.