click below
Tuesday, November 05, 2013
TRB CUT OFF IN DETAILS
The Cutoff given by TRB is follows:
+2
Above 90%-10 mark
80 to 90 %- 8 mark
70 to 80% - 6 mark
60 to 70%- 4 mark
50 to 60% - 2 mark
UG
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
Below 50%- 10 mark
B.Ed
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
T.E.T
Above 90% - 60 mark
80 to 90% - 54 mark
70 to 80%- 48 mark
60 to 70%- 42 mark
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,
பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–
12–ம் வகுப்பு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்) 80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண் 70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண் 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண் 50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்
பட்டப் படிப்பு 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண் 50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண் பி.எட். படிப்பு 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
தகுதித்தேர்வு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண் 70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண் 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்
புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்
'ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, 7000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மாநில பதிவு மூப்புப்படி, 2009ம் ஆண்டில், 7,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2013 வரை, பணி மாறுதல் கலந்தாய்வு வாய்ப்பு அளிக்கவில்லை. அரசுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
"இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம்' சார்பில் பணிமாறுதல் கோரி, தனித்தனியாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட மாறுதல் கேட்டால், விதிகளுக்கு உட்பட்டு வழங்கலாம்' என, கடந்த செப்டம்பரில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. கோர்ட் உத்தரவின்படி, தமிழக அரசு இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், விரைவில் வெளியாகவுள்ளன. இதில், தேர்ச்சி பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் அளிக்கும் பட்சத்தில், மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விடும்.
இதனால், பல ஆண்டுகளாக போராடி பெற்ற கோர்ட் தீர்ப்பிற்கு, எந்த பலனும் இல்லாமல் போய் விடும் என்ற அச்சத்தில், 7,000 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக மாறுதல் இன்றி, 7,000 ஆசிரியர்கள் குடும்பத்துடன் தவிக்கின்றனர். 2012 ல் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 9,567 இடைநிலை ஆசிரியர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில் நியமனம் பெற்றனர். டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை, காலியான பணியிடங்களில் நியமித்தால், ஏற்கனவே தவிக்கும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், மேலும் பாதிக்கப்படுவர். டி.இ.டி., யில் தேர்ச்சி பெறுவோர் நியமனத்திற்கு முன், 2009 க்கு பின், நியமனம் பெற்ற எங்களுக்கு, சிறப்பு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆறாவது ஊதிய குழு பரிந்துரையின்படி, 7,000 ஆசிரியர்களின் அடிப்படை சம்பளமும் மாற்றியமைக்க, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராபர்ட் கூறினார்.
செவ்வாய் கிரகம் செல்ல 10 மாதங்கள் ஏன்?
"பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தை விட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் செவ்வாய் கிரகம் இருப்பதால், "மங்கள்யான்' செயற்கைகோள், செவ்வாய் கிரகத்தை அடைய, 10 மாதங்களாகும்,'' என, "அறிவியல்புரம்' இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறினார். "மங்கள்யான்' பயணம் குறித்து அவர் கூறியதாவது: பூமியில் இருந்து, நான்கு லட்சம் கி.மீட்டர் தூரத்தில் சந்திரன் உள்ளது. சொல்லப் போனால், பூமி என்ற பங்களாவின், "அவுட் ஹவுஸ்' போல சந்திரன் உள்ளது. ஆனால், இதைவிட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில், செவ்வாய் கிரகம் உள்ளது. பூமியும், செவ்வாய் கிரகமும், தனித் தனியான நீள் வட்டப் பாதையில், சூரியனை சுற்றி வருகின்றன.
சூரிய குடும்பத்தின் சுற்றுப்பாதையில், இந்த கிரகங்கள் சுற்றி வரும் வேகம், ஒரே சீராக உள்ளது. பூமியும், செவ்வாயும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், அருகில் நெருங்கி வரும். இதைக் கணக்கில் கொண்டே, "மங்கள்யான்' செயற்கைகோள், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுகிறது. இப்பணி, இந்திய விண்வெளி ஆய்வில், மிக முக்கியமான வெற்றி. பூமியும், செவ்வாய் கிரகமும் அருகில் இருக்கும்போது தான், குறைவான எரிபொருள் செலவில், செயற்கைகோளை அனுப்ப முடியும். மேலும், செயற்கைகோளுக்கும், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், தகவல் தொடர்பு சீராக இருக்கும். தூரம் அதிகரிக்கும் போது, தகவல் தொடர்பு சரியாக இருக்காது. எனவே, பூமியும், செவ்வாயும் அருகில் இருக்கும் காலத்தைக் கணக்கில் கொண்டு, "மங்கள்யான்' செயற்கைகோளை, தற்போது ஏவுகின்றனர
். பூமியின் சுற்று வட்ட பாதையை விட்டு வெளியேறும் வரை தான், செயற்கைகோளுக்கு எரிபொருள் தேவைப்படும். அதன்பின், ஆற்று நீரில் செல்லும் படகு போல, செயற்கைகோள் விண்வெளியில் மிதந்தபடி சென்று கொண்டு இருக்கும். பூமியும், செவ்வாய் கிரகமும் தனித் தனியான நீள் வட்டப் பாதையில், சூரியனை சுற்றி வருகின்றன. முதலில், பூமியின் சுற்று வட்டப் பாதையிலிருந்து வெளியேறி, செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றும் நீள் வட்டப் பாதைக்கு, செயற்கைகோளை கொண்டு செல்ல வேண்டும். அதன்பின்பே, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட சுற்று வட்ட பாதையில் செயற்கைகோளை சேர்க்க முடியும்.
பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கடக்க, 10 மாதங்களாகும். எனவே, "மங்கள்யான்' செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தை அடையும் காலத்தை, அது ஏவப்பட்ட நாளிலிருந்து, 10 மாதங்களாக கணக்கிட்டுள்ளனர்.இவ்வாறு, ராமதுரை கூறினார்.
டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4 சதவீதம் பேர் "பாஸ்!'
டி.ஆர்.பி., மூன்றாவது முறையாக, ஆகஸ்ட்டில் நடத்திய டி.இ.டி., தேர்வு முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். முந்தைய தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன.
தமிழகத்தில், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர் பணி), 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது), 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக இருந்தன. இரு வாரங்களாக, தேர்வு முடிவை, தேர்வர் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு, தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், 27,092 பேர், தேர்ச்சி பெற்றனர். வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதாலாக தேர்ச்சி பெற்றனர். கடந்த தேர்வில், 2.99 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்
TET Exam Paper II Results
Tamil Nadu Teacher Eligibility Test Result -2013
http://111.118.182.204/TET_Paper2_result/TET_Paper2_Result.aspx
TET exam result I Tamilnadu candites
Tamil Nadu Teacher Eligibility Test Result -2013
http://111.118.182.204/TET_Paper1_result/TET_Paper1_Result.aspx
Monday, November 04, 2013
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு
அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகள் எளிமையாகின்றன. மேலும், வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக வேலைகளை நிரந்தரமாக்கும் பணிகள் இனி விரைந்து மேற்கொள்ளப்படும்.
வாரிசுகளுக்குத் தரப்பட்ட தாற்காலிகப் பணியை வரன்முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் வாரிசுகளிடம் இருந்து 15 வகையான சான்றிதழ்கள் பெறப்பட்டன. வாரிசுகள் தற்போது பணிபுரியும் துறையின் உயர் அதிகாரியிடம் இந்தச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். இத்துடன், 18 வகையான பிரிவுகள் அடங்கிய ஒரு படிவத்தையும் சேர்த்துப் பெற்று அரசு பரிசீலனைக்கு அந்த அதிகாரி அனுப்பிவைப்பார்.
இவ்வாறு பலவகையான சான்றிதழ்களைத் திரட்டித் தரவேண்டியுள்ளதால் வாரிசுகளின் பணி நிரந்தரம் காலதாமதமாகிறது. இதைத் தவிர்க்கும்வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், கல்வி தகுதி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல்களை அனுப்பினால் போதும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சான்றிதழ்களுடன் வாரிசு பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிவிப்பதற்கான 18 பிரிவுகளைக் கொண்ட ஒரு படிவத்தையும் அரசுத் துறைகளின் தலைவரின் ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். பணிவரன்முறை எளிதாகும்:
சான்றிதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக கருணை அடிப்படையிலான பணிவரன்முறைகள் எளிதாக நடைபெறும் என பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்
பி.எப்., தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில், நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம், என, பி.எப்., ஆணையர் பிரசாத் கூறியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.எப்., தொகை முதிர்வு மற்று கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, ஐந்து நாட்களில் தீர்வு காணப்படுகிறது. அதிகபட்சமாக, 20 நாட்களில் தீர்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காமல், நிலுவையிலிருந்தால், சந்தாதாரர்கள், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களில், தேவையான தகவல்கள் இல்லாமல் இருந்தால், அவற்றை பூர்த்தி செய்தும் அளிக்கலாம். இவ்வாறு, பிரசாத் கூறியுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை, தொழில் படிப்பு, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பு குறித்து விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகிய தகவல்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 07ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்கள் பெற www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Sunday, November 03, 2013
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~
*மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~06.11.2013
உயர் தொடக்கநிலை~08.11.2013
*மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~12.11.2013
உயர் தொடக்கநிலை~19.11.2013
*வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~
தொடக்க நிலை ~16.11.2013
உயர் தொடக்கநிலை~23.11.2013
courtesy:tntam
Saturday, November 02, 2013
மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 1268 துவக்கப்பள்ளிகளுக்கு "பூட்டு'
"அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இருக்காது' என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். தமிழக அரசு, சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது; இருந்தும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோகளின் ஆங்கிலக் கல்வி மோகமே, இதற்கு காரணம். இதனால், அரசுப்பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள, 23,576 துவக்கப்பள்ளிகளில், 1268 பள்ளிகளை மூட, அரசு முயற்சித்து வருவதாக, ஆசிரியர் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில்,"முதல் கட்டமாக, 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இப்பள்ளிகளில், தற்போது, இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு மேலாளர், இரண்டு ஆயாக்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளிகளை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு, மூன்று முதல், நான்கு பள்ளிகள் மூடப்படும். இதே நிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே, இருக்காது' என்றனர்.
Friday, November 01, 2013
Thursday, October 31, 2013
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும், வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும், இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
courtesy:tnkalvi
Wednesday, October 30, 2013
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான "நெட்' தகுதி தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்துகிறது. டிசம்பர் 29-ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்., 30 கடைசித் தேதி. ஆன்-லைனிலிருந்து பதிவிறக்கம் செய்த வங்கி செலான் மூலம் ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவ., 2 கடைசித் தேதி.
பூர்த்தி செய்த விண்ணப்பம், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு, வருகை ரசீது ஆகியவற்றை நவம்பர் 5 முதல் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 9 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களை www.ugcnetonline.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இன்று(அக்.,31) கடைசி நாள்.
வாக்காளர் அடையாள அட்டை தற்போது "லேமினேட்' செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.