இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 22, 2013

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

  பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளும் தலா 3 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகள் 5 ஆயிரம் ரூபாய் டி.டியாக எடுத்து சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இந்த டி.டிக்களை அனுப்ப வேண்டாம் என்றும், இக்கட்டணத்தை பள்ளி மானிய தொகையில் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் கமிஷன் தொகையுடன் டி.டி எடுத்தவர்கள் மீண்டும் மானிய தொகையில் செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் இதுபோன்ற குளறுபடிகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள்

    பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல் மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது. "ஆன் லைன்" மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்படி, 1 ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, நிரந்தர அடையாள எண் வழங்கப்படும். வேறு பள்ளிக்கு மாறினாலும், அடையாள எண்ணை காட்டி, தகவல்களை உறுதி செய்யலாம்.

இதற்காக, பதிவு செய்யப்பட்ட விபரங்களை, மீண்டும் சரி பார்த்து இறுதி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இப்பணிகள் நடக்கின்றன.

Saturday, September 21, 2013

Ele director proceedings,Avoid cell phones in schools

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: அக்டோபர் 1 முதல் இணையதள மையங்களில் விண்ணப்பிக்கலாம்

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் இணையதள மையங்களின் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இணையதள மைய உரிமையாளர்களுக்கான பயிற்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள பொன்விழா அரங்கில் நடைபெற்றது. இந்தப் பயிற்சியை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இணையதள மையங்களை நடத்தும் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். மேலும், இதில் 21 உரிமையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பிரவீண் குமார் பேசியது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்களிடம் இணையதள வசதி இல்லாததால் குறைவானவர்களே இணையதளத்தை பயன்படுத்தினர். கேரள மாநிலத்தில் 75 சதவீதம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். ஆந்திரத்தில் 40 சதவீதம் பேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழகத்தில் 7.8 சதவீதம் பேர் மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள 944 இணையதள மையங்களிலும், சென்னை மாநகராட்சியில் உள்ள 86 இணையதள மையங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தொடங்கவுள்ளது.

இதன்படி பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் போன்றவற்றுக்கு அருகில் உள்ள இணையதள மையங்களுக்கு சென்றாலே போதும். பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கு தலா ரூ. 10, பிரிண்ட் எடுக்க ரூ. 3 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புப் பலகை, அனுமதி பெறும் அனைத்து இணையதள மையங்களிலும் வைக்கப்படும். இணையதள மையங்களில் விண்ணப்பிக்கும் நபர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வந்து விவரங்களை சரி பார்ப்பார்கள். விண்ணப்பிக்கும் முறையில் புகார்கள், விவரங்கள் தேவைப்பட்டால் 1950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றார்.

கணினி வசதி உள்ளவர்கள் இணைய தள மையங்களுக்குச் செல்லாமல் தாங்களே நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணையதள முகவரி. www.elections.tn.gov.in www.eci.nic.in ்

50 நடுநிலை பள்ளிகள் தரம் உயர்வு: தாமத நடவடிக்கையால் பலனில்லை

      மாநிலம் முழுவதும், 50 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த காலம், கடந்த நடவடிக்கையால், 9, 10ம் வகுப்பில், மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, "50 நடுநிலைப் பள்ளிகள், நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும்' என்ற அறிவிப்பை, முதல்வர், ஜெயலலிதா வெளியிட்டார். கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. காலாண்டு தேர்வும் முடிந்துவிட்டது. கல்வி ஆண்டு துவக்கமான, ஜூனில் அறிவித்திருந்தால், 50 நடுநிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர், தொடர்ந்து, அதே பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்திருப்பர்.

ஆனால், அரசின் காலம் கடந்த நடவடிக்கையால், எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும், வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்டு உள்ள, 50 நடுநிலைப் பள்ளிகள் பட்டியலை, தமிழக அரசு, வெளியிட்டு உள்ளது. மாவட்டதிற்கு, ஒன்று அல்லது இரு பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. ஒரு பள்ளிக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர் வீதம், 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அவை, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அரசுக்கு, ஆண்டுக்கு, 7.41 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும், பிற வகுப்பு மாணவர்களுக்காக, ஏற்கனவே உள்ள நடுநிலைப் பள்ளிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட, ஆரம்ப பள்ளிகளாக, நிலை குறைக்கப்படும் என்றும், அரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, அதே பள்ளி வளாகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புகளுடன், ஆரம்ப பள்ளி தனியாக செயல்படும். ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கொண்ட வகுப்புகள், உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படும்.

யார் தலைமை ஆசிரியர்; இயக்கங்களிடையே போட்டி: சம்பள உயர்வுக்கு போராடுவதில் சிக்கல்

   யார் தலைமையில் செயல்படுவது என, ஆசிரியர் இயக்கங்களிடையே, போட்டா போட்டி நிலவுவதால், ஊதிய உயர்வு கேட்டு, தமிழக அரசுக்கு எதிராக போராடுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 28,593 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், 85,324 ஆசிரியர்களும், 9,259 நடுநிலைப் பள்ளிகளில், 66,056 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, 1988ம் ஆண்டில் இருந்து, 21 ஆண்டுகளாக, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. 2009ல், 6வது ஊதியக் குழுவில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியமாக, 9,300 ரூபாயும், தர ஊதியமாக, 4,200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தமிழக ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியமாக, 5,200 ரூபாயும், தர ஊதியமாக, 2,800 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆசிரியர்களின் எதிர்ப்பால், மீண்டும் தனி ஊதியமாக, 750 ரூபாய் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், தமிழக ஆசிரியர்களுக்கு, 8,550 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் வெளியான பரிந்துரையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, 1 ரூபாய் கூட ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (டிட்டோ-ஜாக்) அமைத்து, அரசுக்கு எதிராக போராட, ஆசிரியர் இயக்கங்கள் திட்டமிட்டன.

ஆனால் தமிழகத்தில், தொடக்கப் பள்ளி கூட்டணி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆசிரியர் மன்றம், ஆசிரியர் கூட்டணி என, ஏராளமான ஆசிரியர் சங்கங்கள் இருப்பதால், யார் தலைமையில் போராடுவது என, அச்சங்கங்களிடம் போட்டா போட்டி நிலவுகிறது. இதனால் சமீபத்தில், சென்னையில் நடந்த ஆசிரியர் சங்கங்களுக்கான, ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கூட, சில முக்கிய சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து, ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

50 நடுநிலை பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு -dinamalar

  தமிழத்தில் உள்ள 50 நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த உத்தரவில், "2013-14ம் கல்வி ஆண்டில், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு உயர்நிலை பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம், 50 பணியிடங்கள் மற்றும், பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் என, மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்,' என கூறப்பட்டுள்ளது

Friday, September 20, 2013

Self finance &nursery format 2

Self Finance schools Format 1

அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி: ஜெ. உத்தரவு

   வண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக, முன்பருவக் கல்வி போதனை நல்ல தரமுள்ள வகையில் அளிக்கப்படவேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு பல வண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில் (Foam Board) பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணி முதற்கட்டமாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர். அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 முதல் 60 மாதம் வரை வயதுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு, எடை / வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன.

மகப்பேறு காலத்தில் கரு வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களின் உடல் எடை அதிகரிப்பை கண்காணிப்பது மிகவும் அவசியம். மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் எடை எடுத்த பின் தாய் சேய் நல அட்டை /வளர்ச்சி கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார

பகுதி நேர ஆசிரியர்களுக்கு செப்டம்பர் சம்பளம் குறைப்பு

     பகுதி நேர ஆசிரியர்களை, "காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டாம்,' என்ற வாய்மொழி உத்தரவால், செப்டம்பரில் 25 சதவீதம் சம்பளம் "கட்' டாகும், என்ற கலக்கத்தில் உள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், விவசாயம், கட்டடக் கலை உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாதம் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக, 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களில், சிறப்பு வகுப்புக்கள் எடுக்கலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த காலங்களில் பணிக்கு வந்துள்ளனர். தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வு செப்., 21ல் முடிவடைகிறது. தேர்வு விடுமுறைக்கு பின், அக்., 3 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறையில், பகுதி நேர ஆசிரியர்கள், பணிக்கு வர வேண்டாம், என வட்டார வள மைய அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.

இதனால், 12 அரை நாட்களுக்கு பதிலாக, 9 அரை நாட்கள் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு, 5000 ரூபாய் சம்பளத்தில் 1,300 ரூபாய் குறைவாக கிடைக்கும். இந்த உத்தரவால், பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஆரமப நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்,ஆசிரியர் மொபைல் போன் பேசத்தடை


     இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி வளாகத்தில், மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கவனம் திசை திரும்புகிறது. எனவே, மாணவ, மாணவியர், பள்ளிக்கு, மொபைல்போன் கொண்டு வராமல் இருக்க, பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர், பெற்றோருக்கு, உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கும் தடை:

வகுப்பு அறைகளில், ஆசிரியர், மொபைல்போனை பயன்படுத்தக் கூடாது; பாடம் நடத்தும்போது, மொபைல் போனை, "சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தகவல் தெரிவித்து,

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள்- தாய்மார்களுக்கு ரூ 7.11 கோடி செலவில் எடைபார்க்கும் கருவிகள்-ஜெயலலிதா உத்தரவ

அங்கன்வாடி மையங் களில் பயன்பெறும் குழந்தை கள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக, முன்பருவக் கல்வி போதனை நல்ல தரமுள்ள வகையில் அளிக் கப்படவேண்டும்.  இதனைக் கருத்தில் கொண்டு பல வண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில்  பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். 

இப்பணி முதற்கட்ட மாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்.  அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தை கள், வளர் இளம்  பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தை களுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார்.  இதற்காக 7 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார். தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டு உள்ளது.

Thursday, September 19, 2013

Polling Personal Format

Polling Personal Format

பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30 வரை அனுமதி B

பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இப்போதுள்ள நடைமுறைகளின்படி, ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டு இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

50 சதவீதம் மதிப்பெண் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் எல்காட் நிறுவனம் நிரப்பியது. இந்த நிலையில், 2006–ம் ஆண்டு 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறப்பு தேர்வில் ஏற்கனவே ஆசிரியராக உள்ளவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. அனுமதிக்க வேண்டும் இதன் அடிப்படையில், 2008–ம் ஆண்டு நடந்த சிறப்பு தகுதி தேர்வில் 894 கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், 2010–ம் ஆண்டு நடந்த தேர்வில் 125 ஆசிரியர்களும், 2012–ம் ஆண்டு நடந்த தேர்வில் 15 ஆசிரியர்களும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு உத்தரவினை பிறப்பித்தார். அதில், ‘தகுதி தேர்வு மூலம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை, ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் அப்பீல் செய்தனர். உரிமை இல்லை இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணிநீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது. இரண்டு முறை நடத்தப்பட்ட சிறப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த பின்னர், தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று கோருவதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் தற்காலிகமாகக் கூட பணியில் தொடரகூடாது.

அதேநேரம் ஏற்கனவே பணியில் இருந்து சிறப்பு தேர்வில் தோல்வியடைந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பெயர்களை மீண்டும் வேலைவாய்ப்பு பதிவுவேட்டில் பதிவு செய்யவேண்டும். அப்போது, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவுமூப்பை வழங்கவேண்டும். பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதேபோல, அரசு எடுத்துள்ள கொள்கை முடிவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம். அந்த தேர்வில், ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் கலந்து கொள்ளலாம். அப்போது வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அந்த விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில் அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பவேண்டும்.

முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது?

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.

இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க, அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில், விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.

எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது.