இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 13, 2013

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார். அதில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. எனவே பள்ளி கல்வித்துறையின் செயலாளர் மற்றும் இயக்குனர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் விசாரித்தனர். கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பள்ளி கல்வித்துறைச் செயலாளர் சபீதா அறிக்கை தாக்கல் செய்தார். பணி நியமன நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ளும் என்று அதில் கூறியிருந்தார். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியலைப் பெற்று, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 1:5 என்ற சதவீதத்தில் நிரப்ப வேண்டும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.இந்த நிலையில் நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மாணவர்களுக்கு ஓவிய போட்டி: செப்.,30க்குள் முடிக்க உத்தரவு

மாநில ஓவியபோட்டிக்காக, மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிகளில் போட்டிகள் நடத்தி, செப்., 30க் குள் முடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் மூலம், 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை. ஓவியம் வரைய ஏ 4 சீட், சாதாரண தாள்கள், கலர் மற்றும் பெயின்ட் உபயோகித்து கொள்ளலாம்.

ஓவியத்திற்கு பின்புறம் மாணவரின் பெயர், வகுப்பு, பிரிவு, பள்ளி விலாசம், தந்தை/ தாய் பெயர், பள்ளி தொலைபேசி எண் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், 3 சிறந்த படைப்புக்களை தேர்வு செய்து, ஓவியத்துடன், தேசிய நீர்வள வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளை , செப்., 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதில், தேர்வு செய்யப்படும் 50 பேருக்கு, சென்னையில் நவ., 9 ல் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 உயர்வு : நள்ளிரவு அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால், 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.63 உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று  அறிவிப்பு வெளியிட்டன. வரிகளுடன் சேர்த்து, 2 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வு இன்று  நள்ளிரவு அமலுக்கு வருகிறது.

Directorate of Employment and Training Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (August - 2013)

சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித் திட்டம்!

   மத்திய பொதுப் பணியாளக்ர தேர்வாணையம், பணியாளர் தேர்வானையம் மற்றும் மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வுகளை முடித்திருக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.குடும்ப மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.நிதியுதவி விகிதமானது கெஜட் பதவிக்கும் மாதம் ரூ.50,000/- மற்றும் கெஜடட் சாராத பதவிக்கு மாதம் ரூ.25,000 /- என இருக்கும்.திட்டத்தின் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தின் மாதிரி இந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.minorityaffairs.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வரையறுக்கப்பட்ட விண்ணப்பத்தை முறையாக நிரப்பி விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து, துணைச் செயலாளர் அறை எண்: 1130, சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சகம், பார்யவரன் பவன், 11வது தளம், சிஜிஓ வளாகம், லோடி சாலை, புது டெல்லி - 110003 என்ற முகவரிக்கு அனுப்பவும்.மேலும் இவ்விண்ணப்பம் செப்., 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது

பள்ளிகளில் மாணவ – மாணவிகள் இப்பொதெல்லாம் அதிக அளவில் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் . இதனால் படிக்கும் கவனம் சிதறி விடுவதாக கல்வித்துறை ஏற்கனவே செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது . வகுப்பில் பாடம் நடக்கும் போது எஸ்.எம்.எஸ் அனுப்புவது , ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பேசுவது , விலையுரந்த கேமரா செல்போன்களை வைத்து போட்டு எடுத்துக் கொள்வது போன்றவைகளால் மிகச் சாதாரணமாக அழிவு பாதை நோக்கி மாணவர்கள் செல்கிறார்கள் . இதனால் இளம் பருவத்தினர் தவறான பாதையை நோக்கிப் போக இந்த செல்போன்களால் அதிக வாய்ப்பு இருக்கிறதென்று கல்வித் துறை கடுமையான சட்டத்தை இப்போது கொண்டுவந்துள்ளது .

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடை விதித்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிகள் அனைத்துக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன் கொண்டு வருவதாக புகார் வந்தால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் எந்த ஒரு மாணவ, மாணவியும் செல்போன் கொண்டு வரக்கூடாது. அவ்வாறு மீறி கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் செல்போனை ஆசிரியர் வாங்கி வைத்துக் கொண்டு எச்சரித்து வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு செல்லும்போது வழங்குவார்.

இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார் .

Thursday, September 12, 2013

புதிய கேள்வித்தாள் குறித்து சி.இ.ஓ., முடிவெடுக்கலாம்

   மழை காரணமாக, குறிபிட்ட சில மாவட்டங்களில், விடுமுறை அறிவித்தால், அந்த மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கேள்வித்தாள் தயாரித்து, தேர்வை நடத்துவது குறித்து, சி.இ.ஓ.,க்களே முடிவெடுத்து, செயல்படுத்தலாம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களில், விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.

இதனால், மாவட்டங்களுக்கு, கலெக்டர்கள், விடுமுறை அறிவிக்கின்றனர். தற்போது, பள்ளிகளில், அனைத்து வகுப்புகளுக்கும், காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில், பிற வகுப்புகளுக்கான தேர்வு, பெரிய பிரச்னையை ஏற்படுத்தாது என்றாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வில், பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு, மாநில அளவில், பொதுத் தேர்வாக நடப்பதால், ஒரு மாவட்டத்தில், விடுமுறையும், பக்கத்து மாவட்டத்தில், தேர்வு நடப்பதுமாக இருக்கிறது. இதனால், விடுமுறை விடப்படும் மாவட்டங்களில், மீண்டும், புதிய கேள்வித்தாளைத் தயாரித்து, தேர்வை நடத்த வேண்டிய நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளனர். எனினும், இந்த விவகாரத்தில், பள்ளி கல்வித் துறையிடம் கேட்க வேண்டுமா, தேர்வுத் துறையிடம் கேட்க வேண்டுமா என, தெரியாமல், தவித்து வருகின்றனர்.

இந்த குழப்பம் குறித்து, தேர்வுத் துறை வட்டாரம் அளித்த விளக்கம்: எங்களிடம், தேவையான அளவிற்கு, வெவ்வேறு கேள்வித்தாள்கள், தயாராக உள்ளன. சி.இ.ஓ.,க்கள், எங்களிடம், புதிய கேள்வித்தாளைக் கேட்டால், வழங்குவதற்கு தயாராக உள்ளோம். அவர்களாகவே, புதிய கேள்வித்தாளைத் தயாரித்தும், தேர்வை நடத்திக் கொள்ளலாம். அதில், எந்த பிரச்னையும் கிடையாது.இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 குறைகிறது!

கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்ததோடு, பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வந்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கினர். இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததோடு, கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு வரும் 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஒரு நாள் தங்கி ஆண்டாய்வு செய்ய உத்தரவு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது வழக்கம்.

இப்போது விரைவில் ஆண்டாய்வு தொடங்கவுள்ள நிலையில் ஆண்டாய்வு செய்வது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''ஒவ்வொரு யூனியனிலும் வாரத்திற்கு 2 பள்ளிகள் வீதம் ஆண்டாய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் ஒரு நாள் முழுவதும் (பள்ளி வேலை நேரம்) தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கல்வி தரம் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சிறப்பாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளியில் மாணவர்களிடம் 2 மணி நேரம் கலந்துரையாட வேண்டும். இலவச சைக்கிள், இலவச சீருடை உள்பட அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க கூடிய திறந்த வெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். தொடர்ந்து அந்த குறைகள் நீக்கப்பட்டதா என்பதை கண்காணிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழையால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசித் தேர்வுக்கு பின் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 11, 2013

AEEO க்களின் பணிகள் குறித்து தொடக்ககல்வி இயக்குநரின் கடிதம்

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும், குறைதீர்க்கும் முகாம் நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

  பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும், அரசு மற்றும் நிதியுதவி பெறும் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய, பண, பணி மற்றும் இதர பலன்களை, உரிய நேரத்தில் பெறவும், நிலுவைகளை உடனுக்குடன் பெற்று, பணி தொய்வடையாமல் இருக்கவும், அனைத்து கல்வி அலுவலகத்திலும், சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

இதன்படி, தொடக்கக் கல்வித் துறையில், மாதத்தின் முதல் சனிக்கிழமை, உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும், இரண்டாம் சனிக்கிழமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மூன்றாவது சனிக்கிழமை, தொடக்கக் கல்வி இயக்குனரகம் என்றும், பள்ளிக் கல்வித் துறையில், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், இயக்குனரகம் என, மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகள், மாநில அளவில் தீர்க்கும் வகையில், இம்முகாம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் இருந்த இம்முகாம்களில், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தில், ஆசிரியரல்லாத பணியாளர்களும் கலந்து கொள்ளலாம் என, உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் நடக்கும் குறைதீர்க்கும் முகாம் நடைமுறைகளையே, இவர்களுக்கும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

   இந்த திருத்த பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தில் நடக்கிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருத்தபணிகள், விண்ணப்பங்கள், அடிக்கடி ஏற்படும் பிழைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், இந்த பயிற்சியை அளிப்பர். அக்.,1ல் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை, அக்.2, ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அந்த கிராமத்தில் பதிவு செய்த வாக்காளர் பட்டியலை பெயர் வாரியாக பொதுமக்கள் முன்னிலையில் படித்து, திருத்தம் செய்யவும் கூறப்பட்டுள்ளது.

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டுத் தேர்வு, கடைசி தேர்வுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருவதால் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 10, 2013

47 கேள்விகளில் தவறு தமிழ் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை

   தமிழகத்தில் காலியாக உள்ள 605 தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான தேர்வு ஜூலை 21ல் நடந்தது. தேர்வின் போது, ஏ, பி, சி, டி என நான்கு பிரிவு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் பி பட்டியலில் இருந்த 150 கேள்விகளில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. இதனால், கேள்வியின் அர்த்தம் மாறியிருந்தது. விடைகளிலும் பிழை காணப்பட்டது.கேள்வித்தாளில் இருந்த தவறு குறித்து தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன்.

அவர் தவறை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, பிழையுள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கவும், என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நேரத்தில் இதுபோன்ற தவறுகளுடன் கேள்வித்தாள் தயாரித்ததை ஏற்க முடியாது. இதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது கவனம் செலுத்தாமல் கேள்வித்தாள் தயாரித்தது தவறு. 47 கேள்விகளில் தவறு இருந்துள்ளது. இதை ஏற்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் செப். 16ல் நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை காலை வெளியீடு

பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் பலர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவுகள், நாளை காலை, 10:30 மணிக்கு, தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், பழைய மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 16ம் தேதி முதல், 18ம் தேதி வரை, சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான, வங்கி சலானை, கண்டிப்பாக கொடுக்க வேண்டும் எனவும், தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கோளாறு : பட்டதாரிகள் தவிப்பு

 துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங் களூக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.  அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி முதல் விண்ணபிக்கலாம் என்று  டி.என்.பி.எஸ்.சி  அறிவித்திருந்தது. கல்வித்தகுதி:

தமிழகத்தில் பட்டதாரிகள் அனைவரும் விண்ணபிக்கலாம் என்பதால்  ஆர்வத்துடன் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் இன்று காலை முதல் டி.என்.பி.எஸ்.சி இணை யதளத்தில் விண்ணப்பம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்.  சர்வர் கோளாறு என்று காரணம் கூறப்படுகிறது.  இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று தெரிவிக்கிறார்கள்.

Monday, September 09, 2013

திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தந்தை இறந்து விட்டால், கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை வழங்கவேண்டும். இதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தந்தை மரணம் வேலூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தந்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். பணியில் இருந்தபோது, 2011–ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜெயலட்சுமி மனு அனுப்பினார்.

இவரது மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், ‘தந்தை மரணமடையும்போது, ஜெயலட்சுமிக்கு திருமணமாகி விட்டது. எனவே அவருக்கு வேலை வழங்கமுடியாது’ என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– தந்தை இறந்து விட்டால், திருமணமான மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. அதனால், திருமணமான மகளுக்கு வேலை வழங்க முடியாது என்று அதிகாரிகளால் கூறமுடியாது. பாகுபாடு கூடாது 2007–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின்படி, வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்கவேண்டும். இதில், மகன் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்று இல்லை.பெற்றோரை பாதுகாப்பது மகன், மகள் ஆகியோரது கடமை என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அங்கு பாலியல் ரீதியான பாகுபாடு பார்க்கப்பட வில்லை. எனவே தந்தை இறந்தால், திருமணமான மகளும் கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உள்ளது. இதில் மகள், மகன் என்ற பாகுபாடு பார்க்க கூடாது.எனவே விஜயலட்சுமிக்கு கருணை அடிப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலை வழங்கவேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Saturday, September 07, 2013

இணையதளத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

கடந்த ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித் தேர்வை எழுதி, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று முதல், 10ம் தேதி வரை, www.examsonline.co.in என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ஜூன், 2013ல் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள, டி.எம்.ஆர்., கோடு எண்களை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம்.

மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, விரைவில், மறுகூட்டல் முடிவு அறிவிக்கப்படும். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், www.tndge.in என்ற இணையதளத்தில், இன்று (8ம் தேதி) முதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி, 11, 12 ஆகிய தேதிகளில், சி.இ.ஓ., அலுவலகங்களில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இநத் தகவலை, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Know Your CPS detail

Accountant General (A&E), Tamil Nadu
click below

http://www.agae.tn.nic.in/