click below
Sunday, July 28, 2013
Saturday, July 27, 2013
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பல வருடங்களாக நடந்தது. பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்தவர்கள் முதலில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் 35 சதவீதம் மார்க் வரை எடுத்தவர்களும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் பி.எட். படிக்காதவர்கள்.
இந்த நியமனத்தை எதிர்த்து பி.எட். படித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், பி.எட். படிக்காமல் பணிபுரியும் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பணி நீக்கம்
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு
அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி வெளியிட்ட செய்தி: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதுபோல் 2013-14 கல்வியாண்டு கலந்தாய்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு
பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் உதவி பெறும், பள்ளிகளில், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், நலிவடைந்த பிரிவினர் உட்பட 20 உறுப்பினர் கொண்ட பள்ளி மேலாண்மை நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாதந்தோறும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி, அறிக்கையை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு அனுப்ப வேண்டும்.
பல பள்ளிகளில், இந்த கூட்டம் நடத்தப்படாமல், நடத்தியதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, கல்வித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்: பள்ளி மேலாண்மை குழு கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அது குறித்த அறிக்கையை, வட்டார வளமையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.கூட்டம் நடத்தவில்லை,எனில் அது குறித்த தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், கூட்டம் நடந்தது குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாதத்தின் முதல் 5ம் தேதிக்குள், அந்த அறிக்கையை, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Friday, July 26, 2013
ஆசிரியர் கூட்டணிஆர்ப்பாட்டம்
்:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணி சார்பில், அரண்மனைப்புதூர்மாநகராட்சி பள்ளி முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிவகாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி துணை செயலாளர் காளீஸ்வரி, வட்டார செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.
ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மூன்று நபர் குழு வெளியிட்ட அறிக்கையில், இடைநிலை பள்ளி ஆசிரியர் களுக்கு பயனளிக்கும் எந்தஅறிவிப்பும் இல்லாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ@த @காரிக்கையை வலியுறுத்தி, பொங்கலூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டார பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, வட்டார செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 47 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது
ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு இன்று மாலை 25 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 47 அரசாணைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லை. இதுவரை மொத்தம் 75 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Thursday, July 25, 2013
தமிழகம் முழுவதும் மறியல் 1,500 அரசு ஊழியர்கள் கைது
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் நடந்தது. சென்னையில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் எழிலகம் முன்பு மறியல் செய்ய முயன்ற 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை ரயில்வே சந்திப்பில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 95 பெண்கள் உள்பட 215 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல், தூத்துக்குடியில் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 210 பேர், கோவையில் மாவட்ட தலைவர் சிவஜோதி தலைமையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு மறியல் செய்ய முயன்ற 243 பேர், திருவண்ணாமலையில் தமிழ்நாடு நில அளவை சங்க மாநில தலைவர் ஆர்.பழனி தலைமையில் மறியல் செய்த 350 பேர் என மாநிலம் முழுவதும் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி கல்வித்துறையில் 17 அலுவலர்களுக்கு பதவி உயர்வு
பள்ளிக் கல்வித்துறையில், 17 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றுள்ளனர். கல்வித்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பணியிடங்கள், அதிக அளவில் காலியாக இருந்ததால், கல்விப்பணி பாதிக்கப்படுவதாக, பல்வேறு சங்கங்கள் புகார் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், 45 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர். அதுபோல், மாவட்ட கல்வி அலுவலர்களாக உள்ள, 17 பேர், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர்.
இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. கோவை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த, பாலமுரளி, நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருச்சி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மதிவாணன், அரியலூர் மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சுகன்யா, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பள உயர்வில் பெரிய மாற்றம் இல்லை: ஆசிரியர்கள் கருத்து
"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
"பத்து ஆண்டு, 20 ஆண்டு பணி முடித்த, தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு பெற, தர ஊதியம் உயர வேண்டும். இந்த தர ஊதிய அளவில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, கல்விப்படி ஆகியவற்றில், மாற்றம் வரும் என, எதிர்பார்த்தோம். அதுபோல், இந்த படிகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் தர ஊதியம், 4,700 ரூபாயாக, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவரின் கீழ் வேலை பார்க்கும் கண்காணிப்பாளரின் தர ஊதியம், 4,800 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களின் தர ஊதியம், 4,900 ரூபாயில் இருந்து 5,100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அளவில், தர ஊதியம் உயர்த்தப்பட்டபோதும், இதை, ஆசிரியர்களுக்கு உயர்த்தவில்லை. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 உடனடி தேர்வு 20.5 சதவீதம் பேர் "பாஸ்'
பிளஸ் 2 உடனடித் தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்று, அதே கல்வியாண்டில், உயர்கல்வியை தொடரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த தேர்வுக்கு தயாராக, போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், மாணவர்கள், தேர்வை சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால், தேர்ச்சி சதவீதம், பெரிய அளவிற்கு உயரவில்லை. ஒவ்வொரு முறையும், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான மாணவர்கள், தேர்ச்சி பெறுவர். இந்த முறை, பிளஸ் 2 உடனடித் தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். 66,576 மாணவர்கள், தேர்வெழுதியதில், 13,629 மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்த, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆனதாகவும், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உடனடித் தேர்வு தேர்ச்சி சதவீதம், படிப்படியாக குறைந்து வருவதால், இத்திட்டம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது
. உடனடித் தேர்வு நடந்த இரு மாதங்களில், செப்டம்பர், அக்டோபரில், தனித்தேர்வு வருகிறது. பொதுத்தேர்வுக்குப் பின், செப்டம்பர், அக்டோபர் தேர்வை சந்திக்க, போதிய கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, July 24, 2013
பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் டி.சபீதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– மீண்டும் இடமாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக (முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்து) பணியாற்றி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏற்கனவே மாற்றப்பட்ட ஆர்.பூபதி தற்போது திருச்சி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (அனைவருக்கும் கல்வி திட்டம்–எஸ்.எஸ்.ஏ.) நியமிக்கப்படுகிறார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்து விருதுநகர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) முன்பு மாற்றப்பட்ட கே.செல்வகுமார் தற்போது திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்பட்டுள்ளார். திருச்சி–வேலூர் திருச்சி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) வி.ஜெயக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார்.
வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) ஆர்.மகாலிங்கம் மாற்றப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் பொறுப்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.வி.செங்குட்டுவன் இடமாற்றம் செய்யப்பட்டு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக (எஸ்.எஸ்.ஏ.) பணிஅமர்த்தப்படுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக "புரமோஷன்'
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர். பள்ளி கல்வித் துறையில், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், அதிகளவில், பல மாதங்களாகக் காலியாக இருந்து வந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்தன.
இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேருக்கு, பதவி உயர்வு வழங்கி, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், 12 பேர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 33 பேர், பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ், மாவட்ட அளவில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஐந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு, மாற்றப்பட்டு உள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்குள், காலியாக உள்ள, 17 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின், இணை இயக்குனர்கள் பதவி உயர்வு, இயக்குனர் பதவி உயர்வு உத்தரவுகளும் வெளியாகும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் நாளை முடிவு வெளியீடு
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு, நாளை காலை, 10:30 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுத் துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவிற்குப் பின், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள், 26ம் தேதி (நாளை) காலை, 10:30 மணிக்கு, www.dge.tn.nic.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். கட்டணத்தைச் சரியாகச் செலுத்தி, அதன் விவரங்கள், தேர்வுத் துறையால் பெறப்பட்ட மாணவர்களின் முடிவுகள் மட்டும், முதல்கட்டமாக வெளியிடப்படுகிறது.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், ஆக., 5 முதல், 8ம் தேதி வரை, தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, பழைய மதிப்பெண் சான்றிதழைகளை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். முடிவு கிடைக்காத மாணவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதின் பின்புறம், பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, "இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), தேர்வுத் துறை இயக்குனரகம், சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.
அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறையாக கண்காணிக்க உத்தரவு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
""அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதி வேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், உரிய நேரத்திற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களா, என கண்காணிக்க வேண்டும். தாமதமாக வரும் ஆசிரியர்களை, வருகை பதிவில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது. 6, 9ம் வகுப்புகளில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான ("பிரிட்ஜ் கோர்ஸ்' ) பயிற்சிகளை துவக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள், கோர்ட் வழக்கு சார்ந்த ஆவணங்களுக்கு உரிய நாட்களில் பதில் தர வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை உடல், மன, சமுதாய ரீதியாக நல்வழிப்படுத்தவேண்டும். பாடம் நடத்தும்போதே, பொது அறிவு, நாட்டுநடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற சிறந்த ஆற்றல்களை வளர்க்கவேண்டும்
. தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவற்றை, இசை ஆசிரியர் களை கொண்டு, பாட வைத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி தேவராஜன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது thanks tnkalvi
>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
>தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.
ஜூன் 19 முதல் ஜூலை 1ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றது. தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் ஜூலை 30ம் தேதி மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://dge.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.